என் மலர்
நீங்கள் தேடியது "vinayakan"
- நடிகர் விநாயகன் மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.
- இவர் மறைந்த கேரள முன்னாள் மந்திரி உம்மன் சாண்டி குறித்து சர்ச்சையாக பதிவிட்டுள்ளார்.
மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வரும் விநாயகன் தமிழில் விஷாலின் 'திமிரு' படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர். தொடர்ந்து சிம்புவின் சிலம்பாட்டம், தனுசின் மரியான் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். பின்னர் தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்த இவர் சுமார் 11 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

விநாயகன்
இந்நிலையில், நடிகர் விநாயகன், மறைந்த கேரள முன்னாள் மந்திரி உம்மன் சாண்டி குறித்து சர்ச்சையான வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "யார் இந்த உம்மன் சாண்டி. எதற்காக அரசு மூன்று நாட்கள் துக்கம் விசாரிக்க வேண்டும். ஊடகங்கள் ஏன் அவரது இறுதி ஊர்வலத்திற்கு முக்கியத்து கொடுத்தது. உம்மன் சாண்டி நல்லவர் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு நான் என்ன பண்ண முடியும்?" என்று பதிவிட்டுள்ளார்.

உம்மன் சாண்டி
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து கேரள முன்னாள் மந்திரி உம்மன் சாண்டியை அவமதித்ததற்காக நடிகர் விநாயகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் நிர்வாகிகள் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். இந்த புகாரை பெற்றுக் கொண்ட போலீஸ் அதிகாரி இதுகுறித்து விசாரித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
நடிகர் விநாயகன் பதிவிற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்ததால் அவர் இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் இருந்து நீக்கி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கேரள மாநில முன்னாள் முதல்-மந்திரி உம்மன் சாண்டி கடந்த 18-ந்தேதி பெங்களூருவில் மரணம் அடைந்தார்.
- அவரது இறுதிச்சடங்கு சொந்த ஊரான கோட்டயம் புதுப்பள்ளியில் நேற்று நடந்தது.
கேரள மாநில முன்னாள் முதல்-மந்திரி உம்மன் சாண்டி கடந்த 18-ந்தேதி பெங்களூருவில் மரணம் அடைந்தார். அவரது இறுதிச்சடங்கு சொந்த ஊரான கோட்டயம் புதுப்பள்ளியில் நேற்று நடந்தது.
இந்நிலையில் நடிகர் விநாயகன் தனது முகநூல் பக்கத்தில் நேரலையில் தோன்றி உம்மன் சாண்டி குறித்து அவதூறு கருத்துக்களை பேசினார். அந்த வீடியோவில், "யார் இந்த உம்மன் சாண்டி. அவர் இறந்தால் அதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும். உங்களுடைய அப்பாவும் இறந்து விட்டார். உம்மன் சாண்டி இறந்ததற்கு எதற்கு 3 நாள் விடு முறை. அவர் நல்லவர் என்று நீங்கள் வேண்டும னால் சொல்லலாம். ஆனால் நான் சொல்ல மாட்டேன்" என்று கூறியிருந்தார். நடிகர் விநாயகனின் இந்த வீடியோ பதிவிற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

விநாயகன் வீடு
இதையடுத்து அவர், அந்த வீடியோவை தனது முகநூல் பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டார். இருந்த போதிலும் உம்மன் சாண்டி குறித்து அவதூறு வீடியோ வெளியிட்ட நடிகர் விநாயகன் மீது காங்கிரஸ் கட்சி சார்பில் கொச்சி உதவி போலீஸ் கமிஷனர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் நடிகர் விநாயகன் மீது எர்ணாகுளம் வடக்கு போலீசார் வழக்குபதிந்துள்ளனர். அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் எர்ணாகுளம், கழுவூரில் உள்ள விநாயகனின் வீட்டின் மீது மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்கி உள்ளனர். இதில், அவரது வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. விநாயகனின் வீட்டில் தாக்குதலில் ஈடுபட்டது காங்கிரஸ் தொண்டர்கள் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’.
- இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பு நிறுவனம் ரஜினி, நெல்சன் மற்றும் அனிருத் ஆகியோருக்கு காரை பரிசாக வழங்கியது.
ரஜினிகாந்த நடிப்பில் நெல்சன் இயக்கிய திரைப்படம் ஜெயிலர். ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியான ஜெயிலர் திரைப்படம் விமர்சன ரீதியிலும், வர்த்தக ரீதியிலும் அமோக வரவேற்பை பெற்றது. இதுவரை இந்த படம் ரூ. 525 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து இருப்பதாக படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பு நிறுவனம் ரஜினி, நெல்சன் மற்றும் அனிருத் ஆகியோருக்கு காரை பரிசாக வழங்கியது.

இந்நிலையில், 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்தது குறித்து நடிகர் விநாயகன் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "நான் 15 நாட்களாக ஒரு வனப்பகுதியில் இருந்தேன். அங்கிருந்து திரும்பி ஊருக்கு வரும்போது எண்ணற்ற மிஸ்டு கால் வந்துட்டே இருந்தது. அப்போது, புரொடக்ஷன் சைடில் இருந்து போன் வந்தது. ரஜினி சார் படத்தில் நடிக்கணும், நெல்சன் இயக்குனருனு. ரஜினி சார் படம்னு சொன்னவுடன் கதை கேட்கணும் அவசியம் இல்ல. ஓகேன்னு சொல்லிட்டேன். இருந்தாலும், நெல்சன் பேசுனாரு, கேரக்டருடைய ஸ்ட்ரெக்சர் இதுதான் சொன்னார். நீங்க தான் முக்கியமான வில்லன்னு சொன்னார். அப்படி தான் படத்தில் வந்தேன்.

அந்த வர்மன் கேரக்டர், நல்ல வந்ததுக்கு முக்கியக்காரணம் ரஜினிசார் தான். சொப்பனத்தில் கூட யோசிக்கலன்னு படத்தில் ஒரு டயலாக் வரும் அப்படி ஒரு பாப்புலாரிட்டிதான் இப்போ எனக்கு கிடைச்சிருக்கு. படத்தில் நடிக்கும்போதும், மிக சந்தோஷமாகத் தான் நடித்தேன். நெல்சன் ரொம்ப நன்றிப்பா, ரஜினிசார் மறக்கமாட்டேன். கலாநிதி மாறன் சாருக்கு ரொம்ப நன்றி" என்று பேசினார்.
- ஜெயிலர் படத்தில் வில்லனாக நடித்தவர் விநாயகன்.
- காவல் துறை அதிகாரியை தாக்கியதாக கூறப்படுகிறது.
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் "ஜெயிலர்". இயக்குனர் நெல்சன் இயக்கிய ஜெயிலர் படம் கிட்டத்தட்ட ரூ. 600 கோடி வரை வசூல் செய்து அசத்தியது. இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடித்தவர் விநாயகன்.
இந்த நிலையில், வில்லன் நடிகர் விநாயகனை கேரள மாநில போலீசார் கைது செய்துள்ளனர். எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்டதாக கூறி போலீசார் அவரை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதவிர மதுபோதையில் காவல்துறை அதிகாரியை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
காவல் அதிகாரி தாக்கப்பட்டதால், காவல் நிலைய பணிகள் பாதிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் விநாயகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிறகு, விநாயகன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். குடும்ப பிரச்சினை காரணமாக நடிகர் விநாயகன் காவல் நிலைய உதவியை நாடினார் என்று காவல் துறை ஆய்வாளர் பிரதாப் சந்திரன் தெரிவித்து உள்ளார்.
நடிகர் விநாயகன் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் துருவ நட்சத்திரம் படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- வர்மா என்ற கதாப்பாத்திரத்தில் விநாயகன் நடித்து தமிழ் மக்களின் மனதில் பதிந்தார்.
- ஐதராபாத் சென்றபோது விமான நிலையத்தில் பாதுகாப்பு வீரர்களுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்திற்கு வில்லனாக வர்மா என்ற கதாப்பாத்திரத்தில் விநாயகன் நடித்து தமிழ் மக்களின் மனதில் பதிந்தார். விநாயகன் மலையாள திரையுலகில் மிக முக்கிய நடிகர்களு ஒருவராவார்.
இந்நிலையில் கேரளாவைச் சேர்ந்த விநாயகன், ஐதராபாத் சென்றபோது விமான நிலையத்தில் பாதுகாப்பு வீரர்களுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
கோவா செல்வதற்காக இணைப்பு விமானத்தில் ஐதராபாத் சென்றபோது போதையில் விநாயகன் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் விநாயகன் விமான பாதுக்காப்பு காவலர்கள் அவரை தனியாக ரூமிற்கு விசாரணைக்காக அழைத்து சென்றதாக கூறுகிறார். நீங்கள் வேண்டும் என்றால் சிசிடிவி ஃபூட்டேஜை சரிப்பாருங்கள் நான் அப்படி என்ன தவறு செய்தேன் என செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மம்முட்டியின் தயாரிப்பு நிறுவனமான மம்முட்டி கம்பெனி தன் 7-வது படத்தை தயாரிக்கிறது.
- 'குரூப்' படத்தின் இணை எழுத்தாளரான ஜித்தின் கே. ஜோஸ் இயக்குனராக அறிமுகமாகிறார்.
நடிகர் மம்முட்டியின் தயாரிப்பு நிறுவனமான மம்முட்டி கம்பெனி தன் 7-வது படத்தை தயாரிக்கிறது. துல்கர் சல்மானின் 'குரூப்' படத்தின் இணை எழுத்தாளரான ஜித்தின் கே. ஜோஸ் இயக்குனராக அறிமுகமாகிறார்.
