என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » vishwaroopam 2
நீங்கள் தேடியது "Vishwaroopam 2"
கமல் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் ‘விஸ்வரூபம் 2’ வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இதன் 3ம் பாகம் வெளியாகுமா என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார். #Kamal
விஸ்வரூபம் 2 படத்தில் கமலும் ஆண்ட்ரியாவும் ரா அமைப்பில் பயிற்சி பெறும் காட்சிகள் சென்னை கிண்டியில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரியில் படமாக்கப்பட்டிருந்தது. அங்கு சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்த கமல் காட்சி முடிந்ததும் பேசினார்.
அப்போது விஸ்வரூபம் 3 வருமா? என்று கேட்டதற்கு ‘சினிமாவில் இல்லை. நிஜத்தில் தான் விஸ்வரூபம் எடுக்க இருக்கிறேன்’ என்றார். மேலும் ‘இங்கு நான் பயிற்சி எடுத்த காலம் குறுகியது தான், ஆனால் கற்றுக்கொண்டது நிறைய. இந்திய ராணுவத்தில் நாம் அதிகம் பங்கெடுக்க வேண்டும் அது என்னுடைய ஆசை. பயிற்சியின் போது இடம்பெற்ற ராணுவ அதிகாரிகளும் படத்தில் இடம்பெற்றுள்ளனர்.
படத்திற்காக பலமுறை பயிற்சி எடுத்து இருந்தால் கூட இந்த அளவிற்கு படம் வந்திருக்காது. ஆனால் இங்குள்ள உண்மையான ராணுவ வீரர்கள் உடன் பணியாற்றியது பெருமையாக உள்ளது. விஸ்வரூபம் 2 வெளியிடப்படாத மாவட்டங்களில் படம் நிச்சயமாக வெளியாகும். படத்தை தடைவிதிக்க பின்புலத்தில் இருந்து நிறைய பேர் வேலை செய்கிறார்கள் அவர்கள் யார் என்று நான் சொல்லமாட்டேன்.
எனவே நிச்சயம் இது சரி செய்யப்படும். படித்த இளைஞர்கள் அதிகாரிகளாக வர வேண்டும், இதுவும் அவர்கள் கடமையென நாடு காக்கும் பணியை செய்ய முன்வர வேண்டும். ஆனால் யாரையும் கட்டாயபடுத்தக்கூடாது. படம் குறித்து எதிர்மறையான விமர்சனங்களை, எதிர்மறையாகவே பார்க்க வேண்டும், எதிர்கொள்ள வேண்டும்’ என்றும் கூறினார்.
கமல்ஹாசன் இயக்கி நடித்துள்ள `விஸ்வரூபம்-2' படம் கடந்த 10-ஆம் தேதி வெளியாகிய நிலையில், முழு படமும் இணையதளத்தில் வெளியாகி இருப்பது படக்குழுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #Vishwaroopam2 #KamalHaasan
கமல்ஹாசன் இயக்கி நடித்துள்ள `விஸ்வரூபம்-2' படம் கடந்த 10-ஆம் தேதி திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்துக்கு தடை விதிக்கும்படி கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனாலும் விநியோகஸ்தர்களுடன் ஏற்பட்ட பிரச்சினையால் தென் மாவட்டங்களில் சில இடங்களில் படம் வெளியாகவில்லை.
சிலர் பிண்ணனியில் இருந்து படத்தை வெளியாக விடாமல் தடுக்கின்றனர் என்றும், பிரச்சினை சரியாகி அந்த மாவட்டங்களிலும் படம் திரைக்கு வந்து விடும் என்றும் கமல்ஹாசன் கூறியிருக்கிறார்.
இந்த நிலையில் விஸ்வரூபம்-2 முழு படமும் இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக ரஜினிகாந்தின் கபாலி, காலா உள்ளிட்ட படங்கள் தியேட்டரில் திரையிட்ட உடனேயே திருட்டுத்தனமாக படம்பிடித்து இணையதளங்களில் வெளியிட்டனர். சமீபத்தில் திரைக்கு வந்த விஜய், சூர்யா, கார்த்தி, விஷால் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்கள் அனைத்துமே திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியாகின என்பதும் குறிப்பிடத்தக்கது.
