என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Woman kills"
இரணியல் அருகே உள்ள கண்டன்விளை பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப் கிங் (வயது 50). டாஸ்மாக் கடையில் கண்காணிப்பாளராக பணியாற்றுகிறார்.
இவரது மனைவி எஸ்தர் கிங் (46). இவர் வீட்டில் இருந்தபடியே அழகு கலை நிபுணராக பணியாற்றி வந்தார்.
எஸ்தர் கிங் கடந்த ஒரு வாரமாக காய்ச்சலால் அவதிப்பட்டார். அவரை நாகர்கோவிலில் தனியார் ஆஸ்பத்திரியில் அனு மதித்தனர். அங்கு அவரது ரத்தம் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவரை பன்றிக்காய்ச்சல் தாக்கியிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து நேற்று எஸ்தர் கிங்கை உறவினர்கள் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு அவர் இறந்தார்.
ஏற்கனவே குமரி மாவட்டத்தில் பன்றிகாய்ச்சலுக்கு நாகர்கோவிலைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியர் தெரசா, தக்கலை பருத்தி விளையைச் சேர்ந்த 7 மாத கர்ப்பிணி சுகன்யா, தெங்கம் புதூரைச் சேர்ந்த வக்கீல் ரவீச்சந்திரன், தக்கலை திருவிதாங்கோடு புதுப்பள்ளி பகுதியைச் சேர்ந்த சக்ரியா உள்ளிட்டோர் பலியாகி இருந்தனர்.
இந்தநிலையில் கண்டன் விளையைச் சேர்ந்த எஸ்தர் கிங் பலியானதால் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள சிறப்பு வார்டில் பன்றிகாய்ச்சலால் பாதிக்கப்பட்ட 12 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். பெண்கள் 5 பேரும், குழந்தைகள் 5 பேரும் என மொத்தம் 12 பேர் சிகிச்சை பெறுகிறார்கள். அவர்களில் சிலர் குணம் அடைந்து இன்று வீடு திரும்ப உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதேபோல தனியார் ஆஸ்பத்திரிகளிலும் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெறுகிறார்கள். இதேபோல மாவட்டம் முழுவதும் ஒருவிதமான வைரஸ் காய்ச்சலும் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சல் 3 நாட்களுக்குள் குணம் அடைந்தாலும் உடல் வலி, சோர்வு 10 நாட்களுக்கும் மேலாக நீடிப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். #swineflu
திருப்பூர் அருகே உள்ள கரைப்புதூரை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது மனைவி சரஸ்வதி (45). இவர்கள் திருப்பூருக்கு துணி எடுக்க வந்தனர்.பின்னர் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி கொண்டு இருந்தனர். திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனை கடந்து கணவன்- மனைவி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது திருப்பூரில் இருந்து கோவை வந்த அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சரஸ்வதியின் கால் பஸ் சக்கரத்தில் சிக்கி நசுங்கியது. அவர் ரத்த வெள்ளத்தில் அலறி துடித்தார்.
இதனை பார்த்ததும் அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் சரஸ்வதியை மீட்டனர். இது குறித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் வர தாமதம் ஆனது. விபத்து நடந்த இடத்தின் அருகே தனியார் மருத்துவமனை உள்ளது. உடனே பொதுமக்கள் அந்த ஆஸ்பத்திரிக்கு சென்று அங்குள்ள டாக்டர், நர்சுகளை அழைத்து காயம் அடைந்த சரஸ்வதிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கும்படி கேட்டனர்.
ஆனால் ஆஸ்பத்திரி நிர்வாகம் சிகிச்சை அளிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. ஆஸ்பத்திரியில் ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டு இருந்தது. அதனை அனுப்பும் படி பொதுமக்கள் கேட்டனர்.
அதனையும் ஆஸ்பத்திரி நிர்வாகம் அனுப்ப மறுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் தனியார் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர்.
அதன் பின்னர் ஆஸ்பத்திரி நிர்வாகம் ஆம்புலன்ஸ் அனுப்பி வைத்தது. இதற்கிடையே 108 ஆம்புலன்ஸ் அங்கு வந்து சேர்ந்தது. அதில் சரஸ்வதியை ஏற்றி திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வரும் வழியிலே சரஸ்வதி பரிதாபமாக இறந்தார்.
விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
அரியாங்குப்பம்:
புதுவை அரியாங்குப்பம் ஆர்.கே. நகர் வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் முருகன் கட்டிட தொழிலாளி. இவரது மனைவி விமலா (வயது 44). கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் எலி தொல்லை இருந்ததால் எலிகளை கொல்ல முருகன் எலி கேக் வாங்கி வந்து வீட்டில் வைத்திருந்தார்.
சம்பவத்தன்று இதனை அறியாத விமலா பிஸ்கெட் என நினைத்து எலி கேக்கை தின்று விட்டார். இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு விமலா பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்த புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை கொங்கர் குளத்தைச் சேர்ந்த கருப்பையா மனைவி பாப்பாத்தி (வயது 45). இவர் கட்டிட வேலை பார்த்து வந்தார். நேற்று நிலக்கோட்டை பெரியார் காலனியைச் சேர்ந்த கணேசன் என்பவரது வீட்டில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தார். தரை தளத்தில் இருந்து மாடிக்கு சிமெண்ட் மூடைகளை ஏற்றிக் கொண்டு இருந்தபோது கால் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த பாப்பாத்தி நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து அவரது மகன் வைரம் கொடுத்த புகாரின் பேரில் நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கருப்பசாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மூடக் கோரி நடந்த முற்றுகைப் போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து, 25.5.2018 அன்று உடன்குடியிலிருந்து திருநெல்வேலி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து கருங்குளம் கிராமம் அருகே சில சமூக விரோதிகளால் தீ வைத்து எரிக்கப்பட்டதில், பேருந்தில் பயணம் செய்த, மெஞ்ஞானபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுடலை மனைவி வள்ளியம்மாள் தீக்காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 31.5.2018 அன்று உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த வள்ளியம்மாள் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள சுக்காம்பட்டியை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவர், போலீஸ்காரராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். மோகன்ராஜ் சுக்காம்பட்டியில் தனக்கு சொந்தமான தென்னந்தோப்பில் பட்டாசு தொழிற்சாலை நடத்தி வருகிறார்.
இந்த ஆலையில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 5 பேர் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் சுக்காம்பட்டியில் தங்கியுள்ளனர். இவர்களில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சத்திரப்பட்டியை சேர்ந்த மாரிமுத்து மனைவி பொன்னுத்தாய் (வயது 52) என்பவரும் ஒருவர்.
இவர் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டுக்கு செல்லும் போது தனது செல்போனை தொழிற்சாலையிலேயே மறந்து வைத்துவிட்டு சென்று விட்டார். அதை எடுப்பதற்காக பொன்னுத்தாய் நேற்று ஆலைக்கு வந்தார். நேற்று விடுமுறை தினம் என்பதால் ஆலைக்கு வேறுயாரும் வேலைக்கு வரவில்லை.
பொன்னுத்தாய், தான் வேலை பார்த்த இடத்துக்கு சென்று அறைக்கதவை திறந்த போது எதிர்பாராதவிதமாக அங்கிருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதில் அறை முழுவதும் தீப்பற்றி எரிந்ததுடன், சிறிது நேரத்தில் கட்டிடமும் இடிந்து தரைமட்டமானது. இதில் சிக்கிக்கொண்ட பொன்னுத்தாய், சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.
வெடிவிபத்தை பார்த்து அக்கம் பக்கத்தினர் வேடசந்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆவடி, கவரபாளையம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ். மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி தேவி (வயது 35). இவர்கள் உறவினர்களுடன் வெள்ளவேடை அடுத்த கொப்பூரில் உள்ள மாந்தோப்புக்கு மாம்பழம் வாங்க அரண்வாயல் வழியாக வந்தனர்.
அப்போது செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் கிருஷ்ணா கால்வாயில் குளித்தனர். இதில் தேவி நிலைதடுமாறி பள்ளத்தில் விழுந்தார். அவரை உறவினர் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. தீயணைப்பு துறை வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராட்டத்துக்கு பின்னர் தேவி உடலை மீட்டனர்.
இதுகுறித்து செவ்வாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்