search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vinayakar Chaturthi"

    • விநாயகர் சதுர்த்திக்கு விஜய் வாழ்த்து சொல்லவில்லை.
    • விஜயும் தவறான பாதையில் செல்வது தான் வருத்தமாக உள்ளது.

    விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாமல் ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து சொல்வதை பார்த்தால் விஜய் தவறான பாதையில் செல்கிறாரோ என்று வருத்தமாக உள்ளது என்று இயக்குநர் மோகன் ஜி தெரிவித்துள்ளார்.

    இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய மோகன் ஜி. "நாட்டு மக்களுக்கு ஒரு நல்ல தலைவர் வேண்டும், அதுவும் இளைஞர்களுக்கு பிடித்தவர் அரசியலுக்கு வருவது நல்ல விஷயம் தான். ஆனால், விஜயும் தவறான பாதையில் செல்வது தான் வருத்தமாக உள்ளது. விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லவில்லை. ஆனால், ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து சொன்னது வருத்தமாக உள்ளது.

    இந்துக்கள் பண்டிகையான விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொன்னால், அது இந்துக்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறார் என்பது போல மாறிவிடும். ஏனெனில் மத்தியில் ஆட்சி செய்யும் பாஜகவிற்கு ஆதரவு அளிப்பது போல, ஒரு தோற்றம் வந்துவிடும் என்பதால், இந்துவாக இருக்கும் பலரும் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்ல பயப்படுகிறார்கள். விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்வது என்பது வேறு, பாஜகவிற்கு ஆதரவு தெரிவிப்பது வேறு, இந்த இரண்டையும் ஒன்றாக பார்க்கும் மனநிலை முதலில் மாற வேண்டும்" என்று தெரிவித்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இதுவரை 1000க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டுள்ளன.
    • 2,000-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    சென்னையில் 1,500 விநாயகர் சிலைகள் கடந்த 7-ந்தேதி பூஜைக்காக வைக்கப்பட்டன.

    இந்த சிலைகளில் ஒரு பகுதி கடந்த 11-ந்தேதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட சிலைகள் கரைக்கப்பட்ட நிலையில் நேற்று மற்றும் இன்று விநாயகர் சிலைகள் அதிக எண்ணிக்கையில் கரைக்கப்பட்டு வருகின்றன.

    இன்று 1,300 சிலைகளுடன் பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. சிலைகள் கரைப்பதற்கு இன்று கடைசி நாள் என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    பட்டினப்பாக்கம், நீலாங்கரை, காசிமேடு, திருவொற்றியூர் ஆகிய 4 இடங்களில் சென்னை மாநகரில் வைக்கப்பட்டுள்ள சிலைகளை கரைக்கப்படுகின்றன.

    இந்நிலையில், சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் இதுவரை 1000க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டுள்ளன. இதனால், பொது மக்கள் குவிந்துள்ளனர்.

    5 அடிக்கு மேல் உள்ள சிலைகள் கிரேன் உதவியுடன் கரைக்கப்பட்டு வருகின்றன. 2,000-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • சதுர்த்தி விழாவையொட்டி நேற்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் நடைபெற்று வரும் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி நேற்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    திருப்பத்தூர் அருகே உள்ளது பிள்ளையார்பட்டி. இங்கு பிரசித்தி பெற்ற கற்பகவிநாயகர் கோவில் உள்ளது. குடவரை கோவிலான இக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மேலும் விழாவையொட்டி தினந்தோறும் மூஷிக வாகனம், சிம்ம வாகனம், பூதவாகனம், கமல வாகனம், ரிஷப வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் கற்பகவிநாயகர் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவில் 6-ம் திருநாளான நேற்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவையொட்டி நேற்று மாலை 4 மணி முதல் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. அதன் பின்னர் மாலை 5.30 மணிக்கு உற்சவர் வெள்ளி யானை வாகனத்திலும், சண்டிகேசுவரர் வெள்ளி ரிஷப வாகனத்திலும் எழுந்தருளி கோவில் கிழக்கு கோபுர வாசல் பகுதியில் தனித்தனியான சப்பரத்தில் எழுந்தருளினர். பின்னர் மூலவரிடம் இருந்து பூஜிக்கப்பட்ட தந்தத்தை கொண்டு வந்து உற்சவர் அருகே வைக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    தொடர்ந்து மாலை 6.15 மணிக்கு சூரனை வதம் செய்ய புறப்பட்ட கற்பகவிநாயகர் கோவிலை சுற்றி வந்து தெப்பக்குளம் எதிரே அமைக்கப்பட்ட பந்தலில் காட்சியளித்து சூரனை வதம் செய்தார். முன்னதாக சூரனை வதம் செய்ய வந்த கற்பகவிநாயகரை அப்பகுதி பெண்கள் பூக்கோலமிட்டு வரவேற்றனர். சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நிறைவு பெற்ற பின்னர் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நிகழ்ச்சி காட்டப்பட்டது. 7-ம் நாளான இன்று இரவு மயில் வாகனத்திலும், 8-ம் நாளான நாளை வெள்ளி குதிரை வாகனத்திலும் கற்பகவிநாயகர் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    விழாவில் 9-ம் திருநாளான 18-ந்தேதி மாலை தேரோட்டமும் தொடர்ந்துமாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். 19-ந்தேதி 10-ம் நாளன்று காலை தங்க மூஷிக வாகனத்தில் உற்சவர் கற்பகவிநாயகர் கோவில் திருக்குளத்தில் எழுந்தருளி அங்கு தீர்த்தவாரி உற்சவம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மதியம் மூலவருக்கு மோதகம் (கொளுக்கட்டை) படையல் செய்யும் நிகழ்ச்சியும், இரவு பஞ்சமூர்த்தி சுவாமிகள் புறப்பாடு நிகழ்ச்சியுடன் சதுர்த்தி விழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்கள் கண்டவராயன்பட்டி தண்ணீர்மலை செட்டியார் மற்றும் காரைக்குடி சாமிநாதன் செட்டியார் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    • விநாயகர் சதுர்த்தி பண்டிகை வரும் 31-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
    • சிலைகளுக்கு வர்ணம் பூச செயற்கை ரசாயன வர்ணங்களை பயன்படுத்தக் கூடாது என மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்தது.

    சென்னை:

    விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாடு முழுவதும் வரும் 31 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

    இந்நிலையில், தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யக்கூடிய நிலையில், நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைப்பது குறித்த வழிமுறைகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. அதாவது களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டும் நீர் நிலைகளில் கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத மூலப்பொருட்களால் ஆன விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்காக உலர்ந்த மலர்கள், வைக்கோல், மரங்களின் இயற்கை பிசினை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் பொருட்களை நீர் நிலையில் கரைக்கக் கூடாது. பிளாஸ்டர் ஆப் பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் (பாலிஸ்டிரின்) கலவையில் செய்யப்பட்ட சிலைகளை கரைக்கக் கூடாது. மேலும், சிலைகளுக்கு வர்ணம் பூச செயற்கை ரசாயன வர்ணங்களை பயன்படுத்தக் கூடாது.

    மாவட்ட நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள நீர்நிலைகளில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும் என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

    ×