என் மலர்
நீங்கள் தேடியது "Yashika Aannand"
- அவர் கடைசியாக படிக்காத பக்கங்கள் என்ற படத்தில் நடித்திருந்தார்.
- யாஷிகா அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
நடிகை, மாடல், தொலைக்காட்சி பிரபலம் என பன்முகங்களை கொண்டவர் யாஷிகா ஆனந்த். தனது 14 வயதிலேயே மாடலிங் செய்ய தொடங்கி விட்டார். 2016-ம் ஆண்டு வெளியான கவலை வேண்டாம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

தொடர்ந்து துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து, மைனர் குடும்பம், நோட்டா, கழுகு 2, பெஸ்டி, கடமையை செய், பகீரா என பல படங்களில் நடித்தார். எனினும் சொல்லிக் கொள்ளும் படியாக எந்த பெரிய படத்திலும் அவர் நடிக்கவில்லை.
அவர் கடைசியாக படிக்காத பக்கங்கள் என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது இவன் தான் உத்தமன், ராஜ பீமா, சல்ஃபர் உள்ளிட்ட படங்களில் யாஷிகா ஆனந்த் நடித்து வருகிறார்.
இந்நிலையில் யாஷிகா ஆனந்தின் கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். குறிப்பாக அவர் கிளாமர் போட்டோக்களை அதிகமாக பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில் யாஷிகாவின் படு கிளாமரான போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த போட்டோக்களுக்கு லைக்களும் கமெண்ட்களும் குவிந்து வருகின்றன.
- யாஷிகா ஆனந்துக்கு இன்ஸ்டாகிராமில் மட்டும் 41 லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் உள்ளார்கள்.
- ஆந்திராவை சேர்ந்த இவர், தனியார் டி.வி.யில் ஒளிபரப்பான 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார்.
'இருட்டு அறையில் முரட்டுகுத்து', 'நோட்டா', 'ஜாம்பி' உள்ளிட்ட படங்களில் கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்து கலக்கியவர், யாஷிகா ஆனந்த்.
ஆந்திராவை சேர்ந்த இவர், தனியார் டி.வி.யில் ஒளிபரப்பான 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார்.
சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவ் ஆக இருக்கும் யாஷிகா ஆனந்துக்கு இன்ஸ்டாகிராமில் மட்டும் 41 லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் உள்ளார்கள். இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது தனது கவர்ச்சி படங்களையும் களமிறக்கி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
இதுவரை மாடர்ன் உடையில் மஜாவான படங்களை வெளியிட்டு வந்த அவர், தற்போது ரசிகர்கள் கிறக்கம் கொள்ளும் வகையில் சேலையில் கவர்ச்சி விருந்து படைத்துள்ளார். அந்த படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

ரசிகர்கள் அவரது அழகை புகழ்ந்து கமெண்டுகளை அள்ளி வீச, யாஷிகா ஆனந்த் உள்ளம் குளிர்ந்து போயுள்ளாராம்.
2021-ம் ஆண்டில் கார் விபத்தில் சிக்கிய யாஷிகா, தொடர் சிகிச்சை பெற்று மீண்டார். தற்போது மீண்டும் படங்களில் மும்முரமாக நடித்து வருகிறார். அந்தவகையில் இவன் தான் உத்தமன், ராஜ பீமா, சல்பர், சிறுத்தை சிவா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ரசிகர் ஒருவர் யாஷிகா ஆனந்தின் உருவத்தை நெஞ்சில் பச்சை குத்தியுள்ளார்.
- அதை பார்த்து அதிர்ச்சியான யாஷிகா ஆனந்த் ரசிகரை கண்டித்துள்ளார்.
தமிழில் 'துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டுக் குத்து, ஜாம்பி, சில நொடிகளில்' உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் யாஷிகா ஆனந்த். ஒரு பாடலுக்கு கவர்ச்சியாக குத்தாட்டமும் ஆடி வருகிறார்.
யாஷிகா ஆனந்துக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர். விபத்தில் சிக்கி மீண்டும் தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் ரசிகர் ஒருவர் யாஷிகா ஆனந்தின் உருவத்தை நெஞ்சில் பச்சை குத்திய புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து இருந்தார். அதை பார்த்து அதிர்ச்சியான யாஷிகா ஆனந்த் ரசிகரை சாடி உள்ளார்.
இதுகுறித்து யாஷிகா ஆனந்த் வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், ''இது பைத்தியக்காரத்தனமான செயல். இப்படி பச்சை குத்தும்போது எவ்வளவு வலி உங்களுக்கு ஏற்பட்டு இருக்கும். ஆனால் என் உருவத்தை பச்சை குத்திக்கொள்ளும் அளவுக்கு நான் தகுதியானவள் இல்லை. இதுமாதிரி செய்யாதீர்கள். இதற்கு பதில் உங்கள் அம்மாவை மகிழ்ச்சியாக வைத்திருங்கள். இதுபோல் வேறு யாரும் செய்யவேண்டாம்'' என்று கூறியுள்ளார்.




