search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "World Toilet Day"

    • உசிலம்பட்டி அருகே உலக கழிவறை தின விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • இதில் பள்ளி மாணவர்கள், முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்று வீடுதோறும் கழிவறையை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    உசிலம்பட்டி

    உசிலம்பட்டி அருகே உள்ள தொட்டப்பநாயக்கனூரில் உலக கழிவறை தினத்தை முன்னிட்டு தூய்மை நடைபயணம் மற்றும் விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை தொட்டப்பநாயக்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருக மகாராஜா முன்னிலையில் உசிலம்பட்டி யூனியன் தலைவர் ரஞ்சனி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் பள்ளி மாணவர்கள், முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்று வீடுதோறும் கழிவறையை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தெய்வராமன், ஊராட்சி செயலாளர் மகேசுவரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பேரூராட்சி சுகாதார ஆய்வாளா் கருப்புசாமி, பள்ளித் தலைமையாசிரியா் நிா்மலாதேவி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
    • முத்துசெட்டிபாளையம் திருவள்ளுவா் நினைவு அரசு துவக்கப் பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    அவினாசி:

    உலக கழிவறை தினத்தை முன்னிட்டு அவிநாசி முத்துசெட்டிபாளையம் திருவள்ளுவா் நினைவு அரசு துவக்கப் பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.அவிநாசி பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பேரூராட்சி செயல் அலுவலா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா்.பேரூராட்சி சுகாதார ஆய்வாளா் கருப்புசாமி, பள்ளித் தலைமையாசிரியா் நிா்மலாதேவி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

    இதில் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நோய்கள் வராமல் தடுக்க கழிவறைகளை பயன்படுத்திய பிறகு சோப்பு கொண்டு கை கழுவதுதல், திறந்த வெளியில் மலம் கழித்தலை ஒழிக்கும் வகையில், பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தனி நபா் கழிப்பிடம் அமைக்க ரூ. 8,000 மானியம் வழங்கப்படுவது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

    • உலக கழிப்பறை தினம் கொண்டாடப்பட்டது
    • பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் முழு சுகாதார இயக்கம் சார்பில் உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு சுகாதார ஓட்டம் மற்றும் நடைபயண பேரணி நடைபெற்றது. ஒன்றிய குழு தலைவர் கார்த்திக் மழவராயர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.பேரணியில் நோயின்றி வாழ கழிப்பறையை பயன்படுத்தவும், கிராமத்தையும் பொது சுகாதாரத்தையும் பாதுகாக்க அனைவரும் கழிப்பறையை பயன்படுத்தவும் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பேரணியில் சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை, ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி ஆணையர்கள் ஸ்ரீதரன், நளினி, நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், சுகாதார ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    • பேரணியை தஞ்சாவூர் கூடுதல் மாவட்ட கலெக்டர் ஸ்ரீகாந்த் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • பொது இடங்களில் குப்பையை கொட்டி அசுத்தம் செய்ய மாட்டோம் என தூய்மை உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    தஞ்சாவூர்:

    இன்று உலக கழிப்பறை தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் 587 ஊராட்சிகளில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

    அதன்படி குளிச்சப்பட்டு கிராமத்தில் பள்ளி மாணவ-மாணவியர் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்ட தூய்மை நடை பயண விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை தஞ்சாவூர் கூடுதல் மாவட்ட கலெக்டர் ஸ்ரீகாந்த் கொடியசைத்து தொடங்கி வைத்தார். குளிச்சப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் இளவரசி கலியமூர்த்தி தலைமை வகித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், அறிவானந்தம், வட்டார வளர்ச்சி மண்டல துணை அலுவலர் சித்ரா, பணி மேற்பார்வையாளர் புவனேஸ்வரி, கிராம அலுவலர் கோவிந்தராஜ், ஊராட்சி செயலாளர் சசிகுமார், பள்ளி தலைமை ஆசிரியர் முருகானந்தம், 3-வது வார்டு உறுப்பினர் குருமூர்த்தி உமாராணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக அனைவரும் திறந்த வெளியில் மலம் கழிப்பதில்லை, நெகிழி பொருட்களை பய ன்படுத்துவதில்லை, பொது இடங்களில் குப்பையை கொட்டி அசுத்தம் செய்ய மாட்டோம் என தூய்மை உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    பேரணியில் பள்ளி மாணவ-மாணவியர், கிராம மக்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை சுமந்து வீதி வீதியாக சென்று மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    முடிவில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வனிதா நடராஜன் நன்றி கூறினார்.

    உலக கழிப்பறை தினத்தையொட்டி ஊட்டியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    ஊட்டி:

    ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 19-ந் தேதி உலக கழிப்பறை தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. நீலகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் உலக கழிப்பறை தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி ஊட்டியில் நேற்று நடைபெற்றது. ஊட்டி மத்திய பஸ் நிலையம் முன்பு திறந்த வெளியில் மலம் கழிக்காமல் கழிப்பறையை பயன்படுத்த வலியுறுத்தி மலைரெயிலுடன் கூடிய தத்ரூபமாக ஓவியம் வரையப்பட்டு இருந்தது. இதனை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டு, பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-



    நீலகிரி மாவட்டம் முழுவதும் தூய்மை பாரத திட்டத்தின் கீழ் 35 ஆயிரம் தனிநபர் கழிப்பறைகள் கட்டப்பட்டு உள்ளது. இந்த கழிப்பறைகள் கட்ட வசதியில்லாத இடங்களில் பொதுக்கழிப்பறை கட்டப்பட்டு இருக்கிறது. மேலும் 3 ஆயிரத்து 500 தனிநபர் கழிப்பறைகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முடிந்தால் நீலகிரி மாவட்டத்தில் 100 சதவீதம் கழிப்பறை கட்டும் பணிகள் முடிவடையும். பொதுமக்கள் அருகில் உள்ள வனப்பகுதிகளுக்கு காலைக்கடன் கழிக்க சென்றால் வனவிலங்குகள், விஷஜந்துக்கள் மூலம் ஆபத்துகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

    எனவே அனைவரும் தனிநபர் கழிப்பறை கட்டும் திட்டத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு ஒரு குப்பை தொட்டி வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. சுற்றுலா வாகனங்களில் செல்கிறவர்கள், அந்தந்த பகுதி பொதுமக்கள் குப்பைகளை வெளியில் வீசாமல், குப்பை தொட்டிகளில் போட வேண்டும். அப்போது தான் தூய்மையை பாதுகாக்க முடியும். எவ்வளவு தூரத்தில் குப்பை தொட்டி வைக்கப்பட்டு இருக்கிறது என்பது குறித்து சாலையோரங்களில் ஸ்டிக்கர் விரைவில் ஒட்டப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    பேரணியானது ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து லோயர் பஜார், மாரியம்மன் கோவில் சந்திப்பு, கமர்சியல் சாலை, கேஷினோ சந்திப்பு, சேரிங்கிராஸ் வழியாக தாவரவியல் பூங்கா வரை சென்றது. இதில் கழிப்பறையை பயன்படுத்துவோம், சுற்றுச்சூழலை பாதுகாப்போம், திறந்தவெளியில் மலம் கழித்தலை முற்றிலும் தவிர்ப்போம் என்ற விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி மகளிர் சுயஉதவிக் குழுவினர் சென்றனர். பேரணியில் மாவட்ட வருவாய் அதிகாரி செல்வராஜ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாபு, ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், நகராட்சி கமிஷனர் நாராயணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமன், நாகராஜன், ரமேஷ் கிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
    ×