என் மலர்
நீங்கள் தேடியது "Viradham"
- கண்ணன் அவதரித்த ரோகிணி நட்சத்திரத்தை வைணவர்கள் கிருஷ்ண ஜெயந்தி என்பார்கள்.
- கணவன், மனைவி இருவருமே செய்யத்தக்க விரதம் இது.
கண்ணன் அவதரித்த ரோகிணி நட்சத்திரத்தை வைணவர்கள் கிருஷ்ண ஜெயந்தி என்பார்கள்.
கண்ணனின் பிறந்த நாளான அன்று உரிய முறையில் விரதம் இருக்க வேண்டும்.
அது மட்டுமின்றி பலவகைப் பட்சணங்களை இல்லத்தில் தயார் செய்து வைத்து இரவில் கண்ணனைப் பூஜை செய்து வணங்குவது வழக்கம்.
அப்பொழுது கண்ணன் புகழ் பாடும் கீதங்கள், சரிதங்கள் ஆகியவற்றைப் படிக்கலாம்.
கணவன், மனைவி இருவருமே செய்யத்தக்க விரதம் இது.
பகலில் உபவாசம் இருந்து இரவில் ஸ்ரீ கிருஷ்ணனைப் பூஜித்து, அவரது சரிதத்தைக் கேட்டு கண் விழிப்பார்கள்.
பாகவதத்தில் கிருஷ்ணனின் அவதாரக் கட்டத்தைக் கேட்பதும், பாராயணம் செய்வதும், பாகவதம் கேட்பதும் மிகவும் புண்ணியமாகும்.
கண்ணன் மேல் மிகவும் மனதை பறிகொடுத்து விரதம் இருப்பவர்களுக்கு மங்களகரமான பலன்கள் அனைத்தும் கைகூடும்.
குழந்தை செல்வம் தருவதுடன் சகல சவுபாக்கியங்களையும் அருளி முக்தி நலத்தையும் கண்ணன் நல்குவான்.
- பெருமாளாகிய அனந்த பத்மநாப சுவாமியைக் கருதி அனுஷ்டிக்கும் விரதமாகும் இது.
- இந்த விரதம் அனுஷ்டிப்போர் இழந்த செல்வங்களை மீண்டும் பெறுவார்கள்.
ஆவணி மாதம் சுக்லபட்ச சதுர்த்தியில் இந்த விரதம் வரும்.
பெருமாளாகிய அனந்த பத்மநாப சுவாமியைக் கருதி அனுஷ்டிக்கும் விரதமாகும் இது.
இதை அனுஷ்டிப்பவர்களுக்கு செல்வம் பெருகும்.
அனந்த பத்மநாப விரத தினத்தன்று பெருமாள் படத்தை வைத்து முறைப்படி பூஜை, பாராயணம் முதலியன செய்ய வேண்டும்.
இனிப்புப் பண்டங்களைச் சமர்ப்பிக்கலாம். தூப நைவேத்தியங்கள் உகந்தது.
பதினான்கு முடி போட்ட மஞ்சள் கயிற்றை குங்குமத்தில் தோய்த்து பத்மநாப சுவாமியிடம் வைத்து
பின் எடுத்து இடது மணிக்கட்டில் கயிற்றை கட்டிக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு தொடர்ந்து பதிமூன்று ஆண்டுகள் செய்து பதினான்காம் ஆண்டு அன்னதானம் செய்ய வேண்டும்.
பின்னர் ஆயுள் முழுவதும் அனுசரிக்கலாம்.
இந்த விரதம் அனுஷ்டிப்போர் இழந்த செல்வங்களையும், சக்திகளையும் மீண்டும் பெறுவார்கள்.
- ஆறுபடை வீடுகளிலும் முருகன் தலங்களிலும் இத்திருவிழா நடைபெறும்.
- கந்தர் சஷ்டி விரதத்திற்குக் கணக்கற்ற பலன்கள் உண்டு.
கந்தர்சஷ்டி விரதம் ஐப்பசி மாதம் சுக்கில பட்சத்துப் பிரதமை முதல் சஷ்டி வரையிலும் ஆறு நாட்களுக்கு
ஸ்ரீ முருகப் பெருமானைக் குறித்து அனுஷ்டிக்கும் விரதமாகும்.
ஆறுபடை வீடுகளிலும் முருகன் தலங்களிலும் இத்திருவிழா நடைபெறும்.
இந்த ஆறு நாட்களும் விரதம் இருப்பவர்கள் காலையில் நீராடி, உபவாசம் இருத்தல் வேண்டும்.
