என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vijay sri g"

    • விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'ஹரா'.
    • நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் மோகன் மீண்டும் நடிக்கிறார்.

    'தாதா 87' மற்றும் 'பவுடர்' படங்களை இயக்கிய விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'ஹரா'. இப்படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் மோகன் மீண்டும் நடிக்கிறார். இப்படத்தில் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, தீபா, மைம் கோபி, சாம்ஸ், கௌஷிக், அனித்ரா நாயர், சந்தோஷ் பிரபாகர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.


    மேலும், சமூக பொறுப்பு மிக்க டானாக சாருஹாசன் நடிக்கிறார். எதிர்மறை கதாபாத்திரத்தில் சுரேஷ் மேனன் நடிக்கிறார். அதுமட்டுமல்லாமல், அரசியல்வாதியாக வனிதா விஜயகுமார் நடிக்கிறார். கோயம்புத்தூர் எஸ்.பி.மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஸ்ரீ விஜய் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.

    இத்திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு இடையே இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜிக்கு சாலை விபத்தில் படுகாயம் ஏற்பட்டதால் அவரது சிகிச்சையின் காரணமாக படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டது. 'ஹரா' படப்பிடிப்பு சமீபத்தில் மீண்டும் தொடங்கிய போது தேதிகள் ஒத்துழைக்காததால் ஏற்கனவே ஒப்பந்தமான பிரபல நடிகைக்கு பதில் மோகன் ஜோடியாக அனுமோல் நடித்துள்ளார். சிறப்பான பங்களிப்பை அனுமோல் வழங்கி உள்ளதாகவும் அவரது கதாபாத்திரம் பேசப்படும் என்றும் இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி தெரிவித்தார்.


    மேலும் அவர், "கோத்தகிரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இறுதி கட்டப்படபிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பண்டிகை வெளியீடாக விரைவில் திரையரங்குகளில் 'ஹரா' வெளியாகும்" என்று கூறினார். 

    விஜய் ஸ்ரீ இயக்கத்தில் சமீபத்தில் வெளியான "தாதா 87" படத்தில் திருநங்கையாக நடித்த நடிகை ஸ்ரீ பல்லவிக்கு பாராட்டுக்கள் குவிந்த நிலையில், தேசிய விருதுக்காக அவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #SriPallavi
    விஜய் ஸ்ரீ இயக்கத்தில் சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி, ஸ்ரீ பல்லவி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான "தாதா 87" திரைப்படம் மார்ச் 1 அன்று வெளியாகியது.

    இந்த படத்தில் திருநங்கை வேடத்தில் நடித்திருந்தார் கதாநாயகி ஸ்ரீ பல்லவி. அதுவே இப்படத்தின் பலமாகவும் அமைந்தது. இந்திய சினிமா வரலாற்றில் ஆண், பெண் வேடத்திலும், பெண், ஆண் வேடத்திலும் நடித்துள்ளனர், ஆனால் ஒரு பெண் திருநங்கை வேடத்தில் நடித்துள்ளது இதுவே முதல் முறை. ஸ்ரீ பல்லவியின் இந்த துணிச்சலான முடிவுக்கு பலதரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் வந்த வண்ணம் உள்ளன.



    இந்த நிலையில் திருநங்கையாக நடித்து பாராட்டு பெற்ற ஸ்ரீபல்லவி 2018-ம் ஆண்டுக்கான சிறந்த நடிகைக்கான தேசிய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் ‘தாதா 87’ படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். #SriPallavi

    விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் சாருஹாசன் - சரோஜா நடிப்பில் உருவாகி இருக்கும் `தாதா 87' படத்தின் முன்னோட்டம். #DhaDha87 #CharuHaasan #SarojaRajagopal
    கலை சினிமாஸ் சார்பில் ம.கலைச்செல்வன், வேணு ரவிச்சந்திரன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘தாதா 87’.

