search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Viradham"

    • இந்த பூஜையைத் தொடர்ந்து ஒவ்வொரு பௌர்ணமியன்றும் செய்யலாம்.
    • பவுர்ணமி அன்று காலையில் குளித்துவிட்டு எந்த ஆகாரமும் எடுத்துக்கொள்ளாமல் விரதத்தை ஆரம்பிக்க வேண்டும்.

    சத்யநாராயண விரதம் நம் வேண்டுதல் நிறைவேறிய பிறகு அதற்காக நன்றி சொல்லும்விதமாக அமைந்த விரதமாகும்.

    இந்த விரதம் அனுஷ்டிக்கும் முறையை அறிந்து கொள்ளலாம்.

    பவுர்ணமி அன்று சத்ய நாராயண விரதம் கடை பிடிக்கப்படுகிறது.

    பொதுவாகவே விரதம் என்பது எதையாவது வேண்டிக்கொண்டு அது நடக்கவேண்டும் என்பதற்காக அனுசரிக்கப்படுவது.

    ஆனால், இந்த சத்யநாராயண விரதம் அப்படியல்ல, நம் வேண்டுதல் நிறை வேறிய பிறகு அதற்காக நன்றி சொல்லும் விதமாக அமைந்த விரதம்.

    இந்த சத்யநாராயண பூஜையை எப்படி அனுஷ்டிப்பது? பொதுவாகவே இந்த விரத பூஜையை எந்த மாதத்திலும் வரும் பவுர்ணமி அன்றைக்கு அனுசரிக்கலாம்.

    அன்றைக்கு பகல், இரவு பொழுதுகளைத் தவிர்த்து, பூர்ண சந்திரனின் உதய நேரத்தைப் பார்த்து அப்போது மேற்கொள்ளலாம்.

    இந்த பூஜையைத் தொடர்ந்து ஒவ்வொரு பௌர்ணமியன்றும் செய்யலாம்.

    பவுர்ணமி அன்று காலையில் குளித்துவிட்டு எந்த ஆகாரமும் எடுத்துக்கொள்ளாமல் விரதத்தை ஆரம்பிக்க வேண்டும்.

    மஹாவிஷ்ணுவின் ஓர் அம்சம்தான் சத்யநாராயணர் என்பதால் அன்று மாலைப் பொழுதுவரை விஷ்ணு ஸ்லோகங்களை சொல்லிக்கொண்டிருக்கலாம்.

    திரும்பத் திரும்ப விஷ்ணு ஸஹஸ்ரநாமம் சொல்லலாம்.

    பூஜையறையிலேயே இந்த பூஜையை அனுசரித்தால் ரொம்பவும் விசேஷம்

    அல்லது பூஜை செய்வதற்காகத் தேர்ந்தெடுத்திருக்கும் இடத்தை பெருக்கி, நீரால் துடைத்து சுத்தம் செய்து, மாவுக்கோலம் போட்டுக்கொள்ளுங்கள்.

    இடவசதிக்கேற்ப சின்னதாக மண்டபம் போல அமைத்துக் கொள்ளலாம்

    அல்லது ஒரு மணை போட்டு அதிலே சத்யநாராயணர் விக்ரகத்தை வைத்தும் பூஜை செய்யலாம்.

    அல்லது சத்யநாராயணர் படம் கிடைத்தாலும் உபயோகப் படுத்திக்கொள்ளலாம்.

    மண்டபத்துக்குச் சின்னதாக ஒரு மாவிலைத் தோரணம் கட்டிக்கொள்ளுங்கள்.

    மணை அல்லது மண்டபத்துக்குள் விக்ரகம் அல்லது படத்தை வைப்பதற்கு முன்னால் அதை நன்கு துடைத்து சந்தனம், குங்குமம் இட்டுக்கொள்ளுங்கள்.

    இரண்டு வாழைக் கன்று வாங்கி இருபக்கமும் சாய்த்து வையுங்கள்.

    இந்த மண்டபம் மேற்கு பார்த்தபடி இருக்கலாம்.

    நீங்கள் ஒரு மணைமேல், கிழக்கு பார்த்தோ அல்லது வடக்கு பார்த்தோ உட்கார்ந்து பூஜையை ஆரம்பிக்கலாம்.

    உங்களுக்கு இடது பக்கத்தில் இரண்டு நுனி வாழை இலைகளை ஒன்றன்மேல் ஒன்றாகக் கொஞ்சம் இடைவெளி விட்டு சேர்த்துப் போட்டுக் கொள்ளுங்கள்.

