search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Woman Councillor"

    • குற்றவாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
    • போதை தலைக்கேறிய நிலையில் இருந்த நாங்கள் அரிவாளுடன் கவுன்சிலர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தோம்

    கோவை:

    கோவை மலுமிச்சம்பட்டி அருகே உள்ள அவ்வை நகரை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மனைவி சித்ரா (வயது 44). தி.மு.க.வை சேர்ந்த இவர் மலுமச்சம்பட்டி ஊராட்சியில் கவுன்சிலராக உள்ளார்.

    இவர்களது மகன் மோகன் (24). நேற்று முன்தினம் இரவு இவர்களது வீட்டுக்குள் முகமூடி அணிந்தபடி 5 பேர் கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்தனர். அவர்கள் வீட்டில் இருந்த ரவிக்குமார், கவுன்சிலர் சித்ரா, மோகன் ஆகியோரை தலை மற்றும் உடலில் அரிவாளால் வெட்டி விட்டு கொலை மிரட்டல் விடுத்து அங்கு இருந்து தப்பிச் சென்றனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில் குற்றவாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி தி.மு.க. கவுன்சிலரை வீடு புகுந்து வெட்டிய மலுமிச்சம்பட்டியை சேர்ந்த ராஜன் என்ற ராஜா (23), பிச்சைபாண்டி (23), வைசியாள் வீதியை சேர்ந்த முத்துப்பாண்டி (24), அம்மா நகரை சேர்ந்த மகேஷ் கண்ணன் (22), தெற்கு உக்கடத்தை சேர்ந்த ஸ்ரீரக்சித் (18) ஆகியோரை சம்பவம் நடந்த 24 மணி நேரத்தில் தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கைது செய்யப்பட்ட ராஜன், பிச்சைபாண்டி, முத்துப்பாண்டி ஆகியோர் மீது ஏற்கனவே கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பது தெரிய வந்தது.

    5 பேரிடம் தி.மு.க. கவுன்சிலர் மற்றும் அவரது கணவர், மகனை வீடு புகுந்து வெட்டியதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

    நாங்கள் 5 பேரும் கவுன்சிலர் வீட்டின் பின் புறத்தில் உள்ள காலி இடத்தில் இரவு நேரத்தில் மது அருந்துவோம். அப்போது கஞ்சாவும் பிடிப்போம். இதனை பார்த்த சித்ரா எங்களை போலீசில் பிடித்து கொடுத்து விடுவதாக மிரட்டி வந்தார். மேலும் இங்கு வைத்து கஞ்சா மது அடிக்க கூடாது என எச்சரித்து வந்தார். இது எங்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே அவரை வீடு புகுந்து கொலை செய்வது என முடிவு செய்தோம்.

    சம்பவத்தன்று இரவு நாங்கள் 5 பேரும் ஒன்றாக சேர்ந்து கஞ்சா குடித்தோம். போதை தலைக்கேறிய நிலையில் இருந்த நாங்கள் அரிவாளுடன் கவுன்சிலர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தோம். எங்களை பார்த்த கவுன்சிலரின் கணவர் ரவிக்குமார் சத்தம் போட்டார். அப்போது அவரை நாங்கள் வெட்டினோம். கணவரின் அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்த கவுன்சிலர் சித்ராவையும் வெட்டினோம். இதனை தடுக்க வந்த அவரது மகனையும் வெட்டி விட்டு தலைமறைவாக இருந்தோம். போலீசார் விசாரணை நடத்தி எங்களை கைது செய்து விட்டனர்.

    இவ்வாறு அவர்கள் அளித்த வாக்குமூலத்தில் கூறினார்.

    பின்னர் போலீசார் கைது செய்யப்பட்ட 5 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • பேரூராட்சி நிர்வாகம் முறையாக துப்புரவு பணிகளை செய்வ தில்லை என குற்றம் சாட்டினார்.
    • பொதுமக்கள் அந்த பகுதியில் உள்ள குப்பைகளை அப்புறப்படுத்தி வீதிகளை சுத்தம் செய்தனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் கவுன்சிலர்களாக உள்ளனர்.

