search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள திரைப்படம் காதலிக்க நேரமில்லை.
    • காதலிக்க நேரமில்லை திரைப்படம் வரும் பொங்கலை முன்னிட்டு வரும் ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள திரைப்படம் காதலிக்க நேரமில்லை. இப்படத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.

    மேலும், இப்படத்தில் யோகி பாபு, லால், வினய், லக்ஷ்மி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, TJ பானு, ஜான் கோகேன், வினோதினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கேவ்மிக் ஆரி ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இப்படத்திற்கு லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். திரைப்படம் வரும் பொங்கலை முன்னிட்டு வரும் ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    திரைப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது. படத்தின் நீளம் 2 மணி நேரம் 22 நிமிடங்களாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் பாடலான பேபி சிக்கு சிக்கு பாடல் நாளை காலை 11 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • யோகிபாபு அடுத்தக்கட்டமாக 'குழந்தைகள் முன்னேற்ற கழகம்' என்ற படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படத்தை சகுனி படத்தை இயக்கிய ஷங்கர் தயால் இயக்கியுள்ளார்.

    யோகிபாபு அடுத்தக்கட்டமாக 'குழந்தைகள் முன்னேற்ற கழகம்' என்ற படத்தில் நடித்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சில மாதங்களுக்கு முன் வெளியானது.

    யோகி பாபு, செந்தில், அகல்யா போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்தை சகுனி படத்தை இயக்கிய ஷங்கர் தயால் இயக்கியுள்ளார். இவர் கடந்த மாதம் மாரடைப்பால் காலமானது வேதனையளிக்கும் ஒன்று. படத்தின் சில பாடல்கள் கடந்த மாதம் வெளியானது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் வரும் ஜனவரி மாதம் 24 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன் குடும்பஸ்தன் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • தெலுங்கு நடிகை சான்வி மேகனா இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

    மணிகண்டன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான குட் நைட் மற்றும் லவ்வர் ஆகிய இரண்டு திரைப்படங்களும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வணிக ரீதியிலும் அது வெற்றிப்படமாக அமைந்தது.

    இதைத்தொடர்ந்து அடுத்ததாக ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன் நடித்துள்ளார். இப்படத்திற்கு குடும்பஸ்தன் என பெயரிட்டுள்ளனர். இவர் இதற்கு முன் நக்கலைட்ஸ் யூடியூப் சேனலில் இயக்குனராக இருந்தவர். இதுவே இவர் இயக்குனராக அறிமுகமாகும் முதல் திரைப்படமாகும்.

    தெலுங்கு நடிகை சான்வி மேகனா இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் குரு சோமசுந்தரம் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இது நகைச்சுயான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படத்திற்கு வைசாக் இசையமைத்துள்ளார். திரைப்படத்தின் முதல் பாடலான ஸீரோ பேலன்ஸ் ஹீரோ பாடல் கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் வரும் 24 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    சித்தா' பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார். இரு பாகங்களாக உருவாகும் இப்படத்தின் 2-ம் பாகத்தை முதலில் வெளியிட உள்ளனர்.

    இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக், துஷரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரியா ஷிபு தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    மதுரையை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக், டைட்டில் வீடியோக்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் முதல் பாடலை நாளை படக்குழு வெளியிடவுள்ளது என போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். இப்பாடலிற்கு கள்ளூரம் என தலைப்பு வைத்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஃபெமி 9 மெகா கொண்டாட்டம் 2025 நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக நடிகை நயன்தாரா- விக்னேஷ் சிவன் பங்கேற்றனர்.
    • நம் மீது நமக்கு தன்னம்பிக்கையும், மரியாதையும் இருந்தால் அதற்கு மேல் பெரிய விஷயம் வேறு எதுவும் இல்லை.