    அதன்மேல் அரிசியைப் பரப்பி வைத்துக் கொள்ளுங்கள்.

    ஆறுமுனை உள்ள ஷட்கோணம் (நட்சத்திரம் போல) கோலத்தை அதன்மேல் விரலால் வரைந்து கொள்ளுங்கள்.

    சுத்தமான நீர் நிரப்பிய ஒரு சொம்பை கோலத்தில் வையுங்கள்.

    சொம்பில் கழுத்தைச் சுற்றி ஒரு பூச்சரத்தைக் கட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

    சொம்பிற்கு சந்தனம் குங்குமம் இடுங்கள்.

    கலசத்தின் வாயில் மாவிலைக் கொத்தை செருகி வையுங்கள்.

    அதன் நடுவே மஞ்சள் பூசிய தேங்காயை வையுங்கள்.

    பிறகு விநாயகரை மனதாற வணங்கி விட்டு பூஜையை ஆரம்பியுங்கள். விஷ்ணு ஸ்தோத்திரங்களைச் சொல்லுங்கள்.

    சத்யநாராயணர் அஷ்டோத்திரம் சொல்லிக் கொண்டே உதிரிப் பூக்களால் அர்ச்சனை செய்யுங்கள்.

    பூஜை முடிந்ததும் பாயசம், வடை என்று பிரசாதங்கள் நிவேதனம் செய்யுங்கள்.

    அடுத்து, கற்பூரம் காட்டி இந்த பூஜையை நிறைவு செய்யலாம்.

    பூஜை முடிந்ததும் வீட்டுக்கு வெளியே வந்து, வானில் பூரணமாக ஒளிரும் சந்திரனைப் பார்த்து தரிசனம் செய்துவிட்டு நிவேதனப் பொருட்களை உட்கொண்டு விரதத்தை முடிக்கலாம்.

    சத்யநாராயண பூஜை விரதமிருப்பதாக வேண்டிக்கொண்டு எந்த கோரிக்கை நிறைவேறவேண்டும் என்று நினைக்கிறோமோ, அந்த கோரிக்கை நிறைவேறியதும் மறந்துவிடாமல் கண்டிப்பாக சத்யநாராயண பூஜையை அனுசரித்துவிட வேண்டும்.

    • கலைமகள் பிரம்மாவின் நாவில் அமர்ந்ததும் இந்த நாளில் தான்.
    • மகாலட்சுமி பூமியில் அவதரித்ததும் இந்த நாளில் தான்.

    திருமணம் ஆகாத ஆண்கள் மற்றும் பெண்கள் பங்குனி விரதம் இருந்து இறைவனை வழிபாட்டால் நிச்சயம் விரைவில் திருமணம் கை கூடும்.

    பங்குனி உத்திர விரதம் இருந்தால் சிறப்பான நல்லதொரும் வரன் கை கூடி வரும் என்பது முன்னோர்கள் வாக்கு.

    அதனாலேயே பங்குனி உத்திரம் விரதத்திற்கு திருமண விரதம் என்றொரு பெயரும் உண்டும்.

    அன்று ரங்கநாத பெருமாள் கோவிலில் நடக்கும் வைபவத்தை காண்பது விஷேசம்.

    இதனை கண்டால் களத்திர தோஷம் விலகி திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.

    பங்குனி உத்திர நாளில் தான் முருக பெருமான் வள்ளியை மணந்துள்ளார். அது மட்டுமா சிவன் பார்வதி, ராமன் சீதை, தேவேந்திரன் இந்திராணி போன்றோர்களின் திருமண நாளாகவும் பங்குனி உத்திர நன்னாள் விளங்குகிறது.

    சபரிமலையில் தர்ம சாஸ்தாவாக வீற்றிருக்கும் ஐயன் ஐயப்பன் இந்த பூமியில் அவதரித்ததும் இந்த நன்னாளில் தான்.

    கலைமகள் பிரம்மாவின் நாவில் அமர்ந்ததும் இந்த நாளில் தான்.

    மகாலட்சுமி பூமியில் அவதரித்ததும் இந்த நாளில் தான்.

    இப்படி பங்குனி உத்திரத்தை நாளின் சிறப்பை கூறிக்கொண்டே போகலாம்.

    • வேலை உள்ளவர்கள் “ஓம் சரவண பவ” என்னும் மந்திரத்தை நாள் முழுக்க உச்சரிக்கலாம்.
    • அருகில் முருகன் கோவில் இல்லை என்றால் சிவன் அல்லது பெருமாள் கோவிலிற்கு செல்லலாம்.

    பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திர தினத்தில் பவுர்ணமி நிலவு ஒளிவீசும் தினத்தை ஒரு விரத நாளாகவே கருதி முருகனை வழிபட்டால் கன்னியர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் மேலும் திருமணம் ஆன பெண்களின் மாங்கல்யம் பலம் பெறும்.

    ஆண், பெண் என அனைவருமே இந்த விரதத்தை அனுசரிக்கலாம்.

    அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு வீட்டில் விளக்கேற்றி முருகப்பெருமானை வணங்க வேண்டும்.

    அன்று முழுவதும் கந்த சஷ்டி கவசம், திருமுருகாற்றுப்படை, திருப்புகழ் போன்ற நூல்களை படிக்கலாம்.

    வேலை உள்ளவர்கள் "ஓம் சரவண பவ" என்னும் மந்திரத்தை நாள் முழுக்க உச்சரிக்கலாம்.

    இதன் மூலம் நமது மனமானது இறைவனையே நினைத்த வண்ணம் இருக்கும்.

    அதனால் மனம் செம்மை அடையும்.

    அன்று ஒரு வேலை மட்டுமே உணவு உண்டு விரதம் இருக்க வேண்டும்.

    வயதானவர்கள், உடல் நலம் பாதிக்கபட்டவர்கள் பால், பழம் போன்றவற்றை உண்ணலாம்.

    நாள் முழுக்க விரதம் இருந்து மாலையில் முருகன் கோவிலிற்கு சென்று அர்ச்சனை செய்து விரதத்தை நிறைவு செய்யலாம்.

    அருகில் முருகன் கோவில் இல்லை என்றால் சிவன் அல்லது பெருமாள் கோவிலிற்கு செல்லலாம்.

    முடிந்தால் பகல் வேளையில் ஏழை எளியவர்ளுக்கு அன்னதானம் செய்யலாம்.

    இந்த திருநாளில் தண்ணீர் பந்தல் அமைத்து நீர், மோர் வழங்குபவர் வளம் பெறுவார்கள்.

    மாலையில் அருகில் உள்ள முருகன் கோவில் அல்லது முருகன் சன்னதி உள்ள கோவிலுக்கு சென்று முருகனை தரிசித்து வரலாம்.

    பிறகு இரவில் சாத்வீக மான உணவை எடுத்துக் கொண்டு விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.

    • சனிக்கிழமைதோறும் ஒரு வேளை உணவோடு விரதம் இருந்து ஸ்ரீ சனிபகவான் ஸ்தோத்திரங்களை சொல்லி வழிபடலாம்.
    • ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ தர்மராஜன், பிரஜாபதி முதலிய தேவதைகளையும் ஆராதனை செய்யலாம்.

    1. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை எதுவும் சாப்பிடாமல் முழுமையாக உண்ணா நோன்பு இருந்து காகத்திற்கும் ஏழைகளுக்கும் அன்னதானம் செய்யலாம்.

    2. சனிக்கிழமைதோறும் ஒரு வேலை உணவோடு விரதம் இருந்து ஸ்ரீ சனிபகவான் ஸ்தோத்திரங்களை சொல்லி வழிபடலாம்.

    3. சிறிது எள்ளை பொட்டலமாக கட்டி தினசரி படுக்கும் போது அதை தலைக்கு அடியில் வைத்து படுத்திருந்து காலையில் அதனை அன்னத்தில் கலந்து காகத்திற்கு அன்னமிடலாம். 9 நாள் அல்லது 48 நாள் அல்லது 108 நாள் இதை செய்யலாம்.

    4. ஒரு தேங்காயை ஸ்ரீ சனிபகவான் கோவிலில் சனிக்கிழமைகளில் இரண்டு பகுதியாக்கி அதில் நல்லெண்ணை விட்டு எள்ளு முடிச்சிட்டு தீபமாக ஏற்றலாம் அல்லது திலதீபம் ஏற்றி வழிபடலாம்.

    5. ஸ்ரீ சனிபகவானுக்கு நல்லெண்ணை, பால், தயிர் அபிஷேகம் செய்து கருப்பு அல்லது நீல வஸ்திரம் சாத்தி எள்ளு சாதம், வடைமாலை செய்து வழிபாடு செய்து அனைத்தையும் ஏழைகளுக்கு விநியோகம் செய்ய வேண்டும்.

