என் மலர்
நீங்கள் தேடியது "புரோக்கர்"
- திருமணம் செய்து வைப்பதாக கூறி ஏமாற்றி ரூ.3.50 லட்சம் பணத்தை பெற்ற பெண் புரோக்கர் தனலட்சுமி மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும் என புகார் மனு.
- புகாரின் பேரில் போலீசார் பெண் புரோக்கர் தனலட்சுமி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை:
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள வீரப்பகவுண்டனூரை சேர்ந்தவர் தணிகாசலம் (வயது 43). பிட்டர். இவர் கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-
நான் தனியார் நிறுவனத்தில் பிட்டராக வேலை பார்த்து வருகிறேன். எனக்கு ஒரு அண்ணன் மற்றும் தம்பி ஆகியோர் உள்ளனர். எனக்கு 43 வயதாகியும் திருமணம் ஆகவில்லை. இந்தநிலையில் எனக்கு தங்கை முறையான திருப்பூரை சேர்ந்த உமா மகேஸ்வரி என்பவர் மூலம் மதுரையை சேர்ந்த திருமண புரோக்கர் தனலட்சுமி என்பவர் அறிமுகமானார்.
அவரிடம் எனக்கு திருமணம் செய்வதற்கு பெண் பார்க்கும்படி கூறினேன். அதற்கு அவர் பெண் ஒருவர் இருப்பதாகவும், புரோக்கர் கமிஷனாக ரூ.3.50 லட்சம் பணம் தர வேண்டும் என்றார். இதனை உண்மை என நம்பிய நான் ரூ.3.50 லட்சம் பணத்தை புரோக்கர் தனலட்சுமியிடம் கொடுத்தேன்.
கடந்த 21-ந்தேதி எனக்கும், 30 வயது பெண் ஒருவருக்கும் திருப்பூர் அவினாசி நகர் கோவிலில் வைத்து திருமணம் நடந்தது. பின்னர் நான் மணப்பெண்ணுடன் வீட்டிற்கு சென்றேன். நேற்று மதியம் கோவிலுக்கு செல்வதற்காக புறப்பட்டு கொண்டு இருந்தேன். அப்போது நான் திருமணம் செய்த பெண், என்னிடம் வந்து அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டதாக தெரிவித்தார்.
மேலும் பட்டுக்கோட்டை பஸ் நிலையத்தில் நின்று கொண்டு இருந்த போது அங்கு வந்த புரோக்கர் தனலட்சுமி ரூ.20 ஆயிரம் பணம் தருவதாக கூறி திருமணம் செய்து வைத்ததாக கூறினார். இதனை கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன்.
எனவே எனக்கு திருமணம் செய்து வைப்பதாக கூறி ஏமாற்றி ரூ.3.50 லட்சம் பணத்தை பெற்ற பெண் புரோக்கர் தனலட்சுமி மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.
புகாரின் பேரில் போலீசார் பெண் புரோக்கர் தனலட்சுமி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மோசடி செய்த நபர் ஹாங்காங்கில் இருப்பதும், அவரது தொடர்புடைய சிலர் சென்னையில் இருப்பதும் தெரியவந்தது.
- ஒரே நாளில் ரூ.4 கோடி வரை பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
புதுச்சேரி:
புதுச்சேரி அருகேயுள்ள வில்லியனூர் உறுவையாறு கிராமத்தைச் சேர்ந்தவர் வீரபத்திரன். தனியார் நிறுவன ஊழியர்.
இவரது செல்போனுக்கு அண்மையில் பகுதி நேர வேலை இருப்பதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் குறிப்பிட்ட செயலியில் வரும் கட்டளைக்கு ஏற்ப பதிவிட்டால் செலுத்தும் பணம் இரட்டிப்பாகும் எனக் கூறப்பட்டிருந்து.
இதை நம்பிய வீரபத்திரன் பணம் செலுத்தியதாக கூறப்படுகிறது. அதன்படி பணம் இரட்டிப்பாகி யுள்ளது.
இதையடுத்து அவர் பல தவணைகளில் ரூ.7.08 லட்சம் வரை செலுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் இரட்டிப்பான பணத்தை அவரால் எடுக்க முடியவில்லை.
இதுகுறித்து வீரபத்திரன் புதுச்சேரி இணையவழி குற்றத்தடுப்புப் பிரிவில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கீர்த்தி தலைமையிலான போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்தனர்.
மோசடி செய்த நபர் ஹாங்காங்கில் இருப்பதும், அவரது தொடர்புடைய சிலர் சென்னையில் இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்களின் செல்போன், வங்கிக் கணக்கை ஆய்வு செய்தபோது ஒரே நாளில் ரூ.4 கோடி வரை பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
பின்னர் அவர்களிடம் விசாரித்ததில் வங்கிக் கணக்கை பணப் பரிவர்த்தனைக்கு அனுமதித்தால் ரூ.1 லட்சம் தருவதாக மர்ம நபர் கூறியுள்ளார். அதன்படி பலரும் வங்கிக் கணக்கை மர்ம நபர்களுக்கு கொடுத்தது தெரியவந்தது. அவ்வாறு 30 வங்கிக் கணக்குகளை போலீசார் முடக்கினர்.
மேலும் மோசடிக்கு முகவர்களாக செயல்பட்டதாக சென்னை எண்ணூர் காமராஜர் நகரைச் சேர்ந்த முகமது இலியாஸ், பாடி பகுதியைச் சேர்ந்த மோகன், தமிழ்வாணன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து செல்போன்கள், ரூ.75 ஆயிரம் உள்ளிட்டவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
- தாரமங்கலம் அருகே வெளியூர்களில் இருந்து பெண்களை அழைத்துவந்து தனது வீட்டில் வைத்து விபசாரம் நடத்துவதாக தாரமங்கலம் போலீசுக்கு தகவல் கிடைத்தது.
- சேலம் புது ரோட்டை சேர்ந்த அந்த பெண்ணை ேபாலீசார் மீட்டனர். மேலும் சிவலிங்கத்தை கைது செய்தனர்.
தாரமங்கலம்:
தாரமங்கலம் அருகில் உள்ள கே.ஆர்.தோப்பூர் கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் சிவலிங்கம் (வயது 50). புரோக்கர். இவர் வெளியூர்களில் இருந்து பெண்களை அழைத்துவந்து தனது வீட்டில் வைத்து விபசாரம் நடத்துவதாக தாரமங்கலம் போலீசுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார், ரகசியமாக கண்காணித்து வந்தனர். அப்போது கே.ஆர். தோப்பூர் பஸ் நிறுத்தம் அருகே நின்றுகொண்டு இருந்த வாலிபர்களை உல்லாசத்திற்கு தன்னிடம் பெண்கள் இருப்பதாக கூறி சிவலிங்கம் அழைத்து சென்றுள்ளார். அப்போது அங்கு மறைந்து இருந்த போலீசார் பின் தொடர்ந்து சென்று பார்த்தபோது சிவலிங்கம் வீட்டில் ஒரு பெண் இருப்பதும் அவர் பாலியல் தொழிலுக்கு வந்ததும் தெரியவந்தது. சேலம் புது ரோட்டை சேர்ந்த அந்த பெண்ணை ேபாலீசார் மீட்டனர். மேலும் சிவலிங்கத்தை கைது செய்தனர்.