திருட்டுத்தனமாக படத்தை வீடியோ எடுப்பவர்களை கண்டுபிடிக்க திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்காகவே திருட்டு வீடியோ தடுப்பு குழு ஒன்றையும் நியமித்து உள்ளது. அவர்கள் கண்காணிப்பையும் மீறி, புதிய படங்கள் இணையதளங்களில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. #Vishwaroopam2 #KamalHaasan
கமல்ஹாசன் எழுதி, இயக்கி, நடித்துள்ள விஸ்வரூம்-2 படத்தின் தொடக்கத்தில் அவரது மக்கள் நீதி மய்யம் கட்சியின் பிரசார பாடல் இடம்பெற்றது குறித்து கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார். #KamalHaasan #Vishwaroopam2 #MNMPartySong
நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்னும் பெயரில் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். ஒரு பக்கம் அரசியலிலும் இன்னொரு பக்கம் சினிமா, பிக்பாஸ் நிகழ்ச்சி என்றும் வலம் வருகிறார்.
கமல்ஹாசன் இயக்கி நடித்து இருக்கும் விஸ்வரூபம்-2 படம் நேற்று வெளியானது.
5 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான விஸ்வரூபம் படத்தின் தொடர்ச்சி இது. ஏற்கனவே தயாராகி 3 ஆண்டுகளாக வெளியீட்டுக்கு காத்திருந்த படம் வெளியானதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் நேரடியாக உருவாக்கப்பட்டுள்ள இப்படம், தெலுங்கில் மட்டும் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியானது.
கருணாநிதி மறைவு காரணமாக படத்தின் இறுதிகட்ட விளம்பர வேலைகள் பாதித்தன. இதனால் நேற்று வெளியான படத்துக்கு பெரிய வரவேற்பு இல்லை. படமும் ரசிகர்களை திருப்திபடுத்தவில்லை என்று சமூக வலைதளங்களில் கருத்து பரவியது.
படம் தொடங்குவதற்கு முன்னர் கமல் கட்சியான மக்கள் நீதி மய்யத்தின் பிரசார பாடல் அனைத்து தியேட்டர்களிலும் ஒளிபரப்பப்பட்டது. இது பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த வாரம் கமல் அளித்த பேட்டியில், படத்தில் தனது கட்சி தொடர்பான வசனங்களையோ காட்சியையோ சேர்க்க மாட்டேன் என்று கூறி இருந்தார். எம்.ஜி.ஆர். காலத்தில் கட்சியை வளர்க்க சரியான ஊடகங்கள் இல்லை. அதனால் சினிமாவை பயன்படுத்தினார். ஆனால் தான் அப்படி பயன்படுத்த மாட்டேன் என்று விளக்கி இருந்தார். ஆனால் படத்தில் பிரசார பாடல் இடம்பெற்று இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
நேற்று சென்னை திரும்பிய கமல்ஹாசன் இரவு ராயப்பேட்டையில் உள்ள வணிக அரங்கில் படத்தை ரசிகர்களோடு பார்த்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, ‘படம் ஆரம்பிக்கும் முன் ‘மக்கள் நீதி மய்யம்‘ கட்சியின் பாடல்கள் திரையிடப்படுகிறது என்ற விமர்சனம் எழுந்துள்ளது. அதை எப்படி பார்க்கிறீர்கள்?’ என கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த கமல், “படத்திற்கு இடைவேளையில் முதல்வர் பத்தின வீடியோவை திரையிடுறாங்க. அது விமர்சனத்திற்கு உள்ளாகவில்லை. நான் இப்போ கட்சி ஆரம்பிச்சிருக்கேன். கிடைக்கிற மேடைகள் எல்லாத்துலையும் அரசியல் பேசுவேன். எங்களுடைய முன்னேற்றத்தை நான் எடுத்து வைப்பேன். அதுக்கான மேடை கிடைச்சது பேசிட்டு இருக்கேன். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் அதைத் தான் பண்ணிட்டு இருக்கேன்” என்றார்.
