என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஜய்"

    • உலகம் முழுவதும் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
    • அன்பு, கருணை, மனிதநேயம், சகோதரத்துவம், தியாகம் ஆகியவற்றை மனித குலத்துக்குப் போதித்தவர் இயேசு கிறிஸ்து.

    இயேசு உயிர்த்தெழுந்த இந்த நாளை கிறிஸ்தவர்கள் ஈஸ்டராக கொண்டாடி வருகின்றனர். அதன்படி இன்று உலகம் முழுவதும் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை, திருப்பலிகள் நடந்தன.

    இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள ஈஸ்டர் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

    அன்பு, கருணை, மனிதநேயம், சகோதரத்துவம், தியாகம் ஆகியவற்றை மனித குலத்துக்குப் போதித்தவர் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளாக ஈஸ்டர் திருநாளை உவகையுடன் கொண்டாடும் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நம் சோசியல் மீடியா படை அது தான் இந்தியாவிலேயே மிகப்பெரிய படை என்று சொல்கிறார்கள்.
    • virtual warriors என்று நான் உங்களை கூப்பிட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

    த.வெ.க.வின் ஐடி விங் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அக்கட்சித் தலைவர் விஜய் பேசிய வீடியோவை வெளியிட்டனர்.

    அந்த வீடியோவில் விஜய் பேசியதாவது:-

    ஐடி விங் நிர்வாகிகள் ஆலோனை கூட்டத்தில் ஜூம் மீட் மூலம் அனைவரையும் சந்திக்க வேண்டும் என்று திட்டமிட்டேன். ஆனால், நெட்வொர்க் பிரச்சனையால் அது முடியாமல் போனது. அதனால், ரெக்கார்டட் மெசேஜ் அனுப்புகிறேன். இதன்மூலம் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.

    நம் சோசியல் மீடியா படை அது தான் இந்தியாவிலேயே மிகப்பெரிய படை என்று சொல்கிறார்கள். இது நாம் சொல்வதை விட மற்றவர்கள் பார்த்து தெரிந்துக் கொள்கிறார்கள்.

    இனிமேல் நீங்கள் சோசியல் மீடியா ரசிகர்கள் மட்டும் இல்லை. என்னை பொறுத்தவரைக்கும் நீங்கள் அனைவருமே கட்சியின் virtual warriors. அப்படிதான் நான் உங்களை கூப்பிட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

    நம் ஐடி விங் என்றாலே ஒழுக்கமாகவும், கண்ணியமாகவும் இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு வேலைப் பாருங்கள்.

    கூடிய விரைவில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன். உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்... நன்றி...!

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒரு கட்சி மற்றொரு கட்சியை கூட்டணிக்கு அழைப்பது இயல்பு தான்.
    • 5- வது முறையாக ஒரு கட்சி தனித்து போட்டியிடுவது என்றால் அது நாம் தமிழர் கட்சி தான்.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வெற்றி, தோல்வியை தாண்டி தனித்து போட்டியிடும் கட்சி தான் நாம் தமிழர். நாங்கள் மக்களை தேடி சென்று மக்களுக்காக அரசியல் செய்கிறோம். கூட்டணி எங்கள் கொள்கை அல்ல. எங்கள் பயணம் எங்கள் கால்களை நம்பி தான். அடுத்தவர் கால்கள், தோள்களை நம்பினால் எங்கள் இலக்கின் பயணத்தை அடைய முடியாது.

    ஒரு கட்சி மற்றொரு கட்சியை கூட்டணிக்கு அழைப்பது இயல்பு தான். நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடு ஒரே நிலைப்பாடு தான். தொடர்ச்சியாக 4 முறை 2 சட்டமன்ற தேர்தல், 2 பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டோம். 5- வது முறையாக ஒரு கட்சி தனித்து போட்டியிடுவது என்றால் அது நாம் தமிழர் கட்சி தான்.

    மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 117 பெண்கள், 117 ஆண்கள் போட்டியிடுவார்கள். த.வெ.க. தலைவர் விஜய் எதார்த்தமானவர். விஜய் இப்தார் நோன்பில் பங்கேற்றதில் உள் நோக்கம் கற்பிக்க வேண்டியதில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 26-ந்தேதி மதியம் 3 மணிக்கு மாநாடு தொடங்குகிறது.
    • புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் அடிக்கடி ஆலோசனை நடத்தி வருகிறார்.

