என் மலர்
நீங்கள் தேடியது "Websites"
- வரன் தேடும் இணையதளங்களில் பதிவு செய்து உள்ளவர்களின் சுயவிவரங்களின் உண்மைத்தன்மையை முதலில் உறுதி செய்துகொள்ள வேண்டும்.
- செல்போனில் ‘வீடியோ' அழைப்புகள் அல்லது நேரடி சந்திப்புகளை தவிர்த்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சென்னை:
திருமண பந்தம் கை கூடுவதற்கு உறுதுணையாக இருக்கும் வரன் தேடும் இணையதளங்களிலும் 'ஆன்லைன்' மோசடி கும்பல் ஊடுருவி உள்ளது. இந்த இணையதளத்தில் புகைப்படம், வேலை, சம்பளம் போன்ற சுய விவரங்களை தவறாக பதிவிட்டு போலி கணக்கை உருவாக்கி பணம் பறிக்கும் மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
தமிழ்நாட்டில் இந்த மோசடி சம்பவம் தொடர்பாக 379 புகார்கள் பதிவாகி உள்ளன.
இந்த மோசடி எவ்வாறு அரங்கேறுகிறது? இந்த மோசடியில் சிக்காமல் தப்பிப்பது எப்படி? என்பது குறித்து 'சைபர் கிரைம்' போலீசார் விடுத்துள்ள எச்சரிக்கை அறிவிப்பு வருமாறு:-
திருமண தகவல் இணையதளத்தில் போலி கணக்குகளுடன் ஊடுருவி உள்ள மோசடி கும்பலை சேர்ந்தவர்களின் குறியில் சிக்குபவர்களிடம் (மணப்பெண் அல்லது மணமகன்), நான் உங்களை திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறேன் என்று இனிக்க, இனிக்க பேசி வசியப்படுத்துவார்கள். திருமணத்துக்குபின்னர் நாம் ஆடம்பரமாக வாழ வேண்டும் என்றால் லட்சக்கணக்கில் சம்பாதிக்க வேண்டும். ஆன்லைனில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தைகளை அள்ளி விடுவார்கள்.
அதன்பின்னர் அவர்கள் ஏற்கனவே உருவாக்கி வைத்திருக்கும் போலி முதலீட்டு இணையதள முகவரியை பரிந்துரை செய்வார்கள். மோசடி கும்பலின் மாய வலையில் சிக்கி பணத்தை முதலீடு செய்பவர்களுக்கு முதலில் லாபத்தொகையை தருவது போன்று நம்பிக்கையை உருவாக்குவார்கள். பெரிய தொகையை முதலீடு செய்யும் போது 'அபேஸ்' செய்து அனைத்து தொடர்புகளையும் தூண்டித்துவிட்டு திருமண தகவல் இணையதளத்தில் இருந்து வெளியேறி விடுவார்கள்.
எனவே வரன் தேடும் இணையதளங்களில் பதிவு செய்து உள்ளவர்களின் சுயவிவரங்களின் உண்மைத்தன்மையை முதலில் உறுதி செய்துகொள்ள வேண்டும்.
செல்போனில் 'வீடியோ' அழைப்புகள் அல்லது நேரடி சந்திப்புகளை தவிர்த்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 'ஆன்லைன்' மூலம் அறிமுகமானவரின் ஆலோசனையை ஏற்று ஒரு போதும் பணத்தை முதலீடு செய்ய கூடாது.
இந்த மோசடி கும்பல் தங்கள் மோசடி திட்டத்துக்கு www.oxgatens.com, www.oxgatens.net, www.cityindexmain.com, www.cityindexlimited.com போன்ற போலி முதலீட்டு இணையதளங்களை பயன்படுத்துகின்றனர். இது போன்ற மோசடி சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள், சந்தேகத்துக்கிடமான செயல்பாடுகளை கண்டறிந்தவர்கள் 'சைபர் கிரைம்' போலீசாரின் 1930 என்ற கட்டணமில்லா உதவி எண்ணை உடனடியாக தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றும், www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகாரை பதிவு செய்யலாம் என்றும் 'சைபர் கிரைம்' போலீசார் தெரிவித்துள்ளனர்.
- மாலத்தீவு அதிபர், வெளியுறவு அமைச்சகம் உள்ளிட்ட இணைய தளங்கள் செயலிழந்து பல மணி நேரம் முடங்கின.
- தேசிய தகவல் தொழில்நுட்ப மையம் இந்தச் சிக்கலை தீர்க்க தீவிரமாக செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.
