search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Worship Ceremony"

    • கேரள மாநிலம் கோட்டயத்தில் ஏட்டுமானூர் மகாதேவர் கோவில் இருக்கிறது.
    • பக்தர்கள் தரிசனத்துக்காக ஆண்டுக்கு ஒருமுறையே வெளியே எடுத்துவரப்படும்.

    கேரள மாநிலம் கோட்டயத்தில் ஏட்டுமானூர் மகாதேவர் கோவில் இருக்கிறது. அங்குள்ள பிரசித்திபெற்ற சிவன் கோவில்களில் ஒன்றான இங்கு, தங்கத்தில் செய்யப்பட்ட 2 அடி உயரத்தில் 13 கிலோ எடையுள்ள 7 யானை சிலைகள், அதைவிட சிறிய அளவிலான ஒரு யானை சிலை என 8 யானை சிலைகள் கோவில் பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

    இந்த சிலைகள் பக்தர்கள் தரிசனத்துக்காக ஆண்டுக்கு ஒருமுறையே வெளியே எடுத்துவரப்படும். அதன்படி ஆராட்டு விழாவை முன்னிட்டு ஏழர பொன்னான என்று கூறப்படும் தங்க யானை சிலைகள் நேற்று இரவு பக்தர்கள் தரிசனத்துக்கு வைக்கப்பட்டது. இதனை ஏராளமானோர் தரிசித்தனர்.

    • மேள தாளங்கள் முழங்க பல்வேறு முக்கிய வீதிகளின் வழியாக விழா பந்தலுக்கு சிலை கொண்டு வரப்பட்டது.
    • நிகழ்ச்சியில் இன்று இரவு 7.30 மணிக்கு சிக்கல் குருசரண் பாடுகிறார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு காவிரி கரையில் கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜருக்கு சமாதி உள்ளது.

    இங்கு ஆண்டுதோறும் தியாகராஜர் ஆராதனை விழா நடைபெறும். அதன்படி கடந்த மாதம் 177-வது ஆராதனை விழாவுக்கான பந்தல்கால் நடப்பட்டது.

    இதையடுத்து 5 நாட்கள் நடைபெறும் தியாகராஜர் ஆராதனை விழாவானது கடந்த 26-ந் தேதி தொடங்கி நடைபெற்றது. விழாவின் இறுதிநாளான இன்று தியாகராஜர் முக்தி அடைந்த புஷ்ய பகுள பஞ்சமி நாளையொட்டி காலை 6 மணியளவில் திருவையாறு திருமஞ்சன வீதியில் உள்ள தியாகராஜர் வாழ்ந்த வீட்டில் இருந்து அவரது சிலை ஊர்வலமாக உஞ்சவிருத்தி பஜனையுடன் புறப்பட்டது.

    மேள தாளங்கள் முழங்க பல்வேறு முக்கிய வீதிகளின் வழியாக விழா பந்தலுக்கு சிலை கொண்டு வரப்பட்டது.

    பின்னர் தியாகராஜருக்கு பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி இசை அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தொடக்கத்தில் நாட்டை ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'ஜகதாநந்த காரக ஜய ஜானகீ ப்ராண நாயக...' என்ற பாடல் பாடப்பட்டது. இதைத் தொடர்ந்து, கெளளை ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'துடுகு கல நந்நே தொர கொடுகு ப்ரோசுரா எந்தோ...' என்ற பாடலும், ஆரபி ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'ஸாதிஞ்சநெ ஓ மநஸா...' என்ற பாடலும், வராளி ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'கனகன ருசி ரா கநகவஸந நிந்நு...' என்ற பாடலும், இறுதியாக ஸ்ரீராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'எந்தரோ மஹாநுபாவுலு அந்தரிகி வந்தநமு...' ஆகிய பாடல்களைப் பாடி அஞ்சலி செலுத்தினர்.

    பிரபல இசைக் கலைஞர்கள் சுதா ரகுநாதன், மஹதி, திருவனந்தபுரம் பின்னி கிருஷ்ணகுமார், கடலூர் ஜனனி, சீர்காழி சிவசிதம்பரம், அருண், அரித்துவாரமங்கலம் பழனிவேல், ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ் உள்பட 1000-க்கும் அதிகமான இசைக் கலைஞர்கள், ஆர்வலர்கள் கலந்து கொண்டு ஒருமித்த குரலில் பாடியும், இசைக் கருவிகளை இசைத்தும் தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தினர். அப்போது, தியாகராஜ சுவாமிகளுக்கு அபிஷேகம் நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து மாலை வரை பல்வேறு இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    விழாவில் மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப், தியாக பிரம்ம மகோத்சப சபை நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் இன்று இரவு 7.30 மணிக்கு சிக்கல் குருசரண் பாடுகிறார். 8 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட முத்து பல்லக்கில் தியாகராஜர் சுவாமி வீதி உலா காட்சி நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து திரைப்பட பின்னணி பாடகி நித்யஸ்ரீமகாதேவன் பாடுகிறார். பின்னர் பல்வேறு இசை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இரவு 11 மணிக்கு ஆஞ்சநேயர் உற்சவத்துடன் விழா முடிவடைகிறது.

