search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "world badminton rankings"

    • லக்‌ஷயா சென் 17-வது இடத்திலும், கிடாம்பி ஸ்ரீகாந்த் 24-வது இடத்திலும் உள்ளனர்.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் 8-வது இடத்தில் நீடிக்கிறார்.

    புதுடெல்லி:

    உலக பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசைப்பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா-தனிஷா கிரஸ்டோ ஜோடி 4 இடங்கள் ஏற்றம் கண்டு 28-வது இடத்தை பிடித்துள்ளது. சமீபத்தில் நடந்த சையத் மோடி சர்வதேச போட்டியில் 2-வது இடம் பெற்றதன் மூலம் அவர்கள் இந்த முன்னேற்றத்தை கண்டுள்ளனர். திரிஷா ஜாலி-காயத்தி இணை 19-வது இடத்தில் இருக்கின்றனர்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் 8-வது இடத்தில் நீடிக்கிறார். லக்ஷயா சென் 17-வது இடத்திலும், கிடாம்பி ஸ்ரீகாந்த் 24-வது இடத்திலும் உள்ளனர். கடந்த வாரம் நடந்த சையத் மோடி சர்வதேச போட்டியில் அரைஇறுதி வரை முன்னேறிய இந்திய வீரர் பிரியன்ஷூ ரஜாவத் ஒரு இடம் உயர்ந்து 30-வது இடம் பிடித்துள்ளார். பெண்கள் ஒற்றையர் தரவரிசையில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 12-வது இடத்தில் தொடருகிறார். ஆண்கள் இரட்டையர் பிரிவில் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி 2-வது இடம் வகிக்கின்றனர்.

    உலக பேட்மின்டன் சம்மேளனம் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் இந்தியாவின் சாய்னா நேவாலுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. #worldbadmintonrankings #SainaNehwal
    உலக பேட்மின்டன் சம்மேளனம் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் இந்தியாவின் சாய்னா நேவாலுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. முதல் 10 இடத்துக்குள் இருந்த அவர் 11-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். சமீபத்தில் நடந்த உலக போட்டியில் கால்இறுதியில் சாய்னா தோற்று இருந்தார். இதனால் அவர் இந்த சறுக்கலை சந்தித்துள்ளார்.

    உலகபோட்டி இறுதி ஆட்டத்தில் தோற்று வெள்ளிப்பதக்கம் வென்ற பி.வி.சிந்து 3-வது இடத்தை தக்க வைத்துக்கொண்டார். ஆண்கள் தரவரிசையில் கடாம்பி ஸ்ரீகாந்த் 8-வது இடத்திலும், பிரனாய் 11-வது இடத்திலும் உள்ளனர்.   #worldbadmintonrankings #SainaNehwal
    ×