என் மலர்
நீங்கள் தேடியது "YogiBabu"
- இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தூக்குதுரை’.
- இப்படத்தில் நடிகர் யோகிபாபு கதாநாயகனாக நடிக்கிறார்.
தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. இவர் தற்போது 'ட்ரிப்' படத்தை இயக்கிய இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் 'தூக்குதுரை' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இனியா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் மொட்ட ராஜேந்திரன், மகேஷ், பால சரவணன், சென்றாயன், மாரிமுத்து, நமோ நாராயணன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

மூன்று விதமான காலங்களில் நடைபெறும் நிகழ்வை மையமாக வைத்து உருவாகிவரும் இப்படத்தை ஓபன் கேட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மனோஜ் இசையமைக்கும் இப்படத்திற்கு ரவிவர்மா ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில், இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. காமெடி ஜானரில் உருவாகியுள்ள இந்த டீசரை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
- யோகிபாபு இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
- இவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக படத்தின் டைட்டிலை படக்குழு வெளியிட்டுள்ளது.
மலையாளத்தில் மாஸ்குரேட் என்ற வெப் சீரிஸை இயக்கிய சஜின் கே.சுரேந்திரன், தற்போது யோகி பாபு, ரமேஷ் திலக், காளி வெங்கட், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, மாஸ்டர் ஷக்தி ரித்விக், 'லவ் டுடே' பிராத்தனா நாதன் மற்றும் கல்கி ராஜா ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படத்தை இயக்கி வருகிறார்.

பவி கே பவன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஃபின் ஜார்ஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். இப்படத்தை 'ஈடன் ஃபிளிக்ஸ் புரொடக்ஷன்ஸ்' தாமஸ் ரென்னி ஜார்ஜ் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் கோவிந்த் வசந்த இசையமைத்துள்ளார். மல்டி ஸ்டாரர் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

இந்நிலையில் யோகிபாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டரை ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் இயக்குனர் மடோன் அஸ்வின் வெளியிட்டுள்ளனர். அதன்படி இப்படத்திற்கு 'வானவன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.
- டியூட் விக்கி எழுதி-இயக்கும் திரைப்படம் ‘மண்ணாங்கட்டி சின்ஸ் 1960'.
- இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.
யூ டியூப் சேனல் மூலம் புகழ் பெற்ற டியூட் விக்கி எழுதி-இயக்கும் திரைப்படம் 'மண்ணாங்கட்டி சின்ஸ் 1960'. இந்த படத்தில் நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க யோகி பாபு, தேவதர்ஷினி, கௌரி கிஷன், நரேந்திர பிரசாத் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ். லக்ஷ்மன் குமார் இப்படத்தை பெரும் பொருட் செலவில் தயாரிக்கிறார். இணை தயாரிப்பை ஏ.வெங்கடேஷ் மேற்கொள்கிறார். ஷான் ரோல்டன் இசையமைக்கும் இப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

இந்நிலையில், 'மண்ணாங்கட்டி சின்ஸ் 1960' திரைப்படத்தின் பூஜை நடைபெற்றது. இதில் நடிகர் யோகிபாபு மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். 'கோலமாவு கோகிலா' திரைப்படத்தில் நயன்தாராவும் யோகிபாபுவும் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- நடிகர் யோகிபாபு பல திரைப்பிரபலங்கள் படத்தில் நடித்து வருகிறார்.
- இவர் 2020-ஆம் ஆண்டு பார்கவி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. இவர் ரஜினி, விஜய், அஜித் என பல திரைப்பிரபலங்கள் படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஒரு சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

கடந்த 2020-ஆம் ஆண்டு யோகிபாபு, பார்கவி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு விசாகன் என்கிற ஆண் குழந்தை உள்ளது. இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு இந்த தம்பதிக்கு மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. யோகிபாபு தீவிர முருகர் பக்தர் என்பதால் தன் குழந்தைக்கு பரணி கார்த்திகா என பெயரிட்டுள்ளார்.

இந்நிலையில், யோகிபாபு தன்னுடைய மகளின் முதல் பிறந்தநாளை மிக பிரமாண்டமாக கொண்டாடினார். இதில் விஜய் சேதுபதி, சூர்யா, விஷால், உதயநிதி, ஜெயம் ரவி, கார்த்தி, விஜய் வசந்த் என திரைப்பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- பிரபல நகைச்சுவை நடிகர் யோகி பாபு கடந்த சில வருடங்களுக்கு முன்பு மஞ்சு பார்கவி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
- இந்த தம்பதியினருக்கு தீபாவளி தினத்தில் பெண் குழந்தை பிறந்தது.
தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக இருந்து வருபவர் யோகி பாபு. இவர் நடிப்பில் வெளியான காக்கிச் சட்டை, வேதாளம், ரெமோ, சர்கார், விஸ்வாசம், கூர்கா உள்ளிட்ட படங்களில் அனைவரின் கவனத்தை ஈர்த்தார். நடிகர்கள் ரஜினி, விஜய், அஜித், சிவகார்த்திக்கேயன், தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள யோகி பாபு, தற்போது தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார்.