    6. ஸ்ரீ சனிபகவானுக்கு நவக்கிரக சாந்தி ஹோமங்கள் செய்து அபிஷேக ஆராதனைகளும் சிறப்போடு செய்து தொடர்ந்து மண்டல பூஜை செய்து பயன்பெறலாம்.

    7. எள்ளை சுத்தம் செய்து வறுத்து வெல்லம் ஏலக்காய் பொடியுடன் சேர்த்து இடித்து திலசூரணம் செய்து ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளுக்கும், ஸ்ரீ சனிபகவானுக்கும் படைத்து விநியோகம் செய்யலாம்.

    8. ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ தர்மராஜன், பிரஜாபதி முதலிய தேவதைகளையும் ஆராதனை செய்யலாம்.

    9. அவரவர் பிறந்த ஜென்ம நட்சத்திர தினத்தன்றோ அல்லது ஸ்ரீ சனிபகவானுடைய பிறந்த நட்சத்திரமான ரோகினி நட்சத்திரம் அன்றைக்கோ ஒவ்வொரு மாதமும் அல்லது ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் அர்ச்சனைகள் செய்வது மிக மிக நன்மையான பலன்களைத்தரும்.

    • ரமணர் கார்த்திகை தீபத்தை பற்றி மிகப் பெருமையாகப் பேசுவார்.
    • எல்லா வகையிலுமே நமக்கு நன்மை உண்டாகும். ஒரு தெளிவு நிலை, தீர்க்க நிலை உண்டாகும்.

    ரமணர் கார்த்திகை தீபத்தை பற்றி மிகப் பெருமையாகப் பேசுவார்.

    திருவண்ணாமலையில் கணக்கிட முடியாத அளவிற்கு நவரத்தினங்களும், தங்கங்களும் கொட்டிக் கிடக்கிறது.

    இவ்வளவும் அந்த மலைக்கு கீழ் கொட்டிக் கிடக்கிறது

    இதில், பரணி தீபம் இருக்கிறது, கார்த்திகை தீபம் இருக்கிறது.

    பரணி தீபம் என்பது பொருள், செல்வம், சொத்து, சுகம், பதவி, பட்டம், புகழ் எல்லாவற்றையும் கொடுக்கக் கூடியது.

    கார்த்திகை தீபம் என்பது மோட்ச தீபம். இறைவனடி போதும், பொருள் வேண்டாம், அருள் வேண்டும் என்பது.

    நிதி வேண்டாம், கருணை நிதி வேண்டும் என்று இராமலிங்க அடிகளார் சொல்வதைப் போல

    கருணை நிதி கொடுக்கக் கூடியது கார்த்திகை தீபம்.

    எந்த தீபத்தைப் பார்க்கிறார்களோ இல்லையோ கார்த்திகை தீபத்தைப் பார்த்தாலே

    எல்லா வகையிலும் சிறப்பு உண்டாகும்.

    எங்கு பார்த்தாலும் இருட்டாக இருக்கிறது. ஒளியை உள்ளுக்குள் அனுப்பினால், இதயத்திற்குள்

    ஒளி ஆற்றலை கொண்டு சென்றால், எல்லா வகையிலுமே நமக்கு நன்மை உண்டாகும்.

    தவிர, ஒரு தெளிவு நிலை, தீர்க்க நிலை உண்டாகும்.

    அதனால் கார்த்திகை தீபத்தை மட்டும் அனைவரும் கண்டு தரிசிக்க வேண்டும்.

    அது எல்லா வகையிலும் சிறப்புதரும்.

    • அண்ணாமலையார் தீபம் என்பது திருவிளக்கின் விஸ்வரூபம்.
    • வேத புராணங்களும்கூட விளக்கேற்றுவதால் மிகச் சிறந்த பலன் கிடைக்கும் என்கின்றன.

    அண்ணாமலையார் தீபம் என்பது திருவிளக்கின் விஸ்வரூபம்.

    தீபம் என்பது லட்சுமி தேவியின் வடிவத்தையும் (சுடர்), சரஸ்வதி தேவியின் பிம்பத்தையும் (ஒளி),

    பார்வதியின் சக்தியையும் (வெப்பம்) ஒன்றாக சேர்த்தது.

    திருவிளக்கு தீபச்சுடரில் மூன்று தேவிகளின் வடிவத்தை காணும் அனைவரும் நற்கதி அடைவர் என்பது ஆன்றோர் மொழி.

    எனவேதான் தீபம் என்றாலே விசேஷமாக கருதப்படுகிறது.

    கார்த்திகை தீபத்தன்று தீபமேற்றி வழிபட்டால், சிவனின் அருளுடன், மூன்று தேவியரின் அருளும் சேர்ந்து கிடைக்கும்.

    தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படாத வண்ணம் தடுக்கிறது.

    இதன் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மகாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையுமிடத்தில்

    சிவபெருமான் வாசம் செய்கின்றனர்.

    வேத புராணங்களும்கூட விளக்கேற்றுவதால் மிகச் சிறந்த பலன் கிடைக்கும் என்கின்றன.

    எத்தனை எத்தனையோ அரசர்கள், கோவில்களில் தீபம் ஏற்றுவதையே மிகச் சிறந்த திருப்பணியாக செய்துள்ளனர்.

    எல்லா நாளுமே தீபம் ஏற்றி வழிபட உயர்வான பலன் தரும் என்றாலும்,

    கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தில் இருவேளைகளும் விளக்கேற்றுவதும்

    எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும்.

    தீபஜோதி வழிபாடானது இருள் போன்று நம்மை சூழ்ந்து நிற்கிற தடைகள், இடையூறுகளையும் ஏழரை சனி,

    அஷ்டமச்சனி போன்றவற்றால் ஏற்படக் கூடிய கெடுபலன்களையும் போக்கி ஒளிமயமான,

    வளமான வாழ்வை அருளும் என்பது நம்பிக்கை.

    சிவபெருமானே மலையாகி நிற்கும் அண்ணாமலையின் உச்சியில் மகாதீப வடிவில் காட்சி தரும்

    சிவபெருமானை வணங்கி வளமான வாழ்வு பெறுவோம்.

    • பெரும்பாலான பக்தர்களை அவரே ‘வா’ என்று அழைத்து விடுவார்.
    • பக்தர்கள் கிரிவலம் வரும் போது சுற்றியுள்ள லிங்கங்களை தவறாது வழிபட வேண்டும்.

    திருப்பதிக்கும், திருவண்ணாமலைக்கும் லட்சக்கணக்கில் கூட்டம் திரண்டு வரக்காரணம் இரண்டு தெய்வங்களுமே

    அதிசயிக்கத்தக்க வகையில் பக்தர்களுக்கு ஒரு நாள் 'விசேஷ அழைப்பு விடுப்பார்கள்' என்பது தான்!

    திருப்பதிக்கோ, திருவண்ணாமலைக்கோ உடனே புறப்பட்டு சென்று, வரம் வாங்கித் திரும்ப வேண்டும்

    என்று நினைக்கிற எல்லோருக்குமே அந்த பாக்யம் கிடைத்து விடாது

    பெரும்பாலான பக்தர்களை அவரே 'வா' என்று அழைத்து விடுவார்.

    14 கி.மீ கிரிவலப்பாதையை எளிதாக நடக்க வைத்து விடுவார்.

    இந்த முதல் பயணத்திலேயே உங்கள் உள்ளத்தில் புதிய உணர்வுகளை காண்பீர்கள்.

    "இனி எல்லாம் நல்லபடியாக நடக்கும்" என்று நினைக்க ஆரம்பிப்பீர்கள்.

    உற்சாகமான பல விஷயங்கள் உங்கள் வாழ்க்கையில் நடக்கும்.

    உங்களையும் அறியாமல் தினமும் 'ஓம் நமச்சிவாயா' என்று உச்சரிக்க தொடங்குவீர்கள்.

    அடுத்து, இரண்டாவது பவுர்ணமிக்கு நம்மால் போக முடியுமா?

    என்ற சிந்தனை உங்கள் சூழ்நிலை நிமித்தமாக தலை தூக்க ஆரம்பிக்கும்.

    ஆனால் என்ன ஆச்சரியம்! மிகச் சரியாக அடுத்த பவுர்ணமி தினத்தன்று நீங்கள் அங்கு இருப்பீர்கள்.

    இது அண்ணாமலையார் நடத்தும் அற்புதம் தான்!

    இந்த இரண்டாவது பயணத்திற்கு பிறகு உங்கள் வாழ்க்கையில் மாற்றங்கள் நடக்கத் துவங்கும்.

    நீங்கள் எதை நினைத்தீர்களோ அது நிறைவேறும்.

    பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். மனச்சஞ்சலங்களில் இருந்து முற்றிலுமாக விடுபடத் தொடங்கி இருப்பீர்கள்!