    இந்த நிலையில் அ.தி.மு.க. கவுன்சிலர் வார்டு களில் துப்புரவு பணி செய்வதில் பாகுபாடு காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

    அந்தியூர் பேரூராட்சி 1-வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் சரஸ்வதி விஸ்வநாதன். அ.தி.மு.க. கவுன்சிலரான இவரது பகுதியில் அந்தியூர் பேரூராட்சி நிர்வாகம் முறையாக துப்புரவு பணிகளை செய்வ தில்லை என குற்றம் சாட்டினார்.

    இந்த நிலையில் அ.தி.மு.க. கவுன்சிலர் சரஸ்வதி விஸ்வநாதன் தலைமையில் 1-வது வார்டு பகுதியை சேர்ந்த பொது மக்கள் அந்த பகுதியில் உள்ள குப்பை களை அப்பு றப்படுத்தி வீதிகளை சுத்தம் செய்தனர்.

    • பெண் கவுன்சிலரின் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • கோமதி சோமரசம்பேட்டை போலீசில் புகார் செய்தார்.

    திருச்சி:

    திருச்சியை அடுத்த மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது புங்கனூர் ஊராட்சி. இங்குள்ள முருகன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அமிர்தராஜ். இவரது மனைவி கோமதி (வயது 33). கடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் புங்கனூர் ஊராட்சி மன்றத்தின் 2-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் அதே பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் (45) என்பவர் போட்டியிட்டு கோமதியிடம் தோற்றுப் போனார்.

    இதனால் கோமதியின் மீது அவருக்கு தீராத கோபம் இருந்து வந்தது. இந்த நிலையில் பால்ராஜ், அவரது மகன் மனோஜ் (25), சிவா என்கிற சிவகுமார் (50) ஆகிய மூன்று பேரும் சேர்ந்து அத்துமீறி அந்த பெண் கவுன்சிலரின் வீடு புகுந்து அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதை தட்டிக்கேட்ட தவமணி (40) என்ற பெண்ணையும் அந்த கும்பல் தாக்கிவிட்டு தப்பி ஓடினர். இதில் பெண் கவுன்சிலர் கோமதி மற்றும் தவமணி ஆகியோருக்கு கழுத்துப் பகுதியில் காயம் ஏற்பட்டது.

    இது குறித்து கோமதி சோமரசம்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் தோல்வி அடைந்த வேட்பாளர் பால்ராஜ், அவரது மகன் மனோஜ், சிவா என்கிற சிவகுமார் ஆகிய 3 பேர் மீதும் பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் சிவாவை கைது செய்தனர்.

    தந்தை மகன் இருவரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தேர்தலில் தோற்றுப் போன முன் விரோதத்தில் பெண் கவுன்சிலரின் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இளையான்குடி அருகே பெண் கவுன்சிலரின் பெயர் இல்லாததால் கல்வெட்டு உடைத்து நொறுக்கப்பட்டது.
    • சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியத்தில் சமையலறை கட்டிட திறப்பு விழா நடந்தது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம் விஜயன்குடி கிராமத்தில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் சமையலறைக் கட்டிட திறப்பு விழா நடந்தது. இதில் மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி பங்கேற்று சமையலறை கட்டிடத்தை திறந்து வைத்தார்.

    விழா தொடங்குவதற்கு முன்பு அந்த கட்டிடம் அமைந்துள்ள பகுதிக்கு வந்த அ.தி.மு.க. மாவட்ட கவுன்சிலர் மகேஸ்வரியின் கணவர் செல்வராஜ் விழா கல்வெட்டில் மனைவி பெயர் இல்லாததைக்கண்டு ஆத்திரம் அடைந்தார்.

    அதன் பின்னர் அவர் அந்த கல்வெட்டை உடைத்து நொறுக்கினார். இதுகுறித்து விஜயன்குடி ஊராட்சி மன்ற தலைவர் மாரி லோகராஜ் இளையான்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் செல்வராஜ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×