search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "youth murder case"

    • வழக்கு விசாரணை திருச்சூர் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
    • அரசு தரப்பில் 28 முக்கிய ஆவணங்கள் உள்பட 109 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் பெரிங்கோட்டுக்கரை பகுதியை சேர்ந்தவர் ஆதர்ஷ்(வயது25). இந்திய ஜனநாயக வாலிபர் கூட்டமைப்பின் நிர்வாகி யான இவர், கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் குட்டிக்காடு பகுதியில் வைத்து கொலை செய்யப்பட்டார்.

    காரில் பயங்கர ஆயதங்களுடன் வந்த கும்பல் ஆதர்சை படுகொலை செய்தது. இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நிஜில்(வயது27), பிரஜில்(28), மனு(27), ஷனில்(27), ஷிஹாப்(30), பிரஷ்னோவ்(32) ஆகிய 6பேரை கைது செய்தனர்.

    இந்த வழக்கு விசாரணை திருச்சூர் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கில் மொத்தம் 46 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர். அரசு தரப்பில் 28 முக்கிய ஆவ ணங்கள் உள்பட 109 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது.

    இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட நிஜில், பிரஜில், மனு, ஷனில், ஷிஹாப், பிரஷ்னோவ் ஆகிய 6 பேரும் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டனர். அவர்கள் 6 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் தலா 4 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி சாலிஹ் தீர்ப்பு கூறினார்.

    அபராத தொகையை கட்டத்தவறும் பட்சத்தில் கூடுதலாக 4 ஆண்டுகள் சிறைதண்டனை அனுப விக்க வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்தார். இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 6 பேரையும் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

    கோவையில் வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிங்காநல்லூர்:

    கோவை சிங்காநல்லூர் காமாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் ரத்தினசாமி (வயது 33). லேத் பட்டறை தொழிலாளி.

    இவர் இன்று காலை ஒண்டிப்புதூர் மேம்பாலத்தின் கீழ்புறம், பட்டணம் ரோடு பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

    தகவல் அறிந்து மாநகர கிழக்கு சரக உதவி கமி‌ஷனர் சுரேஷ், இன்ஸ்பெக்டர் ஆனந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ரத்தினசாமி உடல் அருகே விறகு கட்டைகள் கிடந்தன. மர்மநபர்கள் அவரை கட்டையால் தலையில் தாக்கி கொலை செய்திருப்பது தெரிய வந்தது.

    ரத்தினசாமிக்கு சுமா என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். கொலை குறித்து தகவல் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் சம்பவ இடத்துக்கு ஓடி வந்தனர். ரத்தினசாமி உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதனர்.

    ரத்தினசாமியை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை நடந்தது? அவருக்கு யாருடனாவது முன் விரோதம் இருந்ததா? என போலீசார் விசாரித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாழம்பூர் ஏரிக்கரை பகுதியில் நடந்த வாலிபர் கொலை வழக்கில் சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகிறார்கள்.

    திருப்போரூர்:

    தாழம்பூர் ஏரிக்கரை பகுதியில் நேற்று முன் தினம் வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் பிணமாக கிடந்தார். தாழம்பூர் இன்ஸ்பெக்டர் பாண்டி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் விசாரணை நடத்தினர்.. இதில் கொலை செய்யப்பட்ட வாலிபர் சோழிங்கநல்லூர் காந்திநகர் ஓடை, பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த ஜான் சாலமன் (வயது 21) என்பது தெரியவந்தது.

    அதேபகுதியைச் சேர்ந்த அரவிந்த் அவருடைய நண்பர்களுடன் சேர்ந்து மது போதையில் ஜான் சாலமனை அடித்து கொலை செய்தது தெரியவந்தது. இறந்து போன ஜான் சாலமன் காதலித்த பெண்ணை அதே பகுதியை சேர்ந்த அரவிந்த் என்பவர் திருமணம் செய்து கொண்டார்.

    சமீபத்தில் அரவிந்த் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். மனைவியை கொடுமைப்படுத்தியதாக அரவிந்தை செம்மஞ்சேரி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியில் வந்த அரவிந்த் தன்னுடைய மனைவி இறந்ததற்கும், தான் சிறைக்கு சென்றதற்கும் ஜான் சாலமன் தான் காரணம் என்று கருதினார்.