கோவிலிலோ அல்லது இல்லத்திலோ முருகனை வழிபாடு செய்து பாராயணம் செய்யலாம்.
இக்காலங்களில் திருப்புகழ், கந்தர்சஷ்டி கவசம், சண்முக கவசம், கந்தர் அனுபூமி ஆகியவற்றைப் பாராயணம் செய்தல் சிறப்பாகும்.
ஆறுதினமும் உபவாசம் இருந்து ஆறாம் நாள் இரவு பால், பழம் சாப்பிடலாம் என்று சொல்லப்படுகிறது.
உடல்நிலை இடம் கொடுக்காதவர்கள் தினமும் ஒரு வேளை மதியமோ அல்லது இரவோ
பலகாரமோ அல்லது பால், பழமோ சாப்பிட்டுக் கொள்ளலாம்.
கந்தர் சஷ்டி விரதத்திற்குக் கணக்கற்ற பலன்கள் உண்டு.
சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பது பழமொழியாகும்.
சஷ்டியில் விரதமிருந்தால் கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பது இதன் பொருளாகும்.
கந்தர்சஷ்டி விரதத்தை முசுகுந்தச் சக்கரவர்த்தி அனுஷ்டித்து எல்லா நலன்களும் பெற்றுச் சிறப்புடையவர் ஆனார்.
- மார்கழி மாதத்தில் அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து வீதிகளில் பஜனை செய்தல் வேண்டும்.
- மார்கழி மாத நோன்பால் உள்ளத்தையும் உடலையும் நாம் தூய்மையாக்கி கொள்ள முடியும்.
மார்கழி மாதம் தேவர்களின் இரவுக் காலம் முடியும் காலம் ஆகும்.
இதை "உஷத் காலம்" என்றும் "வைகறைப் பொழுது" என்றும் கூறுவது உண்டு.
இந்த மாதத்தில் யார் விடியற்காலத்தில் எழுந்து பக்தியுடன் பகவானைத் தொழுகிறார்களோ அவர்கள்
சகல சவுபாக்கியங்களையும் பெறுவதுடன் ஆண்டவனின் அருளுக்கும் பாத்திரமாவார்கள்.
மார்கழி மாதத்தில் அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து வீதிகளில் பஜனை செய்தல் வேண்டும்.
திருப்பாவை, திருவெம்பாவை ஆகியவை பாட வேண்டும்.
மார்கழி மாதம் முழுவதும் நெய் உண்ணோம், பால் உண்ணோம் என்பார் ஆண்டாள்.
இவ்வாறு விரதம் இருந்து காலையில் பஜனை செய்து ஆண்டவனை வழிபட அருள் கிடைக்கும்.
மார்கழி மாத நோன்பால் உள்ளத்தையும் உடலையும் நாம் தூய்மையாக்கி கொள்ள முடியும்.
அது மட்டுமின்றி மார்கழி மாத நோன்பு நமது பிறவிப்பயனே ஆண்டவனை அடைவது தான் என்பதை உணர்த்துகிறது.
தெய்வமே எங்களுக்கு நல்ல கணவனைக் கொடு என்பது தான் கன்னிப்பெண்களின் பிரார்த்தனையாக இருக்கும்.
மாத பாவை நோன்பு இருக்கும் பெண்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கும்.
பொங்கல் நைவேத்தியம் வைப்பது நல்லது.
- பெண்களின் திருமாங்கல்யத்தை காப்பதற்காக இந்த விரதம் கடைபிடிக்கப்படுகிறது.
- நோன்பு இருக்கும் தினத்தன்று காலையில் ஒருவேளை மட்டும் சாப்பிடலாம்.
மாசி மாத ஏகாதசியில் வருகின்ற முக்கியமான நோன்பு காரடையான் நோன்பு.
பெண்களால் இந்த விரதம் மேற்கொள்ளப்படும்.
இந்த விரதத்தை கடைபிடிக்க ஒரு கலசத்தில் தேங்காயை வைத்து அதைச் சுற்றி மாவிலைகள் கொண்டு கட்ட வேண்டும்.
அந்த கலசத்தின் மேல் மஞ்சள் கயிறு கொண்டு கட்டி மஞ்சள், சந்தனம், குங்குமம் பூச வேண்டும்.
அலங்கரிக்கப்பட்ட கலசத்தை பூஜையறையில் வைத்து காமாட்சியம்மனை வேண்டிக் கொண்டு
நைவேத்தியம் படைத்து, தீபாராதனைகள் செய்து வணங்க வேண்டும்.