மாலி:
மாலத்தீவின் அதிபர், வெளியுறவு அமைச்சகம் மற்றும் சுற்றுலா அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளங்கள் செயலிழந்து, பல மணி நேரம் முடங்கின.
அரசாங்கத்தின் உயர்மட்ட இணைய தளங்கள் வேலை செய்யாததற்கான காரணங்கள் கண்டறியப்படாமல் இருந்து வந்தது. தேசிய தகவல் தொழில்நுட்ப மையம் மற்றும் பிற தொடர்புடைய நிறுவனங்கள் இந்தச் சிக்கலை தீர்க்க தீவிரமாகச் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மாலத்தீவு அரசாங்கத்தின் முடங்கிய இணைய தளங்கள் மீண்டும் மீட்டெடுக்கப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகின.
புதிதாக படிக்க விரும்புபவர்களுக்கு...
புதிது புதிதாக ஏதாவது படிக்க விரும்புபவர்களுக்காக இணையதளத்தில் ஏராளமான ஆன்லைன் படிப்புகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்க இணையதளங்களில் ஒன்றுEdX.org. உலகில் அதிகம்பேர் திறக்கும், அதிகமான ஆன்லைன் படிப்புகள் கொண்ட இணையப் பக்கம் இது. Udacity.com,AcademicEarth.org போன்ற இணையதளங் களும் இது போன்றவையே.Coursera.org இணையதளத்தில் பள்ளிமுதல் பல்கலைக்கழக அளவிலான பாடத்திட்டங்களுடன், கூடுதல் அறிவு வளர்க்கும் விஷயங்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
பொது கட்டுரைகளுக்கு...
நவீன உலகைப் பற்றியும், வாழ்வின் பல்வேறு நிலைகள் பற்றிய அனைத்து விஷயங்களையும் பயனுள்ள வகையில் தொகுத்து வழங்கும் இங்கிலாந்து இணையதளம் இது LifeHacker.co.uk. கதைகள், வாழ்க்கை, வேலை, வர்த்தகம், டிப்ஸ், டிரிக்ஸ், பணம் என பலவிதமான பிரிவுகளில் பயனுள்ள தொகுப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. எந்த சூழ்நிலையில் என்ன பரிசு வழங்கலாம், ஒரு முடிவு எடுக்கும் முன்பு யோசிக்க வேண்டியவை எவை? பண வரவுக்கான வழிகளை உருவாக்குவது எப்படி? ‘லிங்ட் இன்’ பக்கத்தில் பாதுகாப்பை வலுப்படுத்துவது எப்படி? என்பது போன்ற தகவல்களை இதில் படித்து பயன்பெறலாம்.
நீங்கள் இணையதளத்தில் சென்று பொழுதுபோக்கு வீடியோக்களை ரசிக்கும் பழக்கத்திற்கு அடிடையானவர்கள் என்றால், உங்களை அறிவியல் மற்றும் கல்வி சார்ந்த வீடியோக்களால் ஈர்க்கிறது UnplugTheTV.com இணையதளம். வீடியோக்கள் மட்டுமல்லாது கட்டுரைகளாகவும், புகைப்படங்களாகவும், பொன்மொழிகளாகவும், ஒலி வடிவிலும் ஏராளமான தகவல்கள் நிரம்பி உள்ளன. கேள்வி கேட்பதன் மூலமும் நமக்கு அவசியமான தகவல்களை அறிந்து கொள்ள முடியும். வேறுசில முக்கியமான பக்கங்களுக்கான தொடர்பு முகவரிகளையும் கொடுத்திருப்பார்கள்.

உணவுப் பிரியர்களுக்கு...
மாணவர்களுக்கான உணவுப்பட்டியலையும், அதை தயாரிக்கும் முறையையும் கற்றுத்தருகிறது StudentRecipes.com. 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரெஸிபிகளும், சமையல் யுத்திகளும் உள்ளன.
ஆரோக்கியத்தை மதிப்பிட
உங்களின் தற்போதைய உடல் நலத்தை மதிப்பிட உதவும் இணையதளம்WebMD.com. உங்களுக்குத் தோன்றும் உடல் அறிகுறிகளை குறிப்புகளைக் கொடுத்தால், அதனுடன் தொடர்புடைய நோய் பாதிப்புகளைப் பற்றிய தகவல்களைத் தரும். இது இணைய மருத்துவர் இல்லையென்றாலும், மருத்துவ துணைவனாக சில புரிதல்களை ஏற்படுத்தும். மருந்துகளை இது பரிந்துரைப்பதில்லை என்பதால் உடல்நலம் பற்றிய தெளிவுகளை மட்டும் பெறலாம்.
