என் மலர்
- அன்பின் முழு வடிவமாகவும், தியாகத்தின் முழு உருவமாகவும், பிரபஞ்சத்தின் வாழ்வை அழகாய்;
- அன்னையர் அனைவருக்கும் "அன்னையர் தினம்" வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை :
அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
அன்பின் முழு வடிவமாகவும், தியாகத்தின் முழு உருவமாகவும், பிரபஞ்சத்தின் வாழ்வை அழகாய்; அர்த்தமாய் மாற்றிடும் உயிரும் மெய்யுமான ஒப்பற்ற அன்னையின் மகத்துவத்தை போற்றுவதோடு
உயிருக்குள் உயிர் கொடுத்து உதிரத்தை உணவாக்கி உலகத்தை உனதென தந்த உன்னத அன்னையர் அனைவருக்கும் "அன்னையர் தினம்" வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
- ரெட்ரோ திரைப்படம் மே 1 ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
- முதல் நாள் வசூலாக திரைப்படம் உலகளவில் 46 கோடி ரூபாயை தாண்டியது.
நடிகர் சூர்யாவின் 44-வது படம் ரெட்ரோ. கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். திரைப்படம் மே 1 ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
முதல் நாள் வசூலாக திரைப்படம் உலகளவில் 46 கோடி ரூபாயை தாண்டியது. சூர்யா நடித்த திரைப்படங்களில் மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்த திரைப்படமாக ரெட்ரோ உருமாறியுள்ளது.
இதுவரை ரெட்ரோ படம் உலக அளவில் ரூ.104 கோடி வசூலை கடந்துள்ளது. இந்நிலையில் படத்தில் இடம்பெற்ற எதற்காக மறுபடி வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை விவேக் வரிகளில் அனந்து பாடியுள்ளார். பாடலின் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
- ஆபரேசன் சிந்தூர் தொடர்பாக சரியான நேரத்தில் விரிவான விளக்கம் அளிக்கப்படும்.
- ஊகங்கள் அடிப்படையில் பரவும் தகவல்களை சரிபார்க்காமல் மற்றவர்களுக்கு பகிருவதை தவிருங்கள்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இதற்கு ஆபரேசன் சிந்தூர என்று இந்திய ராணுவம் பெயரிட்டது.
இதனையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் தலையீட்டால் இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக அறிவித்தது. நாளை இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன.
இந்நிலையில், ஆபரேசன் சிந்தூர் தொடர்கிறது என்று இந்திய விமானப்படை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
அந்த பதிவில், "இந்திய விமானப்படை ஆபரேசன் சிந்தூரில் தனக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை துல்லியமாகவும், தொழில்முறையுடனும் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. தேசிய நோக்கங்களுக்காக விவேகமான முறையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆபரேசன் சிந்தூர் செயல்பாடுகள் இன்னும் தொடர்கிறது. இது தொடர்பாக சரியான நேரத்தில் விரிவான விளக்கம் அளிக்கப்படும். ஊகங்கள் அடிப்படையில் பரவும் தகவல்களை சரிபார்க்காமல் மற்றவர்களுக்கு பகிருவதை தவிருங்கள்.
சரிபார்க்கப்படாத தகவல்களை நம்புவதையும் பரப்புவதையும் தவிர்க்குமாறு இந்திய விமானப்படை அனைவரையும் கேட்டுக்கொள்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.
- இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக அறிவித்தது
- பிஎல் தொடர் வரும் வியாழன் அல்லது வெள்ளிக்கிழமை தொடங்க உள்ளதாக தகவல்
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது.
இதனையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் தலையீட்டால் இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக அறிவித்தது. மே 12 ஆம் தேதி இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன.
இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தத்தை தொடர்ந்து பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் வரும் வியாழன் அல்லது வெள்ளிக்கிழமை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
மேலும், ஐபிஎல் தொடரை மீண்டும் தொடங்குவதற்காக சொந்த ஊர் திரும்பிய வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களை மீண்டும் அழைக்கும் பணியில் அந்ததந்த அணி நிர்வாகங்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி மீண்டும் முதலில் இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- கமல்ஹாசனின் 237-வது திரைப்படத்தை இயக்குபவர் பிரபல ஸ்டண்ட் இயக்குனரான அன்பறிவ் மாஸ்டர்.
