என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "woman doctor death"

    ஆலப்புழா அருகே கார் மீது பஸ் மோதிய விபத்தில் பெண் டாக்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்தவர் பிரசன்னகுமார். இவரது மகள் பார்வதி (வயது 25). அங்குள்ள ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றினார். இவரது நண்பர் நிதிஷ்பாபு (26). இருவரும் ஆலப்புழாவில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு காரில் சென்றனர்.

    திருமண நிகழ்ச்சி முடிந்ததும் அதே காரில் கோழிக்கோடு புறப்பட்டனர். கார் ஆலப்புழாவில் உள்ள பல்லாதுருத்தி என்ற இடத்தில் கார் வந்தது. அப்போது கோழிக்கோட்டில் இருந்து திருவனந்தபுரத்திற்கு திருமண கோஷ்டியுடன் பஸ் வந்தது. திடீரென கார் மீது பஸ் மோதியது. இதில் கார் நெறுங்கி தீ பிடித்தது.

    காரில் சிக்கிய டாக்டர் பார்வதியும் அவரது நண்பரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று 2 பேரையும் மீட்டனர். பின்னர் கார் முற்றிலும் எரிந்தது.

    மீட்கப்பட்ட டாக்டர் பார்வதி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட சிறிது நேரத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயத்துடன் நிதிஷ்பாபு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ஆலப்புழா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுவையில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் பல் டாக்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    புதுச்சேரி:

    லாஸ்பேட்டை குறிஞ்சி நகர் கற்பக விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் பழனிவேலு. இவர், புதுவையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணி புரிந்து வருகிறார்.

    இவரது மகள் நந்தினி தேவி (வயது 24). பல் டாக்டரான இவர் புதுவை புஸ்சி வீதியில் உள்ள தனியார் கிளினிக்கில் பணி புரிந்து வந்தார்.

    நேற்று மதியம் பணி முடிந்து டாக்டர் நந்தினி தேவி தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார்.

    ராஜீவ்காந்தி சிலை அருகே வந்த போது பின்னால் வந்த டிப்பர் லாரி எதிர்பாராத விதமாக நந்தினிதேவி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தடுமாறி விழுந்த நந்தினிதேவி உடல் மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியது.

    இதனை பார்த்ததும் லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடி விட்டார். உடல் நசுங்கிய நிலையில் நந்தினிதேவியை அங்கிருந்தவர்கள் மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே நந்தினிதேவி பரிதாபமாக இறந்து போனார்.

    இந்த விபத்து குறித்து புதுவை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வரதராஜன், சப்-இன்ஸ்பெக்டர் பிரபு ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மற்றொரு சம்பவம்...

    திருபுவனை இந்திரா நகரை சேர்ந்தவர் வினோ பாலன். இவரது மகன் அம்மா தென்னவன். (26). இவர் நெட்டப்பாக்கத்தில் உள்ள டி.வி.எஸ். கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

    நேற்று இரவு பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தார். திருபுவனை - விழுப்புரம் மெயின் ரோட்டில் வந்து கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த தனியார் பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில், தூக்கி வீசப்பட்ட அம்மா தென்னவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று பகல் 12 மணிக்கு அம்மா தென்னவன் பரிதாபமாக இறந்து போனார்.

    இந்த விபத்து குறித்து வில்லியனூர் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருப்பதி அருகே பெண் டாக்டர் மர்ம மரணம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    திருப்பதி அருகே உள்ள பீலேர் ஜாக்குதி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ரூபேஷ். இவரது மனைவி ஷில்பா (வயது 44) டாக்டர். நேற்று வீட்டில் உள்ள அறையில் ஷில்பா தூக்கில் பிணமாக தொங்கினார்.

    இது குறித்து தகவலறிந்த பீலேர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஷில்பா உடலை மீட்டு திருப்பதி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஷில்பா திருப்பதியில் உள்ள வெங்கடேஷ்வரா மருத்துவ கல்லூரியில் மருத்துவம் மேல் படிப்பு (எம்.டி.) படித்து வந்தார். கடந்த ஏப்ரல் மாதம் மருத்துவ கல்லூரியில் உள்ள சீனியர் டாக்டர் மிரட்டுவதாக கவர்னர், முதல்-அமைச்சர் தனி பிரிவுக்கு இணையதளம் மூலம் புகார் அளித்தார்.

    இந்த நிலையில் ஷில்பா தூக்கில் பிணமாக தொங்கியது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    அவர் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு காரணமா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ×