என் மலர்
நீங்கள் தேடியது "Vjay Sethupathi"
- மெரி கிறிஸ்துமஸ் படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ளார்.
- இந்த படம் தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் தயாராகியுள்ளது.
கேத்தரினா கைஃப் மற்றும் விஜய் சேதுபதி பிரதான வேடங்களில் நடித்திருக்கும் 'மெரி கிறிஸ்துமஸ்' திரைப்படம் இந்தி மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் தயாராகி இருக்கிறது.
ரமேஷ், துரானி, சஞ்சய் ரவ்ட்ராய், ஜெயா துரானி, மற்றும் கேவல் கார்க் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்கி இருக்கிறார். விநாயகர் பிரதிமா கண்ணன் மற்றும் டினு ஆனந்த் ஆகியோர் இந்திப் பதிப்பில் நடித்துள்ளனர்.

இதேபோல் தமிழ்ப் பதிப்பில் ராதிகா சரத்குமார், சண்முகராஜா, கவின் ஜெபாபு மற்றும் ராஜேஷ் வில்லியம்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர். ராதிகா ஆப்தே மற்றும் அஸ்வின் கலாசேகர் ஆகியோர் இரண்டு பதிப்புகளிலும் நடித்து இருக்கிறார்கள்.
இந்த படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த திரைப்படத்தின் கதைக்களம், கொண்டாட்டம் மிகுந்த கிறிஸ்மசை மையமாகக் கொண்டிருப்பதால் 'மெரி கிறிஸ்மஸ்' என்று படத்திற்கு பெயரிட்டிருக்கிறது.