என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Vijayakumar"
- நடிகர் சூர்யாவின் 44 ஆவது படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார்.
- இந்த படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் சூர்யாவின் 44 ஆவது படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார். இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
இந்த படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சூர்யா 44 படத்திற்கு ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள ஷஃபீக் முகமது அலி படத்தொகுப்பு செய்கிறார்.
சண்டை பயிற்சி பணிகளை கெச்சா கம்பக்தீ மேற்கொள்கிறார், கலை இயக்க பணிகளை ஜாக்கியும், ஆடை வடிவமைப்பு பணிகளை பிரவீன் ராஜா மேற்கொள்கின்றனர்.
சூர்யா 44 படத்தில் மலையாள நடிகரான ஜோஜு ஜார்ஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இதைதொடர்ந்து உறியடி விஜயகுமார் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார் எனவும், மலையாள நடிகர் ஜெயராம் இப்படத்தில் நடிக்கவுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- எலெக்ஷன் படத்தின் முதல் 'சிங்கிள்' கடந்த மாதம் வெளியானது.
- மன்னவன் பாடலின் லிரிக்கல் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
'உறியடி', 'பைட் கிளப்' உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் விஜயகுமார் தற்போது 'எலெக்ஷன்' என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தை 'சேத்துமான்' பட புகழ் இயக்குனர் தமிழ் இயக்கியுள்ளார்.
'அயோதி' புகழ் ப்ரீத்தி அஸ்ரானி மற்றும் புதுமுகம் ரிச்சா ஜோஷி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். 'ரீல் குட் பிலிம்ஸ்' ஆதித்யா இந்த படத்தை தயாரித்துள்ளார்.
இந்த படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்து உள்ளார்.
பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நேரத்தில் 'எலெக்ஷன்' என பெயர் சூட்டப்பட்டு இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து உள்ளது.
இந்த படத்தின் முதல் 'சிங்கிள்' கடந்த மாதம் வெளியானது. இந்நிலையில், எலெக்ஷன் படத்தின் இரண்டாவது சிங்கிள் இன்று வெளியாகியுள்ளது.
மன்னவன் என்று துவங்கும் இந்த பாடலின் லிரிக்கல் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்த படத்தின் முதல் 'சிங்கிள்' நாளை (17- ந்தேதி) மதியம் 12 மணிக்கு வெளியிடப்படுகிறது.
- இப்படத்தின் 'ரிலீஸ்' தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
'உறியடி', 'பைட் கிளப்' உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் விஜயகுமார் தற்போது 'தேர்தல்' என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை 'சேத்துமான்' பட புகழ் இயக்குனர் தமிழ் இயக்கி வருகிறார்.
'அயோதி' புகழ் ப்ரீத்தி அஸ்ரானி மற்றும் புதுமுகம் ரிச்சா ஜோஷி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். 'ரீல் குட் பிலிம்ஸ்' ஆதித்யா இந்த படத்தை தயாரித்துள்ளார்.
இந்த படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துஉள்ளார். .படப்பிடிப்பு தற்போது முடியும் தருவாயில் உள்ளது. இந்த படம் அரசியலை பின்னணியாக கொண்ட கதைக்களமாக அமைக்கப்பட்டு உள்ளது
நடிகர் விஜயகுமாருக்கு இளம் ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளனர். துணிச்சலாக ஆரம்பத்திலேயே அரசியல் கதையில் அவர் நடித்து உள்ளது ரசிகர்களை வியக்க வைத்து உள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் 'எலெக்ஷன்' என பெயர் சூட்டப்பட்டு இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து உள்ளது. இந்த படத்தின் முதல் 'சிங்கிள்' நாளை (17- ந்தேதி) மதியம் 12 மணிக்கு வெளியிடப்படுகிறது.
இந்த பாடலுக்கு 'தேர்தல் பாடல்' என்று தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது. இப்படத்தின் 'ரிலீஸ்' தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தடை செய்யப்பட்ட குட்கா, பான் பொருள்கள் தடையை மீறி விற்பனை செய்ய சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது
- இந்த வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்து வந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் சிபிஐக்கு மாற்றபட்டது
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் பொருள்கள் தடையை மீறி விற்பனை செய்ய சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்து வந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் சிபிஐக்கு மாற்றபட்டது.