கருணாநிதிக்கு பாரத ரத்னா வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்கள். அதை நீங்கள் வலியுறுத்துவீர்களா? என்றதற்கு, “அவர்களாக மனம் உவந்து கொடுக்கட்டும். அப்போதுதான் தமிழனுக்கு பெருமை. வலியுறுத்தி கொடுக்கிறது தமிழனுக்கு பெருமை இல்லை” என்று கூறியுள்ளார். #KamalHaasan #Vishwaroopam2 #MNMPartySong
விஸ்வரூபம் 2 படத்தில் கமலுடன் நடித்துள்ள ஆண்ட்ரியா, படங்களில் நடிக்க எந்த நிபந்தனையும் விதிப்பதில்லை என்று கூறியிருக்கிறார். #Andrea #Vishwaroopam2
ஆண்ட்ரியா நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘விஸ்வரூபம் 2’. கமல் நாயகனாக நடித்துள்ள இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இப்படத்திற்காக சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஆண்ட்ரியா ‘முதல் பாகத்தை விட 2 ம் பாகத்தில் தான் நான் யார் என்பது ரசிகர்களுக்கு தெரியும்.
இந்த படத்தில் நடித்தபிறகு எனக்கு சமூக பொறுப்பு அதிகரித்துள்ளது. படங்களில் நடிக்க எந்த நிபந்தனையும் விதிப்பதில்லை. கதை பிடித்து இருந்தால் உடனே சம்மதித்துவிடுவேன். 6 மாதங்களாக எந்த படத்திலும் நடிக்கவில்லை.
விஸ்வரூபம் 2வும், வடசென்னையும் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது. 2 கதாநாயகிகள் என்று எந்த படத்தையும் ஒதுக்குவதில்லை. கதையில் எனக்கான முக்கியத்துவத்தை தான் பார்க்கிறேன். எதிர்காலம் பற்றிய எந்த திட்டமும் இல்லை’ என்று கூறி இருக்கிறார். ஆண்ட்ரியா அடுத்து கா என்ற படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.
கமல்ஹாசன் - பூஜா குமார் - ஆண்ட்ரியா ஜெரோமியா நடிப்பில் வெளியாகி இருக்கும் `விஸ்வரூபம் 2' படத்தின் விமர்சனம். #Vishwaroopam2Review #PoojaKumar #AndreaJeremiah
இந்திய ராணுவத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் கமல்ஹாசனிடம் பயிற்சி பெறுகிறார் ஆண்ட்ரியா. இராணுவ பகுதியை விட்டு வெளியே சென்ற குற்றத்திற்காக கமல்ஹாசன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். சிறையில் இருந்து தப்பிக்கும் கமல்ஹாசன், ரகசியமாக தனது வேலைகளில் ஈடுபடுகிறார். இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கச் செல்கிறார்.
பின்னர், அமெரிக்காவில் டர்ட்டி பாமை செயழிலக்கச் செய்ய செல்லும் கமல், பூஜா குமாரை திருமணம் செய்து கொள்கிறார். அவளது உதவியுடன் டர்ட்டி பாமை செயழிலக்கச் செய்கிறார். முதலில் கமல் மீது அதீத அன்பு இல்லாமல் இருக்கும் பூஜா குமார், கமல் பாமை செயழிலக்கச் செய்யவே தன்னை திருமணம் செய்து கொண்டார் என்பதை அறிந்து வருத்தப்படுகிறார். இருப்பினும் உள்ளுக்குள் கமலை காதலிக்கிறார்.
இதற்கிடையே கமல் தனது குழுவினருடன் இந்தியா மற்றும் லண்டனில் வைக்கப்பட்டுள்ள மற்ற இரண்டு டர்ட்டி பாம்களை செயழிலக்கச் செய்யும் முயற்சியில் இறங்க, அல்கொய்தா தலைவனான உமர், கமல்ஹாசனை கொல்வதற்காக தேடி வருகிறார்.
கடைசியில், கமல் டர்ட்டி பாம்களை செயழிலக்கச் செய்தாரா? உமரை கொன்றாரா? அவரது முந்தைய வாழ்க்கையில் நடந்தது என்ன? அம்மாவுடனான சந்திப்பு, அதன் பின்னணியில் நடப்பது படத்தின் மீதிக்கதை.
கமல்ஹாசன் ஒரு நடிகராக தனது நடிப்பால் அனைவரையும் கட்டிப்போட்டிருக்கிறார். தனது ஒவ்வொரு அசைவுக்கும் ஒரு நுணுக்கம் உண்டு என்பதற்கு ஏற்ப, அவரது நடிப்பே படத்தின் கதையை ஓட்டிச் செல்கிறது. முதல் பாகத்தை விட, இந்த பாகத்தில் பூஜா குமார் நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார். காதல், கவர்ச்சி என அனைத்திலும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். ராணுவத்தில் பணிபுரியும் ஆண்ட்ரியா அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை பூர்த்தி செய்திருக்கிறார். குறிப்பாக ஸ்டன்ட் காட்சிகளில் மிரள வைத்திருக்கிறார்.
