என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தூத்துக்குடி மகளிர் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி - அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
- தூத்துக்குடி மண்ணைச் சார்ந்த மகாகவி பாரதியாரின் கனவை நனவாக்கும் எண்ணமாக இந்த கல்லூரி தொடங்க ப்பட்டது என்று கீதாஜீவன் கூறினார்.
- பின்னர் தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த முன்னாள் மாணவிகள் தங்களது குடும்பத்துடன் பங்கேற்று தங்கள் மலரும் நினைவுகளை வெளி ப்படுத்தினர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி- எட்டை யாபுரம் சாலையில் அமைந்துள்ள ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரி பொன்விழா ஆண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் கல்லூரியின் முன்னாள் முதல்வர்கள், பேராசிரி யர்கள், மாணவர்கள், கல்லூரி ஊழியர்கள் ஆகியோர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அமைச்சர் கீதாஜீவன்
கல்லூரி தாளாளர் ஏ.பி.சி.வீ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் சுப்பு லட்சுமி வரவேற்றர். இந்த கல்லூரியில் படித்த வடக்கு மாவட்ட தி.மு.க. செயலா ளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரு மான கீதாஜீவன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, கல்லூரியில் பயின்ற மறக்க முடியாத நினைவுகளை பகிர்ந்து கொண்டு பேசியதாவது:-
ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லுரியின் 50-வது பொன்விழா கொண் டாடப்பட்டு வருகிறது. இதில் 1973-ம் ஆண்டில் படித்த மாணவிகள் முதல் கடந்த முறை பயின்ற மாணவிகள் வரை வந்து ள்ளீர்கள். ஏ.பி.சி.வீரபாகு மிகச்சிர மங்களுக்கு இடை யில் இந்த கல்லூரியை தொடங்கி தற்போது வளர்ச்சி பெற்ற கல்லூரி யாக அரசு அதிகாரிகள் மற்றும் உயர் பதவிகள் ஆன்றோர்கள், சான்றோ ர்களை உருவாக்கி உள்ளது. தூத்துக்குடி மண்ணைச் சார்ந்த மகாகவி பாரதி யாரின் கனவை நனவாக்கும் எண்ணமாக இந்த கல்லூரி தொடங்க ப்பட்டது. தற்போது அந்த கனவு மெய்ப்பிக்கப்பட்டு இருக்கிறது.
கல்விப் பணி
நான் 12-ம் வகுப்பு வரை தமிழ்வழி கல்வி தான் படித்தேன். இங்கு வந்து சேர்ந்த பின்பு எப்படி படிக்க போகிறோம் என்று ஒருவாரமாக பல்வேறு சிந்தனைகள் இருந்தது உண்டு. பல ஆசிரியர்கள் எங்களை கண்டிப்புடன் வழி நடத்தினார்கள். இந்த பெண்கள் கல்லூரியில் படிக்கும் காலத்தில் தொழில் செய்ய வேண்டும். அல்லது தொழிலதிபராக இருக்க வேண்டும். என்ற எண்ணத்தில் இருந்த எனக்கு இன்று அரசியலில் பணியாற்றி வருகிறேன். இந்த மகளிர் கல்லூரியில் படித்ததால் தான் நான் இன்று சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சராக இருக்கிறேன். இன்றும் சிறந்த கல்லூரி களின் வரிசையில் இக்கல்லூரியும் உள்ளது. இக்கல்லூரியின் கல்விப் பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் தமிழகம் முழுவதும் இருந்து வந்தி ருந்த முன்னாள் மாணவிகள் தங்களது குடும்பத்துடன் பங்கேற்று தங்கள் மலரும் நினைவு களை வெளி ப்படுத்தினர். தொடர்ந்து அவர்கள் தாங்கள் பயின்ற வகுப்பறை, வளாகம் ஆகிய இடங்களுக்குச் சென்று குழுவாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து முன்னாள் மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் முன்னாள் கல்லூரி முதல்வர்கள், பேராசிரி யர்கள் கவுரவிக்க ப்பட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி கணிதத்துறைத் தலைவர் பழனி, உதவி பேராசிரியர் ராதா, வேதியல் துறைத் தலைவர் கோகிலா சுபத்ரா, தமிழ்த்துறை உதவி பேராசி ரியர் நீதா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்