என் மலர்
இத்தாலி
- போப்பின் உடல் ரெடெம்ப்போரிஸ் தேவாலயத்தில் வைக்கப்பட உள்ளது.
- 100 ஆண்டுகளுக்குப் பிறகு வாடிகனுக்கு வெளியே அடக்கம் செய்யப்பட உள்ள முதல் போப் இவர் ஆவார்.
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் காலமானார்.
போப்பின் உடல் ரெடெம்ப்போரிஸ் தேவாலயத்தில் வைக்கப்பட உள்ளது. போப் பிரான்சிஸ் மறைவுக்கு 9 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் தன் கல்லறையை அமைக்க போப் பிரான்சிஸ் விரும்பவில்லை என்றும் ரோமில் உள்ள சான்டா மரியா மேகியார் பசிலிகாவில் தனது கல்லறையை அமைக்க போப் பிரான்சிஸ் விரும்பியதாக கூறப்படுகிறது.
ரோமுக்கு செல்லும்போதெல்லாம் சான்டா மரியா மேகியார் பசிலிகாவுக்கு செல்வதை போப் வழக்கமாக வைத்திருந்தார்.
பொதுவாக போப்பாக உள்ளவர்கள் சைப்ரஸ், ஈயம் மற்றும் கருவாலி மரத்தால் ஆன பேழையில் அடக்கம் செய்யப்படுவார்கள்.
ஆனால், போப் பிரான்சிஸ் ஜிங்க-ஆல் பூசப்பட்ட சவப்பெட்டியில் தன்னை அடக்கம் செய்ய விரும்பியதாக கூறப்படுகிறது.
100 ஆண்டுகளுக்குப் பிறகு வாடிகனுக்கு வெளியே அடக்கம் செய்யப்பட உள்ள முதல் போப் இவர் ஆவார்.
மேலும், போப்பின் இறுதிச் சடங்கிற்கு 2 அல்லது 3 வாரங்களுக்குப் பிறகு புதிய போப்பை தேர்தந்தெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய போப்பை தேர்ந்தெடுக்க கார்டினல்கள் சிஸ்டைன் ஆலயத்தில் கூடுவார்கள். ரகசிய பரிமாணம் செய்து ரகசிய வாக்குச் சீட்டு மூலம் வாக்களிப்பார்கள்.
80 வயதிற்குட்பட்ட கார்டினல்களுக்கு மட்டுமே வாக்களிக்கும் உரிமை உள்ளது.
புதிய போப்பை தேர்ந்தெடுக்க மூன்றில் 2 பங்கு பெரும்பான்மை தேவை. ஒவ்வொரு வாக்கெடுப்புக்குப் பிறகும், வாக்குச் சீட்டுகள் எரிக்கப்படும்.
பின்னர் பெரும்பான்மையை பொருத்து புதிய போப் அறிவிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நற்கருணை என்பது பலம் வாய்ந்தவர்களுக்கு ஒரு பரிசு அல்ல, ஆனால் பலவீனமானவர்களுக்கு ஒரு சக்திவாய்ந்த மருந்து.
- சமூக நீதிக்காகவும், புறக்கணிக்கப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலமாக திருச்சபை இருக்க வேண்டும் என்று வாதிட்டார்.
கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் (திருத்தந்தை) பிரான்சிஸ் இன்று தனது 88 ஆவது வயதில் காலமானதாக வாடிகன் அறிவித்துள்ளது.
அர்ஜென்டினாவை சேர்ந்த போப் பிரான்சிஸ் உடைய இயற்பெயர் ஜார்ஜ் மேரியோ பெர்கோக்லியோ. புவெனஸ் ஐரிஸ் நகரில் இத்தாலியைச் சேர்ந்த கணக்காளரான மரியோ ஜோஸ் பெர்கோக்லியோ மற்றும் இத்தாலிய குடியேறிகளின் மகள் ரெஜினா மரியா சிவோரி ஆகியோருக்கு ஐந்து குழந்தைகளில் மூத்தவராகப் ஜார்ஜ் மேரியோ பெர்கோக்லியோ பிறந்தார்.
அரசுப் பள்ளியில் படிப்பை முடித்து, புவெனஸ் ஐரிஸ் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயின்ற இவர் வேதியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர் இயேசு சபையில் 1958இல் துறவு நிலை ஏற்றார். 1998 இல், புவெனஸ் ஐரிஸ் பேராயராகப் பொறுப்பேற்றார். 2001 இல் கார்டினலாக உயர்த்தப்பட்டார்.

