என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "young woman attack"
- ஜெராக்ஸ் கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி உள்ளது.
- காதல் திருமணம் என்பது இருபாலரும் ஒருவரையொருவர் முழுமையாகப் புரிந்து கொண்டு முறையான வாழ்க்கையை அமைத்துக் கொள்வது.
மதுரை:
நவநாகரீக வாழ்வில் டிஜிட்டல் மயம் தவிர்க்க முடியாததாகி விட்டது. கடிதங்களில் தொடங்கிய தகவல் தொடர்பு இன்று கையடக்கத்திற்கு வந்து விட்டது. செல்போன் இல்லாத கரங்களே இல்லை, அதற்கு குழந்தைகளும் விதிவிலக்கல்ல என்பது போல் எங்கு பார்த்தாலும், எந்த நேரமும் ஒவ்வொருவரும் கைகளில் ஏந்தி நிற்கும் செல்போன்களால் குற்றங்களும் கணக்கில் அடங்காமல் போய்விட்டது.
தும்பை விட்டு வாலை பிடித்த கதையாக எத்தனையோ விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டாலும், துளியும் பிரயோஜனமில்லை என்பதற்கு சான்றாக அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்களே சாட்சி. அதிலும் பருவம் தவறும் மாற்றங்களால் பாலியல் உள்ளிட்ட பிரச்சனைகளும் இந்த சமூகத்தில் புரையோடிப் போன ஒன்றாகவே இருக்கிறது.
அதிலும் திசைமாறிச் செல்லும் இளைஞர்களின் காதல் காவியம் பலரை பாதிப்படைய செய்துள்ளது. கண்டதும் காதல், ஈர்க்கும் வசீகரத்தால் இளம்பெண்களை தன்பால் இழுக்கும் மாய வித்தைகளை கற்றுக் கொண்டு அவர்கள் செய்யும் அட்டூழியங்களால் பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் வயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டு நாட்களை காலத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
இதில் காலத்தின் கட்டாயத்தாலும், குடும்ப சூழ்நிலை காரணமாகவும் வேலைக்கு செல்லும் இளம்பெண்கள் தங்களையும், குடும்பத்தையும் இழந்து பின்னர் நிற்கதியாக நிற்கும் சம்பவங்களை படித்தும், பார்த்தும், அறிந்தும் மாற்றம் மட்டும் வரவேயில்லை. பாலியல் கவர்ச்சி என்பது கொடூர கொலையில் முடிந்த சம்பவங்கள் ஏராளமாக அரங்கேறியுள்ளன.
சென்னை கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்த மாணவி சத்யா (20), பரங்கி மலை ரெயில் நிலையத்தில் ஓடும் ரெயிலில் தள்ளிக் கொல்லப்பட்டது தமிழகத்தையே உறைய வைத்தது. தன்னைக் காதலிக்க மறுத்த சத்யாவை ஒருதலையாக காதலித்த சதீஷ் (23) என்ற போலீஸ் குடும்பத்தை சேர்ந்தவர் முதலில் காதலிக்க வற்புறுத்தி, பின்னர் சரமாரியாக தாக்கியும் உடன்படாததால் ஓடும் ரெயிலில் இருந்து தள்ளி கொலை செய்தார்.
கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் 24-ந்தேதி தன்னைக் காதலிக்க மறுத்த சாப்ட்வேர் என்ஜினீயராக சுவாதியை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் வைத்து அவரை, ஒருதலையாக காதலித்த ராம்குமார் என்பவர் வெட்டிக்கொன்றார். பின்னர் அவரும் தற்கொலை செய்துகொண்டார். இதேபோல் தன்னை காதலிக்க மறுத்தார் என்ற ஒரே காரணத்துக்காக விழுப்புரத்தை அடுத்த வ.பாளையத்தில் சிறுமி நவீனாவை, செந்தில் என்ற வாலிபர் தீ வைத்து எரித்துக் கொலை செய்தார்.
விருத்தாசலம் அருகே கறிவேப்பிலைக்குறிச்சியில் கல்லூரி மாணவி திலகவதி தன்னை காதலிக்க மறுத்ததால் கடந்த 2019-ம் ஆண்டு ஆகாஷ் என்பவர் கத்தியால் குத்திக்கொலை செய்தார். 2021-ல் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி சுவேதாவை தாம்பரம் ரெயில் நிலையத்தில் வைத்து ராமசந்திரன் என்ற வாலிபர் குத்திக்கொலை செய்தார். 2022-ல் காதலிக்க மறுத்த உறவுக்கார பெண்ணும், கல்லூரி மாணவியுமான கீர்த்தனாவை, புதுச்சேரி சந்நியாசிக்குப்பத்தில் முகேஷ் என்ற வாலிபர் வெட்டிக் கொன்றார்.
கரூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவி சோனாலியை அவரது வகுப்பறையில் வைத்து, அதே கல்லூரியில் பயின்ற மாணவர் உதயகுமார் என்பவர் மரக்கட்டையால் அடித்தே கொலை செய்தார். இதற்கு காரணமும் தன்னை காதலிக்க மறுத்ததுதான்.
சற்றே இதுபோன்ற விரும்பத்ததாக சம்பவங்கள் நினைவில் இருந்து மறைந்த நிலையில் நேற்று தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த மல்லிப்பட்டிணம் அரசு பள்ளியில் ஆசிரியை ரமணியை, அவரை ஒருதலையாக காதலித்து வந்த மதன்குமார் என்பவர் கத்தியால் குத்தி கொலை செய்தார். பள்ளியில் நடந்த இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் நேற்று இரவு மதுரையிலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:-
மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள சக்கரா நகரில், தனியார் ஒருவர் நடத்தி வரும் ஜெராக்ஸ் கடையில் அதே பகுதியைச் சேர்ந்த லாவண்யா என்பவர் வேலைபார்த்து வந்தார். குடும்ப வறுமையால் கல்லூரி படிப்பை தொடர முடியாத சூழலுக்கு தள்ளப்பட்ட லாவண்யா கடந்த நான்கு வருடமாக பணிபுரிந்து வருகிறார்.
இந்தநிலையில் லாவண்யா வேலைக்கு வரும்போதும், பணி முடிந்து வீடு திரும்பும்போது மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த சித்திக் ராஜா (வயது 25 ) என்பவர் பின்தொடர்ந்து சென்று தொல்லை கொடுத்து வந்துள்ளார். பல சமயங்களில் லாவண்யாவை வழிமறித்து தன்னை காதலிக்க வற்புறுத்தி உள்ளார்.
ஆனால் அதனை தட்டிக் கழித்த லாவண்யா தனது குடும்ப நிலை குறித்து பக்குவமாக எடுத்துக்கூறியும் அதனை துச்சமாக நினைத்த சித்திக்ராஜா எனக்கு நீதான்... என்ற வசனங்களும் பேசி மயக்க முயன்றுள்ளார். எப்பேற்பட்ட நிலையிலும் உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று லாவண்யா தனது முடிவில் தெளிவாக இருந்தார்.
இந்தநிலையில் சம்பவத்தன்று லாவண்யா வேலை பார்க்கும் ஜெராக்ஸ் கடைக்கு நேரில் சென்று லாவண்யாவிடம் நீண்ட நேரமாக பேச்சுக் கொடுத்தவாறு இருந்தார். ஆனால் அவர் மசியாததால் ஆத்திரம் அடைந்த சித்திக் ராஜா, சேரில் அமர்ந்திருந்த லாவண்யாவை கைகளால் காட்டுமிராட்டித்தனமாக தாக்கினார்.
இதில் நிலைகுலைந்த லாவண்யா இருக்கையில் இருந்து பின்புறமாக கீழே விழுந்தார். அப்போது குனிந்தவாறு சித்திக்ராஜா தாக்கினார். லாவண்யாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். உடனே சித்திக் ராஜா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதில் பலத்த காயம் அடைந்த லாவண்யா மயக்கம் அடைந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து ஒத்தக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பான காட்சிகள் அந்த ஜெராக்ஸ் கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி உள்ளது. தற்போது அந்த வீடியோ வைரலாகி உள்ளது.
காதல் திருமணம் என்பது இருபாலரும் ஒருவரையொருவர் முழுமையாகப் புரிந்து கொண்டு முறையான வாழ்க்கையை அமைத்துக் கொள்வது. பாலியல் கவர்ச்சியால் ஏற்படும் காதல், விரைவிலேயே கசந்துவிடும் என்பதை இளைஞர்கள் உணர வேண்டும் என்பதே ஒட்டு மொத்த பெண் பிள்ளைகளை பெற்றவர்களின் எதிர்பார்ப்பு.
- கவிதா, பிரகாஷிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார்.
- புகாரின் பேரில் காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து கள்ளக்காதலியை கத்தியால் குத்திய பிரகாசை தேடி வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் காமநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் கவிதா (வயது 35). சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்தபோது அதே கம்பெனியில் வேலை பார்த்து வந்த ஒரு வாலிபருடன் காதல் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதில் அவர்களுக்கு குழந்தை ஒன்றும் பிறந்தது.