இதுபோல மாணவப் பருவத்தில் ஏற்படும் உடல், மன நலப்பிரச்சினைகள் பற்றி கட்டுரைகளை கொண்டது The Ultimate Health Food Guide இணைய தளம். இந்த பக்கத்தில் உடல்நலத்திற்கேற்ற உணவுகளையும் அறிந்து கொள்ளலாம். நோய் எதிர்ப்புசக்திக்குத் தேவையான உணவுப்பட்டியலையும் தரும்.
உங்கள் தூக்கத்தை ஆராய்ச்சி செய்யும் இணையதளம் Sleepyti.me. இதில் நீங்கள் ஒரு கணக்கு துவங்கிக் கொண்டு, தினசரி தூங்கச் செல்லும் நேரத்தையும், விழிக்கும் நேரத்தையும் பதிவு செய்தால், உங்கள் தூக்க நேரத்திற்கு ஏற்ப பல ஆலோசனைகள் வழங்கும். அப்படி இல்லாமலும் நீங்கள் தூங்கும் நேரத்தின் அளவைக் குறிப்பிட்டும், உங்கள் தூக்கம் போதுமானதா? எவ்வளவு நேரம் ஓய்வு எடுப்பது என்பது போன்ற பயனுள்ள தகவல்களை பெறலாம்.
புத்தகங்களை வாங்க விற்க...
TheBookPond.comஇணைய தளம் உங்கள் பழைய பள்ளி, கல்லூரி பாடநூல்களை விற்கவும், மற்றவர்களிடம் இருந்து வாங்கி பயன்பெறவும் துணை செய்கிறது. அமேசான், இபே, கம்ட்ரீ போன்ற பொதுவான இணைய வர்த்தக தளங்களிலும் கல்வி தொடர்பான பொருட்களை தேடி வாங்கலாம்.
வரவு செலவுக்கான தளங்கள்...
நீங்கள் பணம் வரவு செலவு மற்றும் நிதி விவரங்கள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள MoneySavingExpert.com என்ற இணையதளம் கைகொடுக்கும். இதில் குறிப்பிட்ட வங்கிகளின் வட்டி விகிதம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களைஅறியலாம். Wise Bread.com தளத்திலும் பயனுள்ள நிதி ஆலோசனைகள் கிடைக்கும். இதில் சில ஐடியாக்களை வழங்கி வருவாய் ஈட்டவும் முடியும்.
Mint.com என்ற இணையதளம் சென்றால் உங்கள் வரவு செலவை பதிந்து வைக்க வழி உண்டு. அதற்கேற்ப சில ஆலோசனைகளையும் இந்த இணையதளம் வழங்கும்.
எகிப்து நாட்டில் இணைய வழி குற்றத்தை தடுக்கும் வகையில் வலைத்தளங்களை கட்டுப்படுத்தும் சட்ட மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தேசபாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலான வலைத்தளங்களை முடக்க இச்சட்டம் வழிவகை செய்யும்.

நாடாளுமன்றத்தில் நடந்த ஓட்டெடுப்பில் இந்த சட்ட மசோதா நிறைவேறியது. இதையடுத்து அதிபர் அப்தெல் பாட்டா அல்-சிசி இந்த புதிய சட்டத்துக்கு நேற்று ஒப்புதல் அளித்தார்.
இந்த சட்டத்தின் படிஇணையத்தில் சர்ச்சைக்குரிய வலைத்தளங்களை உருவாக்கி நடத்துபவர்கள் மற்றும் அந்த வலைத்தள பக்கங்களை பயன்படுத்துபவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் அல்லது அபராதம் செலுத்த வேண்டி இருக்கும்.
நாட்டின் நிலையற்ற தன்மை மற்றும் பயங்கரவாதம் போன்றவற்றை எதிர்கொள்ள புதிய சட்டம் உதவும் என அரசு தரப்பில் கூறப்படுகிறது.
ஆனால், நாட்டில் உள்ள அனைத்து அரசியல் எதிரிகளையும் நசுக்கவே இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.
மேலும் இந்த சட்டம் கையெழுத்தாவதற்கு முன்னதாகவே சுமார் 500 வலைத்தளங்கள் முடக்கப்பட்டுவிட்டதாக கெய்ரோவை தலைமையகமாக கொண்ட சுதந்திரமான சிந்தனை மற்றும் கருத்து வெளிப்பாட்டுச் சங்கம் தெரிவித்துள்ளது. #Egypt #Internet #Tamilnews