முதல் பாகத்தில் தனது அமைதியான வில்லத்தனத்தால் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த ராகுல் போஸ், இந்த பாகத்திலும் அனைவரையும் கவர்ந்திருக்கிறார். மற்றபடி சேகர் கபூர், ராகுல் போஸ், ஆனந்த் மகாதேவன் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் அவரவருக்கு கொடுத்த வேலையை சிறப்பாக பூர்த்தி செய்திருக்கின்றனர்.
கமல்ஹாசன் ஒரு இயக்குநராக வழக்கமான அவரது பாணியை பின்பற்றியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். விஸ்வரூபம் படத்தின் தொடர்ச்சி, நீட்சி என அடுத்தடுத்த காட்சிகள் வேகமாக நகர்வது சற்றே குழப்பத்தை ஏற்படுத்தும்படியாக இருக்கிறது. வசனங்கள், பேச்சில் ஆங்காங்கே அரசியல் வசனத்தையும் நுழைத்திருக்கிறார். நியூயார்க்கில் வாழும் கதக் நடனக் கலைஞர், இந்தியாவின் ரகசிய உளவாளி, அல்கொய்தா தீவிரவாதிகளின் பயிற்சியாளர், என பல்வேறு கதாபாத்திரங்களுடன் முதல் பாகத்தில் கலக்கிய கமல்ஹாசனின் அடுத்த ரூபங்கள் என்னென்ன என்பதையே விஸ்வரூபம் 2 படமாக உருவாக்கி இருக்கிறார்.
ஜிப்ரானின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம். பாடல்களும் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. சனு ஜான் வர்கீஸ், சம்தத் சய்னதீன் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.
மொத்தத்தில் `விஸ்வரூபம் 2' ரூபங்கள் குறைவு. #Vishwaroopam2Review #PoojaKumar #AndreaJeremiah
கமல்ஹாசனின் விஸ்வரூபம்-2 படத்தை திரையிட அனுமதிக்கக்கூடாது என சாய்மீரா பட நிறுவனம் தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. #KamalHaasan #Vishwaroopam2
சென்னை:
நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனின் நடிப்பு மற்றும் தயாரிப்பில் இம்மாதம் வெளியாக உள்ள விஸ்வரூபம் படத்திற்கு தடை கேட்டு பிரமிட் சாய்மீரா நிறுவனம் ஐகோர்ட்டில் கடந்த 2-ம் தேதி மனு தாக்கல் செய்தது.
2008-ம் ஆண்டு மர்மயோகி என்ற படத்தில் கமல் நடிக்க படத்தை தயாரிப்பதற்காக ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கும், பிரமிட் சாய்மீரா நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம் போடப்பட்டது. ரூ.100 கோடி செலவில் தயாரிக்க திட்டமிடப்பட்ட அந்தப் படத்தின் தயாரிப்பு பணிகளுக்காக ரூ.6.90 கோடி வழங்கப்பட்டது.
அத்துடன் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடிப்பதற்காக கமல்ஹாசனுக்கு ரூ.4 கோடி கொடுக்கப்பட்டது. அந்தப்பணம் ‘மர்மயோகி’ படம் தயாரிக்க பயன்படுத்தப்படாமல், “உன்னைபோல் ஒருவன்” படத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
ஏற்கெனவே ரூ.6.90 கோடி கேட்டு சாய்மீரா நிறுவனத்தால் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் ‘விஸ்வரூபம் 2’ படத்தை ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியிடவுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. ‘விஸ்வரூபம் 2’ படத்தை தயாரிக்க கமல் பலரிடம் கடன் வாங்கியுள்ள நிலையில், ‘மர்மயோகி’ படத்திற்கு கொடுத்த சம்பளம் ரூ.4 கோடியை வட்டியுடன் சேர்த்து ரூ.5.44 கொடுக்க வேண்டும்.
