search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Women Guard"

    • இந்த விவகாரம் குறித்து அடுத்தடுத்து தனது எக்ஸ் பக்கத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார் கங்கனா ரனாவத்
    • 'கத்தியால் குத்துவது மற்றும் வன்புணர்வு செய்வதும் ஒருவரை அடிப்பது போல் பெரிய விஷயம் இல்லை என்று ஆகிறது'

    சண்டிகர் விமான நிலையத்தில் வைத்து எம்.பி.யும் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தை குல்விந்தர் கவுர் என்ற மத்திய தொழிற்பாதுகாப்புப்படை பெண் காவலர் கன்னத்தில் அறைந்த விவகாரம் பூதாகரமாக மாறியுள்ளது.

    மத்திய பாஜக அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய அனைத்து விவசாயிகளும் தனி நாடு கோரும் காலிஸ்தான் தீவிரவாதிகள் என்று கங்கனா பேசி வருகிறார். இதன் காரணமாகவே பெண் காவலர் கங்கானாவை கன்னத்தில் அறைந்ததாக தெரிகிறது. இதனைத்தொடர்ந்து குல்விந்தர் கவுர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அவர் எம்.பியாக இருக்கும் ஒருவரை தாக்கியதற்காக கைது நேற்று கைது செய்யப்பட்டார்.

    குல்விந்தர் கவுருக்கு ஆதர்வாக விவசாய சங்கங்களின் ஆதரவு பெருகி வரும் நிலையில் இந்த விவகாரம் குறித்து அடுத்தடுத்து தனது எக்ஸ் பக்கத்தில் கருத்துக்களை பதிவிட்டு வரும் கங்கனா ரனாவத் தற்போது வெளியிட்டுள்ள பதிவில், திருட்டு, கொலை, கற்பழிப்பு ஆகியவற்றில் ஈடுபடுபவர்களுக்கும் கூட அதில் ஈடுபடுவதற்கு உடல்க ரீதியாக மன ரீதியாக பல காரணங்கள் உள்ளன.யாரும் காரணம் இல்லாமல் குற்றத்தில் ஈடுபடுவதில்லை.

    காரணம் இருப்பதால் அவர்கள் குற்றம் செய்தார்கள் என்பதற்காக அவர்களை அப்படியே விட்டு விடுவதில்லை. அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர். சட்டத்தை கையில் எடுத்து ஒருவரை தாக்குபவருக்கு நீங்கள் ஆதரவு வழங்குவீர்களாயின் நீங்கள் கொலை மற்றும் கற்பழிப்புக்கு ஆதரவு வழங்குபவராக கருதப்படுவார்கள்.

    ஏனெனில் கத்தியால் குத்துவது மற்றும் வன்புணர்வு செய்வதும் ஒருவரை அடிப்பது போல் பெரிய விஷயம் இல்லை என்று ஆகிறது. எனவே உங்களின் மனசாட்சியை ஆழமாக ஆராய்ந்து பாருங்கள் என்று தெரிவித்துள்ளார். 

    ×