    தனது நண்பர்களிடம் இது குறித்து தெரிவித்து சம்பவத்தன்று ஜான் சாலமனை மது குடிக்க தாழம் பூர் ஏரிக்கரைக்கு அழைத்து சென்றனர். அங்கு அனைவரும் மது அருந்தி உள்ளனர்.

    மது போதையில் இருந்த ஜான்சாலமனை அவர்கள் அருகில் இருந்த மரக்கிளையை உடைத்து சராமாரியாக அடித்து கொலை செய்தனர். இது தொடர்பாக தாழம்பூர் போலீசார் வழக்குபதிவு செய்து அரவிந்த், பத்மநாபன், 16 வயது சிறுவன் உள்பட 3 பேரை கைது செய்தனர். மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    தூத்துக்குடியில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி அந்தோணியார்புரம் 3 சென்ட் பகுதியை சேர்ந்த தொழிலாளி பாலமுருகன். இவரது மகன் அஜித்குமார் (வயது21). கோவையில் தங்கியிருந்து கூலி வேலை பார்த்து வந்தார்.

    பாலமுருகன் இதற்கு முன் தூத்துக்குடி ராஜபாண்டி நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அப்போது அவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த சங்கர் என்பவரின் குடும்பத்தினருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து பாலமுருகன் அந்தோணியார்புரம் 3 சென்ட் பகுதிக்கு குடும்பத்துடன் குடி பெயர்ந்தார்.

    இந்நிலையில் கோவையில் வேலை பார்த்து வந்த அஜித்குமார் சமீபத்தில் அங்கிருந்து தூத்துக்குடிக்கு வந்துவிட்டார். அதன்பிறகு கோவைக்கு திரும்பி செல்லாமல் இங்கேயே கூலி வேலை பார்த்து வந்தார். ராஜபாண்டி நகர் பகுதியில் உள்ள கோவிலில் தற்போது திருவிழா நடந்து வருகிறது. அதில் கலந்து கொள்வதற்காக அஜித்குமார் நேற்றிரவு அங்கு சென்றார்.

    திருவிழாவை பார்த்து விட்டு நள்ளிரவு ஒரு மணியளவில் தனது வீட்டிற்கு திரும்பி வந்து கொண் டிருந்தார். அப்போது ராஜபாண்டி நகரில் உள்ள மாதா கெபி அருகே அமர்ந்து 3 பேர் மது குடித்து கொண்டிருந்தனர்.

    அவர்களில் ஏற்கனவே அஜித்குமாரின் தந்தையுடன் தகராறு செய்து வந்த பக்கத்து வீட்டுக்காரரான சங்கரின் மகன் பாரதி (21) என்பவரும் இருந்தார். அவர்கள் 3 பேரும் அஜித்குமாரை வழிமறித்து ரகளையில் ஈடுபட்டு தாக்கினர். இதனால் ஆத்திரம் அடைந்த அஜித்குமார், ‘உங்களை வெட்ட வீட்டிற்கு சென்று அரிவாளை எடுத்து வருகிறேன்’ என ஆவேசமாக பேசியவாறு அங்கிருந்து வேகமாக சென்றார். இதனால் அதிர்ச்சியடைந்த பாரதி, சம்பவம் குறித்து தனது தந்தை சங்கரிடம் தெரிவித்தார்.

    இதையடுத்து சங்கர், அவரது மகன் பாரதி உள்பட 4 பேர் சேர்ந்து அஜித்குமாரை மடக்கி பிடித்து தாக்கினர். பின்பு தங்களிடம் இருந்த வாளால் அஜித்குமாரை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர். பலத்த வெட்டுக்காயம் அடைந்த அஜித்குமார் சம்பவ இடத்தில் உயிருக்கு போராடியபடி கிடந்தார்.

    இதுகுறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அஜித்குமாரை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அவர் இறந்தார்.

    அஜித்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரியின் பிணவறையில் வைக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த அஜித்குமாரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர்.