    • தொடக்க நாளான 26-ம் தேதி மாலை 5 மணி அளவில் மங்கல இசையுடன் விழா தொடங்குகிறது.
    • தியாகராஜ சுவாமிகள் சித்தி அடைந்த பகுள பஞ்சமி தினமான 30-ந் தேதி தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை நடைபெறுகிறது.

    தஞ்சாவூர்:

    கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவராக திகழ்ந்தவர் தியாகராஜர் சுவாமிகள் . இவரை தியாக பிரம்மம் என அழைக்கிறார்கள்.

    இவருடைய சமாதி தஞ்சை மாவட்டம் திருவையாறில் காவிரி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் இசை கலைஞர்கள் ஒன்று கூடி பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி இசை அஞ்சலி செலுத்துகிறார்கள். இந்த நிகழ்ச்சி தியாகராஜர் ஆராதனை விழா என அழைக்கப்படுகிறது.

    அதன்படி தியாகராஜ சுவாமிகளின் 177-வது ஆண்டு ஆராதனை விழா அடுத்த மாதம் (ஜனவரி) 26-ந் தேதி தொடங்கி 30-ந் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.

    இதை முன்னிட்டு திருவையாறு தியாகராஜர் ஆசிரமத்தில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது. முன்னதாக தியாகராஜருக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் ஸ்ரீ தியாக பிரம்ம மகோத்சவ சபா அறங்காவலர் சுரேஷ் மூப்பனார் தலைமையில் பந்தக்கால் நடப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதையடுத்து அறங்காவலர் சுரேஷ் மூப்பனார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

    தியாகராஜர் சுவாமிகளின் ஆராதனை விழா அடுத்த மாதம் 26 ஆம் தேதி தொடங்கி 30-ந் தேதி வரை நடக்கிறது. தொடக்க நாளான 26-ம் தேதி மாலை 5 மணி அளவில் மங்கல இசையுடன் விழா தொடங்குகிறது. விழாவில் சபையின் தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி, மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர்.

    தியாகராஜ சுவாமிகள் சித்தி அடைந்த பகுள பஞ்சமி தினமான 30-ந் தேதி தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை நடைபெறுகிறது. அப்போது உலகெங்கிலும் உள்ள சங்கீத வித்வான்கள், இசைக் கலைஞர்கள் பஞ்சரத்தின கீர்த்தனைகள் பாடி தியாகராஜ சுவாமிகளுக்கு இசை அஞ்சலி செலுத்துகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • பிருந்தாவனத்திற்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு குருராயரை தரிசனம் செய்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் வடவாற்றங்கரை ராகவேந்திர சுவாமிகளின் பிருந்தாவனத்தில் ராகவேந்திர சுவாமிகளின் 352-ம் ஆண்டு ஆராதனை நிறைவு விழா நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு ராகவேந்திர சுவாமிகளின் பிருந்தாவனத்திற்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு குருராயரை தரிசனம் செய்தனர்.

    • பரமத்திவேலூரில் உள்ள மாணிக்கவாசகர் திருமண மண்டபத்தில், மீனாட்சியம்மை உடனுறை சொக்க நாத பெருமானுக்கு திருக்கல்யாணம் மற்றும் 63 நாயன்மார்களின் ஆரா தனை விழா நேற்று நடை பெற்றது.‌
    • சிறப்பு அபிஷேக ஆராத னைகளும், 10 மணிக்கு சிறப்பு சொற்பொழிவும், மாலை 6 மணிக்கு 108 திருவிளக்கு பூஜையும் நடை பெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் உள்ள மாணிக்கவாசகர் திருமண மண்டபத்தில், மீனாட்சி யம்மை உடனுறை சொக்க நாத பெருமானுக்கு திருக்கல்யாணம் மற்றும் 63 நாயன்மார்களின் ஆரா தனை விழா நேற்று நடை பெற்றது.

