search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Womens College"

    • பொம்மையார் பாளையம் ராஜேஸ்வரி மகளிர் கல்லுரி ஊட்டச்சத்து விழிப்புணர்வு விழாவை நடத்தியது.
    • இவ்விழாவில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெகதீஸ்வரி வரவேற்புரையாற்றினார்.

    புதுச்சேரி:

    பொம்மையார் பாளையம் ராஜேஸ்வரி மகளிர் கல்லுரியும், வானூர் வட்டம் குழந்தை வளர்ச்சி திட்ட துறையும் இணைந்து கல்லூரி வளாகத்தில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு விழாவை நடத்தியது.

    கல்லூரி செயலர் சிவகுமார் வாழ்த்துடன் நடைபெற்ற இவ்விழாவில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெகதீஸ்வரி வரவேற்புரையாற்றினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட அலுவலர் அன்பழகி, கல்லுரி முதல்வர் கண்ணன், மாவட்ட சமூக நல அலுவலர் ராஜம்மாள், மாவட்ட விரிவாக்க அலுவலர் புவனேஸ்வரி, சித்தா ஆராய்ச்சி மையத்தின் துணை இயக்குநர் டாக்டர்.சண்முகம், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.ஜெயபிரகாஷ், தோட்டக்கலை துணை இயக்குநர் வித்யா, வானூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் உஷாமுரளி, ஊராட்சி ஒன்றிய துணைபெருந்தலைவர் பருவகீர்த்தனா, மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    இந்நிகழ்ச்சியில் ஊட்டச்சத்து மிகுந்த உணவு பொருட்கள் கண்காட்சி வைக்கப்பட்டது. ஊட்டச்சத்து குறித்த செய்திகள் அடங்கிய பதாகைகளும் வைக்கப்பட்டன. கல்லூரி மாணவிகள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    • தூத்துக்குடி மண்ணைச் சார்ந்த மகாகவி பாரதியாரின் கனவை நனவாக்கும் எண்ணமாக இந்த கல்லூரி தொடங்க ப்பட்டது என்று கீதாஜீவன் கூறினார்.
    • பின்னர் தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த முன்னாள் மாணவிகள் தங்களது குடும்பத்துடன் பங்கேற்று தங்கள் மலரும் நினைவுகளை வெளி ப்படுத்தினர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி- எட்டை யாபுரம் சாலையில் அமைந்துள்ள ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரி பொன்விழா ஆண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் கல்லூரியின் முன்னாள் முதல்வர்கள், பேராசிரி யர்கள், மாணவர்கள், கல்லூரி ஊழியர்கள் ஆகியோர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    அமைச்சர் கீதாஜீவன்

    கல்லூரி தாளாளர் ஏ.பி.சி.வீ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் சுப்பு லட்சுமி வரவேற்றர். இந்த கல்லூரியில் படித்த வடக்கு மாவட்ட தி.மு.க. செயலா ளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரு மான கீதாஜீவன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, கல்லூரியில் பயின்ற மறக்க முடியாத நினைவுகளை பகிர்ந்து கொண்டு பேசியதாவது:-

    ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லுரியின் 50-வது பொன்விழா கொண் டாடப்பட்டு வருகிறது. இதில் 1973-ம் ஆண்டில் படித்த மாணவிகள் முதல் கடந்த முறை பயின்ற மாணவிகள் வரை வந்து ள்ளீர்கள். ஏ.பி.சி.வீரபாகு மிகச்சிர மங்களுக்கு இடை யில் இந்த கல்லூரியை தொடங்கி தற்போது வளர்ச்சி பெற்ற கல்லூரி யாக அரசு அதிகாரிகள் மற்றும் உயர் பதவிகள் ஆன்றோர்கள், சான்றோ ர்களை உருவாக்கி உள்ளது. தூத்துக்குடி மண்ணைச் சார்ந்த மகாகவி பாரதி யாரின் கனவை நனவாக்கும் எண்ணமாக இந்த கல்லூரி தொடங்க ப்பட்டது. தற்போது அந்த கனவு மெய்ப்பிக்கப்பட்டு இருக்கிறது.