    ஃபெமி 9 மெகா கொண்டாட்டம் 2025 நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக நடிகை நயன்தாரா- விக்னேஷ் சிவன் பங்கேற்றனர். அப்போது அங்கு வந்த நடிகை நயன்தாராவுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இதனால் நயன்தாரா குஷியானார். இதனையடுத்து அந்த நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினார்.

    அப்போது நயன்தாரா கூறியதாவது:-

    நம் மீது நமக்கு தன்னம்பிக்கையும், மரியாதையும் இருந்தால் அதற்கு மேல் பெரிய விஷயம் வேறு எதுவும் இல்லை. யார் என்ன சொன்னாலும், எப்படி நம்மை கீழ்தரமாக பேசினாலும், தப்பாக நடந்தாலும் காலையில் எழுந்தவுடன் நம் வேலையை உண்மையாகவும், உறுதியாகவும் செய்தால் தானாகவே Self Confident வரும். அது நம் வாழ்க்கையை மாற்றிவிடும்.

    என நயன்தாரா கூறினார்.

    • இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் நடுக்கும் படம் ஒன்ஸ் மோர்.
    • மலையாள பிரபல இசையமைப்பாளரான ஹேஷம் அப்துல் வஹாப் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடுக்கும் படம் ஒன்ஸ் மோர்.

    அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை நாஷ் மேற்கொள்கிறார். ராஜ் கமல் கலை இயக்கத்தை கவனிக்க, நவா ராஜ்குமார் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார்.

    மலையாள பிரபல இசையமைப்பாளரான ஹேஷம் அப்துல் வஹாப் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இவர் இசையமைக்கும் முதல் தமிழ் திரைப்படம் இதுவாகும்.

    இவர் இதற்கு முன் ஹருதயம், இனி உதரம், சேஷம் மைக்-இல் ஃபாதிமா, குஷி, ஹை நானா போன்ற பல வெற்றிப் படங்களை இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒன்ஸ் மோர் திரைப்படம் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் வெளியாகவுள்ளது.

    படத்தின் சில பாடல்கள் வெளியாகி மக்களின் வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் அடுத்த பாடலான வா கண்ணம்மா பாடல் வெளியாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித் மற்றும் அருண் விஜய் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது என்னை அறிந்தால் திரைப்படம்
    • பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியானது வணங்கான் திரைப்படம்.

    2015 ஆம் ஆண்டு கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித் மற்றும் அருண் விஜய் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது என்னை அறிந்தால் திரைப்படம். இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் விக்டர் என்ற கதாப்பாத்திரத்தில் அருண் விஜய் நடித்து இருந்தார். இந்த கதாப்பாத்திரம் மக்களிடம் அவருக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கியது. இத்திரைப்படம் அருண் விஜய்-க்கு முக்கியமான , கம்பேக் திரைப்படமாக அமைந்தது. அப்படத்தை தொடர்ந்து தடையேற தாக்க, குற்றம் 23, தடம் என பல வெற்றி திரைப்படங்களில் நடித்தார்.

    2015 ஆம் ஆண்டு என்னை அறிந்தால் படத்தை ரசிகர்களுடன் பார்த்துவிட்டு அவர்கள் கொடுத்த அன்பின் வெளிப்பாடாக திரையரங்கில் இருந்து வெளிவரும் போது மகிழ்ச்சியில் அழுதுக் கொண்டே வருவார். அந்த காணொளி அப்பொழுது மிகவும் வைரலானது.

    இன்று 10 வருடங்களுக்கு பிறகு பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியானது வணங்கான் திரைப்படம். இத்திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதேப்போல் படத்தின் முதல் காட்சியை குடும்பத்துடன் ரசிகர்களுடன் திரையரங்கில் பார்த்தார். படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும் போது மிகவும் எமோஷனலாகவும் மகிழ்ச்சியாகவும் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இப்படம் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் அருண் விஜய்க்கு ஒரு கம்பேக் திரைப்படமாக அமைந்துள்ளது. அருண் விஜயின் நடிப்பை வெகுஜன மக்கள் பாராட்டி வருகின்றனர். இதுப்போல் ஒரு கதாப்பாத்திரத்தில் அவரின் திரைப்பயணத்தில் நடிக்காதது குறிப்பிடத்தக்கது.