இல்லையென்றால் ‘விஸ்வரூபம் 2’ படத்தை வெளியிடத்தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், கமல்ஹாசன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், பிரமிட் சாய்மீரா நிறுவனம் ரூ.4 கோடி மட்டுமே கொடுத்ததாகவும், அந்த பணம் மர்மயோகி படத்தின் ஆரம்பகட்ட பணிகளுக்கு செலவிடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
மர்மயோகி படத்துக்கு வேறு தயாரிப்பாளர் கிடைத்ததும் அந்த பணத்தை திருப்பி வழங்கிவிடுவதாக கமல்ஹாசனின் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து, விஸ்வரூபம் படத்துக்கு தடை விதிக்க முடியாது என கூறிய நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.
கமல் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ‘விஸ்வரூபம் 2’ படத்தின் 22 இடங்களில் சென்சார் போர்டு கட், மியூட், காட்சி மாற்றம் ஆகிய இடங்களில் கை வைத்துள்ளது. #Vishwaroopam2
கமல்ஹாசன் இயக்கி நடித்திருக்கும் ‘விஸ்வரூபம்-2’ படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ள நிலையில், படம் வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
படத்தின் புரோஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், சமீபத்தில் `சாதி மதம்' என்ற மூன்றாவது சிங்கிளின் பாடல் வரிகள் அடங்கிய வீடியோ வெளியிடப்பட்டது. பின்னர் இப்படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டார்கள். இந்த வீடியோக்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
தற்போது இப்படத்திற்கு சென்சார் போர்டு அளித்த கட், மியூட், காட்சி மாற்றம் ஆகியவற்றின் விவரங்கள் வெளியாகி இருக்கிறது. இதில் மொத்தம் 22 இடங்களில் சென்சார் போர்டு குழுவினர் கட், மியூட், காட்சி மாற்றங்கள் கொடுத்திருக்கிறார்கள். ஏற்கனவே சென்சாரில் யூ/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் ரவிச்சந்திரனின் ஆஸ்கார் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் கமல் ஹாசனுடன், ஆண்ட்ரியா, ராகுல் போஸ், பூஜாகுமார், சேகர்கபூர், வகீலா ரகுமான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். #Vishwaroopam2 #KamalHaasan
கமல்ஹாசன் இயக்கி, நடித்துள்ள ‘விஸ்வரூபம்-2’ படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. #Vishwaroopam2 #KamalHaasan
கமல்ஹாசன் இயக்கி நடித்திருக்கும் ‘விஸ்வரூபம்-2’ படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ள நிலையில், படம் வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
படத்தின் புரோஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், சமீபத்தில் `சாதி மதம்' என்ற மூன்றாவது சிங்கிளின் பாடல் வரிகள் அடங்கிய வீடியோ வெளியிடப்பட்டது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
தற்போது இப்படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டிருக்கிறார்கள். இதில் கமல் டூப் இல்லாமல் ஸ்டண்ட் செய்யும் காட்சிகள் ரசிகர்கள் கவர்ந்துள்ளது. மேலும் இந்த வயதிலும் சிறப்புடன் சண்டைப் போடும் காட்சியை அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் ரவிச்சந்திரனின் ஆஸ்கார் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் கமல் ஹாசனுடன், ஆண்ட்ரியா, ராகுல் போஸ், பூஜாகுமார், சேகர்கபூர், வகீலா ரகுமான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். #Vishwaroopam2 #KamalHaasan
கமல்ஹாசன் இயக்கம் மற்றும் நடிப்பில் விஸ்வரூபம் படத்தின் தொடர்ச்சியாக உருவாகி இருக்கும் `விஸ்வரூபம்-2' படத்தின் முன்னோட்டம். #Vishwaroopam2 #KamalHaasan
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரவிச்சந்திரனின் ஆஸ்கார் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் `விஸ்வரூபம்-2'.
கமல்ஹாசன் இயக்கிய நடித்துள்ள இந்த படத்தில் நாயகிகளாக ஆண்ட்ரியா மற்றும் பூஜா குமார் நடித்துள்ளனர். நாசர், ராகுல் போஸ், சேகர்கபூர், வகீலா ரகுமான், ஜெய்தீப் அக்லவாட், ரசல் கோஃப்ரி பேங்ஸ், வகீதா ரெஹ்மான், மிர் சர்வார், தீபக் ஜேதி, ஆனந்த் மகாதேவன், ஜுட் எஸ்.வால்கோ உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இசை - ஜிப்ரான், ஒளிப்பதிவு - சனு வர்கீஸ், ஷம்தத் சய்னுதீன், படத்தொகுப்பு - மகேஷ் நாராயன், விஜய் சங்கர், சண்டைப் பயிற்சியாளர் - பிராஹிம் அச்சபாக்கே, லீ விட்டாகர், ஸ்டீபன் ரிக்டர், விஷுவல் எபெக்ட்ஸ் - அஸ்மிதா பாரதி, ஆடை வடிவமைப்பாளர் - கவுதமி, கதை, திரைக்கதை, இயக்கம் - கமல்ஹாசன்.
