search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "world Cup 2015"

    இந்தியாவிற்கு எதிரான போட்டியில் இரண்டு பந்தை லீவ் செய்வதற்காக இரண்டு லட்சம் டாலர் விலை பேசினார்கள் என உமர் அக்மல் கூறியுள்ளார். #UmarAkmal
    பாகிஸ்தான் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் உமர் அக்மல். அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது இவரது வழக்கம். தற்போது உடற்தகுதி பிரச்சனையால் அணியில் இடம்பிடிக்க முடியாமல் இருக்கிறது சமீபத்தில் டிவி ஒன்றிற்கு பேட்டியளித்தார். அப்போது இந்தியாவிற்கு எதிராக நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியின்போது இரண்டு பந்தை லீவ் செய்வதற்கு இரண்டு லட்சம் டாலர் பணம் தருவதாக தன்னை அணுகிறார்கள் என்ற வெடிகுண்டை தூக்கிப்போட்டார்.

    மேலும், இதுகுறித்து அக்மல் கூறுகையில் ‘‘இந்தியாவிற்கு எதிராக விளையாடிய ஒவ்வொரு போட்டியில் சூதாட்டக்காரர்கள் என்னை அணுகிறார்கள். பெரும்பாலும் ஐசிசி தொடர் மற்றும் ஆசிய கோப்பை தொடரின்போது இந்த சம்பவங்கள் நடைபெற்றன.

    ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடைபெற்ற 2015 உலகக்கோப்பையில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் ‘பி’ பிரிவில் இடம்பிடித்திருந்தது. இதில் இந்தியா 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் உமர் அக்மல் நான்கு பந்துகளை சந்தித்து டக்அவுட் ஆனார். இந்த தொடரின்போதுதான் தன்னை அணுகிறார்கள் என்று கூறியுள்ளார். இதுகுறித்து டிவிக்கு அவர் கூறுகையில் ‘‘இந்தியாவிற்கு எதிரான ஆட்டத்தில் இரண்டு பந்துகளை லீவ் செய்தற்காக என்னை அணுகிறார்கள். அதற்காக இரண்டு லட்சம் டாலர் தருவதாக கூறினார்கள்.



    உலகக்கோப்பையில் இது எங்களுடைய முதல் போட்டி. இந்தியாவிற்கு எதிராக நான் விளையாடிய ஒவ்வொரு போட்டியிலும் என்னை அணுகிறார்கள். ஆனால், நான் அவர்களிடம், நான் மிகவும் கண்டிப்பானவன், பாகிஸ்தானுக்காக விளையாடும்போது, இதுகுறித்து என்னிடம் மீண்டும் பேசக்கூடாது என்றேன்’’ என்று கூறியுள்ளார்.

    இவரது பேட்டி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் எதிர்ப்பு பிரிவிற்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்துவதற்கு உமர் அக்மலுக்கு சம்மன் வழங்கியுள்ளது.
    ×