நைவேத்தியமாக பழம், பொரி, சுண்டல் வைக்கலாம்.
பெண்களின் திருமாங்கல்யத்தை காப்பதற்காக இந்த விரதம் கடைபிடிக்கப்படுகிறது.
பூஜை முடிந்தவுடன் கார அடையுடன், ஜாக்கெட் பிட், மஞ்சள், குங்குமம் போன்றவற்றை
சுமங்கலிப் பெண்களுக்கு தந்து விட்டு அதன்பின்னர் கலசத்தில் கட்டிய மஞ்சள் கயிற்றை எடுத்து
விரதமிருந்த பெண் கட்டிக் கொள்ளலாம்.
நோன்பு இருக்கும் தினத்தன்று காலையில் ஒருவேளை மட்டும் சாப்பிடலாம்.
- உடன் பிறந்த சகோதரர்களின் நலனுக்காக சகோதரிகள் கடைப்பிடிக்கும் விரதம் இது.
- புத்திரப் பேறு உண்டாக நாக பிரதிஷ்டை செய்யும்படி சாஸ்திரங்கள் கூறுகின்றன.
ஆவணி மாதம் வளர்பிறை நான்காம் நாளாகிய சதுர்த்தியிலும் ஐந்தாம் நாளாகிய பஞ்சமியிலும் நாக சதுர்த்தி விரதம் மேற்கொள்ள வேண்டும்.
அன்று இல்லத்தைக் கூட்டி மெழுகிச் சுத்தம் செய்து, சுதையில் நாகம்போல் செய்து வைத்து,
அதற்குப் பச்சரியில் நைவேத்தியம் செய்து வைத்துப் படைத்து தீப தூப நைவேத்தியம் செய்து வைத்துப் படைத்து
தீப தூப நைவேத்தியங்களுடன் அந்நாகத்தைப் பாராயணப் பாடல்களுடன்
புற்றுக்குப் பக்கத்தில் கொண்டு போய் வைத்துவிட்டு வந்து விடுவார்கள்.
சிலர் நாக சதுர்த்தி, நாக பஞ்சமி, கருட பஞ்சமி ஆகிய விரதங்களை தங்கள் விருப்பம் போல் மேற்கொள்ளுவார்கள்.
விரதம் எதுவாயினும் அன்றையதினம் பாம்புப் புற்றில் பால் வார்த்து புஷ்பங்களைச் சார்த்தி,
பழம் முதலியவற்றை வைத்துப் பூஜை செய்யலாம்.
உடன் பிறந்த சகோதரர்களின் நலனுக்காக சகோதரிகள் கடைப்பிடிக்கும் விரதம் இது.
புத்திரப் பேறு உண்டாக நாக பிரதிஷ்டை செய்யும்படி சாஸ்திரங்கள் கூறுகின்றன.
நாகபூஜை விஷ பயத்தினின்று விடுவிக்கும்.
- ராமபிரான் அவதரித்த தினம் ராம நவமியாகும்.
- இந்நாட்களில் விரதம் இருந்து ராமாயணம் படிப்பதும், சொற்பொழிவுகள் செய்வதும் உண்டு.
ராமபிரான் அவதரித்த தினம் ராம நவமியாகும்.
இது ஆண்டுதோறும் சித்திரை மாதம் நவமியும் புனர்வசு நட்சத்திரமும் சேர்ந்திருக்கும் நாளில் வரும்.
ஸ்ரீராமன் பிறந்த தினத்தோடு முடியும். பத்து நாட்கள், முன் பத்து எனப் பெறும்.
பிறந்த தினத்திலிருந்து கொண்டாடப்பெறும் பின் பத்து நாட்கள், பின் பத்து எனப்பெறும்.
சில வைணவத் தலங்களில் இத்தினங்களை முன்பத்து, பின்பத்து என்று மிகவும் சிறப்பான திருவிழாவாகக் கொண்டாடுவார்கள்.
இந்நாட்களில் விரதம் இருந்து ராமாயணம் படிப்பதும், சொற்பொழிவுகள் செய்வதும் உண்டு.
பூஜைகளும் நிகழும்.
ராமாயணம் படித்துப் பட்டாபிஷேகம் செய்து ஆஞ்சநேயர் உற்சவமும் செய்து பூர்த்தி செய்வார்கள்.
பானகம், நீர்மோர், சந்தனம், சுண்டல், சர்க்கரைப் பொங்கல் ஆகியவை வினியோகங்களாக அமையும்.
