என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "X Site"
- பாலிவுட் மூத்த நடிகர் அமிதாப் பச்சன் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- உலகக்கோப்பை இறுதிப்போட்டியை தான் பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகமான 2007-ல் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் இந்தியா டி20 உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் இருந்தது. இந்த நிலையில் 17 வருடத்திற்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. நீண்ட இடைவெளிக்குப் பின் இந்தியா பெற்றுள்ள இந்த வெற்றியை நாடே கொண்டாடி வருகிறது.
அரசியல் தலைவர்கள் சினிமா பிரபலங்கள் தொழிலதிபர்கள் என இந்திய அணிக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.மேலும் இந்திய அணியின் வெற்றிக்குப் பிறகு அடுதடுத்து சுவாரஸ்யமான விஷயங்களும் வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில், பாலிவுட் மூத்த நடிகர் அமிதாப் பச்சன் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும், இன்று அதிகாலை அவர் நடத்தி வரும் பிளாகில் எழுதி பதிவிட்ட அவர், இந்தியா தென் ஆப்பிரிக்கா மோதிய உலகக்கோப்பை இறுதிப்போட்டியை தான் பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார். அதற்கு அவர் தெரிவித்துள்ள காரணம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. அதாவது, அவரது பதிவில், 'ஒருவழியாக உற்சாகமும், அச்சமும் நிறைந்த இந்த போட்டி நிறைவடைத்துவிட்டது. இந்த போட்டியை நான் டிவியில் பார்க்கவில்லை. நான் பார்த்தால் இந்தியா தோற்றுவிடும் என்பதாலேயே பார்க்கவில்லை' என்று தெரிவித்துள்ளார்.
இதோபோல எக்ஸ் தளத்தில் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் தான் போட்டியை பார்த்தால் இந்தியா தோற்றுவித்திடும் என்பதால் நான் போட்டியை பார்க்காமல் தியாகம் செய்தேன் நான் என்ன செய்யட்டும் சுந்தர் என கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சையை குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த சுந்தர் பிச்சை, போட்டியை பார்க்காததற்கு மிக்க நன்றி என்று தெரிவித்துள்ளார். மேலும் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு அவர் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஆபாச சித்தரிப்புகளை யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் பதிவிடவும் பகிரவும் அனுமதி வழங்கும் முடிவை எக்ஸ் நிறுவனம் அறிவித்தது.
- மொத்தம் 230,892 இந்திய கணக்குகள் எக்ஸ் தளத்தில் நீக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
முதன்மை சமூக வலைதளமான டிவிட்டரை விலைக்கு வாங்கி அதை எக்ஸ் என பெயர் மாற்றியது உட்பட பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்.
சமீபத்தில் ஆபாச சித்தரிப்புகளை யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் பதிவிடவும் பகிரவும் அனுமதி வழங்கும் முடிவை எக்ஸ் நிறுவனம் அறிவித்தது. சட்டவிரோதமான வகையில் உள்ள ஆபாச பதிவுகள் நீக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறலை ஊக்குவித்தல், சுயநினைவில் இல்லாத நிலையில் இருக்கும்போது ஒருவரை ஆபாசமாக சித்தரித்து Non - consensual nudity புகைப்படத்தையோ வீடியோவையோ பதிவிடுதல் ஆகியவற்றில் ஈடுபட்ட 2,29,925 இந்திய கணக்குகளை எக்ஸ் தளம் அதிரடியாக தடை செய்துள்ளது.
மேலும் 967 கணக்குகள் நாட்டில் தீவிரவாதத்த்தை ஊக்குவித்த காரணத்தால் நீக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் 230,892 இந்திய கணக்குகள் எக்ஸ் தளத்தில் நீக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதிலும் இருந்து பெறப்பட்ட 17,580 புகார்கள் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை திறமையாக நடத்தி முடித்தார்.
- தமிழ்நாடு முதன்முறையாக ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது.
சென்னை:
சென்னையில் 'கேலோ' இந்தியா விளையாட்டு போட்டிகள் கடந்த 19-ந் தேதி தொடங்கி 12 நாட்கள் நடைபெற்றது. நேற்றுடன் போட்டிகள் நிறைவடைந்தன.
இதில் தமிழக வீரர்கள் எண்ணற்ற பதக்கங்களை பெற்றனர். இந்த விளையாட்டு போட்டியை திறமையாக நடத்தி முடித்த இளைஞர்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது 'எக்ஸ்' வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-
பல சர்வதேச விளையாட்டு நிகழ்வுகள் மூலம் சமீபத்தில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் இந்தியாவின் விளையாட்டு தலைநகராகவும், உலகளவில் விளையாட்டு மையமாகவும் தமிழ்நாடு தனது நிலையை உறுதிப்படுத்தி உள்ளது.
கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் தமிழ்நாடு 38 தங்கம், 21 வெள்ளி மற்றும் 39 வெண்கலம் என 98 பதக்கங்களுடன் ரன்னர் ஆனது.
எங்களது சாம்பியன்களின் ஒரு அற்புதமான செயல்திறன் கேலோ இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் வரலாறு படைத்துள்ளது. தமிழ்நாடு முதன்முறையாக ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது.
இதற்காக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்உதயநிதி ஸ்டாலினுக்கும், கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியை குறைவின்றி நடத்தியதற்காக அவரது குழுவினருக்கும் எனது வாழ்த்துக்கள்.
வருங்கால நட்சத்திரங்களான நமது திறமையான விளையாட்டு வீரர்களுக்கு இந்த சாதனை வழி வகுக்கும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்