    விழாவையொட்டி கடந்த 12-ந் தேதி காலை 7 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராத னைகளும், 10 மணிக்கு சிறப்பு சொற்பொழிவும், மாலை 6 மணிக்கு 108 திருவிளக்கு பூஜையும் நடை பெற்றது. தொடர்ந்து 13-ந் தேதி காலை 7 மணிக்கு திருவாசகம் முற்றோதலும், இரவு 7 மணிக்கு பெண் அழைப்பு நிகழ்ச்சியில் வேலூர் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் இருந்து சீர்வரிசை தட்டுகளு டன், பூரண கும்பங்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு வேலூர் மாணிக்கவாசகர் திருமண மண்டபத்திற்கு அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று காலை 10 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும் மாலை 5 மணிக்கு மீனாட்சி அம்மை உடனுறை சொக்க நாதர் சுந்தரேஸ்வர பெரு மான் திருமண கோலத்திலும் மற்றும் 63 நாயன்மார்களின் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சி யும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பரமத்தி வேலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு மீனாட்சியம்மை உடனுறை சொக்கநாத பெருமான் திருக்கல்யாண விழாவை கண்டுகளித்தனர். நிகழ்ச்சிக் கான ஏற்பாடுகளை மீனாட்சி யம்மை உடனுறை சொக்க நாத பெருமான் திருக் கல்யாண குழுவினர், மாணிக்கவாசகர் அருட்பணி மன்றத்தினர் மற்றும் பொது மக்கள் செய்திருந்தனர்.

    • ரெகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் கோவிலில் பேட்டை துள்ளல், ஆராட்டு விழா நடந்தது.
    • விழாவில் ஆயிரக்கணக்கானோருக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.



    ராமநாதபுரம் அருகே ெரகுநாதபுரம் சித்திரவல்லபை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜையை முன்னிட்டு இன்று காலை உற்சவருக்கு 16 வகையான அபிஷேகதத்துடன் ஆராட்டு விழா நடந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அருகே ரெகுநாதபுரத்தில் புகழ் பெற்ற வல்லபை அய்யப்பன் ஆலயம் உள்ளது. எருமேலிக்கு அடுத்தபடியாக பேட்டை துள்ளல் விழாவும், பம்பைக்கு அடுத்தபடியாக ஆராட்டுவிழாவும் ஆண்டு தோறும் வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது. தென் மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு ஊர்களிலிருந்தும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2 ஆண்டுகள் கொரோனா கட்டுப்பாடு காரணமாக கோவில் வளாகத்திற்குள் எளிமையாக மண்டல பூஜை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தற்போது கட்டுப்பாடுகள் முற்றிலும் தளர்த்தப்பட்டதால் வெகு விமர்சையாக நடத்த முடிவு செய்தனர்.

    கார்த்திகை மாதம் முதல் நாளில் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் கோவிலில் மாலை அணிந்து விரதம் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த டிச. 18-ந்தேதி மண்டல பூஜை விழாவுக்கான கொடியேற்றம் நடந்தது. நேற்று 26-ந்தேதி மாலை கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க பள்ளி வேட்டை புறப்பாடு (நகர் ஊர்வலம்) நடந்தது. அப்போது கோவில் நடை சாத்தப்பட்டது.

    இன்று மண்டல பூஜையை முன்னிட்டு காலை 5 மணிக்கு தலைமை குருக்கள் ஆர்.எஸ்.மோகன்சுவாமி தலைமையில் கணபதி ஹோமம் நடந்தது. பின்னர் நூற்றுக்கணக்கான பக்தர்கள்

    ரெகுநாதபுரம் முத்துநாச்சியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். அங்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு, கோவிலிலிருந்து அய்யப்ப பக்தர்கள் ரெகுநாதபுரம் வீதிகளின் வழியாக ஆடிப்பாடி, வேடமிட்டு, வண்ணக்கலவை பூசி அய்யப்பா முழக்கத்துடன் பேட்டை துள்ளல் நிகழ்ச்சி நடத்தினர். அலங்காரம் செய்யப்பட்ட வல்லபை அய்யப்பன் உற்சவர் பஸ்மகுளத்திற்கு பக்தர்கள் ஊர்வலமாக சுமந்து சென்று அங்கு உற்சவருக்கு 16 வகையான அபிஷேகதத்துடன் ஆராட்டு விழா நடந்தது. தொடர்ந்து சன்னிதானத்தின் முன்புறம் உள்ள தங்கமுலாம் பூசப்பட்ட கொடி கம்பத்தில் கொடியிறக்கம் செய்யப்பட்டது. அப்போது பக்தர்கள் சாமியே சரணம் அய்யப்பா என்று பக்தி பரவசத்துடன் முழக்கமிட்டனர். இதையடுத்து மூலவருக்கு 33 வகையான மகா அபிஷேகம் நடத்தப்பட்டு சிறப்பு தீபாராதனை, பஜனை நடந்தது. விழாவில் ஆயிரக்கணக்கானோருக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.

    வருகிற 31-ந்தேதி காலையில் இருமுடி கட்டுதலும். இரவு சிறப்பு பஜனை, சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. இரவு 12 மணிக்கு புத்தாண்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு சபரிமலை யாத்திரை புறப்பாடு நடக்கிறது.

    இதற்கான சிறப்பான ஏற்பாடுகளை வல்லபை அய்யப்பன் சேவை நிலையம் அறக்கட்டளை நிறுவனர் ஆர்.எஸ். மோகன்சுவாமி ஆலோசனையின் பேரில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    ×