search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "WorldCup 2018"

    உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இங்கிலாந்தை 2-0 என வீழ்த்தி 3-வது இடத்தை பிடித்தது பெல்ஜியம் #WorldCup2018 #BELENG #ENGBEL
    உலகக்கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதிப் போட்டிகளில் தோல்வியடைந்த பெல்ஜியம் - இங்கிலாந்து அணிகள் இன்று 3-வது இடத்திற்காக பலப்பரீட்சை நடத்தின.

    இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய 4-வது நிமிடத்திலேயே இங்கிலாந்திற்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. பெல்ஜியம் அணியின் தாமஸ் மியுனியர் 4-வது நிமிடத்திலேயே கோல் அடித்து அசத்தினார். இடது பக்கம் கார்னருக்கு சற்று முன்பகுதியில் இருந்து கொடுத்த பாஸை சிறப்பான முறையில் மியுனியர் கோலாக்கினார். இவர் அரையிறுதியில் சஸ்பெண்ட் காரணமாக இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது.

    அதன்பின் இரு அணி வீரர்களும் 45 நிமிங்கள் வரை கோல் அடிக்கவில்லை. இதனால் முதல் பாதி நேரத்தில் பெல்ஜியம் 1-0 என முன்னிலைப் பெற்றது.

    இடைவேளை முடிந்து 2-வது பாதி நேரம் ஆட்டம் தொடங்கியது. இங்கிலாந்தை கோல் அடிக்க விடாமல் பெல்ஜியம் டிபென்டர்ஸ்கள் பார்த்துக் கொண்ட போதிலும் ஹசார்டு, ப்ரூயின் ஆகியோர் கோல் அடிக்கும் வாய்ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.



    82-வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர்களை ஏமாற்றி ப்ரூயின் பந்தை கடத்தில் ஹசார்டிடம் கொடுத்தார். ஹசார்டு இரண்டு இங்கிலாந்து வீரர்களை ஏமாற்றி கோல் அடித்தார். இதனால் பெல்ஜியம் 2-0 என முன்னிலைப் பெற்றது. அதன்பின் 90 நிமிடங்கள் வரை இரண்டு அணியும் கோல் அடிக்கவில்லை. இன்ஜூரி நேரமாக 3 நிமிடங்கள் கொடுக்கப்பட்டது. இதில் கோல் விழாததால் பெல்ஜியம் 2-0 என வெற்றி பெற்றது.
    உலகக்கோப்பை கால்பந்து தொடரில் 3-வது இடத்திற்கான ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக முதல்பாதி நேரத்தில் பெல்ஜியம் 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளது. #BELENG #ENGBEL
    உலகக்கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதிப் போட்டிகளில் தோல்வியடைந்த பெல்ஜியம் - இங்கிலாந்து அணிகள் இன்று 3-வது இடத்திற்காக பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

    இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய 4-வது நிமிடத்திலேயே இங்கிலாந்திற்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

    பெல்ஜியம் அணியின் தாமஸ் மியுனியர் 4-வது நிமிடத்திலேயே கோல் அடித்து அசத்தினார். இவர் அரையிறுதியில் சஸ்பெண்ட் காரணமாக இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது.



    அதன்பின் இரு அணி வீரர்களும் 45 நிமிடங்கள் வரை கோல் அடிக்கவில்லை. இதனால் முதல் பாதி நேரத்தில் பெல்ஜியம் 1-0 என முன்னிலையில் உள்ளது.

    ஸ்பெயின் - ரஷியா இடையிலான ஆட்டம் முதல் 45 நிமிடத்தில் 1-1 சமநிலையில் முடிந்துள்ளது. #WorldCup2018 #ESPRUS
    உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முதல் ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. இதில் ஸ்பெயின் - ரஷியா பலப்ரீட்சை நடத்தி வருகின்றன.

    ஆட்டம் தொடங்கியது முதலே ஸ்பெயின் ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 12-வது நிமிடத்தில் ஸ்பெயினுக்கு ப்ரீ ஹிக் வாய்ப்பு கிடைத்தது. ஸ்பெயின் வீரர் தூக்கி அடித்த பந்து ரமோஸ் நோக்கி வந்தது. அந்த பந்தை ரமோஸ் கோல் எல்லைக்குள் புகுத்த நினைத்தார். அதேவேளையில் ரஷியா வீரர் செர்கெய் இக்னாசேவிச் தடுக்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக செர்கெய் காலில் பந்து பட்டு கோல் எல்லைக்குள் சென்றது. இதனால் ஸ்பெயினுக்கு ஓன் கோல் மூலம் ஒரு கோல் கிடைத்தது.



