search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vishal venkat"

    • சில நேரங்களில் சில மனிதர்கள். படத்தை அறிமுக இயக்குனரான விஷால் வெங்கட் இயக்கினார்.
    • படத்திற்கு பாம்ப் என பெயர் வைத்துள்ளனர்.

    கடந்த 2022 ஆம் ஆண்டு அசோக் செல்வன், நாசர், மணிகண்டன், அஞ்சு குரியன், ரித்விகா மற்றும் பலர் நடித்து வெளியான திரைப்படம் சில நேரங்களில் சில மனிதர்கள். இப்படத்தை அறிமுக இயக்குனரான விஷால் வெங்கட் இயக்கினார். இப்படம் வெளியாகி மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்று வெற்றிப் படமாக அமைந்தது.

    அதைத்தொடர்ந்து இயக்குனர் விஷால் வெங்கட் அடுத்ததாக அர்ஜூன் தாஸ் நடிப்பில் படத்தை இயக்கி வருகிறார். படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வீடியோவை தற்பொழுது படக்குழு வெளியிட்டுள்ளனர். படத்திற்கு பாம்ப் என பெயர் வைத்துள்ளனர்.

    இப்படத்தில் அர்ஜூன் தாஸுடன் காளி வெங்கட், ஷிவாத்மிகா, நாசர், அபிராமி, சிங்கம்புலி, பாலசரவணன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இப்படத்தை சுதா சுகுமார் மற்றும் சுகுமார் பாலகிருஷ்ணன் இணைந்து ஜெம்பிரியோ பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ளனர். பாம்ப் திரைப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். ராஜ்குமார் பி.எம் ஒளிப்பதிவு மேற்கொள்ள , பிரசன்னா ஜி.கே படத்தொகுப்பு செய்துள்ளார். இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் நடைப்பெற்று வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குனர் விஷால் வெங்கட் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் தொடர் 'ஒரு கோடை மர்டர் மிஸ்டரி'.
    • இந்த வெப்தொடர் வருகிற 21-ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

    சில நேரங்களில் சில மனிதர்கள், நவீன சரஸ்வதி போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் விஷால் வெங்கட் இயக்கத்தில் சொல் புரொடக்ஷன் பிரைவேட் லிமிடேட் (Sol Production Pvt.Ltd) சார்பில் ஃபாசிலா அல்லானா, கம்னா மெனேசஸ் தயாரித்துள்ள வெப்தொடர் 'ஒரு கோடை மர்டர் மிஸ்டரி'. என். பத்மகுமார் மற்றும் ரோஹித் நந்தகுமார் ஆகியோர் திரைக்கதை, வசனம் எழுதியுள்ள இந்த வெப் தொடரில் அபிராமி, ஆகாஷ், ஐஸ்வர்யா, ராகவ், ஜான், நம்ரிதா, அபிதா, பிராங்கின், சில்வன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த வெப் தொடருக்கு பர்மா, என்னோடு விளையாடு உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த சுதர்சன் எம் குமார் இசையமைத்துள்ளார். 



    இந்த வெப்தொடர் வருகிற 21-ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இதில் நடிகை அபிராமி பேசியதாவது, "நடிகை அபிராமி  பேசியதாவது, இந்த மாதிரி பத்திரிகையாளர் சந்திப்பு எனக்கு புது அனுபவம். முதலில் எனக்கு வாய்ப்பளித்த ஜீ5- க்கு நன்றி. இது எனது முதல் வெப் சீரிஸ். இந்த வெப் சீரிஸ்க்கு அணுகும்போதே முழு திரைக்கதையும் தந்தார்கள். எனக்கு மர்டர் மிஸ்டரி ரொம்ப பிடிக்கும்.


    இதன் திரைக்கதை மிகவும் பிடித்தது. இதில் வேலை பார்த்த அனைத்து கலைஞர்களும் மிகச்சிறந்த திறமைசாலிகள், அவர்களின் திறமையால் அழகாக இதனை உருவாக்கியுள்ளார்கள். பொதுவாக ஒரு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் நடிக்கும் போது, டைட்டில் கேரக்டர் நடிப்பார்கள். ஆனால் நான் இந்த வெப் சீரிஸ் நடிக்க காரணம் இதன் திரைக்கதை தான், அவ்வளவு அற்புதமாக இருந்தது. டீனேஜ் பசங்களின் உலகை அவ்வளவு தத்ரூபமாக எழுதியிருந்தார்கள் அதே போல் என் கதாபாத்திரம் அம்மா பாத்திரம் அத்தனை அழகாக வந்துள்ளது. உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி" என்று கூறினார்.


    மேலும், நடிகர் ராகவ் பேசியதாவது, இந்த சீரிஸ் பாம்பே நிறுவனத்தின் தயாரிப்பு,  எழுத்தாளரும் மும்பையை சேர்ந்தவர். ஆன்லைனில் ஆடிசன் கேட்டிருந்தபோது,  நான் இதில் வாய்ப்புக் கேட்டேன். அவர்கள் சார்மிங்காகவும் இருக்கனும் வயலண்டாகவும் இருக்கனும் அப்படி ஒரு ஆள் தேவை என்றார்கள். இதே காரணத்திற்காக தான் பாலசந்தர் சார் என்னை நடிக்க வைத்தார். என்னைப்பற்றி அவர்களுக்கு தெரியாது என்பதால், நான் ஒரு காட்சி நடித்து அனுப்பினேன். அவர்களுக்கு பிடித்து என்னை நடிக்க வைத்தார்கள். கௌஷிக் உடன் முன்பாகவே இணைந்து ஒரு சீரிஸ் வேலை பார்த்தோம் அது வெளியாகவில்லை, ஆனால் இந்த சீரிஸில் பங்கு கொண்டது மகிழ்ச்சி. படக்குழுவினர் அனைவருமே மிகச்சிறந்த திறமைசாலிகள் இந்த சீரிஸ் சிறப்பாக வர வேண்டும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்  நன்றி என்று பேசினார்.

    ×