விளக்கு ஏற்றும்பொழுது நாராயணனுக்கு உரிய நல்லெண்ணை ஊற்றி ஏற்றுவது சிறப்பாகும்.
ராம நவமி விரதத்தை தவறாமல் கடைப் பிடிப்பவர்களுக்கு பிள்ளைப் பாக்கியம் கிடைக்கும்.
இது தவிர புரட்டாசி மாதத்திலும் ராமாயணம் முழுவதையும் ஒரு மாத காலத்திற்குப் படித்துப் பொருள் சொல்வதுண்டு.
- அன்று ஆதிசேஷன் விக்கிரகம் வைத்து சிறப்பு பூஜைகள் செய்கின்றனர்.
- மேலும் கருடனின் உடலில் எட்டு ஆபரணமாக விளங்குபவையும் அஷ்ட நாகங்களே.
இந்த விரதம் குழந்தைகளுக்காகவும், உடன் பிறந்தவர்களுக்காகவும் கடைபிடிக்கப்படுகிறது.
ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமியன்று இவ்விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
தமிழ் நாட்டில் கருட பஞ்சமி விரதம் மிகவும் பரவலாக அனுஷ்டிக்கப்படுவதில்லை என்றாலும்
கருட சேவையைப் பற்றி எழுதி வருவதால் இவ்விரதத்தைப் பற்றி படித்த சில தகவல்களை
அன்பர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
கருட பஞ்சமியன்று கருட வழிபாடும், விஷ்ணு வழிபாடும் கனிந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்.
கருடனைப் போல பலசாலியும் புத்திமானாகவும், வீரனாகவும் மைந்தர்கள் அமைய
அன்னையர்கள் கருட பஞ்சமியன்று விரதம் இருக்கின்றனர்.
அன்று ஆதிசேஷன் விக்கிரகம் வைத்து சிறப்பு பூஜைகள் செய்கின்றனர்.
கருட பஞ்சமியன்று ஆதிசேஷன் விக்கிரகம் வைத்து பூஜை செய்யப்படுவதாக ஐதீகம்.
மேலும் கருடனின் உடலில் எட்டு ஆபரணமாக விளங்குபவையும் அஷ்ட நாகங்களே.
கருட பஞ்சமி தன் உடன் பிறந்தவர்கள் சிறப்புடன் வாழ பெண்கள் கொள்ளும் நோன்பு.
இப்போதும் கருட பஞ்சமி அன்று பெண்கள் தங்கள் உடன் பிறந்தவர்கள் முதுகில் அட்சதை இட்டு,
அவர்கள் தரும் சீரைப் பெற்றுக்கொள்கிறார்கள்.
கருட பஞ்சமி தன் உடன் பிறந்தவர்கள் சிறப்புடன் வாழ பெண்கள் கொள்ளும் நோன்பு.
நாக சதுர்த்தி தன் குழந்தைகள் நன்றாக இருக்க அக்குழந்தைகளின் தாய் நோன்பு செய்து வேண்டிக்கொள்ளும் நாள்.
.இந்த நாளில் தாய்மார்கள் உபவாசம் இருக்கவேண்டுமென்பது ஐதீகம்.
நாகசதுர்த்தி அன்று செய்யப்படும் நாகபூஜை குழந்தைகளின் நல்வாழ்விற்கானது.
- விஷ்ணு பகவானுக்கு உரிய விரதங்களில் ஏகாதசி விரதம் மிகவும் மகிமை வாய்ந்தது.
- இந்த ஏகாதசி விரதம் கோரிய பலன்களை தட்டாமல் தரும்.
விஷ்ணு பகவானுக்கு உரிய விரதங்களில் ஏகாதசி விரதம் மிகவும் மகிமை வாய்ந்தது.
அதை உணர்த்தும் புராண வரலாற்றை தெரிந்து கொள்ளலாம்.
இராவணனின் கொடுமைகளை சகிக்கமுடியாத தேவர்கள் பிரம்மாவுடன் வைகுண்டம் சென்று
மார்கழிமாத சுக்லபட்ச (வளர்பிறை) ஏகாதசியன்று நாராயணனை வணங்கி தங்கள் துன்பங்களை கூறினர்.
பகவானும் பிரம்மதேவர்களுக்கு தரிசனமளித்து அவர்களை காத்தருளினார்.
முக்கோடி தேவர்களின் துன்பத்தை போக்கியதால் வைகுண்ட ஏகாதசி முக்கோடி ஏகாதசி எனவும் அழைக்கபடுகிறது.