    என்னை அறிந்தால் படத்தில் இருந்து 10 வருட தொடர் முயற்சியின் பலனாக இந்த படத்தின் வெற்றி அருண் விஜய்-க்கு கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து அருண் விஜய் இதேப் போல் வெற்றி திரைப்படம் அமைய வாழ்த்துகிறோம்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடப்பு கார் ரேஸ் தொடர் முடியும் வரை திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை.
    • கார் பந்தய ஓட்டுநராக மட்டுமல்ல அணியின் உரிமையாளராகவும் வந்துள்ளேன்.

    நடிகர் அஜித் குமார் 'அஜித்குமார் ரேஸிங்' என்ற பெயரில் புதிய கார் ரேஸ் அணியை உருவாக்கியுள்ளார். தற்போது கார் பந்தயத்திற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகி்றார். அதன்படி கார் பந்தயத்தில் கலந்துகொள்வதற்காக அஜித் துபாய் சென்றார்.

    அங்கு ரேசிற்கான பயிற்சியில் அவர் கலந்துக்கொண்டார். அப்பொழுது அவர் ஓட்டிய கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அஜித் காயமின்றி உயிர் தப்பினார். இதனையடுத்து மீண்டும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்நிலையில் கார் ரேஸ் வீரராக போட்டியில் பங்கேற்பது குறித்து நடிகர் அஜித்குமார் பேட்டியளித்துள்ளார், அதில் திரைப்படங்களில் நடிக்க வேண்டியிருந்ததால் இடையில் போட்டிகளில் பங்கேற்கவில்லை.

    நடப்பு கார் ரேஸ் தொடர் முடியும் வரை திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை. கார் பந்தய ஓட்டுநராக மட்டுமல்ல அணியின் உரிமையாளராகவும் வந்துள்ளேன். கார் ரேஸ் தொடர் நடைபெறாத மாதங்களான அக்டோபர் முதல் மார்ச் வரை திரைப்படங்களில் நடிப்பேன் என அஜித் குமார் கூறினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • இப்படத்தில் ஆகாஷ் முரளி மற்றும் அதிதி சங்கர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
    • இப்படத்தின் மூலம் ஆகாஷ் முரளி தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

    நீண்ட இடைவேளிக்கு பிறகு மீண்டும் விஷ்ணுவரதன் தமிழில் நேசிப்பாயா படத்தை இயக்கியுள்ளார்.

    இப்படத்தில் ஆகாஷ் முரளி மற்றும் அதிதி சங்கர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். நடிகர் அதர்வாவின் தம்பியாவார் ஆகாஷ் முரளி. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சில மாதங்களுக்கு முன் வெளியானது. இப்படத்தின் மூலம் ஆகாஷ் முரளி தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

    படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் முதல் பாடலான `தொலஞ்ச மனசு' என்ற பாடல் யுவன் ஷங்கர் ராஜா குரலில் கடந்த மாதம் வெளியானது. இவர்களுடன் குஷ்பு, சரத்குமார், பிரபு, ராஜா, கல்கி, ஷிவ் பண்டிட் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    திரைப்படம் வரும் ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படம் ஆகாஷ் முரளிக்கு ஒரு மிகப்பெரிய தொடக்கமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படத்தின் டைட்டில் டிராக்கான நேசிப்பாயா வீடியோ பாடலை படக்குழு நேற்று வெளியிட்டது. தற்பொழுது படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

    இந்நிலையில் யுவன் மற்றும் இயக்குனர் விஷ்ணு வரதன் நடிகர் ஆர்யாவுக்கு கல் செய்து நகைச்சுவையாக் பேசும் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இப்படத்தை நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார்.
    • டிஎன்ஏ படத்தின் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது.

