search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Water tanker"

    கொல்கத்தா சர்வதேச விமான நிலையத்தில் கத்தார் ஏர்வேஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தபோது தண்ணீர் லாரி மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. #QatarAirwaysPlane #KolkataAirport
    கொல்கத்தா:

    கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை 3.15 மணியளவில் கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று  103 பயணிகளை ஏற்றிக்கொண்டு தோகாவிற்கு புறப்பட தயாராகிக் கொண்டிருந்தது.

    அப்போது தண்ணீர் லாரி ஒன்று விமானத்தின் லேன்டிங் கியர் அருகில் எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் விமானத்தின் வயிற்றுப்பகுதியில் சேதம் அடைந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் எந்தவித சேதமும் ஏற்படவில்லை. விபத்துக்குள்ளான விமானம் புறப்படாது என்று அறிவிக்கப்பட்டு, பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

    முதற்கட்ட விசாரணையில் தண்ணீர் லாரியின் பிரேக் சரியாக வேலை செய்யாததால் இந்த அசம்பாவிதம் நடைபெற்றுள்ளது என்று இந்திய விமான நிலையங்கள் ஆணையம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    103 பயணிகள் அருகில் உள்ள ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நாளை காலை 3 மணிக்கு தோகா புறப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானம் பறப்பதற்கு சற்றுமுன் இந்த விபத்து ஏற்பட்டதால் விமானிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். #QatarAirwaysPlane #KolkataAirport
    ×