என் மலர்
நீங்கள் தேடியது "லக்னோ"
- ஐபிஎல் இரண்டாம் நாள் ஏலம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
- இதுவரை ஒட்டுமொத்தமாக 8 ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே ஆகாஷ் தீப் விளையாடியுள்ளார்.
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் துவங்கியது. இந்த ஏலத்தில் 574 வீரர்கள் கலந்து கொள்கின்றனர். முதல் நாள் ஏலம் பல கட்டங்களாக நேற்று நடைபெற்றது. ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக ரிஷப் பண்ட் ரூ. 27 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
இந்நிலையில், இன்று இரண்டாம் நாள் ஏலம் தொடங்கியது. அப்போது பெங்களூரு அணியின் முன்னாள் வேகப்பந்து பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப்-ஐ ரூ.8 கோடி கொடுத்து லக்னோ அணி வாங்கியுள்ளது. இவரின் அடிப்படை விலையாக ரூ.1 கோடி நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
ஒட்டுமொத்தமாக 8 ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள ஆகாஷ் தீப்-ஐ ரூ.8 கோடி கொடுத்து லக்னோ வாங்கி வாங்கியுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
- கடந்த சீசனில் ஐதராபாத் அணியுடனான ஆட்டத்தில் லக்னோ அணி படுதோல்வி அடைந்தது.
- அந்தப் போட்டிக்கு பிறகு அணியின் உரிமையாளர், ராகுலிடம் மைதானத்தில் விரக்தியை வெளிப்படுத்தி இருந்தார்.
புதுடெல்லி:
2025-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியில் ஒவ்வொரு அணிகளும் மெகா ஏலத்துக்கு முன்பு தக்கவைக்கப்படும் வீரர்கள் விவரத்தை வெளியிட்டு இருந்தன.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் நிக்கோலஸ் பூரன் (ரூ. 21 கோடி), ரவி பிஷ்னோய் (ரூ.11 கோடி), மயங்க் யாதவ் (ரூ. 11 கோடி), மோஷின்கான் (ரூ. 4 கோடி), பதோனி (ரூ.4 கோடி) ஆகிய 5 வீரர்கள் தக்க வைக்கப்பட்டனர்.
அந்த அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் ஏலத்தில் பங்கேற்க உள்ளார். கடந்த சீசனில் ஐதராபாத் அணியுடனான ஆட்டத்தில் லக்னோ அணி படுதோல்வி அடைந்தது. அந்தப் போட்டிக்கு பிறகு அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, கேப்டன் கே.எல். ராகுலிடம் மைதானத்தில் விரக்தியை வெளிப்படுத்தி இருந்தார்.
அப்போது இந்த விவகாரம் கடும் விமர்சனத்துக்குள்ளானது. அதோடு 2025 சீசனில் லக்னோ அணிக்காக ராகுல் விளையாடுவாரா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது. 'ராகுல் லக்னோ அணியின் அங்கம்' என்று கடந்த ஆகஸ்ட் மாதம் சஞ்சீவ் கோயங்கா தெரிவித்திருந்தார். இந்த சூழலில் தான் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் ஐ.பி.எல். ஏலத்தின் போது கே.எல். ராகுலை மீண்டும் எடுக்க லக்னோ அணி திட்டமிட்டுள்ளதாக அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
நிக்கோலஸ் பூரன் உலகின் சிறந்த அதிரடி வீரர்களில் ஒருவர் ஆவார். அவரை விடுவித்து ஏலத்தில் எடுப்பதற்காக காத்திருக்க முடியாது. எங்களிடம் ஐ.பி.எல். ஏலத்தில் ஒரு வீரரை எடுப்பதற்கு உரிமையாளரை ஆர்.டி.எம். கார்டு இருக்கிறது.
மேலும் முடிந்த வரை எங்கள் அணியில் விளையாடிய வீரர்களை மீண்டும் ஏலத்தில் எடுப்போம் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம். சாத்தியமான அனைத்து அம்சங்கள் குறித்து நானும், அணி உரிமையாளரும் மீண்டும், மீண்டும் ஆலோசித்து வருகிறோம். வீரர்கள் தக்க வைப்பு குறித்து தீவிரமாக பரிசீலிக்கப்பட்டது.
இவ்வாறு லாங்கர் கூறியுள்ளார்.
