search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "whats app"

    தேர்தல் அறிக்கையில் இடம் பெறும் வகையில் புதிய கருத்துக்கள் இருந்தால் தெரிவிக்கலாம் என்று பொதுமக்களுக்கு ப.சிதம்பரம் வேண்டுகோள் விடுத்துள்ளார். #Congress #PChidambaram
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு விரைவில் தேர்தல் அறிக்கை வெளியிடுவதற்கு காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.

    இதற்காக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் தலைமையில் 9 பேர் கொண்ட உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் ஏ.கே.அந்தோணி, அகமது பட்டேல், குலாம்நபி ஆசாத், ஜெயராம் ரமேஷ் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

    தேர்தல் அறிக்கையில் எத்தகைய அம்சங்களை இடம் பெற செய்வது என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இதற்காக ப.சிதம்பரம் மாநில தலைவர்களிடமும் கருத்து கேட்டு வருகிறார்.

    இது தவிர தேர்தல் அறிக்கை பொதுமக்களை மிக அதிக அளவில் கவரும் வகையில் இருக்க வேண்டும் என்று ப.சிதம்பரம் விரும்புகிறார். இதற்காக பல்வேறு தரப்பினரிடமும் கருத்துக்கள் கேட்கப்பட்டு வருகிறது.

    பொதுமக்களிடமும் இது தொடர்பாக யோசனை பெறுவதற்கு ப.சிதம்பரம் திட்டமிட்டுள்ளார். தேர்தல் அறிக்கையில் இடம் பெறும் வகையில் புதிய கருத்துக்கள் இருந்தால் தெரிவிக்கலாம் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை எளிதாக அனுப்புவதற்கு வசதியாக காங்கிரஸ் சார்பில் வாட்ஸ்அப் வசதி செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் 72920 88245 என்ற எண் மூலம் தங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கலாம். #Congress #PChidambaram 
    ×