search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "wish"

    பாராளுமன்ற தேர்தலில் இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க முன்வர வேண்டும் என தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அனைத்துக் கட்சிகளுக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். #ParliamentElection #PMModi
    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 18-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். வாக்கு எண்ணிக்கை மே 23-ம் தேதி நடைபெறுகிறது என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று அறிவித்தார்.

    இந்நிலையில், வரவுள்ள பாராளுமன்ற தேர்தலில் இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க முன்வர வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறியதாவது:

    ஜனநாயகத்துக்கான தேர்தல் திருவிழா துவங்கியது. 2019 லோக்சபா தேர்தலில் அனைவரும் தங்களது பங்களிப்பை அளிக்க வேண்டும். இத்தேர்தல் வரலாற்று திருப்புமுனையை ஏற்படுத்தும் என நம்புகிறேன். இந்திய குடிமகன்கள் அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். குறிப்பாக, முதல் முறையாக வாக்களிக்கும் இளைஞர்கள் தங்களது வாக்குகளைப் பதிவுசெய்து சாதனையை உருவாக்க வேண்டும்.

    பல வருடங்களாக தேர்தல்களை சிறப்பாக நடத்தி வரும் தேர்தல் கமிஷனால் இந்தியாவுக்கு பெருமை கிடைத்துள்ளது. தேர்தலை சிறப்பான முறையில் நடத்த தேர்தல் கமிஷன், அதிகாரிகள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

    2019 லோக்சபா தேர்தலை சந்திக்கும் அனைத்துக் கட்சிகளுக்கும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். கட்சிகளால் நாம் வேறுபட்டு இருந்தாலும் அனைவரது குறிக்கோளும் ஒன்றே. அது இந்தியாவின் வளர்ச்சி மற்றும் ஒவ்வொரு இந்தியருக்கும் அதிகாரமளிக்க வேண்டும் என்பதுதான் என பதிவிட்டுள்ளார். #ParliamentElection #PMModi
    நடிகர் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யாவின் திருமணத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். #ARRahman #Rajinikanth #SoundaryaRajinikanth
    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யாவுக்கும், தொழிலதிபர் விசாகனுக்கும் நாளை திருமணம் நடைபெற உள்ளது. திருமண விழாவில் குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர். இதற்காக ரஜினிகாந்த் திருமண பத்திரிகைகள் கொடுத்து அழைப்பு விடுத்து வருகிறார்.

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் உள்பட முக்கிய பிரமுகர்கள் பலரது வீட்டிற்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அழைப்பிதழ் வழங்கி வருகிறார்.

    இதற்கிடையே, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் திருமணத்திற்கு அழைப்பிதழ் வழங்கினார். திருமணத்தில் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்தார்.



    இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யாவின் திருமணத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

    இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், சவுந்தர்யா ரஜினிகாந்தின் வரவேற்பு புகைப்படத்தை பதிவிட்டு, திருமண வாழ்த்துக்க்ள் என குறிப்பிட்டுள்ளார். #ARRahman #Rajinikanth #SoundaryaRajinikanth 
    பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். #PranabMukherjee #BharatRatna #EdappadiPalanisamy
    சென்னை:

    முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது அளிக்கப்படுவதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று அறிவித்தார். மேலும் சமூக சேவகர் நானாஜி தேஷ்முக், கவிஞர் பூபென் ஹசாரிகா ஆகியோருக்கும் பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, பிரணாப் முகர்ஜி கூறுகையில், நாட்டு மக்களுக்கு நன்றி என்றார்.



    இந்நிலையில், பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தலைசிறந்த அரசியல் மேதையான பிரணாப் முகர்ஜி நம் நாட்டுக்காக தன்னலமின்றி சேவையாற்றினார் என குறிப்பிட்டுள்ளார். #PranabMukherjee #BharatRatna #EdappadiPalanisamy
    வரும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார். #VladimirPutin #PMModi
    புதுடெல்லி:

    ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது, ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் ந்கரில் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள கிழக்கு பொருளாதார மன்றத்தில் பிரதமர் மோடி பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

    மேலும், இந்தியாவில் 2019 பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் பிரதமராக வேண்டும் என மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார். #PMModi #ParliamentaryElection #VladimirPutin
    இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் நிலையில், ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். #TeachersDay
    புதுடெல்லி:

    முன்னாள் ஜனாதிபதி டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5 ஆம் நாள், ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் திருநாளாக இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அவ்வகையில் இந்த ஆண்டு இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.

    ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். “நமது சிறந்த ஆசான்கள் நமது தேசத்தை கட்டமைக்க நமக்கு வழிகாட்டட்டும்; உலகம் முழுவதும் நல்லறிவு, சமாதானம், இணக்கம் தழைத்தோங்க ஆசிரியர்கள் உதவ வேண்டும்” என்று ராம்நாத் கோவிந்த் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.



    பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் இந்த சிறந்த நாளில் ஆசிரிய சமூகத்திற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இளம் மனங்களை வடிவமைப்பதிலும் தேசத்தை கட்டமைப்பதிலும் ஆசிரியரிகளின் பங்களிப்பு முக்கியமானது. நமது முன்னாள் ஜனாதிபதியும் சிறந்த ஆசிரியருமான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்தநாளான இன்று அவரை நாம் வணங்குவோம்’ என குறிப்பிட்டுள்ளார்.

    தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான 45 ஆசிரியர்களை நேற்று சந்தித்த பிரதமர் மோடி, அவர்களுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்து சிறிது நேரம் கலந்துரையாடியது குறிப்பிடத்தக்கது. #TeachersDay

    தி.மு.க.வின் தலைவராக போட்டியின்றி தேர்வாகி உள்ள மு.க. ஸ்டாலினுக்கு முன்னாள் நிதிமந்திரி ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். #DMK #MKStalin #Chidambaram
    புதுடெல்லி:

    திமுகவின் தலைவராக 50 ஆண்டுகள் இருந்துவந்த கருணாநிதி வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். அவரது மறைவை அடுத்து கட்சியின் தலைவர் பதவிக்கு முறையாக தேர்தல் நடத்தி தேர்ந்தெடுக்க மூத்த நிர்வாகிகள் முடிவெடுத்தனர்.

    இதையடுத்து, தலைவர் பதவிக்கான தேர்தலுக்கான மனுத்தாக்கல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் போட்டியிட திமுகவின் செயல்தலைவர் மு.க ஸ்டாலின் மனுத்தாக்கல் செய்திருந்தார். மனுத்தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் மாலை 4 மணி வரை அளிக்கப்பட்டிருந்த நிலையில், ஸ்டாலினை எதிர்த்து வேறு யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை.

    இதனால், போட்டியின்றி ஸ்டாலின் திமுக தலைவராக பதவி ஏற்க உள்ளதாகவும், நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.



    இந்நிலையில், போட்டி இன்றி திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மு.க. ஸ்டாலினுக்கு முன்னாள் நிதிமந்திரியும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், புதிய பொருளாளர் துரைமுருகனுக்கும் தனது வாழ்த்துக்களை ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். #DMK #MKStalin #Chidambaram
    பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் சசிகலாவை நேற்று சந்தித்த டி.டி.வி. தினகரன் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். #Sasikala #TTVDhinakaran #Birthday
    பெங்களூரு:

    சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்தநிலையில், நேற்று சசிகலாவுக்கு பிறந்தநாள் ஆகும்.

    இதையொட்டி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான டி.டி.வி. தினகரன் தனது மனைவி அனுராதா மற்றும் குடும்பத்தினருடன் நேற்று பரப்பனஅக்ரஹாரா சிறைக்கு வந்தார்.

    பின்னர், அவர்கள் சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இனிப்புகள் வழங்கினர். இந்த சந்திப்புக்கு பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்த டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் வீணாக கடலில் கலந்து வருகிறது. தமிழகத்தில் ஏரி, குளங்களை தூர்வார தமிழக அரசு ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்தது. இந்த பணம், தூர்வாரும் பணி என்ற பெயரில் வீணடிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் ஏரி, குளங்கள் தூர்வாரப்படும். இதற்கு மாறாக, தண்ணீர் திறக்கப்படும் காலங்களில் ஏரி, குளங்கள் தூர்வாரப்படும் என கூறுவது எந்த விதத்தில் நியாயம்.

    காவிரியில் அதிகளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளதால் தமிழகத்தில் தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதை அரசு ஒருபோதும் செய்யாது.

    ஊழல் செய்வதற்கான ஒரு திட்டம் என்று கூறினால் அது தமிழக அரசின் தூர்வாரும் திட்டம் தான். தமிழக அரசு ஏழை, எளிய மக்கள் மற்றும் விவசாயிகளின் வயிற்றில் அடித்து வருகிறது. தமிழகத்தில் தற்போது நடக்கும் ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும்.

    திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தால் குக்கர் சின்னம் தான் வெற்றி பெறும். சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கு எப்போதோ முடிந்திருக்க வேண்டியது. கால சூழலால் தாமதம் ஏற்பட்டு வருகிறது. நீதிமன்ற கருணையால் தமிழகத்தில் இந்த ஆட்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Sasikala #TTVDhinakaran #Birthday 
    தி.மு.க. தலைவர் கலைஞரின் 95-வது பிறந்தநாளையொட்டி, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இன்று அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். #Kamalhaasan #karunanidhibirthday
    சென்னை:

    திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான கலைஞரின் 95-வது பிறந்தநாளையொட்டி பல்வேறு அரசியல் மற்றும் கலையுலக பிரமுகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், இன்று இரவு பெங்களூரு புறப்பட்டு சென்ற மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கலைஞருக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

    அதில், திமுக தலைவர் கருணாநிதிக்கு, எப்பவும் தள்ளி நின்று வாழ்த்து சொல்லும் ரசிகன் நான். பலமுறை பிறந்தநாள் முடிந்தும் திமுக தலைவர் கருணாநிதிக்கு வாழ்த்து கூறியுள்ளேன், இம்முறையும் அதேதான் என தெரிவித்துள்ளார். #Kamalhaasan #karunanidhibirthday
    ×