search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ZEE 5"

    • எம்.டி. வாசுதேவன் மலையாளத்தின் பிரபல திரைக்கதை எழுத்தாளர் மற்றும் திரைப்பட இயக்குனர் ஆவார்.
    • நேற்று எம்.டி.வாசுதேவனின் 91 பிறந்த நாளை முன்னிட்டு இத்தொடரின் டிரெய்லர் வெளியானது.

    எம்.டி. வாசுதேவன் மலையாளத்தின் பிரபல திரைக்கதை எழுத்தாளர் மற்றும் திரைப்பட இயக்குனர் ஆவார். அசுரவித்து, மஞ்சு, ரண்டமூசம் மற்றும் வாரணாசி ஆகிய படைப்புகளின் மூலம் அறியப்பட்டவர்.

    எம்.டி.வாசுதேவனின் 9 சிறுகதைகளின் அடிப்படையில் ஆந்தலாஜி தொடராக உருவாகியுள்ளது. இந்தத்தொடரில் கமல்ஹாசன், மோகன்லால், மம்முட்டி, பகத் பாசில் உள்ளிட்ட இந்திய சினிமாவின் பெரிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று எம்.டி.வாசுதேவனின் 91 பிறந்த நாளை முன்னிட்டு இத்தொடரின் டிரெய்லர் வெளியானது. சிறந்த நடிகர்கள் நடித்த, 8 இயக்குனர்களால் இயக்கப்பட்ட 9 படங்களில் உள்ள கண்ணோட்டத்தை இந்த டிரெய்லர் வெளிப்படுத்துகிறது.

    "ஒல்லாவும் தீரவும், கடுகண்ணவ ஒரு யாத்ரா, காழ்சா, ஷீலாலிகாதம், வில்பனா, ஷெர்லாக், ஸ்வர்கம் துரக்குண சமயம், அபயம் தீடி வேண்டும், கடல்கட்டு" இந்த 9 படங்களின் தொகுப்பை கொண்டு இந்த 'மனோரதங்கள்' தொடர் உருவாக்கப்பட்டுள்ளது.

    இத்தொடர் கடந்த 2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. முதலில் பிரபல ஓடிடி நிறுவனமான நெட்பிலிக்ஸ் வாங்க இருந்தனர் ஆனால் சூழ்நிலை காரணமாக ஜீ5 ஓடிடி தளம் இத்தொடரை வெளியிடவுள்ளது.

    மோகன்லால் தனது சமூக வலைதள பக்கத்தில் இந்த தொடர் குறித்த பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 'மனோரதங்கள்' தொடர் அடுத்த மாதம் 15-ம் தேதி ஜீ-5 ல் வெளியாகும் என்று அறிவித்துள்ளார்.

    தொடரின் டிரைலர் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அனைத்து திரை ஜாம்பவாங்கள் ஒன்றாக ஒரே தொடரில் நடிக்க இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிரியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தேசிய விருது பெற்ற இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில், ராடான் மீடியாவொர்க்ஸின் தயாரிப்பாளர் ராதிகா சரத்குமார் "தலைமைச் செயலகம்" சீரிஸைத் தயாரித்துள்ளார்.
    • இந்த சீரிஸ் தமிழக அரசியலில் இரக்கமற்ற அதிகார வேட்கையைக் கூறும் அழுத்தமான பொலிடிகல் திரில்லராக உருவாகியுள்ளது.

     தமிழக அரசியல் பின்னணியில், இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில், நடிகர் கிஷோர், ஸ்ரேயா ரெட்டி, ஆதித்யா மேனன் மற்றும் பரத் நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் சீரிஸான "தலைமைச் செயலகம்" சீரிஸ் மே 17ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5, தனது அடுத்த அதிரடி சீரிஸான 'தலைமைச் செயலகம்' சீரிஸின் டிரெய்லரை வெளியிட்டது. இந்த சீரிஸ் தமிழக அரசியலில் இரக்கமற்ற அதிகார வேட்கையைக் கூறும் அழுத்தமான பொலிடிகல் திரில்லராக உருவாகியுள்ளது.

    தேசிய விருது பெற்ற இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில், ராடான் மீடியாவொர்க்ஸின் தயாரிப்பாளர் ராதிகா சரத்குமார் "தலைமைச் செயலகம்" சீரிஸைத் தயாரித்துள்ளார். இந்த சீரிஸில் கிஷோர், ஷ்ரியா ரெட்டி, ஆதித்யா மேனன் மற்றும் பரத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஒரு பெண்ணின் இடைவிடாத அதிகார வேட்கை, பேராசை, வஞ்சகம் ஆகியவை பின்னிப்பிணைந்த தமிழக அரசியலின் கதையைச் சொல்லும் இந்த சீரிஸ் மே 17 அன்று ZEE5 இல் ஸ்ட்ரீமாகவுள்ளது.

    தமிழக அரசியல் களத்தின் பின்னணியில் நடக்கும் கதையில், முதல்வர் அருணாசலம் 15 ஆண்டுகளுக்கு முந்தைய ஊழல் வழக்கு விசாரணையை எதிர்கொள்கிறார், இந்த விசாரணையால் அவரைச் சுற்றியுள்ளவர்கள் முதல்வர் நாற்காலிக்கு ஆசைப்படுவதோடு அதற்காகத் தீவிரமாக இயங்க ஆரம்பிக்கிறார்கள். இதற்கிடையில், ஜார்க்கண்டில் உள்ள ஒரு தொலைதூர சுரங்க கிராமத்தில், சிபிஐ அதிகாரி நவாஸ் கான் இரண்டு தசாப்தங்கள் பழமையான கொலை வழக்கை ஆராய்கிறார்.

    பரபரப்பான சென்னையில், புறநகர்ப் பகுதியில் கிடைக்கும் துண்டிக்கப்பட்ட கை மற்றும் தலையினை குறித்து டிஜிபி மணிகண்டன் ஒரு பயங்கரமான கண்டுபிடிப்பு குறித்து விசாரணையைத் தொடங்குகிறார். இந்த கதை விரிய விரிய வேறுபட்ட பல நிகழ்வுகளை ஒன்றிணைகின்றது, காலத்தால் மறைக்கப்பட்ட மறந்துபோன உண்மைகளின் மீது ஒளி பாய்ச்சுகிறது. டிரைலர் காட்சிகல் சமூக வலைத்தலங்களில் பரவி வருகிரது. சீரிசின் டிரைலரை நடிகை கீர்த்தி சுரேஷ் அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×