    41-வது நிமிடத்தில் ரஷியாவிற்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதைபயன்படுத்தி ரஷியா கோல் அடிக்க முதல் பாதி நேர ஆட்டம் 1-1 என சமநிலையில் முடிந்தது.
    கால்பந்து உலகக்கோப்பையில் ஜெர்மனி தொடக்க சுற்றோடு வெளியேறியது குறித்து அப்ரிடி எமோசனலாக டுவிட் செய்துள்ளார். #WorldCup2018
    உலகக்கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. உலகக்கோப்பை ஜூரம் ரசிகர்களை மட்டும் ஆட்டிப்படைக்கவில்லை. மற்ற விளையாட்டுத்துறையில் சாதித்த மற்றும் சாதிக்கும் அணிகளையும் ஆட்டிப்படைத்து வருகிறது.

    பாகிஸ்தான் அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் ஷாகிப் அப்ரிடி. இவருக்கு பிடித்தமான அணி ஜெர்மனி. நடப்பு சாம்பியனான ஜெர்மனி நேற்று 0-2 எனத் தோல்வியை தழுவி தொடக்க சுற்றோடு வெளியேறியது. இது ஜெர்மனி ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஜெர்மனி தோல்வி அப்ரிடியையும் அப்செட் ஆக்கியுள்ளது. 1938-ம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக ஜெர்மனி தொடக்க சுற்றோடு வெளியேறி மோசமான சாதனைக்குள்ளாகியுள்ளது.


    ஜெர்மனி தோல்வி குறித்து ஒருவர் பதிவு செய்திருந்த டுவிட்டிற்கு, அப்ரிடி பதில் அளிக்கையில் ‘‘சாம்பியன்ஸ் எப்போதும் தோற்பதில்லை, புரோ. அவர்கள் கொஞ்சம் ஓய்வு எடுத்துள்ளார்கள். அடுத்த முறை வலுவான அணியாக திரும்பி வருவார்கள். ஆனால், ஜெர்மனி அணி அதன் ரசிகர்களை இழந்ததுதான் ஏமாற்றம் அளிக்கிறது. தைரியமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கொரியாவிற்கு வாழ்த்துக்கள்’’ என்று பதிவிட்டுள்ளார்.



    அர்ஜென்டினா வீரரின் கையில் பந்து பட்டது தெளிவாக தெரிந்த போதிலும் பெனால்டி கிடைக்காததால், நைஜீரியா வீரர் விரக்தியடைந்துள்ளார். #WorldCup2018
    உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் அர்ஜென்டினா - நைஜீரியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அர்ஜென்டினா வெற்றி பெற்றேயாக வேண்டும் என்ற நிலையிலும், நைஜீரியா டிரா செய்தாலே போதும் என்ற நிலையிலும் களம் இறங்கியது.

    முதல் பாதி நேரத்தில் அர்ஜென்டினாவின் ஆட்டம் அபாரமாக இருந்தது. மெஸ்சி தனது சொந்த முயற்சியால் முதல் கோலை பதிவு செய்தார். இதனால் முதல் பாதி நேரத்தில் அர்ஜென்டினா 1-0 என முன்னிலைப் பெற்றிருந்தது. 2-வது பாதி நேரத்தில், ஆட்டத்தின் 51-வது நிமிடத்தில் நைஜீரியாவிற்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி நைஜீரியா வீரர் மோசஸ் கோல் அடித்தார். இதனால் 1-1 என போட்டி சமநிலைப் பெற்றது.

    பின்னர் சுமார் 35 நிமிடங்கள் அர்ஜென்டினாவால் கோல் அடிக்க முடியவில்லை. இறுதியாக 86-வது நிமிடத்தில் ரோஜோ கோல் அடித்தார். இதனால் 2-1 என அர்ஜென்டினா முன்னிலைப் பெற்றது. இத்துடன் போட்டியை முடித்துக் கொள்ள வேண்டும் என்று அர்ஜென்டினா விரும்பியது.

    அதேவேளையில் எப்படியாவது வெற்றி பெற்றாக வேண்டும் என்று நைஜீரியா வீரர்கள் விளையாடினார்கள். கடைசி நிமிடத்தில் நைஜீரியா வீரர் அடித்த பந்தை அர்ஜென்டினா வீரர் ரோஜா தலையால் முட்டி வெளியேற்ற நினைத்தார். அப்போது பந்து தலையில் பட்டபின் கையில் பட்டுச் சென்றது. இதனால் நைஜீரியா வீரர்கள் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.



    எப்படியும் பெனால்டி கிடைக்கும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் நடுவர் பெனால்டி வாய்ப்பு கொடுக்கவில்லை. நைஜீரியா வீரர்கள் முறையிட்டதால் நடுவர் VAR ரிவியூ முறையை பயன்படுத்தினார். அப்போது பந்து தலையில் பட்ட பின்னர்தான் கையில் பட்டது என பெனால்டி கொடுக்க மறுத்துவிட்டார்.