இந்த வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி விஜயபாஸ்கர், பி வி ரமணா மீதான குட்கா வழக்கை மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஏன் இழுத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று சிபிஐக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.
கவர்னர் ஒப்புதல் அளித்தும் சிபிஐ இன்னும் பரிசீலனை செய்து வருவதாக நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளதால் கோபமடைந்த நீதிபதி வழக்கின் நிலை என்ன என்பது தொடர்பாக அடுத்த விசாரணையின் போது பதில் அளிக்க வேண்டும் என்று சிபிஐக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
- வழக்கு தொடர்பாக 210 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை புதுக்கோட்டை கோர்ட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த மே மாதம் தாக்கல் செய்தனர்.
- வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
புதுக்கோட்டை:
அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் இருப்பவர் டாக்டர் சி.விஜயபாஸ்கர்.
இவர், அமைச்சராக இருந்த காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.35 கோடியே 79 லட்சத்து 90 ஆயிரத்து 81 மதிப்பில் சொத்து சேர்த்ததாக விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா மீதும் புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17-ந்தேதி வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் உள்ள அவரது வீடு, கல் குவாரிகள், நிறுவனங்கள், சென்னையில் உள்ள அவரது வீடு உள்பட மொத்தம் 56 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து வழக்கு தொடர்பாக 210 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை புதுக்கோட்டை கோர்ட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த மே மாதம் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அந்த வழக்கு இன்று 11-வது முறையாக விசாரணைக்கு வந்தது.
விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா இன்று ஆஜராகவில்லை. அவர்களுக்கு பதிலாக அவர்களது வக்கீல் ஆஜரானார்.
இந்த நிலையில் வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (ஏப்ரல்) 25-ந் தேதிக்கு ஒத்திவைத்து, நீதிபதி பூரணஜெயா ஆனந்த் உத்தரவிட்டார்.
- தன்னைப் பற்றி அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தி தனியார் யூட்யூப் சேனல் ஒன்று வீடியோக்களை பதிவு செய்துள்ளது.
- இதனால் தனது குடும்பத்தினர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்
தனது குடும்பத்தை பற்றி தவறான தகவல்களை யூடியூப் சேனலில் பதிவிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் அருண் விஜய் புகார் அளித்துள்ளார்.
அருண் விஜய் சார்பில் அவரது வழக்கறிஞர் புகார் மனு அளித்துள்ளார்.
அந்த புகார் மனுவில், "தன்னைப் பற்றியும் தனது தந்தை விஜயகுமாரின் முதல் மனைவி பற்றியும் அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தி தனியார் யூட்யூப் சேனல் ஒன்று வீடியோக்களை பதிவு செய்துள்ளது. இதனால் தனது குடும்பத்தினர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். மேலும் தவறான தகவல்களைப் பதிவிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
- மர்ம நபர் பைத்தியகாரத் தனமாக சிரித்தது என் காதுகளில் கேட்டுக்கொண்டே இருக்கிறது.
- வனிதாமீது தாக்குதல் நடத்திய சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை:
நடிகர் விஜயகுமார் மகளும், நடிகையுமான வனிதா மர்மநபர் ஒருவர் திடீரென தாக்கியதாக வலைதளத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
நான் பிக்பாஸ் நிகழ்ச்சி விமர்சனத்தை முடித்து விட்டு இரவு உணவு சாப்பிட்டுவிட்டு என் காரில் இறங்கி நடந்துசென்று கொண்டிருந்தேன். காரை என்னுடைய சகோதரி சவுமியா வீட்டு அருகே இருட்டான பகுதியில் நிறுத்தினேன்.
அப்போது எங்கிருந்தோ வந்த ஒரு மர்ம நபர் பிரதீப்புக்கு ரெட்கார்டு கொடுக்கிறீங்களா? என கேட்டார்.