திருமாலின் அவதாரமான ஸ்ரீ ராமனே பங்குனி மாதத்தில் விஜயா என்ற ஏகாதசி விரதத்தை இருந்து
பின் கடலை கடந்து சென்று தசக்ரீவனை அழித்து இலங்கையைவென்றார் என புராணம் தெரிவிக்கின்றது.
இந்த யோசனையை அவருக்கு பக்தாப்யர் என்ற முனிவர் கூறினார்.
இந்த ஏகாதசி விரதம் கோரிய பலன்களை தட்டாமல் தரும்.
மேலும் சீதா தேவியின் அருளையும் பெறலாம்.
ஒருவருடம் முழுவதும் ஏகாதசிவிரதம் இருந்து, துவாதசிப்பாரணை முடித்த அம்பரீஷ மஹாராஜாவை
தவத்தில் சிறந்த துர்வாச முனிவராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை,
அம்பரீஷ மஹாராஜாவை திருமாலின் சுதர்சன சக்கரம் காத்தது என பாகவத புராணம் தெரிவிக்கின்றது.
திருக்குறுங்குடி எனும் தலத்தில் பாணர் குலத்தை சேர்ந்த நம்பாடுவான் ஏகாதசியன்று
எம்பெருமானை பாடி தானும் உயர்வு பெற்றதோடு தன்னை அழிக்கவந்த பிரம்மராக்ஷனுக்கும்
சாப விமோசனத்தை அளித்ததை கைசிக புராணம் தெரிவிக்கின்றது.
ருக்மாங்கதன் எனும் மாமன்னன் இந்தவிரதத்தை தானும் கடைப்பிடித்து தன் நாட்டவரும்
பின்பற்றுமாறு செய்ததால் அவன் பெற்ற பெரும் பயனை ருக்மாங்கத சரித்திரம் தெரிவிக்கின்றது.
பீமன் ஒர் ஆண்டு முழுவதும் இந்தவிரதத்தை செய்ய முடியாத நிலையில் ஆனி மாத சுக்ல பட்ச ஏகாதசியாகிய
நிர்ஜலா எனும் விரதத்தை மட்டுமே நிறைவேற்றி ஓர் ஆண்டின் முழு பயனையும் பெற்றதாக பத்மபுராணம் தெரிவிக்கின்றது.
பாற்கடலில் மந்தார மலையை மத்தாகவும், வாசுகியை கயிறாகவும் கொண்டு
எம்பெருமான் அமுதத்தை கடைந்து எடுத்த ஒப்பற்ற நாள் வைகுண்ட ஏகாதசி ஆகும்.
குருசேத்திர போரில் பார்த்தனுக்கு கீதையை உபதேசித்த நாள் இந்தநாள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
- சிவனுக்குரிய விரதங்கள் எட்டு.
- வாழ்வு வளமாக சிவனுக்கு உகந்த இந்த எட்டு விரதங்களை கடைபிடித்து வரவேண்டும்.
சிவனுக்குரிய விரதங்கள் எட்டு.
வாழ்வு வளமாக சிவனுக்கு உகந்த இந்த எட்டு விரதங்களை கடைபிடித்து வரவேண்டும்.
இந்த விரதங்களை பற்றி பார்க்கலாம்.
சிவ லிங்கத்தில் ஆரம்ப நாட்களில் சிவனுடைய முகத்தை மட்டுமே அமைப்பதென்பது கடைபிடிக்கப்பட்டது.
ஆனால் பின்னாளில் வந்தவர்கள் தங்கள் மனதிற்கேற்ப விநாயகர், முருகர் ஆகியோரையும் கூட சிவலிங்கத்தில் அமைக்கத் தொடங்கி விட்டனர்.
சிவபெருமானுக்கு உரிய விரதங்கள் எட்டு. அவையாவன:
சோமவார விரதம்- திங்கட்கிழமை தோறும்
திருவாதிரை விரதம்- மார்கழி திருவாதிரை
மகாசிவராத்திரி- மாசி தேய்பிறை சதுர்த்தசி
உமா மகேஸ்வர விரதம் - கார்த்திகை பவுர்ணமி
கல்யாண விரதம்- பங்குனி உத்திரம்
பாசுபத விரதம்- தைப்பூசம்
அஷ்டமி விரதம்- வைகாசி பூர்வபட்ச அஷ்டமி
கேதார விரதம்- தீபாவளி அமாவாசை
- கிருத்திகை நட்சத்திரத்தில் விரதம் இருந்து வழிபடுவோர் சிவபெருமான், முருகப்பெருமான் அருளைப் பெறுவர்.