லக்னோ அணி நிர்வாகம் தக்கவைப்பு மூலம் ரூ.51 கோடியை செலவழித்துள்ளது. ஐ.பி.எல். ஏலத்தில் செலவிட அந்த அணியின் கைவசம் ரூ.69 கோடி இருக்கிறது.
லக்னோ அணி 2024 சீசனில் 7-வது இடத்தை பிடித்தது. ராகுல் தான் அந்த அணியில் அதிகபட்சமாக 520 ரன் குவித்தார். அவரது ஸ்டிரைக்ரேட் 136 ஆக இருந்தது. முதல் வீரராக தக்க வைக்கப்பட்ட நிக்கோலஸ் பூரன் 499 ரன் எடுத்தார். ஆனால் அவரது ஸ்டிரைக் ரேட் 178 என்பது குறிப்பிடத்தக்கது.
- பாஸ்போர்ட் கொடுப்பதற்கு தபால்காரர் ரூ.500 லஞ்சம் கேட்டுள்ளார்.
- பாதிக்கப்பட்ட நபர் தபால்காரருக்கு எதிராக போலீசில் புகார் அளித்தார்.
உத்தரபிரதேசத்தில் ரூ.500 லஞ்சம் கொடுக்க மறுத்ததால், ஒருவரின் பாஸ்போர்ட்டின் முக்கிய பக்கத்தை தபால்காரர் கிழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் ஒருவருக்கு பாஸ்போர்ட் தபாலில் வந்துள்ளது. ஆனால் பாஸ்போர்ட் கொடுப்பதற்கு தபால்காரர் ரூ.500 லஞ்சம் கேட்டுள்ளார். இதனால் தபால்காரருக்கும் சம்பந்தப்பட்ட நபருக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தபால்காரர் பாஸ்போர்ட்டின் முக்கிய பக்கத்தை கிழித்துள்ளார்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
பாதிக்கப்பட்ட நபர் தபால்காரருக்கு எதிராக போலீசில் புகார் அளித்தார். போலீசார் இது தொடர்பாக விசாரணையை தொடங்கியுள்ளனர்.
மேலும், தபால்காரர் ஒவ்வொரு தபால் கொடுப்பதற்கும் ரூ.100 ரூபாய் லஞ்சம் வாங்குவதாக அப்பகுதியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
A kalesh occurred b/w a postman and a person when the postman tore the main page of the passport because the person refused to pay a ₹500 bribe, Lucknow UP pic.twitter.com/JiDjwCngjK
— Ghar Ke Kalesh (@gharkekalesh) October 19, 2024
- 9 வயது சிறுமி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- சிறுமி இறந்த தகவல் கிடைத்ததும் கடந்த வெள்ளிக்கிழமை பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் 3ஆம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமி பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்தபோது, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மான்ட்ஃபோர்ட் பள்ளியில், 3ஆம் வகுப்பு படிக்கும் மான்வி சிங் என்ற 9 வயது சிறுமி பள்ளியின் விளையாட்டு மைதானத்தில், தனது சக மாணவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்த சிறுமியை ஆசிரியர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் காவல்துறையினர் கவனத்திற்கு சென்றும், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சிறுமியின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்
சிறுமி இறந்த தகவல் கிடைத்ததும் கடந்த வெள்ளிக்கிழமை பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
- கட்டடம் இடிந்த விபத்தில் இதுவரை 28 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
- மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள டிரான்ஸ்போர்ட் நகர் என்ற பகுதியில் குடோனாக பயன்பட்டு வந்த 3 மாடி கட்டிடம் ஒன்று நேற்று [சனிக்கிழமை] மாலை 5 மணியளவில் இடிந்துள்ளது. கட்டிடம் இடிந்து விழுந்ததில் அதன் அருகே நிறுத்தப்பட்டிருந்த லாரியும் நொறுங்கியது.
இந்த விபத்தில் நேற்று 5 பேர் உயிரிழந்த நிலையில் இன்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்த விபத்தில் 28 பேர் காயமடைந்துள்ளனர்.
மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்புகள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இடித்து விழுந்த இந்த மூன்று மாடி கட்டடம் 4 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட நிலையில் இதில் மோட்டார் வாகன ஒர்க் ஷப்பாகவும், மருத்துகள் சேமிக்கும் குடோனாகவும் இயங்கி வந்துள்ளது. மேலும் சமீபத்தில் இங்கு மேற்கொண்டு கட்டுமானப் பணிகளும் நடந்துள்ளதாகத் தெரிகிறது.
- இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 24 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
- குடோனாக பயன்பட்டு வந்த 3 மாடி கட்டிடம் ஒன்று இன்று [சனிக்கிழமை] மாலை 5 மணியளவில் இடிந்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் மூன்று மாடி கட்டடம் இடித்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 24 பேர் படுகாயமடைந்துள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள டிரான்ஸ்போர்ட் நகர் என்ற பகுதியில் குடோனாக பயன்பட்டு வந்த 3 மாடி கட்டிடம் ஒன்று இன்று [சனிக்கிழமை] மாலை 5 மணியளவில் இடிந்துள்ளது.
இதில் பலர் உள்ளே சிக்கிய நிலையில் தகவல் அறிந்து விரைந்த மீட்புப்படையினர் அவர்களை வெளியில் கொண்டுவரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 24 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் பலர் உள்ளே சிக்கியுள்ளதால் மீட்புப் பணிகள் தொடர்ந்து வருகிறது. உ.பி முதல்வர் யோகி ஆதித்தனாத், மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளவர்களுடன் தொடர்பில் உள்ளனர். இடித்து விழுந்த இந்த மூன்று மாடி கட்டடம் 4 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட நிலையில் இதில் மோட்டார் வாகன ஒர்க் ஷப்பாகவும், மருத்துகள் சேமிக்கும் குடோனாகவும் இயங்கி வந்துள்ளது. மேலும் சமீபத்தில் இங்கு மேற்கொண்டு கட்டுமானப் பணிகளும் நடந்துள்ளதாகத் தெரிகிறது.
- தனியார் மருத்துவமனையில் ஆகும் செலவை சமாளிக்க முடியாததால் அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்து ஆம்புலன்ஸ் ஒன்றில் மனைவி அழைத்துச் சென்றுள்ளார்.
- அவர்களுக்கு பெண் ஒத்துழைக்க மறுத்ததால் கணவனின் ஆச்சிஜன் சப்போர்ட் - ஐ அவர்கள் துண்டித்து மூவரையும் ஆம்புலன்சில் இருந்து வெளியே தள்ளி விட்டுள்ளனர்.
உயிருக்குப் போராடும் கணவனுடன் ஆம்புலன்சில் வந்த மனைவிக்கு ஆபுலன்ஸ் ஓட்டுநரும் உதவியாளரும் பாலியல் தொல்லை அளித்து கணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் கடந்த ஆகஸ்ட் 29 அன்று உயிர்கொல்லி நோயால் பாதிக்கப்பட்ட தனது கணவனுக்கு வைத்தியம் அளிக்க தனியார் மருத்துவமனையில் ஆகும் செலவை சமாளிக்க முடியாததால் அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்து தனியார் ஆம்புலன்ஸ் ஒன்றில் மனைவி அழைத்துச் சென்றுள்ளார். கணவனின் சகோதரனும் அவர்களுடன் சென்றுள்ளார்.
இந்நிலையில் ஆம்புலன்சை பாதி வழியிலேயே நிறுத்திவிட்டு டிரைவரும் உதவியாளரும் அந்த பெண்ணை பாலியல் ரீதியாக சீண்டியுள்ளனர். அவர்களுக்கு பெண் ஒத்துழைக்க மறுத்ததால் கணவனின் ஆச்சிஜன் சப்போர்ட் - ஐ அவர்கள் துண்டித்து மூவரையும் ஆம்புலன்சில் இருந்து வெளியே தள்ளி விட்டுள்ளனர். ஆக்சிஜன் சப்போர்ட் இல்லாமல் பெண்ணின் கணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து தற்போது அந்த பெண் போலீசில் புகார் அளித்துள்ள நிலையில் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்நிலையில் தலைமறைவாக இருந்த உதவியாளர் ரிஷஇப் சிங் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் ஆம்புலன்ஸ் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
- ராகுல்- அனிதா தம்பதியினரிடையே நேற்று வாக்குவாதம் எழுந்துள்ளது.
- ரத்த வெள்ளத்தில் கிடந்த அனிதாவை ராகுலின் சகோதரன் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், பிறந்த வீட்டுக்குப் போக வேண்டும் என்று சொன்ன மனைவியின் மூக்கை கணவன் அறுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. லக்னோவில் பூர்வா [Baniyaani Purwa] பகுதியில் வசித்து வரும் ராகுல்- அனிதா தம்பதியினரிடையே நேற்று வாக்குவாதம் எழுந்துள்ளது.