- அன்பறிவை வாழ்த்தி KH237 படக்குழு ஒரு ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் விக்ரம். அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து. கமல்ஹாசன் தற்பொழுது மணி ரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகிறது.
இதைத்தொடர்ந்து கமல்ஹாசனின் 237-வது திரைப்படத்தை இயக்குபவர் பிரபல ஸ்டண்ட் இயக்குனரான அன்பறிவ் மாஸ்டர். இவர்கள் லியோ, தசரா, ஆர்.டி.எக்ஸ், சலார், அயலான் போன்ற அனைத்து திரைப்படங்களில் வரும் சண்டை காட்சிகளை இயக்கியவர்களாவர்.
இன்று பிறந்தநாள் கொண்டாடும் அன்பறிவை வாழ்த்தி KH237 படக்குழு ஒரு ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இப்படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில் படத்தின் இசையமைப்பாளராக ஜி.வி பிரகாஷை தேர்வு செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.
- சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு மிகச்சிறப்பாக நடைபெற தமிழக பா.ஜ.க. சார்பாக மனமார வாழ்த்துகிறேன்.
- நமது பண்பாட்டையும், அனைவருக்குமான சமூகநீதியையும் வென்றெடுக்க இம்மாநாடு வழிவகுக்கட்டும்.
சென்னை:
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
மாமல்லபுரத்தில் இன்று பாட்டாளி மக்கள் கட்சியும் வன்னியர் சங்கமும் இணைந்து நடத்தவிருக்கும் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு மிகச்சிறப்பாக நடைபெற தமிழக பா.ஜ.க. சார்பாக மனமார வாழ்த்துகிறேன்.
நமது பண்பாட்டையும், அனைவருக்குமான சமூகநீதியையும் வென்றெடுக்க இம்மாநாடு வழிவகுக்கட்டும் எனப் பெருமதிப்பிற்குரிய பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ஐயா அவர்களுக்கும், மாநாட்டுக் குழுத்தலைவர் எனது அன்பிற்குரிய அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்! என்று கூறியுள்ளார்.
- ஒத்திகையின் போது பாதுகாப்பு, வெளியேற்றம் மற்றும் முதலுதவி தொடர்பான பயிற்சியும் மேற்கொள்ளப்பட்டது.
- ஒத்திகை பயிற்சியினை மாநில அவசரகால செயல்பாட்டு மையம் மற்றும் மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையங்கள் ஒருங்கிணைந்து நடத்தும்.
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனையின்படி, தமிழ்நாட்டில் உள்ள துறைமுகங்கள், அணுமின் நிலையங்கள், விமான நிலையங்கள் மற்றும் அனல் மின் நிலையங்கள் ஆகியவற்றில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகை கடந்த 7-ந்தேதி முதல் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, நேற்று சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகை, தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம், மற்றும் தூத்துக்குடி அனல் மின் நிலையம், ஆகிய இடங்களில் பிற்பகல் 4 மணி முதல் 5 மணி வரை நடத்தப்பட்டது.
இந்த ஒத்திகையின் போது விமான தாக்குதலை எதிர்கொள்வதற்கான ஆயத்த நிலை குறித்த பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. மேலும் ஒத்திகையின் போது பாதுகாப்பு, வெளியேற்றம் மற்றும் முதலுதவி தொடர்பான பயிற்சியும் மேற்கொள்ளப்பட்டது.
தமிழ்நாட்டில் உள்ள முக்கிய அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் அடுத்த வாரத்தில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகை நடத்தப்படும். இப்பயிற்சியின் தொடக்கமாக முழு ஒத்திகைக்கான தயாரிப்புகள், கலந்தாலோசனைகள் மேற்கொள்ளப்படும்.
பின்னர், வாரத்தின் இரண்டாவது பாதியில், சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் இந்த ஒத்திகை பயிற்சி நேரடியாக நிகழ்த்தப்படும். இந்த ஒத்திகை பயிற்சியினை மாநில அவசரகால செயல்பாட்டு மையம் மற்றும் மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையங்கள் ஒருங்கிணைந்து நடத்தும்.
