search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Zambia"

    • 723 வனவிலங்குகளைக் கொன்று அவற்றின் இறைச்சியை உணவாகப் பயன்படுத்த நாம்பியா முடிவெடுத்துள்ளது.
    • இந்த திட்டத்தின்கீழ் ஏற்கவே 150 விலங்குகள் கொல்லப்பட்டு அவற்றின்மூலம் 63 டன் இறைச்சி பெறப்பட்டுள்ளது.

    தென் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நாம்பியாவில் கடுமையான வறட்சி நிலவுவதால் மக்களுக்கு உணவளிக்க வனவிலங்குகளைக் கொல்ல அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் இல்லாத அளவுக்கு 2023 முதல் கடுமையான வறட்சியால் பாதிப்புக்குள்ளாகியுள்ளது நாம்பியா.

    இதனால் தென் ஆப்பிரிக்காவில் உள்ள மக்கள் தொகையில் பாதியளவு அதாவது சுமார் 14 லட்சம் மக்கள் நாம்பியாவில் உள்ள நிலையில் வறட்சியால் பசி மற்றும் பட்டினியில் பிடியில் சிக்கித் தவிக்கின்றனர். எனவே அவர்களுக்கு உணவளிக்கும் பொருட்டு காட்டில் உள்ள 723 வனவிலங்குகளைக் கொன்று அவற்றின் இறைச்சியை உணவாகப் பயன்படுத்த நாம்பியா முடிவெடுத்துள்ளது.

     

    இந்த 723 வனவிலங்குகளில் 300 வரிக்குதிரைகள், 100 wildebeest காட்டெருமைகள், 50 இம்பாலா மான்கள், 100 எலான்ட் வகை மான்கள், 30 நீர்யானைகள்[hippopotamuses] , 83 யானைகள் ஆகியவையும் அடங்கும். இந்த திட்டத்தின்கீழ் ஏற்கவே 150 விலங்குகள் கொல்லப்பட்டு அவற்றின்மூலம் 63 டன் இறைச்சி பெறப்பட்டுள்ளது.

     

    தென் ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள உலகின் மிகப்பெரிய ஆப்பிரிக்கச் சவானா யானைகள் அழிந்து வரும் பட்டியலில் உள்ள நிலையில் கடுமையான வறட்சியால், உணவுக்காக யானைகள் கொல்லப்படுவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளை குடிமக்களுக்காக நாட்டின் இயற்கை வளங்களை பயன்படுத்துவதற்கு தங்களின் அரசியல் அமைப்பில் இடம் உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 

     

    • நோயாளிகள் அனைவருக்கும் காய்ச்சல் மற்றும் தீவிர வயிற்றுபோக்கு ஏற்பட்டது.
    • புகாரின்பேரில் ஷவர்மா விற்ற ஓட்டல் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

    லுசாகா:

    தென் ஆப்பிரிக்க நாடான ஜாம்பியாவின் காப்பர்பெல்ட் மாகாணத்தில் உள்ள ஓட்டலில் வாடிக்கையாளர்கள் ஷவர்மா வாங்கி சாப்பிட்டுள்ளனர். சிறிது நேரத்தில் ஷவர்மா வாங்கி சாப்பிட்ட அவர்கள் வாந்தி எடுத்து மயங்கினர். ஷவர்மா சாப்பிட்டதால் உடல் நலக்கோளாறு ஏற்பட்டு 80 பேர் நிலைகுலைந்தனர்.

    தொடர்ந்து அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகே உள்ள ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் ஷவர்மா சாப்பிட்டவர்களின் உணவில் விஷம் கலந்திருந்ததால் உடல்நலக்கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். நோயாளிகள் அனைவருக்கும் காய்ச்சல் மற்றும் தீவிர வயிற்றுபோக்கு ஏற்பட்டது. அவர்களுக்கு டாக்டர்கள் சிசிச்சை அளித்து தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இதனிடையே புகாரின்பேரில் ஷவர்மா விற்ற ஓட்டல் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

    • கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து காலரா நோய் வேகமாக பரவி வருகிறது.
    • 9 மாகாணங்களில் 8-ல் காலரா தொற்று நோய் கண்டறியப்பட்டுள்ளது.

    காலரா நோய்த்தொற்றால் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் ஜாம்பியாவிற்கு உதவும் வகையில், மருந்துகள் உள்பட சுமார் 3.5 டன் மனிதாபிமான உதவி பொருட்களை இந்தியா இன்று விமானம் மூலம் அனுப்பியது.

    ஜாம்பியா நாட்டில் தற்போது திடீரென காலரா நோய்த்தொற்று ஏற்பட்டு உள்ளது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் அந்த நாட்டுக்கு உதவ இந்தியா முன் வந்தது. இதைத்தொடர்ந்து சரக்கு விமானம் மூலம் மருந்து உதவிப் பொருட்களை இன்று அனுப்பி வைத்துள்ளது.

    இதுகுறித்து இந்திய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    காலரா நோயால் பாதிக்கப்பட்ட சாம்பியா நாட்டுக்கு மனிதாபிமான உதவிகள் இந்தியா சார்பில் செய்ய முடிவு செய்யப்பட்டதையொட்டி 3.5 டன் மருந்து உதவி பொருட்கள் இன்று சரக்கு விமானம் மூலம் அனுப்பபட்டு உள்ளது.

    இதில் குடிநீர் சுத்திகரிப்பு பொருட்கள், குளோரின் மாத்திரைகள் உள்ளிட்ட மருந்துபொருட்கள் அடங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காலரா தொற்று நோயால் ஜாம்பியா பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த அண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து 15 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 600 பேர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கின்றன. சாம்பியாவின் 10 மாகாணங்களில் 9-ல் காலரா பாதிப்பு பதிவாகியுள்ளது.

    ×