என் மலர்
நீங்கள் தேடியது "vishnu manchu"
- முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் 'கண்ணப்பா' எனும் தெலுங்கு படம் உருவாகியுள்ளது
- படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது.
முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் 'கண்ணப்பா' எனும் தெலுங்கு படம் உருவாகியுள்ளது. ஃபேண்டசி டிராமாவாக இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்படுள்ளது. நடிகர் விஷ்ணு மஞ்சு இப்படத்தில் கண்ணப்பர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்து கடவுளான சிவனை வழிப்படும் தீவிர பக்தனான கண்ணபரை பற்றிய கதையாகும் இது. இப்படத்தில் இந்திய திரையுலகில் உள்ள பிரபல நட்சத்திரங்களான மது ,சரத்குமார், ப்ரீத்தி முகுந்தன், ராகுல் ராமகிருஷ்ணா, பிரம்மானந்தம், மோகன் பாபு, மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இவர்களோடு மேலும், மோகன்லால், பிரபாஸ், அக்ஷய் குமார் மற்றும் காஜல் அகர்வால் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் இம்மாதம் வெளியாக இருந்தது ஆனால் சில சந்தர்ப்ப சூழ்நிலையால் திரைப்படம் வெளியாகவில்லை. படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது.
திரைப்படம் வரும் ஜூன் மாதம் 27 ஆம் தேதி தமிழ் , தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் , கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரு பான் இந்தியா திரைப்படமாக வெளியாகவுள்ளது. படக்குழு உ.பி முதல்வரான யோகி ஆதித்தனாரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
- மோஹன்லால் மற்றும் பிரபாஸ், சிவன் கதாப்பாத்திரத்தில் கௌரவ தோற்றத்தில் நடிக்கவுள்ளனர்.
- முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் 'கண்ணப்பா' எனும் தெலுங்கு படம் உருவாகிக் கொண்டு இருக்கிறது
முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் 'கண்ணப்பா' எனும் தெலுங்கு படம் உருவாகிக் கொண்டு இருக்கிறது. ஃபேண்டசி டிராமாவாக இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்படுள்ளது. நடிகர் விஷ்ணு மஞ்சு இப்படத்தில் கண்ணப்பர் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்து கடவுளான சிவனை வழிப்படும் தீவிர பக்தனான கண்ணபரை பற்றிய கதையாகும் இது. மோஹன்லால் மற்றும் பிரபாஸ், சிவன் கதாப்பாத்திரத்தில் கௌரவ தோற்றத்தில் நடிக்கவுள்ளனர்.
இந்நிலையில் இந்தி திரையுலகில் முக்கியமான நடிகர்களுள் ஒருவர் அக்ஷய் குமார். அவர் இந்த படத்தில் நடிக்கவுள்ளார். இதுவே அவர் நடிக்கும் முதல் தெலுங்கு திரைப்படமாகும். படப்பிடிப்பு பணிகள் இந்த மாதம் ஆரம்பிக்கபடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று அக்ஷய் குமார் கண்ணப்பாவின் இயக்குனர் மற்றும் விஷ்ணு மஞ்சு சந்தித்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.