என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிக களஞ்சியம்
அகோரமூர்த்தி
- இத்தலத்தின் மூன்றாவது சிறந்தமூர்த்தி அகோரமூர்த்தி.
- அந்தப் பெருங்கோபம் ஒரு வடிவம் பெற்று சிவபெருமான் முன் தோன்றியது.
இத்தலத்தின் மூன்றாவது சிறந்தமூர்த்தி அகோரமூர்த்தி.
அப்படிப் பெயர் வந்ததற்குக் காரணம் இதுதான்.
மருத்துவன் என்னும் அசுரன், தேவர்களை வெறுத்தான்.
அவர்களைக் கொடுமைப்படுத்தித் துன்புறுத்தினான்.
தேவர்கள் அவ்வசுரனுக்குப் பயந்து, இறைவன் ஆணைப்படி திருவெண்காட்டில்
தவசிகள் வேடம் தாங்கி மறைந்து வாழ்ந்து வந்தனர்.
இதை அறிந்துகொண்ட அசுரன் அவர்களைத் தேடி வந்து போர் தொடுத்தான்.
அப்போது அவனோடு போர் செய்யும்படி ரிஷபதேவரை ஏவினார் இறைவன் சுவேதாரண்யேசர்.
போரில் மருத்துவன் தோற்று ஓடி மறைந்தான்.
பிறகு அவன் சிவபெருமானை நோக்கித் தவம் புரிந்து ஒரு சூலாயுதம் பெற்றான்.
இந்தத் தலத்திற்கு வந்து அந்தச் சூலாயுதத்தின் உதவியால் ரிஷப தேவரை எதிர்த்துப் போரிட்டு
அவருடைய கொம்புகளை முறித்தான். அவருடைய காதுகளை அறுத்தான்.
அவர் ஓடோடிச் சென்று சுவேதாரண்யப் பெருமானிடம் முறையிட்டார்.
பெருமானுக்குக் கோபம் மூண்டது.
அந்தப் பெருங்கோபம் ஒரு வடிவம் பெற்று சிவபெருமான் முன் தோன்றியது.
அவர் மருத்துவாசுரனைச் சம்கரித்து வருமாறு அந்த வடிவத்தை ஏவினார்.
அந்தக் பெருங்கோபம் தீ நாக்கு போல் சிவந்த கூந்தலுடன் அனல் கக்கும் நெற்றிக் கண்கொண்ட கோர வடிவமாகத் தோன்றியது.
பிரகாசமான ஆபரணங்களும், கண்ட மாலையும், உடுக்கை, மணி, வாள், சூலம், மண்டையோடு, குறுந்தடி முதலியவற்றைக் கைகளில் தாங்கி அகோர வடிவமாகி, அசுரனை எதிர்க்கச் சென்றது.
அசுரன் பயந்து நடுங்கி ஒளி உருவாகி அகோரமூர்த்தி வடிவத்துடன் ஐக்கியமாகி விட்டான்.
அன்று முதல் தேவரின் வேண்டுகோளுக்கு இணங்க, அகோரமூர்த்தி, கோவிலின் நடனசபையின் வடமேற்குப் பகுதியில் எழுந்தருளி இருக்கிறார்.
ஞாயிறு தோறும் இம்மூர்த்திக்கு இரண்டாம் காலத்தில் அபிஷேக ஆராதனை 'அகோரபூஜை'யாக நடைபெறுகிறது.
இத்தலத்து இறைவனை ஐராவதம் என்னும் வெள்ளையானை பூசித்துப் பேறு பெற்றது.
இத்தலத்திற்கு திருநாவுக்கரசர் பதிகம் இரண்டு, திருஞானசம்பந்தர் பதிகம் மூன்று, சுந்தரர் பதிகம் ஒன்று ஆக ஆறு பதிகங்கள் உள்ளன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்