search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "worker casualties"

    • கீழக்கரை அருகே மின்சாரம் தாக்கி வட மாநில தொழிலாளி பலியானார்.
    • இதுகுறித்து கீழக்கரை இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) லட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கீழக்கரை

    கீழக்கரை அருகே உள்ள காஞ்சிரங்குடி ஊராட்சிக்குட்பட்ட செங்கல் நீரோடை பகுதியில் கட்டிட பணிகள் நடை பெற்று வருகிறது. அங்கு கொல்கத்தா கன்குறியா பகுதியைச் சேர்ந்த இஜாபுல் மகன் ரூபல் (22) என்பவர் கண்ணன் (எ) முத்து கிருஷ்ணன் ஒப்பந்தக்காரரிடம் பணிபுரிந்து வந்துள்ளார்.

    அப்போது பணிபுரிந்து கொண்டிருக்கும் போது கட்டிடத்திலிருந்து கம்பி மூலம் மின்சாரம் பாய்ந்ததில் வட மாநில கட்டிட தொழிலாளி ரூபல் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து கீழக்கரை இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) லட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    இது குறித்து ஏற்கனவே கட்டிட ஒப்பந்ததாரிடம் கட்டிட ஊழியர்கள் புகார் அளித்திருந்தும் அலட்சியம் காட்டியதால் உயிர் பலி ஏற்பட்டுள்ளது என்று வெளி மாநில தொழி லாளர்கள் கூறினர்.

    மேலும் இதே போல் சென்ற மாதம் 17-ந்தேதி உத்தரபிரதேசத்தை சேர்ந்த சுனில்குமார் (23) என்ற தொழிலாளர் கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து பலியானது குறிப்பிடத்தக்கது.

    • இருசக்கர வாகனம் மோதியதில் லட்சுமணன் தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
    • தொழிலாளி லட்சுமணன் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை சிறுகிராமத்தை சேர்ந்தவர் லட்சு மணன் (26) கூலித்தொழிலாளி .இவர் நேற்று இரவு 8மணிக்கு தனது இரு சக்கர வாகனத்தில் பண்ருட்டி அடுத்த சேமகோட்டை எஸ்.ஏரிபாளையம் கேட் சேலம் மெயின் ரோடு அருகே வந்து கொண்டு இருந்தார். அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதியதில் லட்சுமணன்தலையில் பலத்த அடிபட்டுசம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ் பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான தொழிலாளி லட்சுமணன் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முத்தியால்பேட்டையை சேர்ந்தவர் சதீஷ் மரம் ஏறும் தொழிலாளி.
    • தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்தபோது மரத்திலிருந்து கீழே விழுந்தார்.

    விழுப்புரம்:

    புதுவை மாநிலம் முத்தியால்பேட்டையை சேர்ந்தவர் சதீஷ் (வயது 23). இவர் மரம் ஏறும் தொழிலாளி. இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பாக கோட்டக்குப்பம் கறிக்கடை வீதியில் உள்ள தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்துள்ளார்.

    அப்போது மரத்திலிருந்து கீழே விழுந்தார். இவரை மீட்ட அப்பகுதி மக்கள் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்துவிட்டார். இது தொடர்பாக கோட்டக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சங்கராபுரம் அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலியானார்.
    • பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த தியாகராஜபுரத்தை சேர்ந்தவர் அசலன்(55) கூலி தொழிலாளி. இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் இருந்த புளியம் மரத்தில் புளியம்பழம் பறிக்க ஏறினார். அப்போது மரக்கிளை மீது நின்று கொண்டிருந்த அவர் எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அசலன் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் சப்- இன்ஸ்ெபக்டர்லோகேஸ்வரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • விருதுநகர் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார்.
    • இந்த சம்பவம் தொடர்பாக அருப்புக்கோட்டை டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மணி நகரத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் ராம்குமார் (வயது23). சுமை தூக்கும் தொழிலாளியான இவர் அருப்புக்கோ ட்டையில் உள்ள நெல்பேட்டையில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று தான் பணிபுரிந்த இடத்தில் ராம்குமார் குப்பைகளை அகற்ற பரண் மேல் ஏறியுள்ளார். அப்போது அங்குள்ள மின்வயரை தொட்டதில் ராம்குமார் மின்சாரம் தாக்கி மயங்கினார்.

    குப்பைகளை அகற்ற மேலே ஏறியவர் நீண்ட நேரமாகியும் வராததால் சந்தேகமடைந்த ஊழியர்கள் சென்று பார்த்த போது ராம்குமாரை மின்சாரம் தாக்கியது தெரியவந்தது. உடனே அவரை விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்ததில் ராம்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக அருப்புக்கோட்டை டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • மது போதையில் ஆற்றில் இறங்கி இறால் பிடித்த தொழிலாளி தண்ணீரில் மூழ்கி பலியானார்.
    • கரையில் இருந்த சிலர், காரைக்கால் தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் இந்திராநகரைச்சேர்ந்தவர் பழனிசாமி(வயது38). இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. பழனிசாமி மீன்பிடிதுறைமுகத்தில் சுமை தொழிலாளியாக பணியாற்றி வந்தார். துறைமுகத்தில் வேலை இல்லாத நேரத்தில், ஆற்றில் இறங்கி இறால் பிடிப்பது வழக்கம். நேற்று முன்தினம் காலை காரைக்கால் மேலஓடுதுறை அருகே உள்ள அரசலாற்றில் இறங்கி இறால் பிடித்து, அதை விற்று, அருகில் உள்ள சாராயக்கடையில் சாராயம் குடித்துவிட்டு, போதையுடன் மீண்டும் ஆற்றில் இறங்கி இறால் பிடித்துள்ளார். அப்போது நிலைதடுமாறி, தண்ணீரில் மூழ்கி பலியாகியுள்ளார்.

    ஆற்றில் இறங்கி இறால் பிடித்த பழனிசாமி வெகு நேரம் ஆகியும் காணாததால், கரையில் இருந்த சிலர், காரைக்கால் தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்புத்துறை வீரர்கள், ஆற்றில் இறங்கி சேரில் மூழ்கி கிடந்த பழனிசாமி உடலை மீட்டனர். இது குறித்து, பழனிசாமியின் மனைவி லட்சுமி, நிரவி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறனர்.

    • கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த பண்ருட்டி தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    • 2-வது தளத்தில் மேல் குடிநீர் தொட்டியில் டைல்ஸ் ஒட்டும் பணியில்ஈடுபட்டிருந்தார் .

    கடலூர்:

    பண்ருட்டி அருகே சித்திரைசாவடியை சேர்ந்த வர் சிவா கணபதி (வயது32) கட்டிட தொழிலாளி இவர் திருமணம் ஆனவர் இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளனர் இவர் புதுவை முத்தையால்பேட்டையில் புதியதாக கட்டப்பட்டு வரும் கட்டிடம் ஒன்றில் கட்டிட வேலைசெய்துவந்தார். சம்பவத்தன்று மாலை கட்டிடத்தின் 2-வது தளத்தில் மேல் குடிநீர் தொட்டியில் டைல்ஸ் ஒட்டும் பணியில்ஈடுபட்டிருந்தார் . அப்போது தவறி விழுந்தார் இதனால் படுகாயம்அடைந்த அவரை புதுவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் அங்குசிகிச்சை பலனளிக்காமல் சிவகணபதி பரிதாபமாக உயிரிழந்தார் இது குறித்து முத்தியால்பேட்டை போலீசில் புகார் செய்தனர். முத்தியால்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    ×