என் மலர்
ஆன்மிக களஞ்சியம்

குரு பகவான் பற்றிய குறிப்புகள்
- இவருடைய மனைவியர் தாரை, சங்கினி ஆகியோர் ஆவர்.
- பரத்வாஜர் யமகண்டன், கசன் ஆகியோர் இவருடைய புதல்வர்கள் ஆவர்.
இந்திரனின் அமைச்சராகவும் தேவர்களின் குருவாகவும் திகழும் வியாழன் பிரம்மதேவரின் புத்திரர்களில் ஒருவரான ஆங்கீரச முனிவருக்கும் வசுதா தேவிக்கும் பிறந்த குழந்தைகளுள் ஏழாவதாக பிறந்த சிறப்பினை உடையவராவார்.
இவருடைய மனைவியர் தாரை, சங்கினி ஆகியோர் ஆவர்.
பரத்வாஜர் யமகண்டன், கசன் ஆகியோர் இவருடைய புதல்வர்கள் ஆவர்.
குருவின் ஆட்சி வீடுகள் தனுசு, மீனம், மூலதிரிகோண ராசி தனுசு, உச்ச வீடு கடகம்.
நீச்ச வீடு மகரம் ஆகும். மேஷம் சிம்மம், கன்னி, விருச்சிகம் ஆகியன நட்பு வீடுகள்.
ரிஷபம், மிதுனம் துலாம் பகை வீடுகள்.
சூரியன், சந்திரன் நண்பர்கள்.
புதன் சுக்கிரன் பகைவர்கள்.
சனி, ராகு, கேது சம நிலையினர்.
Next Story