என் மலர்
நீங்கள் தேடியது "woman threat"
தேனி:
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள டி.சிந்தலைச்சேரி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ஜான்பால் பிரபு (வயது 33). இவருக்கும் சகாய ஜான்சிராணி (31) என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகனும் 3 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
சகாய ஜான்சிராணி சிலமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணி புரிந்து வருகிறார். கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதனால் சகாய ஜான்சிராணி தனது 2 குழந்தைகளுடன் கடந்த 10 மாதமாக தனியாக வசித்து வருகிறார்.
சகாய ஜான்சிராணி சின்னமனூரில் தனியாக கிளினிக் நடத்தி வருகிறார். கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு விண்ணப்பம் செய்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த ஜான்பால் பிரபு சம்பவத்தன்று தனது மனைவியிடம் வந்து விவாகரத்து வழக்கை வாபஸ் பெறும்படி மிரட்டினார்.
அவர் மறுக்கவே வழக்கை வாபஸ் பெறாவிட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டி சென்றார். இது குறித்து சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜான்பால் பிரபுவை கைது செய்தனர்.
கூடலூர்:
தேனி மாவட்டம் கூடலூர் மந்தையம்மன் கோவில் தெருவைச்சேர்ந்த லெனின் மனைவி பிரியா(வயது28). இவருக்கு கூடலூரைச் சேர்ந்த முத்தையா மனைவி லதா, பாண்டியன் மனைவி சரண்யா, ராஜா மனைவிபோதுமணி, பரமன் மனைவி சிங்காரம் உட்பட 15 பெண்கள் மற்றும் சேகர், ஜெயக்குமார் ஆகியோர் ரூ. 10 லட்சம் வரை வட்டிக்கு கொடுத்தனர்.
பின்னர்அதிக வட்டி கேட்டு பிரச்சினை செய்துள்ளனர். மேலும் பிரியாவின் வீட்டிற்குள் அத்துமீறி சென்று கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பிரியா கடந்த சிலநாட்களுக்கு முன் தேனி போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் புகார் கொடுத்தார். அவரது உத்தரவின் பேரில் கூடலூர் வடக்கு சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் அதிக வட்டி கேட்டு பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த 17 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.