- அடுத்த நாள் ரோகிணியில் காலையில் நீராடி, நித்திய வழிபாடு செய்ய வேண்டும்.
கார்த்திகை மாதம் விரதம் இருந்து தீப தரிசனம் செய்தல் மிகுந்த புண்ணியமாகும்.
கார்த்திகை மாதத்தில் கிருத்திகை நட்சத்திரத்தை முக்கியமாக வைத்து அண்ணாமலை தீபம் வருவதால்
இதற்கு 'கார்த்திகை தீபம்' என்ற பெயரும் உண்டாயிற்று.
இந்நாளில் இல்லம், கோவில், மடம், சத்திரம், மலை உச்சி, வாசற்படி, மண்டபம், மூலஸ்தானம், வியாபார ஸ்தலங்கள்
ஆகியவற்றிலும் மங்களம் உண்டாகத் தீபங்களை ஏற்றலாம்.
கார்த்திகை மாத விரதத்தின் மகிமையை சிவபெருமான் கார்த்திகைப் பெண்களுக்கு அருளியுள்ளார்.
கிருத்திகை நட்சத்திரத்தில் விரதம் இருந்து வழிபடுவோர் சிவபெருமான், முருகப்பெருமான் அருளைப் பெறுவர்.
கார்த்திகை மாதம் பரணி நாளில் விரதம் தொடங்கி, வழிபாடு செய்து, அடுத்த நாள் கார்த்திகையில்
விரதம் இருந்து முறைப்படி வழிபாடு செய்ய வேண்டும்.
அடுத்த நாள் ரோகிணியில் காலையில் நீராடி, நித்திய வழிபாடு செய்ய வேண்டும்.
அடியார்களோடு கூடி உண்ண அன்னதானம் செய்யலாம்.
பின்னர் மாதந்தோறும் கார்த்திகை விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டும்.
கார்த்திகை விரதத்தால் முருகன் அருளால் சகல செல்வயோகமிக்க பெருவாழ்வை பெறுவார்கள்.
- ஐப்பசி மாதம் சுக்கில பட்ச அமாவாசை நாளில் கேதார கவுரி விரதம் வரும்.
- ஸ்ரீ பரமேஸ்வரன் தம்முடைய ரிஷப வாகனத்திலே எழுந்தருளி காட்சி கொடுப்பார்.
ஐப்பசி மாதம் சுக்கில பட்ச அமாவாசை நாளில் கேதார கவுரி விரதம் வரும்.
அதற்கு முன் தொடங்கி 21 நாட்கள் பூஜை செய்ய வேண்டும்.
இயலாதவர்கள் விரத தினம் ஒருநாள் மட்டும் உபவாசத்துடன் பூஜை செய்யலாம்.
கணவனும், மனைவியும் குடும்பத்தில் கருத்தொருமித்து செயல்பட்டு இன்பமாக வாழ வேண்டும் என்பதே இவ்விரதத்தின் உட்கருத்து.
வழிபாட்டுக்குப் பிறகு 21 நூல்கள் சேர்ந்த 21 முடியுள்ள பட்டு அல்லது நூல் சரட்டை மஞ்சளில் நனைத்துக் கையில் அணிந்து கொள்ள வேண்டும்.
இருபத்தோரு இழைகளிலே கயிறு முறுக்கி நாளுக்கு ஒரு முடியாக,
இருபத்தோரு நாட்களும் ஆச்சார அனுஷ்டானங்களைக் கடைப்பிடித்து நோன்பு நோற்றால்
ஸ்ரீ பரமேஸ்வரன் தம்முடைய ரிஷப வாகனத்திலே எழுந்தருளி காட்சி கொடுப்பார்.
அவரவர் விரும்பிய வரத்தையும் தந்தருள்வார் என்று கவுதம முனிவர் கூறியுள்ளார்.
இவ்விரதத்தை இடைவிடாமல் 21 முறைகள் பக்தியுடன் அனுஷ்டித்து வந்தால் சகல பாவமும் நீங்கும் என்று சொல்லப்படுகிறது.
தன தானிய சம்பத்தும், பால் பாக்கியமும், குழந்தை பாக்கியமும் இவ்விரதத்தால் உண்டாகும்.
கணவன் மனைவி மன ஒற்றுமையும், அந்நியோன்யமும் உண்டாகும்.