    அதர்வா நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் டிஎன்ஏ. இந்தப் படத்தில் நிமிஷா சஜயன் அதர்வாக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்தை நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர், ஃபர்ஹானா போன்ற படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தப் படத்தில் இடம்பெற்ற 5 பாடல்களுக்கு இசையமைப்பாளர்கள் இசையமைத்துள்ளார்கள். இந்த நிலையில், டிஎன்ஏ படத்தின் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது. விரைவில் இந்தப் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என்று தெரிகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.



    • வைரமுத்துவின் பாடல் வரிகளும், அந்த பாடலை பாடிய பாடகர் உன்னி கிருஷ்ணனின் குரலும் தான்.
    • புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    1994-ம் ஆண்டு இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த படம் 'காதலன்'. இப்படத்தில் பிரபுதேவா, நக்மா, வடிவேலு மற்றும் பலர் நடித்திருந்தனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார்.

    இப்படத்தின் கதைக்களம், காமெடி, பாடல்கள் என அனைத்தும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் 'என்னவளே அடி என்னவளே எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்...' என்ற பாடல் இன்றைய காலக்கட்டத்திலும் காதலர்கள், இளைய தலைமுறையினர் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் ரசிக்கப்பட்டு வருகிறது. அதற்கு வைரமுத்துவின் பாடல் வரிகளும், அந்த பாடலை பாடிய பாடகர் உன்னி கிருஷ்ணனின் குரலும் தான். பாடகர் உன்னி கிருஷ்ணனுக்கு இந்த பாடல் தான் சினிமாத்துறையில் அவர் பாடிய முதல் பாடல். இவரை சினிமாதுறைக்கு அழைத்து வந்தவர் ஏ.ஆர். ரகுமான் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில், பாடகர் உன்னி கிருஷ்ணன், நடிகர் பிரபுதேவாவுடன் சேர்ந்து எடுத்துள்ள புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு கூறியிருப்பதாவது:-

    நீங்கள் நம்புவீர்களா என்று தெரியாது. சினிமாவில் என்னுடைய முதல் பாடலான 'என்னவளே' பாடலைப் பிரபுதேவாவின் படத்தில்தான் பாடினேன். ஆனால், இந்த 30 வருடத்தில் அவருடன் நான் எடுக்கும் முதல் புகைப்படம் இதுதான் என்று தெரிவித்து உள்ளார்.

    இப்புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அனைவரின் நடிப்பும் ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.
    • அவருடன் பணியாற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

    தமிழ் திரையுலகில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 20-க்கும் குறைவான படங்களில் ஒன்று "லப்பர் பந்து." இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கிய இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், வசூல் ரீதியிலும் ஹிட் அடித்தது.

    லப்பர் பந்து திரைப்படத்தில் அட்டக்கத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் மற்றும் பலர் நடித்து இருந்தனர். இதில் அனைவரின் நடிப்பும் ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. இந்தப் படத்தில் அட்டக்கத்தி தினேஷ் பூமாலை (கெத்து தினேஷ்) என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

    இந்த நிலையில் முன்னணி இயக்குநர் ஷங்கர் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் அட்டக்கத்தி திரைப்படத்தில் தினேஷ் நடிப்பை வெகுவாக பாராட்டியுள்ளார். மேலும், அவருடன் பணியாற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    இது குறித்து பேசும் போது, "லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பு என்னை வெகுவாக கவர்ந்தது. இப்படியொரு நடிப்பை நான் யாரிடத்திலும் பார்க்கவில்லை. எந்த சாயலும் இல்லாத நடிப்பாக இருந்தது. அது நடிப்பு போன்றே தெரியவில்லை. எப்படி அவர் இதை செய்தார் என்கிற மாதிரி இருந்தது. தூக்கி வைத்து கொண்டாடப்பட வேண்டிய நபர் அவர். தினேஷுக்கு பாராட்டுக்கள். அவருடன் பணியாற்ற வேண்டும்," என்று தெரிவித்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×