மஞ்சு பார்கவி - யோகிபாபு
யோகிபாபு கடந்த சில வருடங்களுக்கு முன்பு மஞ்சு பார்கவி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தீபாவளி தினமான நேற்று இந்த தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அவருக்கு திரையுலகினர் ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் இருப்பது குறிப்பிடத்தக்கது.
- ரஜினியின் 169-வது திரைப்படமான ஜெயிலர் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார்.
- இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை வெளியாகி வைரலாகி வருகிறது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 169-வது படம் ஜெயிலர். இதில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

வசந்த் ரவி - ரம்யா கிருஷ்ணன்
இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று காலை 11 மணிக்கு படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.

யோகிபாபு - விநாயகன்
இந்நிலையில் இப்படத்தில் இணைந்துள்ள பிரபலங்கள் குறித்து படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ஜெயிலர் படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர்கள் யோகிபாபு, வசந்த் ரவி மற்றும் மலையாள நடிகர் விநாயகன் இணைந்துள்ளதாக படக்குழு வீடியோவுடன் அறிவித்துள்ளது.
- ரஜினி, விஜய், அஜித் என அனைத்து பெரிய கதாநாயகர்கள் படங்களில் யோகிபாபு நடித்துள்ளார்.
- சில தினங்களுக்கு முன்பு இவர் நடிப்பில் வெளியான பன்னி குட்டி படம் நல்ல வரவேற்பை பெற்றது.
2009-ஆம் ஆண்டு வெளியான யோகி படத்தின் மூலம் அறிமுகமானவர் யோகிபாபு. தமிழ் பட உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக உயர்ந்துள்ள இவர் ரஜினி, விஜய், அஜித் என அனைத்து பெரிய கதாநாயகர்கள் படங்களிலும் நடித்துள்ளார். தற்போது கதாநாயகனாக உயர்ந்திருக்கும் இவர் சில படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இதற்கிடையில் ஏராளமான படங்கள் இவரின் கைவசம் உள்ளது.

யோகிபாபு சமூக வலைத்தளத்தில் ஒரு போஸ்டருடன் பகிர்ந்திருக்கும் விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், இந்த படத்தில் நண்பர் நிதின்சத்யா ஹீரோவாக நடித்துள்ளார். நான் நான்கு காட்சிகளில் மட்டுமே நடித்துள்ளேன். தயவுசெய்து இதைப் போன்று விளம்பரம் செய்யாதீர்கள். நன்றி என்று குறிப்பிட்டுள்ளார். உடன் நடிக்கும் நடிகர்களின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு யோகிபாபு பகிர்ந்திருக்கும் இந்த பதிவு அனைவரின் பாராட்டுக்களையும் பெற்று பேசும்பொருளாகி உள்ளது.

இந்நிலையில் இதனை குறிப்பிட்டு நடிகர் நிதின் சத்யாவின் பதிவு வைராலாகி வருகிறது. அதில், ஒரு நண்பனை விட்டுகுடுக்காம ரசிகர்களையும் விட்டுகுடுக்காம அந்த மனசு தான் யோகிபாபு என்று பதிவிட்டுள்ளார்.
ஒரு நண்பனை விட்டுகுடுக்காம ரசிகர்களையும் விட்டுகுடுக்காம அந்த மனசு தான் @iYogiBabu 🙏🙏🙏 https://t.co/t1UuolEjjB
— Nitinsathyaa (@Nitinsathyaa) July 13, 2022
- ரஜினியின் 169-வது திரைப்படமான ஜெயிலர் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 169-வது படம் ஜெயிலர். இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ள நிலையில் இதர நடிகர், நடிகையர் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. கதாநாயகியாக நடிக்க ஐஸ்வர்யா ராய் பெயர் அடிபடுகிறது. இவர் ஏற்கனவே ரஜினியுடன் எந்திரன் படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் ஜெயிலர் படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க யோகிபாபுவிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தில் ரஜினியுடன் தொடர்ச்சியாக அனைத்து காட்சிகளிலும் நடிக்கும் வகையில் யோகிபாபு கதாபாத்திரம் உருவாக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்குமுன் தர்பார் படத்தில் ரஜினியுடன் யோகிபாபு நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

யோகிபாபு
நெல்சன் திலீப்குமாரின் முந்தைய படங்களான கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் ஆகிய 3 படங்களிலும் யோகிபாபு நடித்து இருந்தார். ஜெயிலுக்குள் நடக்கும் மோதலை மையமாக வைத்து ஜெயிலர் படம் தயாராவதாகவும், ஜெயிலர் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.