    சென்னை:

    வருகிற 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    கட்சி வளர்ச்சி மற்றும் கட்டமைப்பு பணிகள் குறித்து கட்சி தலைவர் விஜய், பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் அடிக்கடி ஆலோசனை நடத்தி வருகிறார்.

    கட்சியில் புதிதாக சேர்ந்த வர்களின் எண்ணிக்கை 1 கோடியை தாண்டி இருக்கிறது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளையும் கட்சி ரீதியாக 2 தொகுதிகளுக்கு 1 மாவட்டங்களாகவும் சில மாவட்டங்கள் 1 தொகுதிக்கு ஒரு மாவட்டமாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

    இதுவரை 144 மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ள 6 மாவட்ட செயலாளர்களுக்கான பட்டியலை அறிவிப்பு விரைவில் விஜய் வெளியிட இருக்கிறார்.

    இதற்கிடையே கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னையில் கடந்த மாதம் நடந்தது. கூட்டத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதி ராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    அடுத்த கட்டமாக பூத் கமிட்டி மாநாடு நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார். இதையொட்டி கடந்த சில மாதங்களாக கட்சிக்கு பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வந்தது.

    ஒரு பூத்துக்கு ஒரு ஆண், ஒரு பெண் என 2 பேர் நியமனம் செய்யப்பட்டனர். மொத்தம் 35 ஆயிரம் பூத் கமிட்டி அமைக்கப்பட்டது. மொத்தம் 70 ஆயிரம் கமிட்டி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த பணிகள் முடி வடைந்த நிலையில் தமிழக வெற்றிக் கழக பூத் கமிட்டி மாநாடு வருகிற 26, 27-ந் தேதிகளில் கோவை சரவணம்பட்டியில் நடைபெற இருக்கிறது.

    இந்த மாநாடு 2 மண்டலங்களாக நடக்கிறது. கொங்கு மண்டலத்துக்குட்பட்ட கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், நீலகிரி மாவட்டங்களுக்கான மாநாடு நடைபெறுகிறது.

    26-ந்தேதி மதியம் 3 மணிக்கு மாநாடு தொடங்குகிறது. 2 நாட்கள் நடைபெறும் மாநாட்டில் கட்சி தலைவர் விஜய் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.

    மாநாட்டில் தேர்தல் ணிகள், மக்களிடையே தமிழக வெற்றிக் கழக திட்டங்களை கொண்டு செல்வது மற்றும் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கான யூகங்கள் பற்றி விஜய் ஆலோசனை நடத்த இருக்கிறார்.

    இந்த மாநாட்டில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் அதிரடி அரசியல் பேச்சு அரசியல் கட்சிகள் மத்தியிலும், தொண்டர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மாநாடு நடைபெறும் இடத்தை சமீபத்தில் கட்சி பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் நேரில் சென்று பார்வையிட்டார். தொடர்ந்து மாநாட்டுக்கான முன் ஏற்பாட்டு பணிகளில் கோவை மாவட்ட நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    • பல்வேறு தரப்பினர் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது.
    • இஸ்லாமியர்களின் உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் நான் எப்போதும் துணை நிற்பேன்.

    வக்பு வாரிய திருத்த சட்டம் மசோதாவிற்கு எதிரான வழக்கில், சட்டப்படி புதிய உறுப்பினர் நியமனம் மேற்கொள்ளக்கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வரவேற்றுள்ளார்.

    இதுகுறித்து தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    வக்ஃபு திருத்தச் சட்டப்படி எந்தப் புதிய உறுப்பினர் நியமனமும் மேற்கொள்ளக் கூடாது என்றும், ஏற்கெனவே பதியப்பட்ட வக்ஃபு சொத்துகள் மீது எந்தப் புதிய நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

    இஸ்லாமியர்களின் உரிமையான வக்ஃபு வாரியம் தொடர்பாக ஒன்றிய அரசு கொண்டு வந்த புதிய சட்டத் திருத்தத்தை எதிர்த்து, தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது.

    இஸ்லாமியர்களின் உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் நான் எப்போதும் துணை நிற்பேன், தமிழக வெற்றிக் கழகம் துணை நிற்கும் எனத் தீர்க்கமாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    பாசிச அணுகுமுறைக்கு எதிராக நாம் தொடங்கிய சட்டப் போராட்டத்தில் நமக்குத் துணையாக இருந்து இந்த உத்தரவைப் பெற்றுத் தந்த மூத்த வழக்கறிஞர் மதிப்பிற்குரிய அபிஷேக் சிங்வி அவர்களுக்கும் அவருடைய வழக்கறிஞர் குழுவினருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கிண்டியில் உள்ள தீரன் சின்னமலையின் சிலைக்கு அரசியல் தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
    • தனது அசாத்திய வீரத்தால் அந்நிய ஆதிக்கத்தை வென்றெடுத்த மாவீரர்.