அதுக்கு நீ வேற சப்போர்ட்டுக்கு வர்றியா? என சொல்லி என் முகத்தில் பலமாக தாக்கிவிட்டு ஓடிவிட்டார். இதனால் காயம் அடைந்து ரத்தம் வழிந்தது. நள்ளிரவு 1 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததால் என் அருகில் யாரும் இல்லை. என் சகோதரியை கீழே வரும்படி அழைத்த நிலையில் அவர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யும் படி தெரிவித்தார்.
ஆனால் நான் அவளிடம் போலீசில் புகார் தெரிவிப்பதில் நம்பிக்கை இல்லை என தெரிவித்தேன்.
காயத்திற்காக முதலுதவி செய்துவிட்டு கோபத்துடன் வெளியேறி தாக்கியவரை அடையாளம் காண நினைத்தேன். முடியவில்லை. அந்த மர்ம நபர் பைத்தியகாரத் தனமாக சிரித்தது என் காதுகளில் கேட்டுக்கொண்டே இருக்கிறது.
நான் திரையில் தோன்றும் அளவுக்கு உடல் நலத்துடன் இல்லாததால் ஓய்வு எடுத்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
வனிதாமீது தாக்குதல் நடத்திய சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ்-7 சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக நடிகர் பிரதீப் ஆண்டனி பங்கேற்றார்.
சவாலான போட்டியாளராக திகழ்ந்த பிரதீப் சக பெண்களின் பாதுகாப்பு பிரச்சினைக்கு காரணமாக இருந்ததாக கூறி ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார்.
இந்த விவகாரம் வலை தளத்தில் சர்ச்சை பொருளாக பதிவு செய்யப்பட்டு வந்தது.
பலரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை விமர்சித்து கருத்து தெரிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை:
ஆலப்பாக்கம் அஷ்டலட்சுமி நகர் 19-வது தெருவில் நடிகர் விஜயகுமாருக்கு சொந்தமான பங்களா வீடு உள்ளது. இந்த பங்களா வீட்டை விஜயகுமார் சினிமா ஷூட்டிங் எடுக்க வாடகைக்கு கொடுத்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் இயக்கும் டாடி என்கிற சினிமா படப்பிடிப்பிற்காக இரண்டு நாட்கள் வீட்டை வாடகைக்கு எடுத்த விஜயகுமார் மகள் வனிதா வீட்டை திரும்ப ஒப்படைக்காமல் வீட்டை விட்டு வெளியேறாமல் விஜயகுமாரிடம் தகராறில் ஈடுபட்டார்.
பின்னர் மதுரவாயல் போலீஸ் மூலம் வனிதா வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். வீட்டில் இருந்த வனிதா ஆதரவாளர்களை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே வனிதா பூந்தமல்லி நீதிமன்றம் மூலம் முன்ஜாமீன் பெற்றார். வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்று காலை தனது வழக்கறிஞர்கள் உடன் விஜயகுமார் வீட்டிற்குள் தனது மகள் உடன் நுழைந்த நடிகை வனிதா பேட்டியளித்தார். அப்போது கூறியதாவது:-
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு என் அம்மா பெயரில் உள்ள இந்த வீட்டை விட்டு நான் போலீசாரால் வலுகட்டாயமாக வெளியேற்றப்பட்டேன். நான் நடித்து சம்பாதிக்கும் போது வாங்கிய வீடு.
இதில் நான் உள்பட என்னுடன் பிறந்த இரண்டு சகோதரிகளுக்கும் இந்த வீட்டில் பங்கு உண்டு. நான் நியாயம் கேட்டு உச்சநீதி மன்றம் சென்று ரிட் மனு தாக்கல் செய்தேன்.
அங்கு எனக்கு பாத்தியப்பட்ட இந்த வீட்டில் இருப்பதற்கு யாரும் எந்தவித இடையூறும் செய்யக் கூடாது என்றும் தேவைப்பட்டால் காவல் துறை உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. இந்த உத்தரவு நகல்களை காவல் துறை தலைவர் கமிஷனர் மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோருக்கு அனுப்பி உள்ளேன்.
இவ்வாறு கூறினார். #vanitha #vijayakumar
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்