    கல்விப் பணி

    நான் 12-ம் வகுப்பு வரை தமிழ்வழி கல்வி தான் படித்தேன். இங்கு வந்து சேர்ந்த பின்பு எப்படி படிக்க போகிறோம் என்று ஒருவாரமாக பல்வேறு சிந்தனைகள் இருந்தது உண்டு. பல ஆசிரியர்கள் எங்களை கண்டிப்புடன் வழி நடத்தினார்கள். இந்த பெண்கள் கல்லூரியில் படிக்கும் காலத்தில் தொழில் செய்ய வேண்டும். அல்லது தொழிலதிபராக இருக்க வேண்டும். என்ற எண்ணத்தில் இருந்த எனக்கு இன்று அரசியலில் பணியாற்றி வருகிறேன். இந்த மகளிர் கல்லூரியில் படித்ததால் தான் நான் இன்று சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சராக இருக்கிறேன். இன்றும் சிறந்த கல்லூரி களின் வரிசையில் இக்கல்லூரியும் உள்ளது. இக்கல்லூரியின் கல்விப் பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் தமிழகம் முழுவதும் இருந்து வந்தி ருந்த முன்னாள் மாணவிகள் தங்களது குடும்பத்துடன் பங்கேற்று தங்கள் மலரும் நினைவு களை வெளி ப்படுத்தினர். தொடர்ந்து அவர்கள் தாங்கள் பயின்ற வகுப்பறை, வளாகம் ஆகிய இடங்களுக்குச் சென்று குழுவாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து முன்னாள் மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் முன்னாள் கல்லூரி முதல்வர்கள், பேராசிரி யர்கள் கவுரவிக்க ப்பட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி கணிதத்துறைத் தலைவர் பழனி, உதவி பேராசிரியர் ராதா, வேதியல் துறைத் தலைவர் கோகிலா சுபத்ரா, தமிழ்த்துறை உதவி பேராசி ரியர் நீதா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    • புதிய கல்லூரி அவினாசி- மங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் வஞ்சிபாளையத்தில் தொடங்கப்பட்டுள்ளது
    • இக்கல்லூரியின் சிறப்பம்சங்களாக நன்கொடை இல்லாமல் மாணவிகள் சேர்க்கை நடைபெறுகிறது

    திருப்பூர்:

    திருப்பூர் கொங்கு வேளாளர் அறக்கட்டளை சார்பில் தீரன் சின்னமலை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி என்ற புதிய கல்லூரி அவினாசி- மங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் வஞ்சிபாளையத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டிற்கான மாணவிகள் சேர்க்கை தொடங்கி உள்ளது.

    இதில் பி.காம், பி.காம்(சி.ஏ.), பி.பி.ஏ., பி.எஸ்சி. (சி.டி.எப்) பி.எஸ்சி. சி.எஸ். (ஏ.ஐ.) உள்ளிட்ட பாடப்பிரிவுகள் கல்லூரியில் இடம் பெற்றுள்ளன.

    இந்த நிலையில் கல்லூரியில் சிறப்பு கணபதி ஹோமம் பூஜை திருப்பூர் கொங்கு வேளாளர் அறக்கட்டளை தலைவர் பெஸ்ட் எஸ்.ராமசாமி தலைமையில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் அறக்கட்டளை செயலாளர் கீதாஞ்சலி எஸ்.கோவிந்தப்பன், பொருளாளர் ஓ.கே.எம்.கந்தசாமி, துணைத்தலைவர்கள் டிக்சன் ஆர்.குப்புசாமி, பி.வி.எஸ். பி.முருகசாமி, இணைச் செயலாளர் என்.டி.எம். என்.துரைசாமி, கல்லூரி முதல்வர் ரேச்சல் நான்சி பிலிப் உள்பட அறக்கட்டளை உறுப்பினர்கள், தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள், கல்லூரி பேராசிரியர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    இக்கல்லூரியின் சிறப்பம்சங்களாக நன்கொடை இல்லாமல் மாணவிகள் சேர்க்கை நடைபெறுகிறது. மேலும் இக்கல்லூரி முதல்வர் 20 ஆண்டுகள் கல்வித்துறையில் அனுபவம் வாய்ந்தவர். அனுபவமிக்க பேராசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். கல்லூரி முற்றிலும் இயற்கையான சூழலில் அமைந்துள்ளது. கலை, இலக்கியம், விளையாட்டு ஆகியவற்றில் ஊக்குவிக்கப்படுகிறது. அனைத்து பகுதிகளுக்கும் பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    100 சதவீதம் வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.  

    • கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்த போட்டி நடத்தப்படவில்லை.
    • கைப்பந்து, கூடைப்பந்து, செஸ், பேட்மின்டன், பால் பேட்மின்டன் (பூப்பந்து), டேபிள் டென்னிஸ் ஆகிய 6 விளையாட்டுகள் நடத்தப்படுகிறது.

    சென்னை:

    சென்னை நுங்கம் பாக்கத்தில் உள்ள எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரி சார்பில் மகளிர் கல்லூரிகள் இடையேயான வாஸ்போ விளையாட்டு போட்டி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்த போட்டி நடத்தப்படவில்லை.

    இந்த ஆண்டுக்கான மகளிர் கல்லூரிகள் இடையேயான வாஸ்போ வினளயாட்டு போட்டிகள் வருகிற 16 மற்றும் 17-ந் தேதிகளில் அரும்பாக்கத்தில் உள்ள டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் அணிகளுக்கு நுழைவு கட்டணம் எதுவும் கிடையாது.

    கைப்பந்து, கூடைப்பந்து, செஸ், பேட்மின்டன், பால் பேட்மின்டன் (பூப்பந்து), டேபிள் டென்னிஸ் ஆகிய 6 விளையாட்டுகள் நடத்தப்படுகிறது.