இந்தநிலையில் கவிதாவுக்கும் அவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து அவரது கணவர் குழந்தையை அழைத்து சென்று விட்டார். கவிதா திருப்பூரில் தனிமையில் வசித்து வந்துள்ளார்.
அப்போது நாகப்பட்டினத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கவிதா, பிரகாஷிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். அதற்கு பிரகாஷ் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.
நேற்று இரவு வழக்கம் போல் கவிதாவும் பிரகாசும் சந்தித்து உல்லாசம் அனுபவித்து உள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபம் அடைந்த பிரகாஷ், வீட்டின் சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து கவிதாவின் கழுத்தில் குத்தி விட்டு தப்பியோடி விட்டார். இதில் பலத்த காயம் அடைந்த கவிதா சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து சென்றனர்.
பின்னர் கவிதாவை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து கள்ளக்காதலியை கத்தியால் குத்திய பிரகாசை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- தனி அறையில் தாக்குதல் நடந்ததால் வெளியில் இருந்த மற்ற ஊழியர்களுக்கு தெரியவில்லை.
- வாலிபர் வெளியே சென்ற பின்னரே இளம்பெண்ணை தாக்கி நகை, கம்மலை பறித்து சென்று இருப்பது தெரிந்தது.
போரூர்:
விருகம்பாக்கம், ஆற்காடு சாலையில் மசாஜ் சென்டர் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 5-ந்தேதி வாலிபர் ஒருவர் மசாஜ் செய்ய வந்தார். அவரிடம் ரூ.1000 கட்டணம் வசூல் செய்யப்பட்டது.
பின்னர் அங்கிருந்த 23 வயது இளம்பெண் ஒருவர் அந்த வாலிபருக்கு மசாஜ் செய்து விட்டார். இளம்பெண்ணின் அழகில் மயங்கிய வாலிபர் சிறிது நேரம் கழித்து செக்ஸ் மசாஜ் செய்யும்படி அவரை வற்புறுத்தினார்.
இதற்கு இளம்பெண் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர் இளம்பெண்ணை சரமாரியாக தாக்கி அவரது கை, கால்களை கட்டி போட்டார். மேலும் அவர் அணிந்திருந்த செயின் மற்றும் கம்மலை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.
தனி அறையில் இது நடந்ததால் வெளியில் இருந்த மற்ற ஊழியர்களுக்கு தெரியவில்லை. வாலிபர் வெளியே சென்ற பின்னரே இளம்பெண்ணை தாக்கி நகை, கம்மலை பறித்து சென்று இருப்பது தெரிந்தது.
இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் மசாஜ் சென்டரில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது செக்ஸ் மசாஜ் செய்யக் கூறி இளம்பெண்ணை தாக்கி நகையுடன் தப்பியது அனகாபுத்தூரை சேர்ந்த கட்டிட தொழிலாளியான அஜித் என்கிற சுரேஷ் (வயது 25) என்பது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
அவர் மசாஜ் விளம்பரத்தை பார்த்து மது போதையில் வந்ததாகவும், செக்ஸ் மசாஜ்க்கு ஒத்துழைப்பு கொடுக்காததால் பெண் ஊழியரை தாக்கி கம்மல், செயினை பறித்து சென்றதாகவும் போலீசாரிடம் தெரிவித்து உள்ளார்.
- திருமணமான பெண்ணின் வீட்டுக்கு, அவரது கணவர் இல்லாத நேரத்தில் வாலிபர் ஒருவர் சென்று வந்ததை கிராம மக்கள் பார்த்தனர். அவர்கள் இருவரையும் கண்டித்தனர்.
- அதன்பின்பும் அவர்கள் சந்திப்பதை நிறுத்தி கொள்ளவில்லை. இதையடுத்து அவர்களை கையும்,களவுமாக பிடிக்க கிராமத்தினர் திட்டமிட்டனர்.
தேவாஸ்:
மத்திய பிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்டத்தில் போர்பதேவ் கிராமத்தில் திருமணமான இளம்பெண், கணவர் மற்றும் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.
இவர்களின் வீட்டுக்கு அருகே வாலிபர் ஒருவர் குடியிருந்தார். பக்கத்து வீடு என்பதால், அந்த வாலிபருடன் பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகரித்தது.
இதனால் அந்த பெண்ணின் கணவர், வேலைக்கு சென்ற பின்னர், வாலிபரை வீட்டுக்கு அழைத்து அந்த பெண் உல்லாசமாக இருந்தார்.