    இதனால் நைஜீரியாவின் டிரா செய்யும் நிலை பறிபோனதுடன், நாக்அவுட் வாய்ப்பையும் இழந்தது. இதனால் நைஜீரியா கோல்கீப்பர் ஜான் ஒபி மிகெல் விரக்தியடைந்துள்ளார். இதுகுறித்து மிகெல் கூறுகையில் ‘‘ரோஜாவின் கையில் பந்து பட்டது தெளிவாக தெரிந்தது. இந்த போட்டியை நீங்கள் பார்த்தீர்கள் என்றால் போர்ச்சுக்கல் அணிக்கெதிராக நடைபெற்றதை விட மோசமானது என்பது தெரியும்.



    பெனால்டி ஏன் கொடுக்கப்படவில்லை என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. என்னைப் பொறுத்த வகையில் ஹேண்ட்பால் என்பது மிகவும் தெளிவானது. இது பெனால்டிக்கு வாய்ப்புக்குரியதாகும். ஒரு நடுவர் ஒருமுறை பெனால்டி கொடுத்த பின்னர், 2-வது பெனால்டி கொடுக்க விரும்பாமல் இருக்கலாம். ஆனால் பெனால்டி பெனால்டிதான். நடுவர் VAR தொழில்நுட்ப உதவியை நாடிய பின்னர், பந்து கையில்தானே பட்டது? என்று கேட்டோம். அவரும் ஆம் என்றார். ஆனால், ஏன் பெனால்டி கொடுக்கப்படவில்லை? என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை’’ என்றார்.
    உலகக் கோப்பை கால்பந்து தொடர் தொடங்குவதற்கு முன்பே வங்காள தேசத்தில் உற்சாக கொண்டாட்டத்தில் வன்முறை நடந்துள்ளது. #worldCup2018
    உலகக் கோப்பை கால்பந்து திருவிழா நாளை ரஷியாவில் கோலாகலமாக தொடங்குகிறது. இதில் பிரேசில், அர்ஜென்டினா, ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து உள்பட 32 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    உலகக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்பே உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் உலகக் கோப்பையை கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். அர்ஜென்டினா அணி கேப்டன் மெஸ்சி, போர்ச்சுக்கல் அணி கேப்டன கிறிஸ்டியானோ ரொனால்டோ, பிரேசில் அணி கேப்டன் நெய்மர் ஆகியோருக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர்.

    தற்போது தாங்கள் வசிக்கும் தெருக்களில் தங்களுடைய பிடித்த வீரர்கள் விளையாடும் அணிகளின் கொடியுடன் ரசிகர்கள் உலா வருகின்றனர்.

    கொல்கத்தாவில் மெஸ்சியின் தீவிர ரசிகரான டீக்கடை உரிமையாளர் ஒருவர் தனது மூன்று மாடி வீட்டிற்கு அர்ஜென்டினா ஜெர்சியின் கலரை வண்ணமாக அடித்திருந்தார்.

    உலகக் கோப்பை கால்பந்து ஜூரம் வங்காள தேசத்தையும் விட்டுவைக்கவில்லை. சுமார் 16 கோடி மக்கள் தொகை கொண்ட வங்காள தேசம், உலகக் கோப்பை பிபா தரவரிசையில் 211 அணிகளில் 194-வது இடத்தில் உள்ளது. என்றாலும் கால்பந்து ரசிகர்கள் அதிக அளவில் உள்ளனர்.

    கடந்த வாரம் முக்கிய நகரான பந்தரில் மெஸ்சி, நெய்மர் ரசிகர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவர் கொல்லப்பட்டார். அவரது மகன் படுகாயம் அடைந்தார். சாலையில் கொடியை ஏந்திச் செல்லும்போது 12 வயது சிறுவன் ஒருவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.



    அர்ஜென்டினா மற்றும் பிரேசில் நாட்டு கொடியுடன் ரசிகர்கள் சாலையில் அணிவகுத்து செல்கிறார்கள். இதற்கிடையே வெளிநாட்டு கொடிகளுடன் அணிவகுத்துச் செல்லக்கூடாது என்று ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    வழக்கறிஞர் ஒருவர் உலகக் கோப்பையில் பங்கேற்றுள்ள நாடுகளின் கொடிகளை பறக்க விடுவதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று கோர்ட்டை நாடியுள்ளார். இதற்கிடையே பரிசால் யுனிவர்சிட்டில், வளாகத்திற்குள் வெளிநாட்டு கொடிகளை பறக்கவிட தடைவிதித்துள்ளது.
    ×