என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிக களஞ்சியம்
முக்கிய திதிகளில் விரத நாட்கள்
- மகா சிவராத்திரி மாசி மாதத்தில் வரும் சிவராத்திரியாகும்.
- ஐப்பசி மாதம் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி தினம் தீபாவளி நாளாகும்.
பிரதோஷ விரத நாட்கள்
பட்சங்கள் அதாவது மாதத்தில் வளர்பிறை நாட்கள் 15 தேய்பிறை நாட்கள் 15 ஆகும். வளர்பிறைநாட்கள் சுக்கில பட்சம் என்றும் தேய்பிறைநாட்கள் கிருஷ்ண பட்சம் என்று அழைக்கப்படும்.
இந்த ஒவ்வொரு பட்சத்திலும் திரயோதசி திதி 26 நாழிகைகளுக்கு மேல் 32 நாழிகை வரை வியாபித்திருக்கும் நாளே பிரதோஷ நாள் ஆகும் என்பதை பஞ்சாங்கத்தின் துணை கொண்டு புரிந்து கொள்ளலாம்.
சதுர்த்தசி வியாபித்திருந்தால், கிருஷ்ண பட்சத்தில் திரயோதசி தினத்திலும், சுக்கில பட்சத்தில் துவாதசி தினத்திலும் பிரதோஷம் அனுஷ்டிக்க வேண்டும்.
உதாரணமாக, விஜய வருடம் தை மாதம் 15ம் நாள் (28.01.2014) செவ்வாய் கிழமை துவாதசி திதி அன்று காலை 19 நாழிகை 14 வினாடியுடன் முடிந்து, அதன் பின்னர் திரயோதசி திதி தொடங்கி மறுநாள் காலை புதன் கிழமை 10 நாழிகை 26 வினாடி வரை வியாபித்து இருப்பதால், முதல் நாள் செவ்வாய் கிழமை அன்றுதான் பிரதோஷம் எனக் கொள்ள வேண்டும்.
ஏனென்றால் திரயோதசி திதி 26 நாழிகை முதல் 32 முடிய இருப்பது தை மாதம் 15ம் தேதி என்பதை முடிவு செய்து கொள்ளலாம்.
சிவராத்திரி விரதம்:
தேய்பிறை சதுர்த்தசி திதி 45 நாழிகை இருக்கும் நாளைத்தான் மாத சிவராத்திரி நாளாக எடுத்துக் கொண்டு விரதம் இருக்கலாம்.
மகா சிவராத்திரி மாசி மாதத்தில் வரும் சிவராத்திரியாகும்.
உதாரணமாக விஜய வருடம் தை மாதம் 16ம் நாள் (29.01.2014) புதன் கிழமை அன்று காலை 10.26 நாழிகையுடன் திரயோதசி திதி முடிவடைந்து அதன் பின்னர் பகல் முழுவதும் சதுர்த்தசி திதி இருப்பதால் அன்றுதான் மாத சிவராத்திரி என்பதை முடிவு செய்து கொள்ளலாம்.
கார்த்திகை தீப நிர்ணயம் செய்வது:
கார்த்திகை மாதம் பௌர்ணமி திதி பிரதானமாகும். இந்த பௌர்ணமி , பிரதோஷ காலத்தில் ஆதிக்கம் செலுத்த வேண்டும்.
பாஞ்சராத்திர தீபம்:
கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரம் பிரதானமாகும். இந்த நட்சத்திரத்திற்கு பரணி நட்சத்திரம் வேதையாகக் கூடாது. அதாவது பரணி நட்சத்திரம் சூரிய உதயத்பரம் ஒரு வினாடியும் இருக்கக்கூடாது. இப்படி வேதை ஏற்பட்டால் மறுதினத்தில்தான் தீபரோகணம்.
கோகுலாஷ்டமி:
சிரவண (ஆவணி மாதம்) -பகுள அஷ்டமி - இந்த அஷ்டமி அர்த்தராத்திரியில் வியாபித்திருக்கும் தினம்தான் கோகுலாஷ்டமி.
கிருஷ்ண ஜெயந்தி பகுள அஷ்டமி திதியும், ரோகிணி நட்சத்திரமும், ஹர்ஷநாம யோகமும், ரிஷப லக்னமும் சேர்ந்த நேரம்தான் கிருஷண் ஜெயந்தி ஆகும்.
தீபாவளி நிர்ணயம்:
ஐப்பசி மாதம் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி தினம் தீபாவளி நாளாகும். இந்த சதுர்த்தசி திதி இரவு 4-வது ஜாமத்தில் இருக்க வேண்டும் என்பது நியதி.
போதாயன அமாவாசை நிர்ணயம்:
சதுர்த்தசி திதியன்று 4வது ஜாமத்தில் அமாவாசை தொடர்பு சிறிது நேரம் இருந்தாலும் அந்த நாள் போதாயன அமாவாசை நாளாகும்.
முகூர்த்த நாள் குறிக்கும்போது கவனிக்க வேண்டிய முகூர்த்த தோஷங்கள்:
பூகம்பம் ஏற்பட்ட மாதம் தவிர்க்க வேண்டும்.
மல மாதம் (இரண்டு பௌர்ணமி, இரண்டுஅமாவாசை வரும் மாதம்) தவிர்க்க வேண்டும்.