    மூன்றாவது பவுர்ணமிக்கு அண்ணாமலையார் சில பக்தர்களை சோதிப்பார்,

    " இவன் தானாக முயற்சி எடுத்து வருகிறானா? பார்ப்போம்' என்று வேடிக்கை பார்ப்பார்.

    மிகுந்த இறை பக்தி கொண்டு பக்தர்கள் இந்த சோதனையை கடக்க வேண்டும்.

    பெரும் முயற்சி எடுத்து செல்ல வேண்டியது இருக்கும்.

    சோதனைகளை கடந்து மூன்றாவது பவுர்ணமிக்கு போய் விட்டு திரும்புபவர்களுக்கு அருணாச்சலேஸ்வரர்

    அருள் மள, மளவென வரிசையாகத் தேடி வரும்.

    இரண்டாண்டு காலமாக மனதுக்குள் அழுது புழுங்கி, புலம்பிக் கொண்டிருந்த விஷயங்கள் மகிழ்ச்சி தரும் படியாக மாறும்.

    சில பக்தர்கள் சோதனையை கடக்க முடியாமல் மூன்றாவது பவுர்ணமியை கோட்டை விட்டு விடுவார்கள்.

    அவர்கள் அண்ணாமலையாரை தொடர்ந்து நினைத்துக் கொண்டிருக்க, நாலாவது பவுர்ணமிக்கு

    அவரே வரும்படி செய்து அருள் பாலித்து விடுவார்.

    பக்தர்கள் கிரிவலம் வரும் போது சுற்றியுள்ள லிங்கங்களை தவறாது வழிபட வேண்டும்.

    அவ்வப்போது மலைப்பகுதியை பார்த்து 'ஓம் நமச்சிவாயா நமஹ' ஓம் அருணாச்சலேஸ்வரா நமஹா'

    என்ற மந்திரத்தை உச்சரித்தபடி செல்ல வேண்டும்.

    முழுமையான பக்தி உணர்வுடன் வலம் வருபவர்களுக்கு நினைத்தது கை கூடும்.

    இதை தொடர்ந்து ஒவ்வொரு பவுர்ணமிக்கும் கிரிவலம் சென்று வருபவர்கள் மிகவும் யோகம் உடையவர்கள்.

    அவர்களின் வாழ்க்கை அமைதியான நீரோடை போல அமையும்.

    மிகுந்த மனவலிமை பெறுவார்கள். எதையும் எளிதாக வெல்வார்கள்.

    அவர்களது 'சொல்வாக்கு' பலிக்கும் அளவுக்கு உயர்வார்கள்.

    அண்ணாமலையாரை இன்றே நினையுங்கள். நினைத்த காரியம் யாவும் நிறைவேறக் காண்பீர்கள்.

    • வீட்டில் திருவிளக்கு ஏற்றும் முன் சந்தனம் குங்குமம் இடவேண்டும் என்பது நியதி.
    • விளக்கின் எட்டு பாகத்தில் பொட்டு இட வேண்டும்.

    வீட்டில் திருவிளக்கு ஏற்றும் முன் சந்தனம் குங்குமம் இடவேண்டும் என்பது நியதி.

    விளக்கின் எட்டு பாகத்தில் பொட்டு இட வேண்டும்.

    அவை உச்சி, முகங்கள் ஐந்து, தீபஸ்தம்பம், தீபத்தின் பாதம் ஆகியவை.

    எட்டு இடங்களிலும் பொட்டிடும்போது, ஆதிலட்சுமி, சந்தான லட்சுமி, வித்யாலட்சுமி, தனலட்சுமி,

    தான்ய லட்சுமி, கஜலட்சுமி, வீர லட்சுமி, விஜயலட்சுமி ஆகியோரை தியானித்து இடவேண்டும்.

    இதனால், வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும்.

    எட்டு பொட்டுகள் வைப்பதற்கு தத்துவரீதியாவும் ஒரு காரணமும் சொல்வர்.

    நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்னும் ஐந்து பூதங்கள், சூரியன், சந்திரன் ஆகிய கண்கண்ட தெய்வங்கள்,

    ஆத்மா என்னும் உயிர் தத்துவம் ஆகியவற்றை இந்த பொட்டுகள் குறிக்கின்றன.

    வீடுகளில் நாம் குத்துவிளக்கு, அகல்விளக்கு, காமாட்சி விளக்கு, கிலியஞ்சட்டி (மண்ணால் ஆனது) என்றெல்லாம் ஏற்றுகிறோம்.

    இவை எல்லாவற்றிலும் விட உயர்ந்தது சரவிளக்கு. வெள்ளி நெய் தீபம் ஏற்றினால் வருமானம் அதிகரிக்கும், கடன் தீரும்.