நேற்று ரக்க்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு தனது சகோதரனுக்கு ராக்கி கட்டிவிட பிறந்த வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று அனிதா கூறியதே இந்த சண்டைக்குக் காரணம். இருவருக்கும் இடையில் வாக்குவாதம் முற்றிய நிலையில் கணவன் ராகுல் அனிதாவின் மூக்கை அறுத்துள்ளார்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த அனிதாவை ராகுலின் சகோதரன் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். தீவிர சிகிச்சைக்குப் பின் ஆபத்தான கட்டத்தை கடந்த அனிதா, தனது கணவனின் கொடூரமான செயல் குறித்து பேசினார். கணவன் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
तू घर जाना चाहती है... जा.. तेरी नाक काट देता हूं...हरदोई में अनीता अपने भाई को राखी बांधने के लिए मायके जाना चाहती थी। पति राहुल ने मना किया तो दोनों में झगड़ा हो गया। राहुल ने अनीता को मारा पीटा और अंत में उसकी नाक काट दी। pic.twitter.com/p2GSIoJxev
— Kavish Aziz (@azizkavish) August 19, 2024
- பைக்கில் சென்ற பெண்ணை ஒரு கும்பல் துன்புறுத்தும் வீடியோ இணையத்தில் வைரல்.
- அந்த கும்பலை அங்கிருந்து போலீசார் விரட்டி அடித்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் கனமழை பெய்ததால் சாலைகளில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கியது.
இந்நிலையில், லக்னோவில் வெள்ளம் சூழ்ந்த சாலையில் பைக்கில் சென்ற பெண்ணை ஒரு கும்பல் துன்புறுத்தும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
தாஜ் ஓட்டல் பாலத்தின் கீழ் வெள்ளம் தேங்கியிருந்த சாலையில் பைக்கில் ஒரு ஆணும் பெண்ணும் வந்துள்ளனர். அப்போது அவ்வழியில் இருந்த ஒரு கும்பல் அவர்களின் மீது தேங்கியிருந்த தண்ணீரை தெளிக்க தொடங்கியது. பின்னர் பைக்கை பின்னல் இருந்து பிடித்து இழுத்து நிறுத்தினர். இதனால் நிலை தடுமாறிய இருவரும் சாலையில் தேங்கியிருந்த வெள்ளத்தில் விழுந்தனர்.
அதன் பின்னர் பாலத்தின் அடியில் இருந்த அந்த கும்பலை அங்கிருந்து போலீசார் விரட்டி அடித்தனர்.
இந்த வீடியோ சமுக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து, லக்னோவின் உதவி காவல் ஆணையர், கூடுதல் காவல் ஆணையர், காவல் துணை ஆணையர் ஆகியோர் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் 4 பேரை கைது விசாரித்து வருகிறது.
- சலவை தொழிலாளியான தீபாளியின் தந்தை, வீட்டில் படுத்த படுக்கையாக வீட்டில் உள்ளார்.
- இந்தியாவில் இருந்து இதற்கு தேர்வான 30 மாணவர்களில், தீபாளியும் ஒருவர்.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவி தீபாளி கனோஜ்யா அமெரிக்க வெளியுறவுத் துறை நிதியுதவியுடன் அந்நாட்டில் மேற்படிப்பை படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ஆகஸ்ட் 19 அன்று தீபாளி அமெரிக்காவிற்கு செல்லவுள்ளார்.
சலவை தொழிலாளியான தீபாளியின் தந்தை, அவரது கால் அறுவை சிகிச்சைக்கு பிறகு படுத்த படுக்கையாக வீட்டில் உள்ளார். தனது தந்தை படுத்த படுக்கையாக இருக்கும் நிலையில் வீட்டில் ட்யூஷன் நடத்தி தீபாளி தாய்க்கு உதவி வந்துள்ளார்.
ஒதுக்கப்பட்ட சமூகம் மற்றும் நலிந்த பொருளாதார பின்னணியை சேர்ந்த பெண்களுக்கு கல்வி வழங்கும் ஸ்டடி ஹால் கல்வி அறக்கட்டளையின் ஒரு பிரிவான பிரேர்னா பெண்கள் பள்ளியில் தீபாலி சேர்ந்து படித்து வந்தார்.