படம் குறித்து கமல்ஹாசன் பேசும்போது,
“விஸ்வரூபம்-2’ படம் தாமதத்திற்கு நாங்கள் காரணமல்ல. முதல் பாகம் தாமதத்துக்கும் நாங்கள் பொறுப்பு அல்ல. தடைகளை வென்று வருகிறது. இதில் நடித்த நாசர், சேகர் கபூர், ராகுல் போஸ், ஆண்ட்ரியா, பூஜாகுமார் உள்ளிட்டோருக்கும், தொழில் நுட்ப கலைஞர்களுக்கும், காஸ்ட்யூம் பணியை சிறப்பாக செய்து விட்டுபோன கவுதமிக்கும் நன்றி.
விஸ்வரூபம் படத்தில் இடம்பெற்ற வைரமுத்து எழுதிய பாடலை இந்த படத்திலும் பயன்படுத்தி உள்ளோம். ஐந்தாறு டைரக்டர்களும் இதில் நடித்துள்ளனர். எனது அண்ணன் சந்திரஹாசன் அவருக்குள்ள சாராம்சத்தை எனக்குள் இறக்கிவிட்டு போய் இருக்கிறார். அவர் இடத்தை நிரப்ப எனக்கு இப்போது நிறைய சகோதரர்கள் கிடைத்து இருக்கிறார்கள். ‘விஸ்வரூபம்-2’ படம் பல்லாயிரம் பிரிண்ட்களுடன் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் ஆகஸ்டு 10-ந் தேதி திரைக்கு வருகிறது” என்றார். #Vishwaroopam2 #KamalHaasan
`விஸ்வரூபம்-2' படத்துக்கு தடை விதிக்கக் கோரி பிரமிட் சாய்மீரா என்ற நிறுவனம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கமல்ஹாசனுக்கு நோட்டீஸ் அனுப்பி பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளனர். #Vishwaroopam2 #KamalHaasan
சென்னை:
கமல்ஹாசன் நடித்து தயாரித்துள்ள விஸ்வரூபம்-2 திரைப்படத்துக்கு தடை கேட்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கமல்ஹாசன் இயக்கிய நடித்துள்ள விஸ்வரூபம்-2 படம் மூன்று வருட போராட்த்திற்கு பிறகு வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், விஸ்வரூபம்-2 படத்திற்கு தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பிரமிட் சாய்மீரா என்ற நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
‘மர்மயோகி’ என்ற திரைப்படத்தை இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் ரூ.100 கோடி செலவில் தயாரிக்க, கடந்த 2008-ம் ஆண்டு நடிகர் கமல்ஹாசன் பங்குதாரராக உள்ள ராஜ்கமல் நிறுவனத்துடன் எங்கள் நிறுவனம் ஒப்பந்தம் செய்தது. இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பதுடன், கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கித் தர சம்மதம் தெரிவித்து இருந்தார். இதற்கு முன்பணமாக ரூ.4 கோடி கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டது.
ஆனால், அந்த பணத்தை கொண்டு, மர்மயோகி படத்தை எடுக்கும் வேலைகள் எதையும் செய்யாமல், ‘உன்னைப்போல் ஒருவன்’ என்ற திரைப்படத்தை எடுத்தார்.
இதுதொடர்பாக கடந்த 2011-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டு, அந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், கமல்ஹாசன் தற்போது ‘விஸ்வரூபம்-2’ என்ற படத்தை தயாரித்து நடித்துள்ள வருகிற 10-ந் தேதி வெளியிடப்போவதாக தகவல் வெளியாக உள்ளது.
