search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "women clothing"

    பெண்கள் அணிவும் பிரா வெறும் அழகு சார்ந்த விஷயத்துக்கானது மட்டுமல்ல. ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனையும் அதில் அடங்கியிருக்கிறது.
    பெண்களின் ஆடைகளில், குறிப்பாக உள்ளாடைகளில் பிரா மிக அத்தியாவசியமான ஒன்று. பிரா தான் பெண்களின் உடலை நல்ல வடிவமைப்புடனும் கவர்ச்சியாகவும் காட்டக்கூடியது. அந்த பிராக்கள் எப்போது தங்களுடைய பொலிவை இழக்கிறதோ அப்போது பெண்களின் உடல் அழகையும் பொலிவிழக்கச் செய்யும்.

    பிராக்களைப் பார்த்துப் பார்த்து அழகாக வாங்கினால் மட்டுமே போதாது. அதை சரியான முறையில் பராமரிக்க வேண்டும். சிலருக்கு தங்களுடைய பிராக்களை எப்போது தூக்கி எறிந்துவிட்டு, புதியதை மாற்ற வேண்டுமெனத் தெரியாது. சிலர் தங்களுடைய மனதுக்கு மிகவும் நெருக்கமான உள்ளாடை இருப்பின் அதை அவ்வளவு எளிதாக மாற்றிவிட மனது வராது. ஆனால் அது முற்றிலும் தவறான பழக்கம். அடுத்து புதிதாக வாங்கும் ஏதேனும் ஒன்றை நம்முடைய மனதுக்குப் பிடித்த ஒன்றாக மாற்றிக் கொள்ள வேண்டியது தான்.

    பிராக்கள் விஷயத்தில் நீங்கள் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் தெரியுமா? அவை வெறும் அழகு சார்ந்த விஷயத்துக்கானது மட்டுமல்ல. ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்னையும் அதில் அடங்கியிருக்கிறது.



    நாம் அஜாக்கிரதையாக இருந்தால் மார்பகப் புற்றுநோய் உள்ளிட்ட பல ஆரோக்கிய பிரச்னைகளையும் சந்திக்க வேண்டியிருக்கும்.

    நீங்கள் பிறந்த நாள் கொண்டாடுவது போல, நிச்சயம் 6 மாதங்களுக்கு ஒருமுறையாவது உங்கள் பழைய பிராக்களைத் தூக்கியெறிந்துவிட்டு புதிய பிராக்களை வாங்குங்கள்.

    மெட்டல் ஹூக் உள்ள பிராக்களை 6 மாதங்களுக்கு மேல் பயன்படுத்தினால், அது சருமத்தில் உராய்ந்து அரிப்பு போன்றவற்றை உண்டாக்கும்.

    ஃபிட்டான பிராக்களை அணிவது மிக முக்கியம். அது உங்கள் வடிவழகை கூட்டும். தளர்வான, ஃபிட் இல்லாத பிராக்கள் உங்கள் உடல் வடிவைக் கெடுப்பதுடன் மார்புகளை மிக அதிகமாகத் தளர்வாக்கிவிடும்.



    நன்கு கூர்ந்து கவனிப்பவர்களுக்குத் தெரியும், நிச்சயம் உங்களின் பிராக்களின் கப் சைஸ் ஒரு வருடத்துக்கு ஆறு முறையாவது மாற்றமடையும். அதனால் குறைந்தது 3 மாதங்களுக்கு ஒருமுறையாவது உங்களுடைய மார்பளவை அளவெடுத்து, அதற்கேற்றாற் போல் பிராக்களை அணிந்திடுங்கள்.

    அளவுக்கு அதிகமாக இறுக்கமுடைய பிராக்களை அணிவதும் தவறு தான். அதனால்  வியர்வை வெளியேற முடியாமல் போகும். அது பாக்டீரியா தொற்றுக்களை உண்டாக்கிவிடும்.

    பிராக்களின் தோள் பட்டையில் உள்ள ஸ்ட்ரிப் லேசாக தளர்ந்தாலும் உங்களுடைய அளவில் மாற்றம் உண்டாகும். மார்பகம் தளர்ந்து போகும். அதனால் ஸ்ட்ரிப் தளர ஆரம்பிப்பது உங்களுடைய பிராக்களை நீங்கள் உடனடியாக மாற்ற வேண்டியதற்கான அறிகுறிகளில் ஒன்று.