2013, மார்ச் 13ஆம் நாள் கத்தோலிக்க திருச்சபையின் 266ஆம் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வழக்கத்துக்கு மாறாக அப்போதைய திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் பதிவியில் இருந்து விலகுவதாக அறிவித்த நிலையில் பரபரப்பான சூழலில் திருத்தந்தை ஆன ஜார்ஜ் மேரியோ பெர்கோக்லியோ, போப் பிரான்சிஸ் ஆக தன்னை அடையாளப்படுத்தினார்.
சேரிகளின் போப்
ஏழைகள் மற்றும் ஓரங்கட்டப்பட்ட மக்களுக்கான ஆழ்ந்த அர்ப்பணிப்புக்காக பிரான்சிஸ் "சேரிகளின் போப்" என்ற புனைபெயரைப் பெற்றார்.
அர்ஜென்டினாவில் பேராயராக இருந்தபோதும், வாடிகனில் போப் ஆகவும் தனது ஊழியம் முழுவதும், அவர் தொடர்ந்து வறிய சமூகத்தினரிடையே கருணை செலுத்தினார். சமூக நீதிக்காகவும், புறக்கணிக்கப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலமாக திருச்சபை இருக்க வேண்டும் என்று வாதிட்டார்.

சீர்திருத்தவாதி
பழமைவாதத்தின் பேரில் புலம்பெயர்ந்தோர், LGBTQ கத்தோலிக்கர்கள் மற்றும் திருச்சபையால் பெரும்பாலும் விலக்கப்பட்ட மக்களையும் ஏற்று போப் பிரான்சிஸ் கத்தோலிக்க பொது மனப்பான்மையில் சீர்திருத்தங்களைச் செய்தார்.
வாடிகன் நிதி மற்றும் கட்டமைப்புகளில் சீர்திருத்தங்களைச் செயல்படுத்தினார். முதலாளித்துவ அமைப்புகளை சவால் செய்தல், காலநிலை மாற்றத்தைத் தடுக்கும் நடவடிக்கையை ஆதரித்தல் மற்றும் விவாகரத்து மற்றும் ஒர் பாலின உறவு போன்ற பிரச்சினைகளில் அவர்களுக்கு சமூகத்திலும் மதத்திலும் கோட்பாட்டு ரீதியாக இருந்த புறக்கணிப்பை எதிர்த்தல் ஆகியவை பழமைவாதத்தை எதிர்த்து போப் பிரான்சிஸ் செய்த முக்கிய பணிகளாகும். மத அடிப்படைவாதத்தை பிளேக் நோய் என்று போப் பிரான்சிஸ் கூறினார்.
12 ஆண்டுகள் திருச்சபையை வழிநடத்தி, கல்லீரல் அழற்சி நோயுடன் போராடிய பிறகு, பிரான்சிஸ் இன்று (ஏப்ரல் 21) 88 வயதில் இறைவனடி சேர்ந்தார். தனது இறுதிச் சடங்கை எளிமையாக செய்ய வேண்டும் என்று போப் பிரான்சிஸ் முன்னரே தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
பணியைத் குரலற்றவர்களுக்கான குரலாகவும், சீர்திருத்தவாதியாகவும், திருச்சபையின் பணியின் மையத்தில் ஏழைகளுக்கான நற்பணியை தொடர்ந்து முன்னிறுத்திய மேய்ப்பராகவும் போப் பிரான்சிஸ் உடைய என்றும் மரபு நிலைத்திருக்கும்.
ஏழைகளை விலக்கி வைக்கும் உலக பொருளாதார அமைப்பைக் கண்டிக்கும் பிரான்சிஸ், "நற்கருணை என்பது பலம் வாய்ந்தவர்களுக்கு ஒரு பரிசு அல்ல, ஆனால் பலவீனமானவர்களுக்கு ஒரு சக்திவாய்ந்த மருந்து" என்று கூறுவார்.

டைம் லைன்
2014 : பாலஸ்தீன மக்களின் கோரிக்கைக்கு ஆதரவளிக்கும் விதமாக, மேற்குக் கரை நகரமான பெத்லகேமிலிருந்து இஸ்ரேலைப் பிரிக்கும் சுவர் அருகே பிரார்த்தனை செய்தார்.