எனவே, மர்மயோகி படத்துக்காக எங்களிடம் வாங்கிய ரூ.4 கோடியை, வட்டியுடன் சேர்த்து ரூ.5.44 கோடி வழங்க கமல்ஹாசனுக்கு உத்தரவிட வேண்டும். அதுவரை, விஸ்வரூபம்-2 படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும். எனவே, விஸ்வரூபம்-2 படத்துக்கு தடை விதிக்க வேண்டும். என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி கார்த்திகேயன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கிற்கு பதில் அளிக்க கமல்ஹாசன் உள்பட பலருக்கு நோட்டீசு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த வழக்கின் விசாரணையை 6-ந் தேதிக்கு (திங்கட்கிழமை) தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார். #Vishwaroopam2 #KamalHaasan
கமல்ஹாசனின் விஸ்வரூபம்-2 படத்தை திரையிட அனுமதிக்கக்கூடாது என சாய்மீரா பட நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது. #KamalHaasan #Vishwaroopam2
சென்னை:
நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனின் நடிப்பு மற்றும் தயாரிப்பில் இம்மாதம் வெளியாக உள்ள விஸ்வரூபம் படத்திற்கு தடை கேட்டு பிரமிட் சாய்மீரா நிறுவனம் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு மர்மயோகி என்ற படத்தில் கமல் நடிக்க படத்தை தயாரிப்பதற்காக ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கும், பிரமிட் சாய்மீரா நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம் போடப்பட்டது. ரூ.100 கோடி செலவில் தயாரிக்க திட்டமிடப்பட்ட அந்தப் படத்தின் தயாரிப்பு பணிகளுக்காக ரூ.6.90 கோடி வழங்கப்பட்டது.
அத்துடன் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடிப்பதற்காக கமல்ஹாசனுக்கு ரூ.4 கோடி கொடுக்கப்பட்டது. அந்தப்பணம் ‘மர்மயோகி’ படம் தயாரிக்க பயன்படுத்தப்படாமல், “உன்னைபோல் ஒருவன்” படத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
ஏற்கெனவே ரூ.6.90 கோடி கேட்டு சாய்மீரா நிறுவனத்தால் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் ‘விஸ்வரூபம் 2’ படத்தை ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியிடவுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. ‘விஸ்வரூபம் 2’ படத்தை தயாரிக்க கமல் பலரிடம் கடன் வாங்கியுள்ள நிலையில், ‘மர்மயோகி’ படத்திற்கு கொடுத்த சம்பளம் ரூ.4 கோடியை வட்டியுடன் சேர்த்து ரூ.5.44 கொடுக்க வேண்டும்.
இல்லையென்றால் ‘விஸ்வரூபம் 2’ படத்தை வெளியிடத்தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
கமல் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ‘விஸ்வரூபம் 2’ படம் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீசாக இருக்கும் நிலையில், என் ரசிகர்கள் புத்திசாலிகள் என்று பேட்டியளித்திருக்கிறார். #Kamal #Vishwaroopam2
கமல்ஹாசன், பூஜா குமார், ஆண்ட்ரியா மற்றும் பலர் நடித்துள்ள விஸ்வரூபம் 2 திரைப்படம் வரும் 10-ம் தேதி வெளியாக உள்ளது.
இதற்காக கமல் அளித்த பேட்டி ஒன்றில் ’முன்பு எல்லாம் நேபாளத்திலிருந்து நடிகர்களை நடிக்க வைத்து விட்டு சீனர்கள் எனச் சொன்னாலும் யாரும் அதைக் கேள்வி கேட்க மாட்டார்கள். ஆனால் இப்போது அப்படி இல்லை.
தஜிகிஸ்தானில் படப்பிடிப்பு நடைபெற்ற போது கதைப்படி பிளாக் ஹாக் வகை ஹெலிகாப்டர்கள் தேவைப்பட்டதால் அதையே ஒரிஜினலாக பயன்படுத்தினோம். வேறு ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தினால் புத்திசாலியான என்னுடைய ரசிகர்கள் எளிதில் கண்டுபிடித்து விடுவார்கள்.
நாட்டை விட்டு ஓடியவன் இன்று நாட்டை காப்பாற்ற போகிறானா என சிலர் கிண்டல் செய்கிறார்கள். ஆனால் நான் நாட்டை விட்டுப் போகிறேன் எனச் சொன்னது என்னுடைய பணியை சிறப்பாக செய்ய விடாமல் தடுத்ததற்காகத் தானே தவிர பயந்து அல்ல’ என்று கூறி இருக்கிறார். #Kamal #Vishwaroopam2
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X