    • இறைவனின் திருப்பாத தரிசனம் நமது முற்பிறவி பாவங்களை எல்லாம் தீர்க்கும் என்பது ஐதீகம்.
    • கோவிலில் தரிசனம் செய்யும் பக்தர்கள் தவறாமல் பாத தரிசனம் செய்வது நன்மை தரும்.

    பாவம் போக்கும் அண்ணாமலை திருப்பாதம்!

    கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பது ஆன்றோர் வாக்கு.

    அதைப்போன்றே இறைவனின் திருப்பாத தரிசனம் நமது முற்பிறவி பாவங்களை எல்லாம் தீர்க்கும் என்பது ஐதீகம்.

    திரு அண்ணாமலையார் கோவிலில் அண்ணாமலையார் பாதம் அமைந்துள்ளது.

    கோவிலுக்கு உள்ளே பேய் கோபுரத்துக்கு வலது புறத்தில் அண்ணாமலையார் பாதம் உள்ளது.

    அடி முடி காணாத பரம்பொருளின் பாத தரிசனம் காண வேண்டி அடியார்களும், அருளாளர்களும் மேற்கொண்ட

    கடும் தவத்தின் பயனாக விஸ்வரூப மூர்த்தியாக அண்ணாமலையார் எழுந்தருளிய

    இடத்தில் அமைந்துள்ளதே திருப்பாதம்.

    அண்ணாமலையார் பாதம் தனி சன்னதியாக அமைந்துள்ளது.

    கோவிலில் தரிசனம் செய்யும் பக்தர்கள் தவறாமல் பாத தரிசனம் செய்வது நன்மை தரும்.

    பாத தரிசன சன்னதியில் தினமும் மலர் அலங்காரத்துடன் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது.

    பாதத்தை சுற்றியுள்ள தூண்களில் விநாயகர், முருகர், கோதண்டராமர், சக்திதேவியின் திருவடிவங்கள் காட்சி தருகின்றன.

    மேலும் மலை உச்சியிலும் அண்ணாமலையாரின் திருப்பாதம் அமைந்திருக்கிறது.

    தீபம் ஏற்றப்படும் மலை உச்சியின் வலது புறத்தில் பாத தரிசனத்தை நாம் காணலாம்.

    திருவண்ணாமலையை தரிசித்து தவமிருந்து பேறு பெற்ற சித்தர்கள், மகான்கள், அருளாளர்கள் ஏராளம்.

    அவர்களில் இடைக்காட்டு சித்தர், அருணகிரிநாதர், ஈசான்ய ஞானதேசிகர், குரு நமச்சிவாயர்,

    குகை நமச்சிவாயர், ரமணமகரிஷி, தெய்வசிகாமணி தேசிகர், விருப்பாட்சிமுனிவர், சேஷாத்ரி சுவாமிகள்,

    இசக்கிசாமியார், விசிறி சாமியார், அம்மணியம்மன்,

    கணபதி சாஸ்திரி, சடைசாமிகள், தண்டபாணி சுவாமி, கண்ணாடி சாமியார், சடைச்சி அம்மாள், பத்ராசல சுவாமி,

    சைவ எல்லப்பநாவலர், பாணி பத்தர் உள்ளிட்டவர்கள் முக்கியமானவர்கள்.

    • பன்னிரெண்டு வாரங்கள் கடைப்பிடித்தால், நவக்கிரக தோஷங்கள் நீங்கி, சிவசக்தியின் பேரருள் கிடைக்கும்
    • குப்த கங்கை தீர்த்தத்தில் நடைபெறும் கார்த்திகை ஞாயிறு நீராடல் உற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றது.

    மகாவிஷ்ணுவை கஸ்தூரியால் அலங்கரித்து, தாமரை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால்

    தேவாதி தேவர்களால் பெற முடியாத பாக்கியத்தைக் கூட பெறலாம்.

    விஷ்ணுவின் சந்நிதிக்கு நேரே அமர்ந்து கொண்டு, பகவத் கீதையின் விபூதி யோகம், பக்தி யோகம், விஸ்வரூப யோகம்

    ஆகியவற்றை பாராயணம் செய்தால், சகல பாவங்களும் நீங்குவதுடன் புண்ணியங்களும் நம்மை வந்து சேரும்.