2015 : ஏழைகளைச் சுரண்டி பூமியை ஒரு பெரிய குப்பைக் குவியலாக மாற்றியுள்ள கட்டமைப்பு ரீதியாக வக்கிரமான உலகளாவிய பொருளாதார அமைப்பைச் சரிசெய்ய ஒரு கலாச்சாரப் புரட்சிக்கு அழைப்பு விடுத்து, "லாடாடோ சி" என்ற அறிக்கையை வெளியிடுகிறார்.
2015 : அமெரிக்காவைக் காலனித்துவ காலத்தில் கைப்பற்றியபோது, பொலிவியாவில் பழங்குடி மக்களுக்கு எதிராக கத்தோலிக்க திருச்சபை செய்த பாவங்கள் மற்றும் குற்றங்களுக்காக மன்னிப்பு கோருகிறது.
2015 : விவாகரத்து பெற விரும்பும் கத்தோலிக்கர்கள் தேவாலயத்தில் மறுமணம் செய்து கொள்ளும் வகையில், திருமண ரத்து செயல்முறை விரைவாகவும், எளிமையாகவும் மாற்றும் வகையில் மறுசீரமைக்கப்பட்டது.
2016 : அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் இறந்த புலம்பெயர்ந்தோருக்காகப் பிரார்த்தனை போப் பிரான்சிஸ் செய்கிறார். எல்லைச் சுவரைக் கட்ட விரும்பியதற்காக அப்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் "ஒரு கிறிஸ்தவர் அல்ல" என்று போப் தெரிவத்தார்.
2019: கத்தோலிக்கர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே கூட்டு உறவுகளை ஏற்படுத்தி, அல் அசார் இமாமுடன் "மனித சகோதரத்துவம்" ஆவணத்தில் கையெழுத்திடுகிறார்.
2021: ஈராக்கிற்கு விஜயம் செய்த முதல் போப் ஆன பிரான்சிஸ், உயர்மட்ட ஷியா முஸ்லிம் மதகுருவை சந்தித்தார்.
2023: அசோசியேட்டட் பிரஸ் நேர்காணலில் "ஓரினச்சேர்க்கையாளராக இருப்பது குற்றமல்ல" என்று அறிவிக்கிறார்.
2023: ஒரே பாலின ஜோடிகளுக்கு ஆசீர்வாதங்களை அங்கீகரித்தார். இதனால் ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் பிற இடங்களில் உள்ள பழமைவாத பிஷப்புகளிடமிருந்து கடுமையான எதிர்ப்பைத் சந்தித்தார்.
2025 ஏப்ரல் 20 (நேற்று) ஈஸ்டர் செய்தியாக, காசாவில் உடனடி போர் நிறுத்தம் வேண்டும் என்பதை தனது உரையில் வலியுறுத்தினார்.
- 88 வயதான போப், நிமோனியா, சுவாசக் கோளாறுக்கு சிகிச்சை பெற்றார்.
- கடந்த மார்ச் 23 அன்று வாடிகனுக்கு திரும்பினார்.
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் இன்று காலமானதாக தகவல் வெளியாகி உள்ளது.
போப் பிரான்சிஸ் இன்று (திங்கள்கிழமை) காலை காலமானார் என்று வாடிகன் கேமர்லெங்கோ கார்டினல், கெவின் ஃபெரெல் அறிவித்தார்.
"இன்று காலை 7:35 மணிக்கு, ரோம் பிஷப் பிரான்சிஸ், தந்தையின் வீட்டிற்குத் திரும்பினார். அவரது முழு வாழ்க்கையும் இறைவனுக்கும் அவரது திருச்சபைக்கும் சேவை செய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்டது" என்று கெவின் ஃபாரெல் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
88 வயதான போப், நிமோனியா, நுரையீரல் தொற்று, சுவாசக் கோளாறு காரணமாக பிப்ரவரி 14ஆம் தேதி மருத்துவமனைக்குச் சென்று, 38 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த மார்ச் 23 அன்று வாடிகனுக்கு திரும்பினார்.
நேற்று ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு வாடிகன் சதுக்கத்தில் கூடிய ஆயிரக்கணக்கான மக்களை நோக்கி புனித பேதுரு பேராலயத்தில் இருந்தவாறு போப் பிரான்சிஸ் கையசைத்து ஈஸ்டர் வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
- நேபிள்சுக்கு தெற்கே மான்டே பைட்டோவுக்கு கேபிள் கார் ஒன்று சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்சென்றது.
