என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » vinay mittal
நீங்கள் தேடியது "Vinay Mittal"
வங்கியில் ரூ.40 கோடி கடன் வாங்கி மோசடி செய்த தொழில் அதிபர் வினய் மிட்டலை கைது செய்த இந்தோனேசியா போலீசார் இந்தியாவிற்கு அவரை நாடு கடத்தினர். #Indonesia #VinayMittal #BankFraud
புதுடெல்லி:
கார்ப்பரேசன் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியவற்றில் மொத்தம் ரூ.40 கோடி கடன் வாங்கி மோசடி செய்த தொழில் அதிபர் வினய் மிட்டல். அந்த வங்கிகளின் கோரிக்கையை ஏற்று, அவர் மீது 2014 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில், சி.பி.ஐ. 7 வழக்குகளை பதிவு செய்தது. டெல்லி மற்றும் காசியாபாத் கோர்ட்டுகளில் குற்றப்பத்திரிகைகளையும் தாக்கல் செய்தது.
இதையடுத்து, வினய் மிட்டல், நாட்டை விட்டு தப்பி ஓடினார். அவர் தலைமறைவானதாக கோர்ட்டு அறிவித்தது. அவருக்கு எதிராக ‘ரெட் கார்னர்’ நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.
இதற்கிடையே, அவர் இந்தோனேசியா நாட்டின் பாலியில் குடும்பத்துடன் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ‘ரெட் கார்னர்’ நோட்டீஸ் அடிப்படையில், அவரை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தோனேசியா போலீசார் கைது செய்தனர். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த அந்நாட்டு அதிபர் சமீபத்தில்தான் ஒப்புதல் அளித்தார்.
அதன்படி, இந்தியாவுக்கு வந்து சேர்ந்த வினய் மிட்டல் கைது செய்யப்பட்டார். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். #Indonesia #VinayMittal #BankFraud

வங்கிகளில் 40 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்துவிட்டு இந்தோனேசியா நாட்டில் தலைமறைவாக இருந்த தொழிலதிபர் வினய் மிட்டல் இன்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். #VinayMittal
ஜகர்தா:
இந்திய வங்களில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன்பெற்று, திருப்பு செலுத்தாமல் மோசடி செய்த பிரபல தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நிரவ் மோடி, ஜத்தின் மேத்தா, மெகுல் சோக்சி உள்ளிட்டவர்கள் இங்கிருந்து தப்பிச் சென்று வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இவர்களை இந்தியாவுக்கு அழைத்து வந்து நீதியின் முன்னர் நிறுத்துவதற்கான முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.
அவ்வகையில், வங்கிகளில் 40 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்துவிட்டு இந்தோனேசியா நாட்டில் தலைமறைவாக இருந்த பிரபல தொழிலதிபர் வினய் மிட்டல் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.
தேடப்படும் தலைமறைவு குற்றவாளியான அவரை கண்டுபிடித்து இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என சர்வதேச போலீஸ் துறையான ‘இன்ட்டர்போல்’ அமைப்பை சி.பி.ஐ. வலியுறுத்தி இருந்தது.
வினய் மிட்டலுக்கு எதிராக ‘இன்ட்டர்போல்’ சார்பில் சமீபத்தில் ‘ரெட் கார்னர் நோட்டீஸ்’ எனப்படும் கைது உத்தரவு வெளியிடப்பட்டது.
இதன் அடிப்படையில், இந்தோனேசியா தலைநகர் ஜகர்தாவில் வினய் மிட்டலை கைது செய்த அந்நாட்டு அதிகாரிகள் இன்று அவரை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். #VinayMittal #VinayMittalextradited #Rs40crorebankfraud
×

X