    சேலைக்கு உலைவைக்கும் இளையதலைமுறை மாற வேண்டும். இல்லாவிட்டால் தமிழ் இனப்பெண்களின் அடையாளமான சேலை காட்சிப்பொருளாகிப் போகும்.
    சேலை என்றாலே அதை நூலால் நெய்யப்பட்ட காந்தம் எனலாம். சேலைகள் பெண்களை மட்டுமல்ல ஆண்களையும் பெரிதும் கவர்கின்றது.

    என்ன தான் மெடி, சுடிதார், ஜீன்ஸ் என ஆயிரம் உடைகள் வந்தாலும், சேலை கட்டி வீதியில் உலாவரும் பெண்கள் வெளிப்படுத்தும் அழகே அழகுதான்.

    அதனால் தான் கவியரசு வைரமுத்து ‘சேலைச் சோலையே...’ என்று பாடி சேலையை சோலைக்கு ஒப்புமைப்படுத்தி மகிழ்கிறார். இன்னொரு கவிஞர்கூட, காஞ்சிப் பட்டு உடுத்திக் கஸ்தூரிப் பொட்டுவைத்து நேரில் தோன்றும் பெண்ணொருத்தி தேவதைபோல் தோற்றமளிப்பதாகப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.

    அன்றாடம் சேலையின் பெருமைகள் நமது செவிகளில் தேன் பாய்ச்சி கொண்டுதானே இருக்கிறது. அப்பேர்ப்பட்ட பெருமை பெற்ற சேலைகளுக்கு, அவை தோன்றி வளர்ந்து முழுமை பெற்றதற்கும் ஒரு வரலாறு உண்டு. அதைத் தெரிந்துகொள்ள நமக்கெல்லாம் ஆவல் பிறக்கிறதல்லவா?

    சேலை, சீலை, சீரை இந்த மூன்று சொற்களுமே பண்டைக்காலத்தில் துணி என்ற பொதுவான பொருளையே குறிப்பதாக விளங்கின. இப்போதுதான் அவை பெண்கள் தங்கள் இடையில் தொடங்கி உடல் முழுவதும் சுற்றிக்கொள்ளும், ஆடை வகையாகக் கருதப்படுகிறது.

    இந்தியப் பெண்கள் பின்பற்றும் சேலை அலங்காரம் உலகத்தில் உள்ள அனைத்துப் பெண்ணுடைகளிலும் தலைசிறந்ததாகப் புகழப்படுகின்றது.

    இந்தியாவில் பெண்கள், சேலை உடுத்திக்கொள்வது எப்போது தோன்றியது என்பதற்குச் சரியான ஆதாரங்கள் இல்லை. ஆனால் ஆதியில் பெண்கள் தங்கள் இடையில் சொருகிக் கொண்ட சிறுதுணி வளர்ச்சியடைந்து சேலையாக மாறி இருக்காலாம் என்று நம்பப்படுகிறது. ஆனால் பெண்கள் தற்போது அணியும் கண்ணைக் கவரும் சேலை முறை ஆரிய மக்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன்னரே தோன்றியது என்பதை மட்டும் நிச்சயமாகச் சொல்லலாம்.

    பண்டைக்காலத்தில் நாகரிக வளர்ச்சி பெற்றிருந்த நாடுகளான சுமேரியா, அசிரியா, எகிப்து பகுதிகளில் (ஏறக்குறைய கி.மு. 3500-ம் ஆண்டு) பயன்படுத்தியிருக்கலாம் எனக் கணிக்கப்படுகிற ஒரு சேலை கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. அது இந்தியச் சேலை வகையைப் போலவே தோற்றமளிக்கிறதாம்.

    ஆதியில் பெண்கள், இடையை மறைக்க ஒரு துணியையும், மார்பை மறைக்க தாவணி போன்றதொரு துணியையும் பயன்படுத்தியிருக்கலாம். முந்தானை அணியும் முறை வேதகாலத்திலேயே உண்டாகியிருக்கலாம். தார்போட்டுக்கட்டும் பழக்கம் மத்திய இந்தியாவில் தோன்றி தென்னாட்டுக்குப் பரவியதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.