- இதில் கேபிள் அறுந்து விழுந்த விபத்தில் குறைந்தது 4 பேர் கொல்லப்பட்டனர்.
மிலன்:
இத்தாலியில் உள்ள நேபிள்ஸ் விரிகுடா மற்றும் வெசுவியஸ் மலை காட்சிகளுக்காக கேபிள் கார் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கு சீசன் என்பதால் கேபிள் கார் சேவை கடந்த வாரம் தொடங்கப்பட்டது.
இந்நிலையில், நேபிள்சுக்கு தெற்கே மான்டே பைட்டோவுக்கு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்சென்ற கேபிள் காரில் கேபிள் அறுந்து விழுந்ததில் குறைந்தது 4 பேர் கொல்லப்பட்டனர். மேலும் ஒருவர் காயமடைந்தார்.
விபத்து குறித்து தகவலறிந்ததும் இத்தாலிய ஆல்பைன் மீட்புப் படையினர் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
கேபிள் கார் அறுந்து விழுந்த விபத்தில் 4 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- ஒரு மாதத்திற்கும் மேல் சிகிச்சை பெற்ற போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார்.
- இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா தம்பதியினர் இத்தாலியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.
ரோம்:
கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸ் (88), மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக பிப்ரவரி 14-ம் தேதி ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நுரையீரல் தொற்று, சுவாச குழாய் பாதிப்பு என இரட்டை நிமோனியாவால் பாதிக்கப்பட்டதாக மருத்துவமனை தெரிவித்தது.
ஒரு மாதத்திற்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த போப் பிரான்சிஸ் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வாடிகன் சர்ச் திரும்பினார். தற்போது அங்கு முழு ஓய்வு எடுத்து வருகிறார்.
இதற்கிடையே, இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மற்றும் ராணியார் தம்பதி இத்தாலியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், வாடிகனில் ஓய்வு எடுத்து வரும் போப் பிரான்சிசை இங்கிலாந்து மன்னர் சார்லஸ், அவரது மனைவி கமீலா சார்லஸ் ஆகியோர் இன்று திடீரென சந்தித்தனர். அப்போது அவரது உடல்நலம் பற்றி விசாரித்ததாகக் கூறப்படுகிறது.
- சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வடக்கு ரோமில் உள்ள மற்றொரு கார் டீலர்ஷிப்பில் ஏற்பட்ட தீவிபத்து டெஸ்லா கார்கள் உள்பட 30 கார்கள் எரிந்து சேதமாயின என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தாலியின் ரோம் நகரில் உள்ள டெஸ்லா டீலர்ஷிப் விற்பனையகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 கார்கள் எரிந்து சேதமடைந்துள்ளது. தீவிபத்து ஏற்பட்டபோது விற்பனையகத்தில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
மேலும், தீ முழுவதும் அணைக்கப்பட்டு, தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீவிபத்து குறித்து டீலர்ஷிப் உரிமையாளர் மற்றும் விற்பனையகத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, டெஸ்லா கார் விற்பனையகத்தில் ஏற்பட்ட தீவிபத்து பயங்கரவாத தாக்குதல் என உலக பெரும்பணக்காரரான எலான் மஸ்க் குற்றம்சாட்டியுள்ளார்.
சமீபகாலமாக இத்தாலி முழுவதும் டெஸ்லா வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஒருவாரத்திற்கு முன்பு வடக்கு ரோமில் உள்ள மற்றொரு கார் டீலர்ஷிப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் டெஸ்லா கார்கள் உள்பட 30 கார்கள் எரிந்து சேதமாயின என்பது குறிப்பிடத்தக்கது.
- சிகிச்சையின்போது 2 முறை உயிருக்கு ஆபத்தான கட்டத்தை சந்தித்தார்.
- தீவிர சிகிச்சை மூலம் போப் பிரான்சிஸ் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.