இதில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிகர் விநாயகன் நடிக்கிறார். விநாயகனுக்கு வில்லனாக நடிகர் மம்முட்டி நடிக்கிறார். 'புழு, பிரம்மயுகம்' போன்ற படத்தில் வில்லனாக நடித்து அசத்திய மம்முட்டி, மீண்டும் வில்லனாக நடிக்கவுள்ளதால் எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு நாகர்கோவிலில் துவங்கியுள்ளது. இந்த நிலையில், இதை அதிகாரப்பூர்வமாக மம்மூட்டி கம்பெனி நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்த பதிவை தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.
படத்தை பற்றிய இணைய தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. திரைப்படத்தில் நடிக்கவிருக்கும் பிற நடிகர்கள் குறித்து தகவல் விரைவில் வெளியாகும். படத்தின் ஒளிப்பதிவை ஃபைசல் அலி மேற்கொள்ளவுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்ஐ க்ளிக் செய்யவும்.
- நடிகர் விநாயகனின் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
- கடந்த சில மாதங்களுக்கு முன் ஐதராபாத் விமான நிலையத்தில் விமான நிறுவன ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டார்.
மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விநாயகன். இவர், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'ஜெயிலர்' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். மேலும், இவர் தெலுங்கு உள்பட பல்வேறு மொழிகளிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், நடிகர் விநாயகன் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் அரைகுறை ஆடையுடன் நின்று கொண்டு ஆபாசமாகத் திட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்தக் காட்சியை பக்கத்து குடியிருப்பைச் சேர்ந்த யாரோ செல்போனில் எடுத்து சமூக சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.
நடிகர் விநாயகனின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் புகார் செய்யவில்லை என்றும், புகார் செய்தால் நடிகர் விநாயகன் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கொச்சி போலீசார் தெரிவித்தனர்.
இதனிடையே, தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டு நடிகர் விநாயகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தனி நபராகவும், நடிகராகவும் பல பிரச்சனைகளில் தான் போராடுவதாகவும், பல பிரச்சனைகளை தன்னால் கையாள முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தன்னிடம் இருந்து வந்த அனைத்து எதிர்மறை ஆற்றலுக்கும் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நடிகர் விநாயகன் அடிக்கடி ஏதாவது சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம். கடந்த சில வருடங்களுக்கு முன் கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன் ஐதராபாத் விமான நிலையத்தில் விமான நிறுவன ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டார். இதையடுத்து போலீசார் இவரை கைது செய்தனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ரஜினியின் 169-வது திரைப்படமான ஜெயிலர் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார்.
- இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை வெளியாகி வைரலாகி வருகிறது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 169-வது படம் ஜெயிலர். இதில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

வசந்த் ரவி - ரம்யா கிருஷ்ணன்
இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று காலை 11 மணிக்கு படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.

யோகிபாபு - விநாயகன்
இந்நிலையில் இப்படத்தில் இணைந்துள்ள பிரபலங்கள் குறித்து படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ஜெயிலர் படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர்கள் யோகிபாபு, வசந்த் ரவி மற்றும் மலையாள நடிகர் விநாயகன் இணைந்துள்ளதாக படக்குழு வீடியோவுடன் அறிவித்துள்ளது.