    டாக்டர் குரியே என்பவர் சேலையின் வளர்ச்சிக் காலத்தை மூன்று பிரிவாகப்பிரிக்கிறார். ஆதிகாலம் முதல் கி.மு. 320 வரை முதல் பிரிவு. இக்காலத்தின் இறுதியில் தோன்றிய சிற்பங்களும் இலக்கியங்களும் தார்போட்டுக்கட்டும் முறை, தார் போடாமல் கட்டும் முறை, சேலை ரவிக்கை அணியும் முறை ஆகிய மூன்று வகைகளில், பெண்கள் சேலையை உடுத்தி வந்ததாகச் சுட்டிக்காட்டுகின்றன.

    இரண்டாவது காலம் கி.மு. 320-ல் இருந்து கி.பி. 320 வரை. இக்காலத்தில்தான் முன்கொசுவம் வைத்துக் கட்டும்முறை, குடகு முறை பாவாடை-தாவணி அணியும் முறை ஆகியவை தோன்றியதாம்.

    மூன்றாவது பிரிவு கி.பி. 320-ல் இருந்து 1100 வரை உள்ள காலத்தை உள்ளடக்கியது. நிலப்பகுதியின் சூழ்நிலைக்கும், தட்ப வெப்பநிலைக்கும் ஏற்றாற்போல் சேலை அணியும் முறையில் பல மாறுதல்கள் தோன்றியது இக்காலத்தில் தான்.

    ராஜசேகரர் என்பவர் 10-ம் நூற்றாண்டில் இருந்து சேலை கட்டும் முறையை நான்கு வகைகளாகப் பிரித்திருக்கின்றார். ஒன்று, முன் கொசுவம் வைத்து, இடையில் உடுத்தி முந்தானையை இடத்தோளில் போட்டுக் கொள்ளுதல். இவற்றில் வங்காளம், குஜராத் பகுதிகளில் முந்தானை இடும் முறை மாறுபடுகின்றது.

    இரண்டாவதாக, தார் போட்டுக் கட்டும் முறை. இம்முறை மராட்டியத்திலும், மத்திய இந்தியாவிலும் அதிகமாக் காணப்படுகிறது. மூன்றாவது, பாவாடை, தாவணி அணியும் முறை. இதில் சேலையின் அளவு குறைந்தும், பாவாடை பெரியதாகவும் காணப்படும். அடுத்தது, ஆதிவாசிகளும், மலைவாழ் மக்களும் உடுத்தும் அகலம் குறைந்த சேலை முறை.

    இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும், ராஜசேகரர் கூறிய நான்கு முறைப்படிதான் சேலை கட்டும் முறை தற்போது நடைமுறையில் உள்ளது. ஆனால் எல்லா இடங்களிலும் தற்போது பெண்கள் ஒரே மாதிரி சேலை உடுத்துவதற்கு முயற்சித்து வருகின்றனர். தார்போட்டுக் கட்டும் பழைய முறைகள் முற்றிலும் இந்தியாவில் அழிந்துவிடவில்லை. ஆனால் முன் கொசுவம் வைத்துக் கட்டும் முறையையே இளம்பெண்கள் பெரிதும் விரும்புகின்றனர்.

    இறுதியாக புதுமைகள் விரும்பும் தமிழ் பெண்களுக்கு ஒரு செய்தி. சேலை என்பது நீங்கள் உடம்பில் சுற்றிக்கொள்ள உபயோகப்படுத்தும் ஆடைவகை மட்டுமல்ல. அது நமது பாரம்பரியம். அது நமது கலாசாரம். அது உங்களைத் தமிழ் இனப் பெண்கள் என்று உலகமே அறிந்து புரிந்து கொள்ளப் பயன்படும் அடையாளமும்கூட.

    தற்காலத்தில் பல்வேறு காரணங்களுக்காக அன்னிய முறை ஆடைகளையே பெரிதும் விரும்பி அணிகிறார்கள். புதுமைகளை வரவேற்க வேண்டியதுதான்.

    ஆனால், அவை நம் அடையாளங்களையே அழித்து ஒழித்துவிடக்கூடிய அளவுக்கு ஆதரவு கரம் நீட்டலாமா? சேலைக்கு உலைவைக்கும் இளையதலைமுறை மாற வேண்டும். இல்லாவிட்டால் தமிழ் இனப்பெண்களின் அடையாளமான சேலை காட்சிப்பொருளாகிப் போகும்.

    எழுத்தாளர் எல்.பிரைட்
    ×