போப் ஆண்டவர் பிரான்சிஸ், உடல்நல பாதிப்பால் கடந்த பிப்ரவரி 14-ந்தேதி, இத்தாலியில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக அனுமதிக்கப்பட்ட அவருக்கு நடந்த பரிசோதனையில் 2 நுரையீரலிலும் நிமோனியா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சையின்போது 2 முறை உயிருக்கு ஆபத்தான கட்டத்தை சந்தித்தார். தீவிர சிகிச்சை மூலம் போப் பிரான்சிஸ் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அவர் அபாய கட்டத்தை தாண்டி இருந்தார்.
கடந்த 6-ந்தேதி போப் பிரான்சிஸ் ஒரு ஆடியோ செய்தியை வெளியிட்டார். அதன்பின் 16-ந்தேதி அவரது புகைப்படத்தை வாடிகன் வெளியிட்டது.
இந்த நிலையில் போப் பிரான்சிஸ் இன்று மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
5 வார கால சிகிச்சைக்கு பிறகு மருத்துவமனையில் இருந்து போப் பிரான்சிஸ் டிஸ்சார்ஜ் ஆனார்.
38 நாட்களுக்கு பிறகு மருத்துவமனையில் இருந்து திரும்பிய போப் பிரான்சிஸ், வாடிகனில் உள்ள தனது இல்லத்திற்குத் திரும்புவதற்கு முன்பு ஜெமெல்லி மருத்துவமனையில் இருந்தவாறு போப் மக்களை சந்தித்து பேசினார்.
- பரிசோதனையில் 2 நுரையீரலிலும் நிமோனியா பாதிப்பு கண்டறியப்பட்டது.
- வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார்.
வாடிகன் சிட்டி:
போப் ஆண்டவர் பிரான்சிஸ், உடல்நல பாதிப்பால் கடந்த பிப்ரவரி 14-ந்தேதி, இத்தாலியில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக அனுமதிக்கப்பட்ட அவருக்கு நடந்த பரிசோதனையில் 2 நுரையீரலிலும் நிமோனியா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சையின்போது 2 முறை உயிருக்கு ஆபத்தான கட்டத்தை சந்தித்தார். தீவிர சிகிச்சை மூலம் போப் பிரான்சிஸ் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அவர் அபாய கட்டத்தை தாண்டி இருந்தார்.
கடந்த 6-ந்தேதி போப் பிரான்சிஸ் ஒரு ஆடியோ செய்தியை வெளியிட்டார். அதன்பின் 16-ந்தேதி அவரது புகைப்படத்தை வாடிகன் வெளியிட்டது.
இந்த நிலையில் போப் பிரான்சிஸ் இன்று ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார். இதுதொடர்பாக டாக்டர்கள் கூறும்போது, போப் பிரான்சிஸ் உடல் நிலை சீராக உள்ளது. இன்று ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்.
அவர் ஒரு மாதத்துக்கு மேலாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2 மாதங்களுக்கு ஓய்வெடுக்க வேண்டும். அவர் பெரிய கூட்டங்களில் பங்கேற்க வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளோம் என்றார்.
38 நாட்களுக்கு பிறகு போப் பிரான்சிஸ் இன்று ஆஸ்பத்திரியில் இருந்து திரும்புகிறார். வாடிகனில் உள்ள தனது இல்லத்திற்குத் திரும்புவதற்கு முன்பு ஜெமெல்லி மருத்துவமனையில் இருந்தவாறு போப் ஆசீர்வாதம் வழங்குவார் என வாடிகன் தெரிவித்து உள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு அவர் முதல்முறையாக பொது வெளியில் மக்களை சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
- போப் பிரான்சிஸ் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக ஜெமெல்லி மருத்துவமனை தெரிவித்தது.
- போரால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து குழந்தைகள் பலர் மருத்துவமனைக்கு வந்தனர்,
ரோம்:
கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸ் (88), மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக பிப்ரவரி 14-ம் தேதி ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு நுரையீரல் தொற்று, சுவாச குழாய் பாதிப்பு என இரட்டை நிமோனியாவால் பாதிக்கப்பட்டதாக மருத்துவமனை தெரிவித்தது. போப் பிரான்சிஸ் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது என கடந்த வாரம் ஜெமெல்லி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
இந்நிலையில், போப் பிரான்சிஸ் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவாது முதல் புகைப்படத்தை வாடிகன் நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ளது.
அதில் போப் பிரான்சிஸ் வழிபாட்டு உடைகளின் வழக்கமான ஊதா நிற ஸ்டோலை அணிந்து, மருத்துவமனை தேவாலயத்தின் பலிபீடத்திற்கு முன் சக்கர நாற்காலியில் அமர்ந்திருப்பது காட்டப்பட்டுள்ளது.