திருமணமான பெண்ணின் வீட்டுக்கு, அவரது கணவர் இல்லாத நேரத்தில் வாலிபர் ஒருவர் சென்று வந்ததை கிராம மக்கள் பார்த்தனர். அவர்கள் இருவரையும் கண்டித்தனர்.
அதன்பின்பும் அவர்கள் சந்திப்பதை நிறுத்தி கொள்ளவில்லை. இதையடுத்து அவர்களை கையும்,களவுமாக பிடிக்க கிராமத்தினர் திட்டமிட்டனர்.
அதன்படி, அந்த பெண்ணின் வீட்டை கண்காணித்து வந்த கிராமத்தினர். சம்பவத்தன்று அந்த பெண்ணை கையும், களவுமாக பிடித்தனர்.
பின்னர் அவரை வீட்டில் இருந்து வெளியே அழைத்து வந்தனர். அங்கு கிராம மக்கள் முன்னிலையில் அந்த பெண்ணுக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டது. மேலும் அந்த பெண்ணின் கணவரை வரவழைத்து அவரை பெண்ணின் தோளில் ஏற்றி கிராமத்தை சுற்றிவரும்படி கூறினர்.
இந்த சம்பவத்தை அந்த பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். அது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இது பற்றி அறிந்த தேவாஸ் மாவட்ட போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் சம்பவம் நடந்த பகுதியை கண்டறிந்த போலீசார், போர்பதேவ் கிராமத்தை சேர்ந்த 11 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே உள்ள திருவல்லம் பாய்ச்சலூர் பகுதியை சேர்ந்தவர் அனீஸ் (வயது 27). இவரது மனைவி ஆதிரா (23).
அனீசுக்கும் அவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர்களுக்கும் இடையே தகராறு இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பும் அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் தன்னையும், தனது குழந்தையையும் அனீஸ் தாக்கியதாக திருவல்லா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இந்த புகார் தொடர்பான விசாரணைக்கு போலீஸ் நிலையத்திற்கு வருமாறு போலீசார் கூறியதால் அனீசும், அவரது மனைவி ஆதிராவும் திருவல்லா போலீஸ் நிலையத்திற்கு சென்றனர்.
திருவல்லா போலீஸ் நிலையத்தில் விசாரணை நடந்த போது அனீசை போலீசார் தாக்கி உள்ளனர். இதனால் பயந்து போன அனீஸ் தனது மனைவியை அழைத்துக் கொண்டு போலீஸ் நிலையத்தில் இருந்து ஓட்டம் பிடித்தார். உடனே அவர்கள் 2 பேரையும் போலீசார் விரட்டிச் சென்றனர்.
அவர்கள் பிடியில் ஆதிரா மட்டும் சிக்கிக்கொண்டார். அனீஸ் தப்பித்த ஆத்திரத்தை அவர் மீது காட்டும் விதத்தில் ஆதிராவை 2 போலீஸ்காரர்களும் நடுரோட்டில் வைத்து சரமாரியாக தாக்கினார்கள். ஷு காலாலும் அவரை மிதித்தனர். பிறகு அவரை போலீஸ் நிலையத்திற்கு இழுத்துச் சென்றனர்.
இதுபற்றி விசாரணை நடத்திய பத்தனம்திட்டா போலீஸ் கமிஷனர் சஞ்சய் குமார், நடுரோட்டில் பெண்ணை தாக்கிய 2 போலீஸ்காரர்களையும் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.
போலீசார் தாக்கியதில் படுகாயம் அடைந்த ஆதிரா தற்போது சிகிச்சைக்காக திருவல்லா அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
நித்திரவிளை அருகே உள்ள சின்னத்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி ஷார்மி (வயது 32).
இவர் வெளியில் செல்லும்போது காஞ்சாம்புறம் தேனாம்தோட்டம் பகுதியைச் சேர்ந்த ராஜன் (36) என்பவரது ஆட்டோவை பயன்படுத்தி வந்தார். சமீபகாலமாக ராஜனின் ஆட்டோவில் செல்லாமல் வேறு ஒரு ஆட்டோவில் சென்றார்.
இதனால் ராஜன், ஆத்திரத்தில் ஷார்மியுடன் தகராறில் ஈடுபட்டார். நேற்று ஷார்மி பாலாமடம் பகுதியில் சென்றபோது அவரை தடுத்து நிறுத்தி ராஜன் தாக்கினார். இதில் காயம் அடைந்த ஷார்மி குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
பின்னர் இதுபற்றி ஷார்மி நித்திரவிளை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜனை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்