    சென்னை:

    மாவீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று தீரன் சின்னமலையின் 269-வது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அரசியல் தலைவர்கள் பலர், கிண்டியில் உள்ள தீரன் சின்னமலையின் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும் தீரன் சின்னமலையின் வீரத்தை போற்றியும் வருகின்றனர்.

    இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தலைவர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தாய் மண்ணை மீட்க, தனது அசாத்திய வீரத்தால் அந்நிய ஆதிக்கத்தை வென்றெடுத்த மாவீரர்.

    இறுதி மூச்சுவரை விடுதலைக்காகப் போராடி, துணிச்சலோடு தூக்குமேடை ஏறி, விடுதலை வேட்கையை விதைத்த தீரர், மாவீரர் தீரன் சின்னமலை அவர்களின் பிறந்த நாளில், அவரின் தியாகத்தை நினைவுகூர்ந்து, அவரைப் போற்றி வணங்குகின்றேன் என்று கூறியுள்ளார். 

    • சென்னையில் நடந்த இப்தார் விருந்தை விஜய் கொச்சைப்படுத்தி பாவம் செய்துவிட்டதாக குற்றச்சாட்டு.
    • விஜயை தங்கள் மத நிகழ்ச்சிகளுக்கு அழைக்க வேண்டாம். விஜய் முஸ்லிம் விரோதி.

    த.வெ.க. தலைவர் விஜயிடம் இருந்து தமிழ்நாடு இஸ்லாமியர்கள் தள்ளியிருக்க வேண்டும் என அகில இந்திய முஸ்லீம் ஜமாத் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அகில இந்திய முஸ்லீம் ஜமாத் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில், குடிகாரர்கள், சூதாட்டக்காரர்களை இஃப்தார் விருந்துக்கு அழைத்து வந்ததாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மீது ஜமாத் தலைவர் குற்றம்சாட்டியுள்ளார்.

    சென்னையில் நடந்த இப்தார் விருந்தை விஜய் கொச்சைப்படுத்தி பாவம் செய்துவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்,

    தமிழ்நாட்டில் உள்ள இஸ்லாமியர்கள் விஜய்யிடமிருந்து விலகி இருக்க வேண்டும்.

    விஜயை தங்கள் மத நிகழ்ச்சிகளுக்கு அழைக்க வேண்டாம். விஜய் முஸ்லிம் விரோதி. அவரது பின்னணி, கடந்த கால நடவடிக்கைகள் இஸ்லாமியத்திற்கு எதிரானவை.

    இஸ்லாம் மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிராக விஜயின் செயல்பாடுகள் இருப்பதாக அகில இந்திய முஸ்லீம் ஜமாத் சகாபுதீன் ராஜ்வி குற்றம்சாட்டியுள்ளார்.

    • விஜய், தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்காமல் சித்திரை திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்
    • கடந்த தைப்பொங்கல் நாளன்று இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்து என்று விஜய் பதிவிட்டிருந்தார்.

    த.வெ.க. தலைவர் விஜய் சித்திரை திருநாள் வாழ்த்து கூறியுள்ளார். இது தொடர்பாக அவரது எக்ஸ் பதிவில், "அனைவருக்கும் இனிய சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.

    விஜய் அவர்கள் திராவிடத்தை பின்பற்றி, தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்காமல் சித்திரை திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

    திக, திமுக, விசிக, பாமக, தமிழ் தேசியர்கள் போல் சித்திரை 1-ஐ தமிழ் புத்தாண்டாக தமிழக வெற்றிக்கழகம் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.

    கடந்த தைப்பொங்கல் நாளன்று இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்து என்று விஜய் பதிவிட்டிருந்தார். ஆகவே விசுவாவசு ஆண்டுப்பிறப்பை தமிழ் ஆண்டுப்பிறப்பாக தமிழக வெற்றிக்கழகம் ஏற்கவில்லை. அதன் காரணமாக தான் விஜய் சித்திரை திருநாள் வாழ்த்து கூறியுள்ளார் என்று சொல்லப்படுகிறது.

    1935 ஆம் ஆண்டு திருச்சியில் மறைமலை அடிகளார் தலைமையில் நடந்த தமிழர் மாட்டில் தை முதல் நாளே தமிழ் புத்தாண்டின் தொடக்கம் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனை அந்த மாநாட்டில் பங்கேற்ற பெரியாரும் ஏற்றுக்கொண்டார்.