    கொலை நடந்த இடத்தில் தூத்துக்குடி மாநகர துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ், இன்ஸ்பெக்டர் முத்து ஆகியோர் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்த கொலை தொடர்பாக சங்கர், பாரதி உள்பட 4 பேர் மீது தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்குப்பதிந்து, தலைமறைவாக உள்ள அவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    அஜித்குமார் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் ராஜபாண்டி நகர் மற்றும் அந்தோணியார்புரம் பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    திருப்பூர் அருகே வாலிபர் கிணற்றில் பிணமாக மிதந்தார். அவர் கொலை செய்து வீசப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருப்பூர்:

    திருப்பூர் அருகே உள்ள வீரபாண்டி திருக்குமரன் நகரை சேர்ந்தவர் பாலு. இவருக்கு சொந்தமான தோட்டம் அப்பகுதியில் உள்ளது. அங்கு கிணறும் இருக்கிறது.இன்று காலை பாலு தனது தோட்டத்திற்கு சென்றார். மோட்டாரை இயக்க கிணறு பகுதிக்கு சென்ற போது அங்கு வாலிபரின் ஆடைகள் கிடந்தது.இதனை தொடர்ந்து அவர் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தார். அப்போது அங்கு 21 வயது மதிக்க தக்க வாலிபர் பிணமாக கிடந்தார்.

    இது குறித்து பாலு வீரபாண்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். கிணற்றில் கிடந்த வாலிபர் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். அவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது கிணற்றில் பிணமாக கிடந்த வாலிபர் தேனியை சேர்ந்த ஹரி கிருஷ்ணன் (21) என்பதும் வீரபாண்டி பகுதியில் தங்கி அங்குள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்தது.

    இந்த கிணறு இருக்கும் பகுதி ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியாகும். எனவே வாலிபர் ஹரிகிருஷ்ணனை யாராவது இங்கு அழைத்து வந்து கிணற்றில் தள்ளி கொலை செய்து விட்டு ஆடைகளை கரையில் போட்டு சென்றார்களா? அல்லது கிணற்றில் குளிக்கும் போது தவறி விழுந்தாரா? என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வாலிபர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த தொழிலதிபரை போலீசார் கைது செய்தனர்.
    ஆறுமுகநேரி:

    காயல்பட்டினம் பூந்தோட்டத்தை சேர்ந்தவர் காட்டான் என்ற மணிகண்டன் (வயது 27). சென்னையில் வசித்து வந்த இவர் சில மாதங்களாக அடைக்கலாபுரத்தில் தனது மனைவி பேச்சியம்மாளுடன் வசித்து வந்தார். இவர் மீது ஆறுமுகநேரி போலீசில் அடி தடி வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் மணிகண்டன் கடந்த மாதம் 23-ந் தேதி ஆறுமுகநேரி ஜெயின்நகர் அருகே மெயின் ரோட்டில் காரில் வந்த ஒரு கும்பலால்  வெட்டி கொலை செய்யப்பட்டார்.

    ஆறுமுகநேரி பேயன் விளையை சேர்ந்த சுப்பையா மகன் ஜெயசங்கர் பேயன்விளை புதூரில் ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து லாரிகள் மூலம் தண்ணீர் விற்பனை செய்துள்ளார். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு  ஆதரவாக  பேயன்விளை புதூரை சேர்ந்த சிவக்குமார், விக்னேஷ் ஆகியோர் இருந்துள்ளனர். இதனால் ஏற்பட்ட பகையில்  ஜெயசங்கருக்கு அடியாளாக செயல்பட்ட மணிகண்டன், சிவக்குமார் மற்றும் விக்னேஷ் ஆகியோரிடம் தகராறு செய்து மிரட்டி உள்ளார்.

    இதனை தொடர்ந்தே சிவக்குமார், விக்னேஷ் உள்ளிட்ட  கும்பல் மணிகண்டனை கொலை செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த சிவக்குமார், கார் டிரைவரான புதூர் சந்திரசேகர், ஆழ்வார்தோப்பு பெரியசாமி ஆகிய 3 பேர் கடந்த 25-ந் தேதி மதுரை வாடிப்பட்டி கோர்ட்டில் சரண் அடைந்தனர். 

    சிவக்குமாரின் தம்பியான தொழிலதிபர் விக்னேஷ் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். இந்த நிலையில் ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் சம்பத், சப்-இன்ஸ்பெக்டர் மாடசாமி ஆகியோர் விக்னேசை கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×