    கைப்பந்து, கூடைப்பந்து போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு முறையே ரூ.15 ஆயிரம் , ரூ.10 ஆயிரம், ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். பால் பேட்மின்டன் போட்டிக்கு முறையே ரூ.10,000, ரூ.7,000, 5000 கிடைக்கும். செஸ், டேபிள் டென்னிஸ், பேட்மின்டன் ஆகிய விளையாட்டுகளில் முதல் 3 இடங்களுக்கு ரூ. 5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.2ஆயிரம் வழங்கப்படும்.

    இந்த போட்டியில் பங்கேற்க விருப்பம் உள்ள கல்லூரிகள் வருகிற 10-ந்தேதிக்குள் 9840737407 என்ற செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொள்ள வேண்டும் என்று எம்.ஓ.பி. வைஷ்ணவா மகளிர் கல்லூரி உயர்கல்வி இயக்குனர் அமுதா சுமன் தெரிவித்துள்ளார்.

    • இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவிகள் கல்லூரி உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.
    • இணையதள முகவரியில் ஜூலை 7-ந்தேதி வரை பதிவு செய்யலாம்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலைப் பட்டப்படிப்புக்களான தமிழ், ஆங்கிலம், கணினி அறிவியல், கணிதவியல், வணிக நிர்வாகவியல், வணிகவியல் ஆகிய பட்டப் படிப்புகளுக்கு மாணவிகள் சேர இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மாணவிகள் விண்ணப்பங்களை www.tngasa.in மற்றும் www.tngasa.org என்ற இணையதள முகவரியில் ஜூலை 7-ந்தேதி வரை பதிவு செய்யலாம்.

    இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவிகள் கல்லூரி உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.

    விண்ணப்ப கட்டணம் ரூ.48 மற்றும் பதிவு கட்டணம் ரூ.2 என மொத்தம் ரூ.50 செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ஏதும் செலுத்த வேண்டிய தில்லை. பதிவு கட்டணம் ரூ.2 மட்டும் செலுத்தினால் போதுமானது.

    இந்த கட்டணத்தை விண்ணப் பதாரர்கள் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் மூலம் இணையதளம் வாயிலாக செலுத்தலாம் என கல்லூரி முதல்வர் சின்னத்தாய் தெரிவித்துள்ளார்.

    காரிமங்கலம் அரசு மகளிர் கலைக்கல்லூரி முதுகலை பட்டப்படிப்புக்கு விண்ணப்பித்த பெண்ணிடம் குழந்தை இருப்பதால் கல்லூரியில் சேர்க்க முடியாது என கல்லூரி முதல்வர் கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    காரிமங்கலம்:

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த குள்ளன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மனைவி கவுதமி. இவர் தருமபுரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். படித்தார். கல்லூரி படிப்பின் இறுதி ஆண்டில் அவரது குடும்பத்தினர் கவுதமிக்கு திருமணம் செய்து விட்டதாலும் அதனைத் தொடர்ந்து குழந்தை பிறந்ததாலும் கடந்த ஒரு வருடமாக அவரால் படிப்பை தொடர முடியவில்லை.

    இதைத்தொடர்ந்து அவர் எம்.காம். படிக்க வேண்டும் என்று தனது கணவர் பழனிவேலிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் கவுதமியை மேற்படிப்பு படிக்க அனுமதித்துள்ளார். இதனை தொடர்ந்து கவுதமி காரிமங்கலம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் எம்.காம். படிப்புக்கு விண்ணப்பித்து இருந்தார்.

    பின்னர் சில நாட்களுக்கு முன்பு சேர்க்கை தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அப்போது தனது 4 மாத கைக்குழந்தையுடன் வந்த கவுதமியிடம் எம்.காம். சீட் கொடுக்க முடியாது, நீ குழந்தை வைத்திருப்பதால் எப்படி படிக்க முடியும்? இதனால் உனக்கு சீட் வழங்க முடியாது என்று கூறி கல்லூரியின் பொறுப்பு முதல்வர் திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது.

    மேலும் கவுதமியிடம் குழந்தை வைத்து உள்ளதால் படிக்க முடியாது என எழுதி வாங்கிக் கொள்ளும்படி சம்பந்தபட்ட பேராசிரியர்களிடம் கூறியதாக தெரியவந்தது. ஆனால் மாணவி கவுதமி கடிதம் எழுதி கொடுக்க மறுத்ததுடன் இதுகுறித்து தமிழக முதலமைச்சருக்கும், உயர் கல்வி துறை அமைச்சர் அன்பழகனுக்கும் புகார் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து உரிய விசாரணை நடத்தி சம்மந்தப்பட்ட கல்லூரி பொறுப்பு முதல்வர் மீது நடவடிக்கை எடுப்பதோடு கவுதமிக்கு எம்.காம். சீட் வழங்கி மேற்படிப்பை தொடர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    புகாருக்குள்ளான கல்லூரியின் பொறுப்பு முதல்வர் கடந்த ஆண்டில் கல்லூரியில் சேர விண்ணப்பித்த மாணவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு சீட் வழங்கியதாக பெற்றோர்கள், பொதுமக்கள் புகார் தெரிவித்ததன் அடிப்படையில் அமைச்சர் அன்பழகன் அவரை நேரில் அழைத்து கண்டித்தது குறிப்பிடத்தக்கது. #tamilnews
    ×