    தை முதல் நாளே தமிழ் புத்தாண்டு என்பதை வலியுறுத்தி, "நித்திரையில் இருக்கும் தமிழார் சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு. அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம் கற்பித்ததே அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள். தரணி ஆண்ட தமிழனுக்கு தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு" என்று பாரதிதாசன் பாடல் எழுதினார்.

    கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது தை 1 ஆம் தேதியை தமிழ் புத்தாண்டு என்று மாற்றினார். இதனையடுத்து ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் சித்திரை 1 ஆம் தேதியை மீண்டும் தமிழ் புத்தாண்டாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • விஜய் நடித்த 'சச்சின்' படத்தையும் டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் திரைக்கு தற்பொழுது கொண்டு வந்துள்ளனர்
    • 'சச்சின்' படம் வருகிற 18-ந்தேதி மீண்டும் வெளியாக உள்ளது.

    தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்து வரும் டிரெண்ட் சமீப காலமாக நிலவி வருகிறது . ஏற்கனவே ரஜினியின் 'பாட்ஷா', 'பாபா', கமல்ஹாசனின் 'வேட்டையாடு விளையாடு', 'ஆளவந்தான்', சூர்யாவின் 'வாரணம் ஆயிரம்', தனுசின் 'யாரடி நீ மோகினி' உள்ளிட்ட பல படங்கள் மீண்டும் திரையிடப்பட்டு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன.

    இந்த வரிசையில் விஜய்யின் 'கில்லி' திரைப்படம் ரீரிலீஸ் செய்யப்பட்டு மக்கள் கொண்டாடி தீர்த்தனர். கில்லி திரைப்படம் ரீரிலீஸ் ஆன திரைப்படங்களுக்கு ஒரு பென்ச் மார்க்காக அமைந்தது.

    அதனை தொடர்ந்து விஜய் நடித்த 'சச்சின்' படத்தையும் டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் திரைக்கு தற்பொழுது கொண்டு வந்துள்ளனர். 'சச்சின்' படம் வருகிற 18-ந்தேதி மீண்டும் வெளியாக உள்ளது. இப்படத்தில் இடம் பெற்ற புகழ் பெற்ற் பாடல்களின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டு வந்தது. இந்நிலையில் படத்தின் டிஜிட்டல் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    'சச்சின்' படம் 2005-ம் ஆண்டு தமிழ்புத்தாண்டு தினத்தில் திரைக்கு வந்தது. இதில் விஜய்க்கு ஜோடியாக ஜெனிலியா நடித்து இருந்தார். இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் டைரக்டு செய்ய, கலைப்புலி தாணு தயாரித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாலவாக்கத்தில் உள்ள அண்ணல் அம்பேத்கர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.
    • சட்ட உரிமைகள் மட்டுமில்லை, சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவையும் அனைவருக்குமானவை.

    தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    நமது தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 135ஆவது பிறந்த நாளையொட்டி, சென்னை, பாலவாக்கத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.

    சட்ட உரிமைகள் மட்டுமில்லை, சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவையும் அனைவருக்குமானவை என்பதை வலியுறுத்தி, தமது வாழ்நாளை மக்களுக்கு அர்ப்பணித்த அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளில் அவரைப் போற்றி வணங்குவோம். நம் சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் நீங்கி, சமத்துவம் என்றும் நிலைத்திட உறுதி ஏற்போம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அரசியல் தலைவர்கள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல் 14-ந்தேதி ‘சமத்துவ நாள்’ என்று கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

    நாடு முழுவதும் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரசியல் தலைவர்கள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருக

    அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல் 14-ந்தேதி சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

    இந்த நிலையில் சென்னை பாலவாக்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    • அண்மையில் நாடாளுமன்ற இரு அவைகளிலும் வக்ஃபு வாரிய திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
    • திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஏற்கனவே வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் தவெகவும் வழக்கு தொடர்ந்துள்ளது.

    நாடு முழுவதும் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள், எதிர்க்கட்சிகள் வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

    இந்நிலையில், வக்பு சட்ட திருத்தத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    அண்மையில் நாடாளுமன்ற இரு அவைகளிலும் வக்ஃபு வாரிய திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.

    திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஏற்கனவே வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் தவெகவும் வழக்கு தொடர்ந்துள்ளது.

    ×