என் மலர்
நீங்கள் தேடியது "viralpics"
- ஜகமே தந்திரம் படத்தில் 'ரக்கிட்ட ரக்கிட்ட' பாடலுக்கு தனுஷ் உடன் இணைந்து நடனமாடி இளைஞர்கள் மனதில் இடம் பிடித்தார்
- சமீபத்தில் மலையாள இயக்குனர் பிஜய் நம்பியார் இயக்கிய போர் படத்தில் காளிதாஸ் ஜெயராமுடன் இணைந்து நடித்தார் சஞ்சனா.
சென்னையில் விளம்பர மாடலாக இருந்து பின்பு நடிகையாக மாறியவர் சஞ்சனா நடராஜன். இவர் இறுதிச்சுற்று படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து நடிகையாக அவதாரம் எடுத்தார். அதனைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கிய 2.0, பாலாஜி மோகனின் வலைத் தொடரான 'அஸ் ஐம் சப்ரிங் பிரம் காதல்' ஆகியவற்றில் நடித்து புகழடைந்தார்.
ஜகமே தந்திரம் படத்தில் 'ரக்கிட்ட ரக்கிட்ட' பாடலுக்கு தனுஷ் உடன் இணைந்து நடனமாடி இளைஞர்கள் மனதில் இடம் பிடித்தார். தொடர்ந்து ஆர்யா நடிப்பில் வெளியான 'சார்பட்டா பரம்பரை' படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதோடு ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் படத்தில் எஸ். ஜே. சூர்யா விற்கு இணையாக நடித்துள்ளார். சமீபத்தில் மலையாள இயக்குனர் பிஜய் நம்பியார் இயக்கிய போர் படத்தில் காளிதாஸ் ஜெயராமுடன் இணைந்து நடித்தார் சஞ்சனா. அதில் இவர்கள் இருவருக்கும் இடையிலான லிப்லாக் முத்த காட்சிகள் மற்றும் புகைப் பிடிக்கும் காட்சிகள் மிகவும் வைரலாக பேசப் பட்டது.
தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வரும் சஞ்சனா, இந்தக் கோடை வெயிலுக்கு இதமாக குளுகுளு போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். புகைப்பட கலைஞரான ஹ்ரிஷி, சஞ்சனாவை அழகாக படம்பிடித்துள்ளார்.

இந்த போட்டோ ஷூட்டின் புகைப்படங்கள் சஞ்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சஞ்சனா, கடற்கரையில் வெள்ளை நிற ஆடையில் கொடுத்துள்ள போஸ் லைக்ஸ்களை குவித்து வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அவரது பதிவு 1.5 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை கடந்து வைரலாகி வருகிறது.
- பலரும் அவரின் புதுமையான யோசனையை பாராட்டி வருகின்றனர்.
இந்தியாவின் ஐடி தலைநகராக விளங்கும் பெங்களூரு சாலைகள் போக்குவரத்து நெரிசலுக்கு பெயர் போனது. ஐடி நிறுவனங்கள் நிறைந்த பெங்களுரில் தமிழ்நாடு உள்ளிட்ட பலவேறு மாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் வேலைக்கு தாமதமாக செல்லக்கூடாது என இளைஞர் ஒருவர் எடுத்த வினோத முடிவு பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஓலா மற்றும் உபர் டாக்ஸிகள் கிடைக்காததால் பொருட்களை டெலிவரி செய்யும் போர்ட்டர் செயலி மூலம் தன்னைத்தானே அந்த இளைஞர் தனது அலுவலகத்துக்கு டெலிவரி செய்து கொண்டார். பதிக் குகரே என்ற அந்த இளைஞர் தனது அனுபவத்தை எக்ஸ் தளத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்து கொண்டார்.
அவர் தனது பதிவில், "ஓலா உபர் இல்லாததால் இன்று இப்படித்தான் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது" என்று அவர் போர்ட்டர் டெலிவரி ஏஜென்ட்டுடன் பைக்கில் பயணிக்கும் புகைப்படத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
அவரது பதிவு 1.5 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை கடந்து வைரலாகி வருகிறது. பலரும் அவரின் புதுமையான யோசனையை பாராட்டி வருகின்றனர்.
வடிவேலு காமெடி ஒன்றில் டிக்கெட் செலவை மிச்சப்படுத்த கணவன் தனது குடும்பத்தை பார்சலில் அனுப்பி வைப்பார். அதுபோல இந்த இளைஞர் தன்னைத் தானே டெலிவரி செய்து கொண்டது சிரிப்பலையை ஏற்படுத்தி வருகிறது.