என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "WWI"

    முதல் உலகப் போரின் நூற்றாண்டு நினைவுநாளையொட்டி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில் ஒருமைப்பாடு, சகோதரத்துவத்தால் போரினால் ஏற்படும் இறப்புகளை தவிர்ப்போம் என குறிப்பிட்டுள்ளார். #Modi #Tributes #Indiansoldiers #WWI
    புதுடெல்லி:

    முதல் உலகப் போர் முடிவுக்கு வந்த நூற்றாண்டு நினைவு நாளான இன்று உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் உயிர்நீத்த தங்கள் நாட்டு வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    டெல்லியில் உள்ள முதல் உலகப் போர் தியாகிகள் நினைவு சின்னத்தில் ராணுவ உயரதிகாரிகளும், பொதுமக்களும் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.



    இந்நிலையில், முதல் உலகப் போரின் நூற்றாண்டு நினைவுநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள செய்தியில் ஒருமைப்பாடு, சகோதரத்துவத்தால் போரினால் ஏற்படும் இறப்புகளை தவிர்ப்போம் என குறிப்பிட்டுள்ளார்.

    முதல் உலகப் போரில் இந்தியாவுக்கு நேரடியாக தொடர்பு இல்லாவிட்டாலும் அமைதியை நிலைநாட்டும் நோக்கத்தில் இதில் நமது வீரர்களும் பங்கேற்று போரிட்டனர்.

    இந்த அதிபயங்கரமான போர் முடிவடைந்த நூற்றாண்டு நினைவுநாளை அனுசரிக்கும் இந்நாளில் சகோதரத்துவம் மற்றும் ஒருமைப்பாட்டுடன் அமைதிப் பாதையில் செல்வதன் மூலம் மீண்டும் இதுபோன்ற உயிரிழப்புகளும், பேரழிவும் ஏற்படாத சூழலை உருவாக்கும் நமது நிலைப்பாட்டில் என்றென்றும் உறுதியாக நிற்போம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். #Modi #Tributes #Indiansoldiers #WWI

    ×