கிரகண தோஷம் உடைய மாதங்கள், சந்திரன் 8,12 ஆகிய இடங்களில் இருக்கும் நாட்கள், பாபகிரகம் ஆட்சியற்று மற்ற ராசிகளில் சஞ்சாரம் செய்யும் காலம், குருவும் சுக்கிரனும் சமசப்தம லக்கினங்களில் சஞ்சாரம் செய்யும் காலம், குரு சுக்கிரன் அஸ்தமன தினத்திற்கு முன், பின் 7 நாட்கள், குரு, சுக்கிரன் லக்கினமானபோது முன், பின் 3 நாட்கள், சாயன்ன காலம் (24 முதல் 30 நாழிகை வரை) அன்றைய தினம் சூரிய உதயம் 6 மணி என்று எடுத்துக்கொண்டால், அந்த 6 மணியை கூட்டிகொள்ளக் கிடைப்பது 15.36 மணி முதல் 18.00 மணி வரை, கரணங்களில் பவம், பாலவம், கரசை, பத்திரை நீக்கிய கரணங்கள், இஷ்டி தோஷம், இருத்தை, அஷ்டமி, இலாபம், ஏற்காளம், யோகங்களில் வைத்திருதி யோகம்,வியாதிபாத யோக பிற்பாதி ஆகுலம் முதலானவை முகூர்த்த தோஷம் உள்ளவையாகும். இவை முகூர்த்தம் குறிக்கும் போது தவிர்க்கப்படவேண்டிய காலங்கள் ஆகும்.
சிரார்த்தம் (இறந்தவர்களுக்கு திதி கொடுப்பது) காலம் நிர்ணயம் செய்வது எப்படி?
ஒரு திதியானது அபரான்னம் காலத்திற்கு (18 முதல் 24 நாழிகை) மேல் வியாபித்திருக்கும் திதியே அன்றைய திதியாகும். அதாவது 24 நாழிகைக்கு மேல் வியாபித்திருக்கும் திதியே அன்றைய திதியாகும்.
ஒரு திதியானது மத்தியான்னம் முதல் அபரான்னம் வரை வியாபித்திருக்குமேயானால், பகல் அகசை (அகசு என்பது பகல் 12 மணி நேரம் இரவு 12 மணி நேரம் என்பது சில மாதங்களில் பகல் நேரம் அதிகமாகவும் இரவு நேரம் குறைவாகவும் இப்படி மாறியும் இருப்பதால் வரும் கால வித்தியாசம் எனப்படும். இதை பஞ்சாங்கத்தில் அகசு நாழிகை என்று குறித்திருப்பார்கள்) பிராத - ஸங்கல - மத்தியான்ன - அபரான்ன - சாயன்ன என ஐந்து கூறுகள் செய்து அபரான்ன காலத்தில் அதிகம் வியாபித்திருக்கின்ற தினத்தில் திதியை நிர்ணயம் செய்ய வேண்டும்.
ஒரு திதியானது சாயன்னத்தில் தொடங்கி மறுநாள் மத்தியான்ன காலத்தில் முடிந்து விட்டால், மறுநாள் குதப கால ஆரம்பமாகிய 14 நாழிகைக்கு மேலும் ரௌஹீன காலத்தில் முடிகின்ற 8 நாழிகைக்குள்ளும் இந்த திதியின் சிரார்த்திகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.
ஒரு திதியானது மாத ஆரம்பம் மற்றும் மாத முடிவில் ஆக இரண்டு தடவை வந்தால், பிந்தின திதியை அனுஷ்டிக்க வேண்டும். பிந்தின திதியில் சங்கராந்தி கிரகண தோஷங்கள் ஏற்பட்டால் முந்தின திதியை அனுஷ்டிக்க வேண்டும். பிந்தினது அதிகத் திதியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
சங்கராந்தி தோஷம் என்பது பகல் 12 நாழிகைக்கு மேலும் இரவு 15 நாழிகை வரையிலும் இருக்கும்.
ஒரு திதியானது ஒருமாதத்தில் ஒரு தடவை வந்து அந்த திதியானது அன்று அபரான்ன காலம் வரை வியாபித்திராத போது, அன்றைய திதியை சிரார்த்தத்திற்கு எடுத்துக் கொள்ளக்கூடாது. பூர்வமாத (முந்தைய மாத) திதியை சிரார்த்தத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அனுஷ்டிப்பதில் முன் மாதத்தின் குதப கால தொடர்பு இருக்க வேண்டும். அதாவது குதப கால ஆரம்பமாகியய 14 நாழிகைக்கு மேலும் ரௌஹீன காலத்தில் முடிகின்ற 8 நாழிகைக்குள்ளும் தொடர்பு இருக்க வேண்டும். சங்கரம தோஷமும் இருக்கக் கூடாது. மேற்கண்டவாறு முந்தின மாத திதி அமையவில்லையெனில் அந்த மாதத் திதியையே அனுஷடிக்கலாம்.
ஒரே மாதத்தில் இரண்டு திதிகள் வந்து இரண்டிற்கும் சங்கராநதி தோஷம் ஏற்பட்டிருந்தால் அதற்கு அடுத்த மாதம் வரும் திதியே சிலாக்கியமாகும்.
திதித்துவம்:
மேற்கூறிய விதிகளுக்குட்பட்டு ஒரே நாளில் இரண்டு திதிகளையும் அனுஷ்டிக்க நேரிட்டால் அதற்கு திதித்துவம் என்று பெயர்.
சூனிய திதி என்றால் என்ன?
ஏதாவது ஒரு திதி அன்றைய தினத்தில் இருந்தும், அது அபரான்ன காலத்தில் அதிககாலம் இல்லாமல் குறைவாக இருப்பதனால் அந்த திதி மறுதினத்தில் சேர்ந்து, அதற்கு முந்தின திதி முந்திய தினத்தில் செல்லாகி விட்டால் அன்றைய தினம் சூனிய திதி என்று சொல்லப்படும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்