இது தொடர்பாக பேசிய தீபாளி, "இந்தியாவில் இருந்து இதற்கு தேர்வான 30 மாணவர்களில், நானும் ஒருவர் என்பதை நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எனது ஆசிரியர்களிடமிருந்து அமெரிக்காவை பற்றி நான் தெரிந்து கொண்டேன். ஆனால் நான் எனது படிப்புக்காக அமெரிக்கா செல்வேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. இது எனக்கு கிடைத்துள்ள சிறந்த வாய்ப்பு" என்று தெரிவித்தார்.
இது தொடர்பாக பேசிய தீபாளியின் தாயார், "என் மக்களை அமெரிக்காவிற்கு அனுப்புவதற்கு சற்று பதட்டமாக இருந்தாலும், நான் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறேன்" என்று தெரிவித்தார்.
- லக்னோவில் உள்ள இந்திரா நகர் செக்டர் 20 பகுதியில் ஒரு மருத்துவர் வீட்டில் நேற்று கொள்ளை நடந்தது.
- அடுத்த நாள் பாண்டேவின் பக்கத்து வீட்டுக்காரர் வீடு திறந்திருப்பதைப் பார்த்து சந்தேகித்து வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார்.
லக்னோவில் உள்ள இந்திரா நகர் செக்டர் 20 பகுதியில் ஒரு மருத்துவர் வீட்டில் நேற்று கொள்ளை நடந்தது. இந்திரா நகரில் வசித்து வரும் பாண்டே பல்ராம்பூர் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். கடந்த வாரம் அவர் வாரணாசிக்கு சில வேலை நிமித்தமாக சென்றிருந்தார்.
அப்போது அவரது வீட்டை நோட்டம் விட்டு திருடன் அவனது கைவரிசையை காட்டலாம் என்று எண்ணி பாண்டேவின் வீட்டை கொள்ளையடிக்க சென்றார். அடுத்த நாள் பாண்டேவின் பக்கத்து வீட்டுக்காரர் வீடு திறந்திருப்பதைப் பார்த்து சந்தேகித்து வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார். அங்கு பாண்டேவின் வீட்டில் உள்ள அனைத்து பொருட்களும் சிதறி கிடந்துள்ளன.
இதனால் சந்தேகப்பட்ட பக்கத்து வீட்டுக்காரர் காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த காஸிபூர் போலீசார் வீட்டின் உள்ளே சென்று பார்க்கும் போது, கொள்ளையடிக்க வந்த கபில் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் திருட வந்த இடத்திலேயே மயங்கியுள்ளார். அவனை அலேக்காக தூக்கிய போலீசார் இந்திய தண்டனை சட்டத்தின் 379 ஏ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறும் போது"அலமாரிகள் உடைக்கப்பட்டன. பணம் உட்பட அனைத்தும் எடுக்கப்பட்டன. வாஷ்பேசின், கேஸ் சிலிண்டர் மற்றும் தண்ணீர் பம்ப் ஆகியவற்றையும் திருடன் திருட முயன்றான்" என்று தெரிவித்தார்.
- பணத் தகராறு காரணமாக ஒருவரை கட்டிடத்தின் மொட்டை மாடியில் இருந்து தூக்கி வீசும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- மதேகஞ்ச் பகுதியில் நடந்த இந்த சம்பவத்தை அருகில் இருந்த வீடுகளில் உள்ளவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதை அடுத்து வைரலாகத் தொடங்கியது.
லக்னோவில் பணத் தகராறு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஐந்து பேர் சேர்ந்து ஒருவரை கட்டிடத்தின் மொட்டை மாடியில் இருந்து தூக்கி வீசும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதேகஞ்ச் பகுதியில் நடந்த இந்த சம்பவத்தை அருகில் இருந்த வீடுகளில் உள்ளவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதை அடுத்து வைரலாகத் தொடங்கியது.
இதைத்தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். பரபரப்பூட்டும் அந்த வீடியோவில், ஒருவரை கட்டிடத்தின் மொட்டை மாடிக்கு அழைத்து வந்து அவரை உதைத்து கொலை செய்யும் நோக்கத்துடன் துண்டுக்கட்டாக தூங்கி கீழே வீசியது பதிவாகியுள்ளது. அதிஷ்டவசமாக அந்த நபர் சிறிய காயங்களுடன் உயிர்பிழைத்தார்.
இருப்பினும் அதற்குப் பிறகும் கீழே இறங்கி வந்து அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். அவர்களை அந்த வழியாக சென்ற நபர் ஒருவர் தடுக்க முயன்றும் அவர்கள் தங்கள் தாக்குதலை தொடர்ந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.