    நடிகர் சாருஹாசன், நீண்ட நாட்களுக்குப் பின் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷின் பாட்டியான சரோஜா நடித்துள்ளார். ஜனகராஜ், ஜெனி பல்லவி, அனு லாவண்யா, மனோஜ் குமார், ஆனந்த் பாண்டி, கதிர் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    ஒளிப்பதிவு - ராஜபாண்டி, இசை - லியாண்டர் லீ மார்ட்டி, படத்தொகுப்பு - ஸ்ரீ வட்சன், கலை - நந்தா, சண்டைப்பயிற்சி - விஜய் ஜாகுவார், தயாரிப்பு மேலாளர் - சரவணன், இணை தயாரிப்பு - ஜி மீடியா, தயாரிப்பு - ம.கலைச்செல்வன், எழுத்து, இயக்கம் - விஜய் ஸ்ரீ ஜி.



    இந்த படத்தின் மூலம் சாருஹாசனுக்கு `ஏஜிங் சூப்பர் ஸ்டார்' எனப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. கேங்க்ஸ்டர் வகைப் படமாக உருவாகி இருக்கும் இந்தப் படத்தின் போஸ்டர்கள், டீசர், டிரைலர் ஆகியவை நல்ல கவனத்தைப் பெற்றிருக்கின்றன. 

    படம் தொடங்கும்போது திரையில் காண்பிக்கப்படும் டிஸ்க்ளைமர்களில் மது அருந்துவது மற்றும் புகை பிடிப்பது ஆகியவற்றுக்கு எதிரான வாசகங்களே பொதுவாக இடம்பெறும். ஆனால் இந்த படத்தில் ‘பெண்களை அனுமதியின்றித் தொடுவது சட்டப்படி குற்றமாகும்‘ எனும் வாசகம் இடம்பெறவுள்ளது. இதற்கு தணிக்கைத் துறையும் அனுமதியளித்துள்ளது. இந்தப் பட டைட்டில் கார்டில் இந்த வாசகம் இடம்பெறஇருப்பதால் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது உலக சினிமாவிலேயே இப்படி ஒரு டிஸ்க்ளைமர் காட்டப்படுவது இதுதான் முதன்முறையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. 

    படம் வருகிற மார்ச் 1-ஆம் தேதி திரைக்கு வருகிறது. #DhaDha87 #CharuHaasan #SarojaRajagopal

    தாதா 87 டிரைலர்:

    பீட்ரு படத்தின் மூலம் சினிமாவிற்கு நடிகர் அம்சன் ரீ-எண்ட்ரி கொடுக்கும் நிலையில், அந்த படத்தின் போஸ்டர் மூலம் படத்தில் அரசியல் சம்பந்தபட்ட காட்சிகள் இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. #Pettru #Amsun
    ‘மானசீகக் காதல்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, புன்னகை தேசம், ஜூனியர் சீனியர் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தவர் நடிகர் ஹம்சவர்தன்.

    அம்சன் என தனது பெயரை மாற்றிக் கொண்ட இவர் தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க வந்திருக்கிறார். 

    சாருஹாஸன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘தாதா 87’ படத்தை இயக்கிய விஜய் ஸ்ரீ ஜி இயக்கும் ‘பீட்ரு’ என்ற படத்தில் அம்சன் நாயகனாக நடிக்கிறார். அத்துடன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘அம்சன் ஃபிலிம் ஃபேக்டரி’ மூலம் இந்த படத்தை தயாரிக்கவும் செய்கிறார்.



    சமீபத்தில் வெளியாகிய இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கவனத்தை ஈர்த்த நிலையில், போஸ்டரில் இடம்பெற்றிருந்த “சென்னை மாநகரத்தின் ‘மா’ மன்னன் பீட்ரு வீர வரலாறு” என்ற வாசகம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. இந்த நிலையில், படத்தின் தலைப்பு அடங்கிய போஸ்டரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. அதில் பீட்ரு, சின்ன அம்மா கிளை (Small Mother Branch) என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளதால் படத்தில் மறைமுகமாக சமீபத்திய அரசியல் இருக்குமோ என்கிற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. #Pettru #Amsun

    ×