என் மலர்
நீங்கள் தேடியது "VIP 3"
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகர்களுள் ஒருவராக வலம் வரும் தனுஷ் நடிப்பில் உருவாகவிருக்கும் அடுத்த 4 படங்கள் குறித்து தனுஷ் மனம்திறந்துள்ளார். #Dhanush
தமிழ் சினி்மாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் முதல் ஹாலிவுட் படம் `தி எக்ஸ்டார்ட்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபகிர்'. தமிழில் இந்த படத்திற்கு `வாழ்க்கைய தேடி நானும் போனேன்' என்று தலைப்பு வைக்கத்திருக்கிறார்கள்.
கேன்ஸ் விழாவில் ஃபகிர் படத்தை திரையிடுவதற்காக பிரான்ஸ் சென்ற தனுஷ், தற்போது படத்தின் புரமோஷன் பணிகளில் பிசியாகி இருக்கிறார். புரமோஷன் பணிகளை முடித்த பிறகு இந்தியா திரும்பும் தனுஷ், மாரி-2 படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார்.
இந்த நிலையில், சமீபத்தில் நடந்த உரையாடலின் போது, தனது அடுத்த 4 படங்கள் பற்றி தனுஷ் தெரிவித்தார். அப்போது, மாரி-2, வடசென்னை ரிலீசுக்கு நடுவே, தனுஷ் இயக்கும் அடுத்த படம் வருகிற ஆகஸ்டில் துவங்க இருக்கிறதாம். மேலும் பாலிவுட்டில் தனுஷை அறிமுகப்படுத்திய ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ஒரு படத்திலும், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மற்றொரு படத்திலும் நடிப்பதை தனுஷ் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

அதேநேரத்தில் வேலையில்லா பட்டதாரி-3 படம் அடுத்த ஆண்டு வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளார்.
விரைவில் தனுஷீடன் இணைவேன் என்று அனிருத் சமீபத்தில் கூறியிருந்த நிலையில், கார்த்திக் சுப்புராஜ் படம் அல்லது வேலையில்லா பட்டதாரி-3 படத்தில் தனுஷீடன், அனிருத் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளது. #Dhanush