search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vivo V11"

    விவோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 3315 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. #VivoV11



    விவோ நிறுவனத்தின் வி11 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், விவோ வி11 ஸ்மார்ட்போன் தற்சமயம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

    புதிய விவோ ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் 2280x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 எல்.சி.டி. டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P60 12nm பிராசஸர், கிராஃபிக்ஸ்க்கு மாலி-G72 MP3 GPU, 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 16 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல் டோன் எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.0 அப்ரேச்சர், 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4 அப்ரேச்சர், 25 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0 அப்ரேச்சர் வழங்கப்பட்டுள்ளது.



    விவோ வி11 சிறப்பம்சங்கள்:

    - 6.3 இன்ச் 2280x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 எல்.சி.டி. டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P60 12nm பிராசஸர்
    - மாலி-G72 MP3 GPU
    - 6 ஜிபி ரேம்
    - 64 ஜிபி மெமரி
    - மெமரியை நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம்
    - ஃபன்டச் ஓ.எஸ். 4.5 சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - 16 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல் டோன் எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.0
    - 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
    - 25 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
    - இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3315 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - ஃபாஸ்ட் சார்ஜிங்

    இந்தியாவில் விவோ வி11 ஸ்மார்ட்போன் விலை ரூ.22,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்துவோருக்கு ரூ.2000 வரை கேஷ்பேக் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் செப்டம்பர் 27-ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் வி11 ஸ்மார்ட்போன் ஸ்டேரி நைட் பிளாக் மற்றும் நெபுளா பர்ப்பிள் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
    விவோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் செப்டம்பர் மாதம் இந்தியாவில் வெளியாக இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #VivoV11 #smartphone


    விவோ நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனினை செப்டம்பர் 6-ம் தேதி இந்தியாவில் வெளியிட இருக்கிறது. புதிய வெளியீட்டு நிகழ்வுக்கான அழைப்பிதழ்களை விவோ அனுப்பி வருகிறது.

    இந்நிலையில், அழைப்பிதழில் 06.09.2018-ம் தேதி 11-ஐ அனுபவியுங்கள் என்ற வாசகம் ஆங்கில மொழியில் அச்சிடப்பட்டுள்ளது. அதன்படி விவோ வி11 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன் மார்ச் மாதம் அந்நிறுவனம் அறிமுகம் செய்திருந்த விவோ வி9 மாடலின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷனாக இருக்கும் என கூறப்படுகிறது.

    புதிய ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் இணையத்தில் லீக் ஆன விவரங்களின் படி புதிய விவோ ஸ்மார்ட்போனில் 6.41 இன்ச் FHD பிளஸ் வாட்டர் டிராப் போன்ற ஸ்கிரீன் டிசைன் கொண்டிருக்கும் என கூறப்பட்டது. இதே போன்ற அம்சம் ஒப்போ எஃப்9 (ப்ரோ) மாடலிலும் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.



    இத்துடன் ஸ்னாப்டிராகன் 660 AIE சிப்செட், 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, புகைப்படங்களை எடுக்க 12 + 5 எம்பி டூயல் பிரைமரி கேமரா, 25 எம்பி செல்ஃபி கேமரா மற்றும் 3400 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படலாம் என கூறப்படுகிறது. ஸ்மார்ட்போனின் சமீபத்திய படத்தில் கிரேடியன்ட் பாடி வழங்கப்பட்டிருப்பது தெரியவந்தது. 

    இதே போன்ற வடிவைப்பு கொண்ட விவோ X23 ஸ்மார்ட்போன் விரைவில் சீனாவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு செப்டம்பர் மாத முதல் வாரத்தில் தெரியவரும்.
    ×