இந்த சிவில் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய இடங்களில் ஆயத்த நிலையினை சரிபார்த்துக் கொள்வதற்கான ஒரு ஒத்திகை மட்டுமே ஆகும். மற்ற இடங்களில் உள்ள அனைத்து செயல்பாடுகளும் வழக்கம் போல இயங்கும்.
இப்பயிற்சி குறித்து பொதுமக்கள் எவ்வித பதற்றமோ அல்லது அச்சமோ கொள்ளத் தேவையில்லை எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மூன்று வண்ணங்களில் கிடைக்கும்.
- புதிய ஸ்மார்ட்போனின் வடிவமைப்பில் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை.
மொபல் போன்களின் பிரியர்களுக்காக நிறுவனங்கள் போட்டிப்போட்டுக்கொண்டு பலவிதமான மாடல்களில் மொபைல் போன்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி, சோனி நிறுவனம் சோனி எக்ஸ்பீரியா 1 VII-ஐ வருகிற 15-ந்தேதி அறிமுகப்படுத்துகிறது.
சோனி எக்ஸ்பீரியா 1 VII கருப்பு, பச்சை மற்றும் ஊதா என மூன்று வண்ணங்களில் கிடைக்கும். இது குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8 எலைட் பிராசஸரால் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 12 ஜிபி ரேம் வழங்கப்படுகிறது.
புதிய ஸ்மார்ட்போனின் வடிவமைப்பில் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை. இந்த மாடலில் பெரிய டிஸ்ப்ளே உள்ளது. மேலும் செல்ஃபி கேமரா மேல்பக்க பெசலுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. பின்புறம் மூன்று கேமரா சென்சார்கள் மற்றும் இரட்டை LED ஃபிளாஷ் வழங்கப்படுகிறது.
மேலும், சோனியின் பிராவியா தொழில்நுட்பத்துடன் கூடிய டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த மாடலில் 5,000mAh பேட்டரி இருக்கும் என்றும் இரண்டு நாட்கள் வரை பேட்டரி சார்ஜ் வழங்கும் என கூறுகின்றனர்.
- விஜய் சேதுபதி அடுத்ததாக ஏஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- ACE திரைப்படம் வரும் மே 23 ஆம் தேதி வெளியாகிறது.
விஜய் சேதுபதியின் 50 - வது திரைப்படமான மகாராஜா மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. இதை தொடர்ந்து விஜய் சேதுபதி அடுத்ததாக ஏஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த ஆண்டு நிறைவடைந்தது. இப்படத்தில் கன்னட நடிகையான ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை ஆறுமுககுமார் இயக்கி தயாரித்துள்ளார்.
இதற்கு முன் ஆறுமுககுமார் விஜய் சேதுபதி மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடித்த 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' திரைப்படத்தை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியானது. படத்தில் யோகி பாபு, பப்லு பிரித்விராஜ், பி.எஸ் அவினாஷ், திவ்யா பிள்ளை மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
திரைப்படம் வரும் மே 23 ஆம் தேதி வெளியாகிறது. படத்தின் டிரெய்லரை நடிகர் சிம்பு அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டார். டிரெய்லரில் சிவகார்த்திகேயன் வசனம் இடம் பெற்றது கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது.
இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். கரன் பி ராவத் ஒளிப்பதிவு மேற்கொள்ள கோவிந்தராஜ் படத்தொகுப்பை கையாண்டுள்ளார். படத்தின் பின்னணி இசையை சாம் சி.எஸ் மேற்கொண்டுள்ளார்.
- இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி ரோமில் நடந்து வருகிறது.
- 2-ம் சுற்று ஆட்டம் ஒன்றில் இத்தாலியின் சினெர்-அர்ஜென்டினாவின் மரியானோ நவோன் மோதினர்.
களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2-ம் சுற்று ஆட்டம் ஒன்றில் இத்தாலியின் சினெர்-அர்ஜென்டினாவின் மரியானோ நவோன் ஆகியோர் மோதினர்.
இதில் நம்பர் ஒன் வீரரான சினெர் 6-3, 6-4 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். மற்ற ஆட்டங்களில் முனார் (ஸ்பெயின்), அலெக்ஸ் (ஆஸ்திரேலியா) ஆகியோர் வெற்றி பெற்றனர்.