    நவக்கிரக மூர்த்திகள் விரதம் அனுஷ்டித்து, வரம் பெற்ற கார்த்திகை ஞாயிறு விரதத்தை, முதல் ஞாயிறு தொடங்கி

    பன்னிரெண்டு வாரங்கள் கடைப்பிடித்தால், நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி,

    சிவசக்தியின் பேரருள் கிடைக்கும் என்பது அடியார்களது நம்பிக்கை.

    தன்னைப் பிரிந்த திருமகளுடன் மீண்டும் சேருவதற்காக மகாவிஷ்ணு தவம் மேற்கொண்டு,

    சிவபெருமானது அருளைப் பெற்ற திருத்தலம் ஸ்ரீவாஞ்சியம்.

    இங்குள்ள குப்த கங்கை தீர்த்தத்தில் நடைபெறும் கார்த்திகை ஞாயிறு நீராடல் உற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றது.

    ஆண்டுதோறும் கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில், அதிகாலை 5 முதல் 6 மணிக்குள் சிவபெருமானும் பார்வதிதேவியும்

    அஸ்திர தேவரோடு பிரகார வலம் வந்து, குப்த கங்கையின் கிழக்குக் கரையில் ஆசி வழங்கி அருளுகின்றனர்.

    கார்த்திகை மாதத்தின் ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த குப்த கங்கையில் நீராடினால் பிரம்மஹத்தி தோஷம்

    கள் உண்டபாவம், திருடுவதால் வரும் பாவம் மற்றும் மனச் சஞ்சலத்தால் ஏற்பட்ட பாவங்கள்

    ஆகியவை நீங்கி விடும் என்று பிரும்மாண்ட புராணம் கூறுகிறது.

    கார்த்திகை மாதத்தின் முப்பது நாட்களிலும், அதிகாலையில் நீராடி, சிவவிஷ்ணு பூஜைகள் மற்றும் தீப தானம் செய்து,

    வீட்டின் எல்லா இடங்களிலும் தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து வழிபட்டால்,

    குறைவற்ற மகிழ்ச்சி உண்டாகும் என்று புராணங்கள் விளக்குகின்றன.

    • மகா தீபம் கார்த்திகை தீப திருவிழா நாளின் மாலையில் அண்ணாமலை மலையின் மீது ஏற்றப்படுகிறது.
    • இத்தீபம் ஏற்றப்படுகின்ற அதே நேரத்தில், மலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.

    மகா தீபம் கார்த்திகை தீப திருவிழா நாளின் மாலையில் அண்ணாமலை மலையின் மீது ஏற்றப்படுகிறது.

    இம்மலை 2,668 அடி உயரமானதாகும். மாலை நேரத்தில் பஞ்சமூர்த்திகள் தீப மண்டபத்தில் எழுந்தருளுகின்றனர்.

    அவர்களைத் தொடர்ந்து வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே காட்சிதருகின்ற அர்த்தநாரீசுவரர்

    உற்வச கோலம் தீபமண்டபத்திற்கு எடுத்து வரப்படுகிறது.

    அவர் முன்பு அகண்ட தீபம் ஏற்றப்படுகிறது.

    இத்தீபம் ஏற்றப்படுகின்ற அதே நேரத்தில், மலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.

    • பரணி தீபம் ஏற்றப்பட்ட பிறகு, அதைக் கொண்டு பஞ்சமுக தீபம் ஏற்றப்படுகிறது.
    • பரணி தீபத்தினை இறுதியாக பைரவர் சன்னதியில் வைக்கின்றனர்.

    கார்த்திகை தீப பத்தாம் நாள் அதிகாலை 4.00 மணிக்கு, மூலவர் கருவறைமுன் மிகப்பெரிய கற்பூரக் கட்டியில்

    ஜோதி ஒளி ஏற்றி, தீபாராதனை காட்டி, அதில் ஒற்றை தீபம் ஏற்றுவார்கள்.

    இந்த ஒற்றை நெய் தீபத்தால் நந்திமுன் ஐந்து பெரிய அகல் விளக்கு ஏற்றுவார்கள்.

    அதன்பின் உண்ணாமுலை அம்மன் சந்நிதியிலும் ஐந்து பெரிய அகல் விளக்கில் தீபம் ஏற்றுவார்கள்.

    இந்த பரணிதீபம் காலையில் நடக்கும்.

    பரணி தீபம் ஏற்றப்பட்ட பிறகு, அதைக் கொண்டு பஞ்சமுக தீபம் ஏற்றப்படுகிறது.

    பரணி தீபத்தினை இறுதியாக பைரவர் சன்னதியில் வைக்கின்றனர்.

    ×