என் மலர்
நீங்கள் தேடியது "World Test Championships"
நியூசிலாந்து சிறிய நாடு என்றாலும் கூட திறமையான பல வீரர்களைக் கொண்டுள்ளதாக கங்குலி தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி துபாயில் இன்று மாலை நடைபெறுகிறது. இதில், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன. இப்போட்டியில், வெல்லப் போவது யார் என்று சமூக வலைதளங்ளில் பலர் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
இதுகுறித்து, பிசிசிஐ தலைவர் கங்குலி கூறுகையில் ‘சர்வதேச அரங்கில் நியூசிலாந்து தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. ஆஸ்திரேலியாவும் சிறந்த அணிதான். இருப்பினும், அவர்கள் தற்போது கடினமான சூழ்நிலையில் உள்ளனர்.
நியூசிலாந்து அணியினர் தீவிரமாக பயிற்சி எடுத்திருப்பது ஆட்டத்தில் நன்றாக தெரிகிறது. நியூசிலாந்து அணிக்கு போராடும் குணமும் இருப்பது நன்றாகவே தெரிகிறது. அவர்கள் சில மாதங்களுக்கு முன்பு தான் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்றனர். நியூசிலாந்து சிறிய நாடு தான் என்றாலும் கூட திறமையான பல வீரர்களைக் கொண்டுள்ளது. இது நியூசிலாந்திற்கான நேரம் என்பதே எனது கருத்து" என்று தெரிவித்தார்.