ஜெமெல்லி மருத்துவமனையின் 10-வது மாடியில் உள்ள போப்பாண்டவர் குடியிருப்பில் மற்ற பாதிரியார்களுடன் திருப்பலி கொண்டாட்டத்தில் அவர் பங்கேற்றார் என வாடிகன் தெரிவித்துள்ளது.
மேலும், போரால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து குழந்தைகள் பலர் மருத்துவமனைக்கு வந்திருந்தனர்.
இதுதொடர்பாக போப் பிரான்சிஸ் கூறுகையில், எனக்காகப் பல குழந்தைகள் ஜெபிக்கிறார்கள் என்பது தெரியும். அவர்களில் சிலர் இன்று ஜெமெல்லிக்கு வந்தனர். அன்பான குழந்தைகளே நன்றி, போப் உங்களை நேசிக்கிறார், உங்களைச் சந்திக்க எப்போதும் காத்திருக்கிறார் என தெரிவித்தார்.
- போப் பிரான்சிஸ் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாக மருத்துவமனை கூறியது.
- போப் பிரான்சிஸ் இன்றி வாடிகன் நகரில் பிரார்த்தனை கூட்டங்கள் நடந்து வருகின்றன.
ரோம்:
கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸ் (88), மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக கடந்த 14-ம் தேதி ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு நுரையீரல் தொற்று, சுவாச குழாய் பாதிப்பு என இரட்டை நிமோனியாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை தெரிவித்திருந்தது. இதனால் வாடிகன் தேவாலயத்தில் போப் பிரான்சிஸ் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில் கடந்த மூன்று வாரமாக சிகிச்சை பெற்று வரும் போப் பிரான்சிஸ் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது என ஜெமெல்லி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
தனக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள், செவிலியர்களுக்கு நன்றி தெரிவித்தார். தனக்காக பிரார்த்தனை செய்து கொண்ட அனைவருக்கும் நன்றி என குறிப்பிட்டார்.
- போப் பிரான்சிஸ் உடல்நிலை மேலும் மோசமடைந்துள்ளது என வாடிகன் தெரிவித்தது.
- இந்த அறிக்கையால் உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்கர்கள் கவலை அடைந்துள்ளனர்.
ரோம்:
கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸ் (88), மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக கடந்த 14-ம் தேதி ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவ பரிசோதனையில் அவருக்கு நுரையீரலில் நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் வாடிகன் தேவாலயத்தில் போப் பிரான்சிஸ் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒருவாரம் ஆகிவிட்ட நிலையில், தற்போதுவரை அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், போப் பிரான்சிஸ் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது என வாடிகன் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர் குணமடைய பிரார்த்தனை செய்யும்படி கத்தோலிக்கர்களை வாடிகன் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
வாடிகன் நிர்வாகம் வெளியிட்ட இந்த அறிக்கையால் உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்கர்கள் கவலை அடைந்துள்ளனர்.
- ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் போப் பிரான்சிஸ் அனுமதிக்கப்பட்டார்.
- போப் பிரான்சிஸ் நலம்பெற வேண்டி கிறிஸ்தவர்கள் பிரார்த்தித்து வருகின்றனர்.
ரோம்:
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் (88), மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் உடல்நல பாதிப்பு ஏற்பட்ட நிலையில் பிரார்த்தனைக் கூட்டங்களை தொடர்ந்து நடத்திவந்தார். தனக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாக போப் பிரான்சிஸ் தெரிவித்தார்.
இதற்கிடையே, ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் போப் பிரான்சிஸ் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவர்கள் போப் பிரான்சிஸ் நலம்பெற வேண்டி பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், போப் பிரான்சிஸ் மருத்துவ நிலையில் முன்னேற்றம் உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வாடிகன் செய்தி தொடர்பாளர் மத்தேயு புரூனி கூறுகையில், மருத்துவ ஊழியர்களால் மதிப்பிடப்பட்ட ரத்த பரிசோதனைகள், குறிப்பாக அழற்சி குறியீடுகளில் சிறிது முன்னேற்றத்தை காட்டுகின்றன. மருத்துவமனையில் இருந்தே பணிகளை கவனித்து வருகிறார் என தெரிவித்தார்.